Previous

உயிரும் உயிரின் பிரிவும் (பாகம் 16) அல்லது

”சந்துருவின் பால் விதி” (Chandru's rule of Gender determination)

விந்தணுவின் X,Y கலவையில் ஆணும் பெண்ணும் இருக்கிறது. ஆக பிறக்க போகும் குழந்தை ஆணா பெண்ணா என்பதை ஆண்தான் தீர்மானிக்கிறான். சூட்சுமம் ஆணிடம்தான் உள்ளது என்று கூறியிருந்தேன். குரோமோசம்களைப் பொறுத்த வரையிலும் நூற்றுக்கு நூறு இதுதான் உண்மைதான்.ஆனாலும் இதிலும் பெண்களின் பங்கும் சிறிதும் இருக்கிறது.பரிணாமத்தில் இது பின்னாளில் ஏற்பட்ட முன்னேற்றமாக இருக்கலாம்..

அதாவது, கலவியின் போது பெண்ணின் உறுப்பில் (Vagina) சுரக்கும் சிலவகை ஹார்மோன்கள் பெண்களின் மனநிலையைப் (அவற்றுள் ஒன்று காமத்தின் உச்சநிலை (Orgasm)) பொறுத்து கார, அமிலத்தன்மை கொண்டதாக இருக்கிறது என்றும் அவை X,Y குரோமோசம்களின் வேகம், அடர்த்தி, ஆயுள் ஆகிய குணங்களை வெவ்வேறு விதமாகப் பாதிக்கும் காரணிகளாக உள்ளது என்றும் கூறுகின்றனர். இதுவும் ஒரு வகையில் பிறக்கும் குழந்தையின் பாலினம் மாறுவதற்கான காரணி என்று தெரிகிறது.

அது மட்டுமில்லாமல் அந்த ஆராய்ச்சியின் தொடர்ச்சி, மனைவியிடத்தில் ஆணுறை உபயோகிக்காதீர்கள் என்ற அறிவுரையும் கூறுகிறது. பெண்ணின் உறுப்பில் படும் விந்து, கணவனுக்கும் மனைவிக்கும் சாதகமான சில மனோவியல் மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதை உறுதி செய்துள்ளனர். மார்பக புற்று நோய், மனவழுத்தம் (Depression) ஆகியவற்றைக் கூட குணப்படுத்துவதாகவும் கூறுகிறார்கள். மேலும் நிறையச் சொல்கிறார்கள் கீழே கொடுக்கப்பட்ட தளங்களில் நீங்களே படித்து அறிந்து கொள்ளுங்கள்.

http://www.news-medical.net/health/Semen-Health-Effects.aspx
http://en.wikipedia.org/wiki/Semen 

ஆனால் ஆணிடம் உள்ள விந்து, சரியான வெளிப்பாடு இல்லாத பட்சத்தில் ஆணுக்கே பலவிதமான மனோவியல் பிரச்னைகளை உருவாக்கி, சில சமயங்களில் எமனாக கூட மாறிவிடுகிறது. விந்து, அதிகமாக பைகளில் இருந்தால் சமூக அக்கறை குறைவாக உள்ளவர்களிடமும், பிரம்மச்சாரியத்தை முறையாகக் கையாளத் தெரியாதவர்களிடமும் மிருக புத்தியையும், முரட்டுத் தைரியத்தையும் கொடுக்கிறது. சிலசமயங்களில் வேலைக்காரிகள், கிழவிகள் அழகாகத் தெரிவதும், பஸ்ஸில் பெண்களிடம் சில்மிஷம் செய்து அடி உதை வாங்குவதும் இதானால்தான்..

”மனைவிமார்களே! உங்களது கணவனின் விந்துப் பைகளை காலியாக வைத்திருங்கள்” என்ற பழங்காலத்தைய அறிவுரை எவ்வளவு உண்மையானது..

இதில் குறிப்பிட்டுள்ள ஆணின் X,Y குரோமோசம்களின் வேகம், அடர்த்தி, ஆயுள், இவற்றை தீர்மானிக்கும் காரணிகள் எது அல்லது எவை என்பதுதான் அறிவியலின் மில்லியன் டாலர் கேள்வி.அது பற்றி இன்னும் தெளிவாகச் சொல்லவில்லை.. மேலும் பிறக்கப் போகும் குழந்தை ஆணா பெண்ணா என்பதில் ஆண்மைக்கு காரணமான Y குரோமோச ஜீன்களை கட்டுப் படுத்தும் SRY, SOX9, and DAX1 ஆகிய ஜீன்கள் பற்றிய ஆராய்ச்சியும் முற்றுப் பெறவில்லை.

அறிவியல் ஒரு நிலையில் வந்து நின்றுவிட்டதோ?. நாம் கொஞ்சம் அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்வோம். அவர்கள் ஆராய்ச்சியை ஜீன் பற்றி மைக்ரோ லெவலில் செய்யும் போது நாம் கலவியில் ஈடுபடும் ஆண், பெண் பற்றிய புறத்தன்மைகளை ஆராய்வோம். முருகன் மயில் மேல் ஏறி உலகைச் சுற்றி வரும் முன் விநாயகர் ”அம்மை, அப்பனை” சுற்றி வந்து மாங்கனி வாங்கியது போல் நாம் குறுக்கு வழியில் செல்வோம்.மாத்தி யோசித்து, நாம் தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடிப்போம்.

இத்தொடரின் 11 வது பதிவில் ”ஆகவே இடர்ப்பாடுகளை சந்தித்து மீண்டு, உயிர் வாழ்ந்தால்தான் அதைப் பற்றிய பதிவும், பாதுகாப்பு பற்றிய தேவையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லப்படும். வண்ணத்துப் பூச்சி தான் கண்டு பயந்த பறவைகளின் கண்களை பற்றிய தகவல் சொல்ல உயிருடன் தப்பித்து பின் கலவியில் ஈடுபட்டு, கண்களை பற்றிய தகவலை கருவில் ஏற்றியிருக்க வேண்டும்.” என்று குறிப்பிட்டு உதாரணங்களைக் காட்டி இருந்தேன்.

இவ்வாறு தன்னிச்சையான X,Y குரோமோசக்கலவையில், என்றாவாது ஒரு நாள் எல்லாமே பெண்களாகவோ ஆண்களாகவோ வரும் வாய்ப்பு, (Probability) முட்டைகளையும், குரோமோசம்களின் எண்ணிக்கையும் வைத்துப் பார்க்கும் போது அபூர்வம்தான். மிருக நிலையில் இருந்து மனித நிலைக்கு வளர்ந்து ஒரு ஆணுக்கு ஒரு பெண்னென்று வளர்ந்துவிட்ட இனத்தில் பெண்ணின் சுதந்திர உணர்வு தலைத்தோங்குவதால் அப்படி ஒரு வாய்ப்புக்கு இடம் கொடுத்துவிடக் கூடாது என்பதில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கிறது மனித இனம், அதனால்தான் அதற்கு ஒருகூடுதல் கட்டுப்பாட்டை கையில் வைத்துக் கொண்டது.

ஆணும் பெண்னுமாகப் பிரிவதில் அவை எந்த வழிமுறைகளை பின்பற்றி ஒரு சமத்துவத்தை எட்டுகிறது என்பதுதான் என்னுடைய இந்த கட்டுரையின் முக்கியமான நோக்கம். நாம் மனித இனத்தை எடுத்துக் கொள்வோம். மனிதர்கள் குழுக்களாகப் பிரிந்து வாழும் முறை ஏற்பட்டதால், இந்த சூழ்நிலைக்கான தேவைகளும் திறன்களும் கட்டளைகளாகப் மரபணுவில் பதியப் படுகிறது. இதை விளக்குவதுதான். ”சந்துருவின் பால் விதி”


”சந்துருவின் பால் விதி”
”ஒரு குடும்பத்தில் ஆண்மைக்கும் பெண்மைக்கும் எப்பொழுதும் சமநிலையை நிலை நிறுத்தும் முறையில் தான் புதிய குழந்தையின் பாலினம் தீர்மானிக்கப் படுகிறது.”

உதாரணமாக ஒரு குழுவின் ஆண்,பெண் எண்ணிக்கைதான் பிறக்கப் போகும் குழந்தையின் பாலினத்தை தீர்மாணிக்கிறது. இது அவன் சார்ந்த குழுவின் தீர்மானம். அது தனி மனிதன் மீது அவனை அறியாமலே அவனது அறிவால் திணிக்கப்படுகிறது
மொத்த குழுவின் ஆண்,பெண் எண்ணிக்கை முதலில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. தன்னை நெருங்கிச் (closer level) சுற்றியுள்ள குடும்பத்தின் ஆண்,பெண் எண்ணிக்கைக்கு அடுத்த இடமும், தன்னைச்சுற்றியுள்ள ஆண்,பெண் ஆளுமைக்கு மூண்றாமிடமும் கொடுத்து, அதற்கடுத்து தனது மனைவியின் ஆளுமை குணம் ஆகியவற்றிற்கு நான்காம் இடமும் கொடுத்து தேவையைக் கருதி பிறக்கப் போகும் குழந்தையின் பாலினம் ஆண்களாலும், பெண்களாலும் தீர்மானிக்கப் படுகிறது.

இன்னும் விவரமாக அடுத்து பார்ப் போம்.
தொடரும்……………………………………….


முந்தைய பதிவு


மேலும் படிக்க...!
Previous
நாம் அடுத்த கட்டத் தகவல்களுக்கு செல்லும் முன் அதற்கான சில வார்த்தைகளை மேலோட்டமாக அறிந்து கொள்வோம். செல், டி.என்.ஏ, குரோமோசம்கள் ஆகியவை பற்றி எனத்குத் தெரிந்ததை பகிர்ந்து கொள்கிறேன்.

ஒரு கம்ப்யூட்டரில் தகவல்கள் பிட், பைட் போன்ற டிஜிட்டல் முறையில் மாற்றி நினைவகத்தில் பதிவு செய்யப் படுவதைப் போல் ஒரு முழு மனிதனின் அங்க அமைப்புகள், அளவுகள், எண்ணிக்கை பற்றிய விவரங்கள், குணாதிசயங்கள், நோய்கள், அவன், அவனது முன்னோர்கள் வாழ்க்கையில் பெற்ற அனுபவங்கள் ஆகியவை அவற்றின் முக்கியத்துவத்தைப் பொறுத்து, அதாவது எவையெல்லாம் அவனது சந்ததிகள் நிலைத்து வாழத் தேவையோ அவையெல்லாம் பயோ-நியூரான் முறையில் பதிவு செய்யப் படுகிறது.

இதில் ஆச்சரியப் படுத்தும் விஷயம் என்னவென்றால் பதிவு செய்யப் பட்ட அத்தனை விஷயங்களும் ஒரு கேப்ஸூல் போன்று ஒரு மூலக்கூறு வடிவில் மனிதனது எல்லா செல்களிலும் உட்கருவோடு இணைக்கப் படுகிறது. இது எல்லா உயிரினங்களுக்கும் பொதுவான தன்மையாக இருக்கிறது

செல்
முதலில் செல் பற்றி அறிந்து கொள்வோம். எனது கட்டுரையின் 9, மற்றும் 10 பாகங்களில் சில விளக்கங்கள் உள்ளது. உயிர்கள் இரண்டு விதமாக உள்ளது, ஒற்றைச் செல்லாய் வாழ்வது ஒரு விதம்( அமீபா), பல விதமான செல்கள் சேர்ந்து ஒற்றுமையாய் வாழும் விதம் (மிருகங்கள்). ஆகவே செல் என்பது ஆதாரமான விஷயம். ஒரு உட்கரு, உடல், உயிர் சேர்ந்தது தான் செல். உதாரணமாக மனிதன் என்பது ஒற்றை உயிராக தோன்றினாலும் அவன் 100 டிரில்லியன் செல்களின் (உயிர்களின்) காலனி. ஒரு நானோ கிராமிற்கும் குறைவான எடையிலிருந்து  1500 கிராம் அளவிலான பெரிய செல்களும் உண்டு. ஒரு மைக்ரோன் அளவிலிருந்து 150 மைக்ரோன் வரை உள்ளது.

டி என் ஏ
ஒரு குறிப்பிட்ட செல்லின் வரலாற்று காலப் பெட்டகம்தான் DNA.அது டீஆக்ஸிரைபோ நியூக்ளியஸ் ஆசிட். ஒரு செல்லின் அல்லது உயிரியின் முக்கியமான மூன்று மூலக்கூறு பாகங்களில்(கார்போஹைடிரேட், புரோட்டீன், நியூக்கிளியஸ் ஆசிட்) DNA, RNA, மற்றும் புரோட்டீன் கலந்த கலவையாகிய ஒன்றாகும்.எல்லா செல்களுக்கும் இன்றியமையாத ஒன்றாகும். இரத்த தானத்தினால் டி என் ஏ மாற்றம் ஏற்படுவதில்லை. ஆனால் (Bone Morrow Transplantation) எலும்பு மஜ்ஜை மாற்றத்தினால், மற்றும் முட்டை, விந்து தானத்தினால்  மாறும் வாய்ப்புள்ளது. ஆதலால்தான் கூடுமான வரை இந்த தானங்கள் குடும்ப உறுப்பினர்களுக்குள் செய்யப் பட்டு ஜெனிட்டிக் மாற்றம் அதிகளவில் ஏற்படுவது தடுக்கப் படுகிறது..

ஜீன்
செல்லின் இயக்கத்திற்கும், வளர்ச்சிக்கும்,தேவையான குறீயீடுகள் அதில் ரகசியமாக அல்லது இயற்கைக்கு தெரிந்த எளிய முறையில் பதிவு செய்யப்படுகிறது. அந்த DNA பதிவைத்தான் ஜீன் என்றும், குரோமோசம் என்றும் சொல்கிறோம். இரண்டையும் கலந்து ஜீனோம் என்றும் சொல்கிறோம். செல்லுக்குள் டிஎன்ஏ, டிஎன்ஏக்குள் குரோமோசம்.

மனித உடலிலுள்ள இனப்பெருக்க அணுக்களான கருமுட்டை, மற்றும் விந்தணுக்களில் உள்ள குரோமோசோம்கள்தான் பிறக்கப்போகும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை நிர்ணயிக்கின்றன.

அதாவது ஆணின் விந்தணுவில் உள்ள X,Y குரோமோசோம்களில், பெண்ணின் அண்ட அணுக்களில் உள்ள X குரோமோசோமுடன் ஆணின் விந்தணுவில் உள்ள X குரோமோசம் XX என்ற வகையில் இணைந்தால் பிறக்கப் போகும் குழந்தை பெண்ணாகவும் அதை விடுத்து பெண்ணின் அண்ட அணுக்களில் உள்ள X குரோமோசோமுடன் ஆணின் விந்தணுவில் உள்ள Y குரோமோசம் X-Y என்ற வகையில் இணைந்தால் குழந்தை. ஆணாகவும், பிறக்கும் என்று அறிவியல் கூறுகிறது.

இதிலிருந்து ஒன்று புரிகிறது. பெண்மைதான் முழுமையானது. XX என்ற கலவையில் பெண்மை மட்டும்தான் இருக்கிறது. ஆண்மை இரட்டைத் தன்மை உடையதாக இருக்கிறது ஆதலால் தான் முட்டைக் கருவில் பெண்மை மட்டும் இருக்கிறது. விந்தணுவின் XY கலவையில் ஆணும் பெண்ணும் இருக்கிறது. ஆக பிறக்க போகும் குழந்தை ஆணா பெண்ணா என்பதை ஆண்தான் தீர்மானிக்கிறான். சூட்சுமம் ஆணிடம்தான் உள்ளது.

விந்தணுக்களின் தலைப் பகுதியில்தான் மரபணுக்களைக் கொண்டுள்ள குரோமோசோம்கள் உள்ளன. இவைதான் பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணா எனத் தீர்மானிக்கின்றன. மனிதனது அண்ட அணுவாகிய முட்டையோ அல்லது விந்தணுவோ இரண்டிலுமே மனிதனது அத்தனை தகவல்களும் அதாவது அங்க அடையாளங்கள், குணாதிசயங்கள், நோய்கள், அவன் வாழ்க்கையில் பெற்ற அனுபவங்கள் ஆகிய அத்தனையும் அடங்கிய சிம் அல்லது சிப்(Bio-Sim or Bio-Chip) போன்ற முறையில் ஒவ்வொரு செல்களிலும் இணைந்துள்ளது

பெண்மையின் குரோமோசத்தின் 23 ஜோடியில் எல்லா ஜோடியும் சரிசமமாய் இருக்கும் அது இரண்டாகப் பிரிந்து ஒரு முட்டையாக மாறுகிறது. ஆக எல்லா முட்டையும் ஒன்று போல்தான் இருக்கும்.ஆனால் ஆணின் குரோமோசத்தில் 23 ஜோடிகள் பிரிந்து விந்தணுவாக மாறுகிறது. ஆனால் ஆணின் குரோமோசம்மில் 23 வது ஜோடி XY ஆக இருப்பதால் ஆணின் விந்தணுவில் அந்தக் கடைசி அணு X அல்லது Y என இரண்டு விதமான விந்தணுக்களாக உருவாகுகிறது. இதில் ஆணின் X,Y குரோமோசம்களின் வேகம், அடர்த்தி, ஆயுள் இவற்றால்தான் பிறக்கும் குழந்தையின் பாலினம் தீர்மானிக்கப் படுகிறது.

இதில் X பெரிதாகவும், வேகமற்றும், நீண்ட ஆயுள் கொண்டதாகவும் இருக்கிறது, Y வேகமுள்ளதாக, சிறியதாக, அற்ப ஆயுள் கொண்டதாக இருக்கும். இந்த தன்மைகளை கொண்டு விந்துவை எடுத்து அதை நவீன தொழில் நுட்பத்தினால் வடிகட்டி  X அல்லது Y யின் அடர்வு மிகும்படி செய்து தேவையான பாலினத்தில் குழந்தையை பெற்றுக் கொள்ளலாம். இந்த Y ஜீன்களை SRY,SOX9  என்ற ஜீன்கள் கட்டுப் படுத்துவதாக இப்பொழுது அறியப் பட்டுள்ளது. 


.இந்த தொழில் நுட்பத்தையும் மனிதன் ஓரளவு அறிந்து கொண்டு அதில் இயற்கை எப்படி எழுதுகிறது, என்ன எழுதியிருக்கிறது என்பதையும் டிகோட் செய்து படம் (DNA Mapping) அல்லது எழுத்து வடிவில் படிக்கவும், அதில் சில பிறவியினால், மற்றும் பாரம்பரியத்தினால் ஏற்படும் நோய்களுக்கான தகவல்கள் இருந்தால் அவற்றை அழித்து  திருத்தும் அளவிற்கும் வளர்ந்து விட்டான்.

அதைத்தான் .‘ப்ரி இம்ப்ளான்டேஷன் ஜெனடிக் டயாக்னோஸ்டிக்ஸ்’ (பி. ஜி. டி.) என்கிறார்கள் இம்முறை மூலம். கருப்பையில் உருவாகி, முதிராத கருவாக உள்ள நிலையில் உள்ள முட்டைக் கருவுயிரில் சில மாற்றங்களை செய்து அதன் மூலம், தேவையான பாலினத்தில், நோயற்ற, பிறவிக் குறைகளற்ற, எதிர்பார்த்த குணத்துடன் கூடிய கருவுயிராக மாற்றி குழந்தை பெறும் வித்தை உருவாகியுள்ளது. இதுதான் ‘டிசைனர் பேபி’ என்று அழைக்கப்படுகிறது. இன்னும் சில வருடங்களில் நமது ஊரில் கூட உங்களுக்கு என்ன பாலினத்தில் குழந்தை வேண்டும் என்றும், என்ன மாதிரியான குணாதிசயங்கள் மற்றும் உடலமைப்பு வேண்டும் என்றும் ஆர்டர் செய்யலாம். அதாவது இன்னும் சுமார் 30 ஆண்டுகளில் இந்தக் கட்டுரையில் நான் சொல்லப் போகும் சாராம்சம் உபயோகம் அற்றதாகி விடலாம். மீண்டும் விரைவில் சந்திப்போம்.
...............................................தொடரும் 


முந்தைய பதிவு


மேலும் படிக்க...!
Previous
சென்ற பதிவில் அதிக குழந்தைகள் பெற்ற தாயைப் பற்றியும், அதிகமான பிள்ளைகளுக்கு தகப்பனாக இருந்தவர் பற்றியும் கூறியிருந்தேன். மிகவும் வயதான தகப்பன் (Oldest Father) பற்றி இப்பொழுது தெரிந்து கொள்வோம்.
அவர் 1840ல் பிறந்த ஜார்ஜ் ஐசக் ஹியூஸ் என்ற 96 வயதானவர்தான். தனது 94 வயதில் இரண்டாவது மனைவி மூலம் ஒரு ஆண் குழந்தையும் 96 வயதில் ஒரு பெண் குழந்தையும் பெற்றாராம். அவரது 95ஆவது வயதில் அதாவது 1935ல் அமெரிக்கன் மெடிக்கல் அஸோசியேசன் தனது இதழில் அவர் மருத்துவ ரீதியான எல்லா வகைச் சோதனையின் படி இனவிருத்திக்கு தகுதியானவர் என அறிவித்தும் உள்ளது.1935ல் டைம் இதழில் தகவல் உள்ளது.
http://www.time.com/time/magazine/article/0,9171,848201,00.html
பொதுவாக மனிதனுக்கு அறிவு வந்த நாளிலிருந்து பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை அறிவதற்கு என்றைக்குமே ஒரு ஆர்வம் இருக்கத்தான் செய்தது. பொதுவாக மக்கள் எப்படி அறிந்தனர் என்பதையும் தமிழர்களிடம் அதற்கான வழிமுறைகள் என்ன இருந்தது என்பதையும் காண்போம்.

(அதற்கு முன் புதியவர்களுக்கு சில பயனுரைகள்.
1)எனது பதிவுகளை படிக்கும் பொழுது வண்ணத்தில் வார்த்தைகள் இருந்தால் அதில் மவுஸை வைத்துப் பாருங்கள்,அதில் கை அடையாளம் தெரிந்தால், மேல் விவரங்களுக்கு லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது என்றும், அதை டபுள்கிளிக் செய்து படித்துக் கொள்ளலாம்.
2)படங்களை டபுள்கிளிக் செய்தால் உன்மையான அளவில் தெளிவாகப் பார்க்கலாம், மீண்டும் பதிவிற்கு செல்ல (Back Arrow) பேக் ஆரோவை கிளிக் செய்யவும்.
3)மேலும் படிக்க, தொடரும், ஆகியவை வண்ணத்தில் இருந்தால் கிளிக் செய்து விரிவாக்கி படிக்கலாம்.)

1) கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றின் அளவை வைத்து, பெரு வயிறு என்றால் பெண் என்றும் சிறு வயிறு என்றால் ஆண் என்றும் கூறுவர்.மேலும் சிலர் முடி, நகம் இவைகளின் வளர்ச்சியை வைத்தும் சொல்வர்.

2) கர்ப்பிணிப் பெண்கள் உட்கார்ந்த பிறகு எழும் போது, பெரும்பாலும் வலது கையை ஊன்றி எழுகிறார் என்றால் ஆண் என்றும் இடது கை என்றால் பெண் என்றும் கூறுவர்.

3) மசக்கையின் போது (கர்ப்பகாலத்தில்) இனிப்பை அதிகம் விரும்பினால் ஆண் என்றும், புளிப்பை அதிகம் விரும்பிச் சாப்பிட்டால் பெண் என்றும் கூறுவர்.மேலும் கர்ப்பமாக உள்ள ஒரு பெண் உட்கொள்ளும் உணவின் அளவு, விரும்பும் உணவு வகைகள், இன்னும் பலவகையான வழிகளில் அவள் பெறப்போகும் குழந்தையினை பற்றிக் கூறலாம் என்றும் கூறுவர்.
கர்ப்பிணியின் நாடித்துடிப்பை வைத்து அப்பெண் பிள்ளை பெறும் நேரத்தையும், இரட்டைக் குழந்தையா அல்லது ஒரு குழந்தையா என்றும் கூறுவர், பெண்ணின் உடலின் நிறம் முகமாற்றங்களையும் வைத்து பெண் பெறப்போகும் குழந்தையானது ஆணா? பெண்ணா? குழந்தையின் உடல் நிறம், குணம், உடல்நிலை போன்றவற்றை அறிந்து கொள்ளலாம் என்றும் கூறுவர்.

4) ஒரு கண்ணாடிக் குடுவையில் இரண்டு தேக்கரண்டி ட்ரானோ உப்புடன் கர்ப்பிணியின் (காலையில் எடுக்கும்) சிறுநீரை கவனமுடன் கலக்க வேண்டும் . புகையுடன் கூடிய ஒரு வீரியமான வேதியல் வினை நடக்கும். அவ்வினை முடிந்த பின்னர் அதில் தெளிந்து நிற்கும் திரவம் கரும்பழுப்பு நிறத்தில் இருந்தால் ஆண் என்றும் நிறத்தில் மாற்றமில்லை என்றால் பெண் என்றும் அறியலாம்.
http://en.wikipedia.org/wiki/Drano

5) மல்லாக்கப் படுத்த நிலையில் கர்ப்பிணியின் தொப்புளில் விளக்கெண்னெய் ஊற்றி எந்தப் பக்கம் வழிகிறது என்பதை வைத்தும் கூறுவர்.

6)வயிற்றில் இருக்கும் குழந்தையின் இதயத்துடிப்பு 140 க்கு மேல் இருந்தால் பெண் என்றும் குறைவாக இருந்தால் ஆண் என்றும் அறிவர்.


7)டவுசர்கள் ) அல்லது டிவைனர்கள் என்று அழைக்கப் படுபவர்களால் ஒரு முறை கையாளப் படுகிறது. ஆறுபடத்தில், சூர்யா ”ஐந்து கிலோ அரிசி வாங்கி பஞ்சு பஞ்சா வேக வைத்து பொதைச்ச இடம் தெரியலேயே” என்று பாடிக் கொண்டே அந்த ”தண்ணி’ உள்ள இடத்தை கண்டுபிடிப்பதற்காக கையில் குச்சியை வைத்துக் கொண்டு சுற்றுவார். அந்த குச்சியைத்தான் டவுசிங் குச்சி என்பார்கள்.
http://en.wikipedia.org/wiki/Dowsing
நம்மூரில் தண்ணீருக்கு போர் போடுவதற்கு அவர்கள் உதவி இன்னும் நாடப் படுகிறது. அது போல் ஊசல் குண்டு வைத்தும் தொலைந்து போன பொருட்களை கண்டுபிடிப்பர். இந்த முறையில் ஜெர்மணியில் பரந்து விரிந்து கிடக்கும் கடலில் ஒரு தொலைந்த கப்பலை கண்டுபிடித்து கொடுத்தவரும் உண்டு.
http://en.wikipedia.org/wiki/Ludwig_Straniak#Pendulum_dowsing

ஊசல் அல்லது பெண்டுலம் கொண்டு அறியும் முறை. கர்ப்பிணியின் வயிற்றின் மீது ஒரு மெல்லிய செயினில் தொங்கவிடப் பட்ட மோதிரத்தின் அசைவைக் கொண்டு ஆணா, பெண்னா என அறிந்தனர். பெண்டுலம் மாதிரி ஆடினால் ஆண் என்றும் சுற்றினால் பெண் என்றும் கூறுவர். பெண்ணின் மணிக்கட்டிற்கு மேல் வைத்தும் கூட செய்து பார்ப்பர்.

கர்ப்பகாலம் 10 அல்லது 20 நாட்கள் தள்ளிப் போனால் பெண் என்றும் அறிவர்

8)சீன அட்டவணை முறையும் உள்ளது அதனுடைய விளக்கத்தை கீழ்க்கண்ட தளங்களில் சென்று அறியலாம்.
http://vetrigee-vetrigee.blogspot.com/2010/07/blog-post_7288.html

http://www.momswhothink.com/pregnancy/chinese-pregnancy-calendar.html

http://chinesepregnancycalendar.com/

இது வரை குறிபிட்டவை அணைத்தும் கருத்தரித்த பின் கண்டறியப் பயன்படும் முறைகள். ஆனால் மேற்க் கூறப்பட்ட முறைகளில் எந்த விதமான அறிவியல் ஆதாரமும் இல்லை என வல்லுனர்கள் மறுத்துள்ளனர்.

கருத்தரிக்கும் முன்பே என்ன குழந்தை என்பதை தீர்மாணிக்க முடியுமா?

இந்த விஷயத்தில் ஷீட்டில்ஸ் சுற்றி வளைத்து என்னுடைய கூற்றுக்கு சற்று அருகில் வருகிறார்.அவர் என்ன சொல்கிறார் என்பதை இந்த வளைத்தளங்களுக்குச் சென்று பாருங்கள்.கலவி முறையில் சில மாற்றங்களைச் செய்து வேண்டிய குழந்தையை பெற்றுக் கொள்ளலாம் என்கிறார்
http://pregnancy.about.com/od/genderselection/a/shettlesmethod.htm

http://en.wikipedia.org/wiki/Shettles_Method

கலவியின் காலத்தை தேர்ந்தெடுத்து எந்த குழந்தை வேண்டுமோ அந்த குழந்தையை பெற்றுக் கொள்ளலாம் எனறும் சிலர் கூறுவர்.
சந்திரன் இருக்கும் ராசியைக் கொண்டு ஆணா பெண்ணா எனக் கூறுவதும் உண்டு.

9) ஆண் ராசிகளான மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தணுசு, கும்பம் ஆகியவற்றில் சந்திரன் இருக்கும் போது கலந்து கருத்தரித்தால் ஆண் குழந்தை என்றும், ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் ஆகியவற்றில் சந்திரன் இருக்கும் போது கலந்து கருத்தரித்தால் பெண் குழந்தை என்றும் கூறுவர்.

10) மாதவிலக்கு நாளிலிருந்து ஒற்றைப் படை நாட்களில் கலந்தால் ஆண் என்றும் இரட்டைப்படை நாட்களில் கலந்தால் பெண் என்றும் கூறுவர்
11) வாஸ்து சாஸ்திரப்படி படுக்கை அறை, கட்டில் அமைத்து ஆணாகவோ பெண்ணாகவோ பெற்றுக் கொள்ளலாம் என்றும் சிலர் கூறுவர். http://www.astrosuper.com/2011/05/blog-post_19.html

12) நமது சித்தர்கள் என்ன சொல்லியுள்ளனர் எனப் பார்ப்போம்.பொதுவாக சித்தர்களின் கூற்றுக்கள் பிரதானமாக வாசியோகத்தைப் பின்பற்றியதாக இருக்கும். சுவாசத்தை கட்டுப் படுத்துவதுதான் வாசியோகமாகும். இட கலை – இடது நாசியினுள்ளே செல்லும் காற்று. இதுவே சந்திர நாடி என்பர். பிங்கலை – வலது நாசியினுள்ளே செல்லும் மூச்சு. இதைச் சூரியநாடி என்பர்,. சித்தர்கள் கலவிக்காலத்தில் எந்த நாடி ஒடுகிறதோ அதைப் பொறுத்து குழந்தை அமையும் என்பார்கள் சாதாரண மனிதர்களால் மூச்சு ஒட்டத்தை கட்டுப்படுத்த முடியாது. அது தன்னிச்சையாக ஒருநேரம் பிங்கலையும் ஒருநேரம் இடகலையும் ஓடும். நீங்கள் அதை சோதனை செய்து பார்க்கலாம். எந்த மூச்சு ஓடுகிறது என்று மூக்கின் துவாரத்தின் கீழ் கையை அல்லது விரலை வைத்துப் பார்த்தால் தெரியும்.


http://siththan.com/archives/1493
சித்தர்கள் கூற்றின்படி ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒடும் மூச்சைப் பொறுத்து கலவி வைத்துக் கொள்ளவேண்டும். வலது பக்கம் ஓடினால் பெண், இடது பக்கம் ஒடினால் ஆண் என்றும், இருபக்கமும் குழப்பத்துடன் ஓடினால் கூண், குருடு அலி என்றும் கூறுவர். பெண்ணின் இரைப்பை, மற்றும் பெருங்குடல் இவற்றில் இருக்கும் அளவின் தன்மையைப் பொறுத்தும் எந்த மாதிரி குழந்தை என்று கூட சொல்கிறார்களாம். உங்களுக்கு ஆர்வமும் நேரமும் இருந்தால் இந்த தளங்களுக்கு சென்று பாருங்கள். பிராணாயாமம் செய்தால் சூரிய, சந்திர மூச்சுகளை கட்டுப் படுத்தலாம்.
http://siththarkal.blogspot.com/2010/08/blog-post_10.html
அகத்தியர், திருமூலர், சரகர் போன்றோரின் வைத்திய மற்றும் கலை நூல்களிலிருந்து பிறப்பானது நிர்ணியிக்ககூடிய ஒன்றாக, மாற்றக்கூடியதாகவும் நிரூபிக்கப்படுகிறது. பிறக்கப்போகும் குழந்தை ஆணா? பெண்ணா? என்றும் வயதையும், குணப்பண்புகளையும் எவ்வாறு நிர்ணயிப்பது என்று திருமூலர் வைத்தியசாரம் தெளிவாக உணர்த்துகிறது மனிதனின் உடலில் ஓடுகின்ற நாடிகளான வாதம், பித்தம், கபம் {சிலோத்துமம்} என்ற மூன்று முக்கிய நாடிகளிலிருந்து மனிதனின் உடலில் ஏற்படும் நோய் முதலான அனைத்து மாற்றங்களையும் அறிந்து கொள்ள முடியும். அதில் மகப்பேறுவும் உண்டு

விந்துப் பைகளின் பணி என்ன?
பெண்களுக்கு பிறக்கும் முன்பே கருவில் உருவாகும் முட்டைகளைப் போல் அல்லாமல், ஆண்களுக்கு பருவ வயதின் போதுதான் விந்தணுக்கள் உருவாகின்றன. முட்டை வடிவத் தலையும் உடலாக நீண்ட வால் பகுதியையும் கொண்டது விந்தணு.

http://en.wikipedia.org/wiki/Spermatozoon
இவை அதிகபட்சமாக 15 நாட்களுக்கு முன்பு உருவாக்கப் பட்டவையாகத்தான் இருக்கும். விந்துப் பை தனது சுருங்கி விரியும் தன்மையினால் ஒரு சீரான வெப்ப நிலையில் விந்தனுவை வைத்திருக்கும். ஒரு சிலர் தங்கள் அலுவல் காரணமாக உட்கார்ந்த நிலையிலேயே இருப்பதால் அவைகளுக்கு வெப்ப நிலை மாற்றத்தை ஏற்படுத்துவதால் (அல்லது அதிக வெப்ப நிலையில்) விந்தணுவின் இயக்கம் பாதிக்கப் பட்டு குழந்தைப் பேறு இல்லாமல் போய் விடும் வாய்ப்புண்டு. ஆகவே காரியமே கண்ணாக இருந்து வாரிசுகளை தொலைத்து விடாதீர்கள். அடிக்கடி உட்கார்ந்திருக்கும் இடத்தை மாற்றுங்கள் அல்லது இடை வெளி கொடுங்கள்.
விந்து நாளம் மூலம் வந்து சேர்ந்த விந்தணுக்களைச் சேமித்து வைக்கும் கிடங்குகளாக விந்துப் பைகள் செயல்படுகின்றன. விந்தணுக்களை ஓரளவு மட்டுமே விந்துப் பைகளால் சேமித்து வைக்க முடியும்.
http://en.wikipedia.org/wiki/Testicles

எல்லோரும் சுற்றி வளைத்து சொல்லும் விஷயத்தை நான் சுருக்கமாக நேரடியாக சொல்லப் போவதால் உங்களுக்கு இவைகளைப் பற்றி அதிகம் தெரிய வேண்டியதில்லை. ஆனாலும்  அறிவியல் எப்படி சுற்றி வளைத்து சொல்கிறது என்று அடுத்து பார்ப்போம்.


முந்தைய பதிவு

மேலும் படிக்க...!
பிறக்கப் போகும் குழந்தை ஆணா பெண்ணா என அறிய உதவும் அறிவியல் தொடர்.
சந்ததி நிலைத்து இப்புவியில் வாழ்ந்து பூமியை ஆக்கிரமிக்க வேண்டும் என்ற ஏற்பாட்டின் ஒரு அங்கம் தான் ஆணும் ,பெண்ணும் என்ற பிரிவு மற்றும் அவர்களுக்கு இடையேயான காமம் என்ற ஈர்ப்பும்.

ஆணும் பெண்ணும் வெவ்வேறு கண்டங்களில், வெவ்வேறு சூழலில் பிறந்து, கலந்து திறமையான வாரிசை உருவாக்கமுடியும் என்பதற்கான இந்த ஏற்பாட்டிற்காகத்தான் உயிரும் அதனுள் உயிரின் பிரிவுமாகிய ஆண், பெண் ஏற்பட்டது.
மன்னிக்கவும், நீண்ட இடைவெளிக்குப் பின் 13 ஆம் பாகத்தோடு வந்துள்ளேன். காரணங்கள் பல

1 வேளைப் பளு.
2. எனது போட்டோ ஷாப்பில் ஆள் இல்லை.
3. எனது பிளாக்கிற்கு கூட ஹாக்கர்ஸ் பிரச்னை. ஹாக்கர்களின் முயற்சியின் பலனாக கூடுதல் செக்யூரிட்டி ஏற்பாடு செய்ய வேண்டிய நிலை. அதில் செல்போன் மெஸேஜ்க்காக பலமணி நேரக் காத்திருப்பு அதனால் ஏற்பட்ட மனத்தளர்ச்சி.
4.செர்விக்கல் ஸ்பாண்டிலிட்டிஸ்
5. கரண்ட் கட்
6 கம்ப்யூட்டரில் வைரஸ்

இவைகளின் காரணமாக இதற்கு நேரம் ஒதுக்க முடியாமல் போனது. மற்றும் சென்ற பதிவில் இட்ட ஓட்டெடுப்பின் முடிவிற்குப் பின் தொடர்வோம் எனவும் பொறுத்திருந்தேன். ஓட்டெடுப்பின் புள்ளி விவரமும் அவ்வளவு திருப்திகரமாக இல்லை. என்ன வருத்தமென்றால் கூகுளின் புன்னியத்தில் ஏற்பட்ட இந்த மாதிரியான வலைத்தள வசதிகளினால் சில சாதிக்க முடியாத காரியங்களை கூட சாதிக்கலாம் என்பது ஏனோ தமிழர்களுக்குப் புரியவில்லை. கடந்த ஒரு மாதத்தில் சுமார் ஆயிரம் பேர் எனது முந்தைய பதிவை படித்திருந்தும் 15 பேர்தான் ஓட்டெடுப்பில் கலந்து கொண்டனர். மக்களது அனுபவங்களினால் ஏற்படும் நன்மை தீமைகளை பகிர்ந்து கொள்வதற்கான (Data exchange) சிறந்த தளம் இதை விட ஒன்று கிடைக்குமா? கருத்துக்களை பகிர்ந்து கொண்டால் தான் மூட நம்பிக்கை, பிடி வாதம் ஆகியவை ஒழியும். முன்னேற்றம் ஏற்படும். ஆகவே எந்த ஓட்டெடுப்பாக இருந்தாலும் இனிமேல் தவறாது கலந்து கொண்டு உங்கள்து கருத்துக்களையும் பதியுமாறு கேட்டுக் கொள்கிறேன். இனித் தொடர்வோம்............சென்ற பதிவில் ......

//ஒரே தலைமுறையிலும் கூட கடைசியாக (Latest ) பிறந்த பிறவிகள் ஆளுமை,மற்றும் நிலைத்து வாழும் பண்பு ஆகியவற்றில் சிறந்து இருப்பதைக் காணலாம் இதையெல்லாம் தமிழ்மக்கள் கண்டறிந்து உள்ளனர் என்பதற்கு பழமொழிகள் சான்றுகளாக உள்ளன.

மூத்தது மோழை, இளையது காளை.
என்ற பழமொழியை ஆராய்ந்தால் டார்வினின் கூற்றில் உள்ள உண்மை புரியும். ஒரு குடும்பத்தில் பிறந்த சகோதரர்களில் மூத்தவர்களை விட இளையவர்கள் திறமையாக செயல்படுவதை காணலாம். அதாவது நிலைத்து வாழும் பண்புகளான ”ஏறி மிதித்துச் செல்லும் திறன்” அதிகமாக காணப் படும். இது அப்பிறவிகளின் தோற்றக்கால இடைவெளியில் பெற்றோர்களின் அனுபவம் கூடுவதால் அதன் பலன் இளைய பிறவிகளுக்கு அதிகமாக கிடைப்பதால் இருக்கலாம். அது பற்றி பின்னர் பார்ப்போம். //


என்று சென்ற பதிவில் பதிந்தேன். அதுமட்டுமில்லாமல் அதற்கு ஒரு ஓட்டெடுப்பும் ஏற்பாடு செய்தேன் அதன் முடிவுகளுக்காக ஒரு மாதம் காத்திருந்தேன். நான் எதிர்பார்த்தது போல்தான் ஓட்டெடுப்பின் முடிவும் 80% என்னுடைய கருத்துக்கு வலிமை சேர்த்தது. அதற்கு நாட்டாமை கூட சில சந்தேகங்களை கீழ்க் கண்டவாறு எழுப்பியிருந்தார்.

அதாவது ”ஏறி மிதித்துச் செல்லும் திறன்” என்றால் நேர்மைக்கு புறம்பாக செயல்படுவார்கள் என்கிறீர்களா? ஆம் இதில் சில உண்மைகளை ஒத்துக் கொள்ள வேண்டியதாகத்தான் இருக்கிறது. சுறுசுறுப்பாக காரியம் ஆற்றுவதில், குறுக்குவழிகள் நேர்மைக்கு புறம்பானதாக இருக்கலாம் அல்லது தெரியலாம்.

அறிவுள்ள பெற்றோர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் புத்திசாலிகளாக இருப்பார்கள் என்கிறீர்களா? இதுவும் முரன்பாடாகத் தெரியுதே

இதில் ஏதும் முரன்பாடு இல்லை முன்னேறிய சமுதாயத்தில் பிறக்கும் குழந்தைகள் இயல்பாகவே அறிவுள்ளவர்களாக இருப்பதில்லையா?


ஆனாலும் இந்த ஆண்,பெண் பிரிப்பில் ஒரு தவறு ஏற்பட வாய்ப்புள்ளது. அதாவது ஏதோ ஒரு சூழ்நிலையில் பிறக்கும் குழந்தைகள் எல்லாம் ஒரே பாலினமாக அமைந்து விட 50% வாய்ப்புள்ளதே? இதற்கான தீர்வு என்ன?

இதை பல விதமாக சமாளிக்கிறது மனித இனம். ஒரு பெண் பிறக்கும் போதே தனது முட்டைப் பையின் இரு பிரிவுகளிலும் தலா ஒரு மில்லியன் (1,000,000) முட்டையின் கருக்களோடுதான் (முழு வளர்ச்சி அடையாத முட்டைகள்) பிறக்கிறாள். மனித இனத்திற்கு ஏதாவது ஒரு காலத்தில் தேவைப் படும் போது பயன் படுத்திக் கொள்ளலாம் என்பதற்கான ஏற்பாடாக இருக்கலாம்.



பருவம் எய்தும் போது, அதில் ஐந்தில் ஒரு பங்குதான் அதாவது சுமார் (2,00,000 +2,00,000 ) மிஞ்சியிருக்கின்றன. மற்றவை ஒருவித நடைமுறையை பின்பற்றி அழிக்கப்படுகின்றன. பெண்ணிற்கு கருத்தரிக்கும் காலம் சுமார் 13 வயதிலிருந்து 53 வயது வரை உள்ள மாதவிடாய் காலம்தான். இந்த சுமார் 40 வருடங்களில் 400 முட்டைகள் மட்டுமே இனவிருத்திக்கு தயார் படுத்தப்படுகிறது. முட்டையின் அளவோ கண்களால் பார்த்தறிய முடியாத அளவுக்கு மிகவும் சிறியது( .02mm) .முட்டை எப்படி உருவாகுகிறது எப்பொழுது உருவாகுகிறது என்பது இதுநாள் வரை மர்மமாக இருந்தது. பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளார் வேறெரு ஆப்ரேஷன் செய்யும் பொழுது தற்செயலாக முட்டை உருவாவதை தனது கேமிராவில் பிடிக்க நேர்ந்து அவைதான் கீழ்க்கண்ட படங்கள் .வைரமுத்து கூறியதைப் போல் தண்ணீர்க் குடத்தில் பிறக்கின்றோமோ
மேற்கொண்டு விவரமறிய

குழந்தை ஏதும் பெற்றுக் கொள்ளவில்லை என்றால் 400 முட்டைகள் தவிர மற்றவை எல்லாம் முழுமையடையாமல் மாதாந்திர தவணை முறையில் அழிக்கப் படுகிறது . மிச்சம் உள்ள முட்டைகளும் மாதவிடாய் நிற்கும் (மெனோபாஸ் ) காலத்தில் முற்றிலும் அழிக்கப் படுகிறது. குழந்தைகளை வரிசையாக இடைவெளி இல்லாமல் பெற்றுக் கொண்டால் ஒரு பெண் அதிகபட்சமாக 60 (இரட்டைக் குழந்தைகளையும் சேர்த்து ) குழந்தைகளை பெற்றுக் கொள்ளலாம்.
ஆதலால் குசேலர் 27 குழந்தை பெற்றுக் கொண்டது பெரிய ஆச்சரியமல்ல. ஏனென்றால் ஒரு ரஷ்யப் பெண் 27 பிரசவத்தில் 69 குழந்தைகள் பெற்றதாக கின்னஸ் ஆவணப்படி தகவல் உள்ளது.
தமிழ்நாட்டில் 16 குழந்தைகள் பெற்றவர்களுக்கு பரிசு கொடுத்து கெளரவித்த வரலாறும் தமிழனுக்கு உண்டு. சில பெரிசுகள் இந்த விஷயம் தெரியாமல் மனிதன் (குசேலரால்) 27 குழந்தைகள் பெற்றுக் கொண்டதை நம்ப முடியவில்லை எனக் கூறுவாரகள். அதற்கு சில விஷயம் தெரியாத விசிலடிச்சான் குஞ்சுகளும் விசில் போடுதுக..
பெண்மையின் மூலம் தான் இனவிருத்தி கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வரப்படுகிறது.முதலில் இனவிருத்திக்கான ஏற்பாடு குழந்தையாக இருக்கும் பொழுது 1:2,000,000 என்று ஆரம்பித்து, பருவம் எய்தும் போது 1:5,00,000 மாறி, பின்னர் மாதவிடாய் காலத்தில் 1:400 என்றாகி முடிவில் இயற்கையாக 1:60 என்ற நிலைக்கு வந்து விட்டது. 
ஆனால் மனிதன் செயற்கையாக அதை நாம் இருவர் நமக்கிருவர் (1:2) என்ற நிலைக்கு தக்கவைத்துக் கொண்டான்.
இனவிருத்தி விஷயத்தில் ஆணை பொறுத்த வரையில் இயற்கை அளப்பறிய சக்தியை கொடுத்துள்ளது. ஒரு ஆண் ஒருமுறை வெளியேற்றும் 2மிலி முதல் 3மிலி (ஒரு டீஸ்பூன் அளவுள்ள ) விந்து திரவத்தில் சற்றேறக் குறைய 40 மில்லியன் விந்தணுக்கள் உள்ளன. ஒவ்வொன்றும் பெண்ணின் ஒரு முட்டையை கருவுறச் செய்யமுடியும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
சராசரி குடும்பஸ்தனாகிய ஆண் தன் வாழ்நாளில் 20 வயதில் ஒரு நாளைக்கு 5 முறையில் ஆரம்பித்து 50 வயதில் ஒரு முறை என்ற அளவில் வந்து அனேகமாக 70 வயது வரை மனைவி அனுமதித்தால் செக்ஸை வைத்துக் கொள்கிறான்.

. http://www.netdoctor.co.uk/menshealth/facts/semenandsperm.htm

இது சம்பந்தமாக ஒரு சுவாரசியமான தகவல் உள்ளது. அதிகமான குழந்தைகளுக்கு தகப்பன் என்ற பெயர் மோலே இஸ்மாயில் என்ற மொராக்கோவின் மன்னரையே சேரும் . அவரது 40 வருட தாம்பத்ய வாழ்வில் 889 குழந்தைகளுக்குதான் தகப்பனாக முடிந்ததாம். மன்னிக்கவும் எத்தனை மனைவிகள் என்ற விபரம் மற்றும் குழந்தை பெறாத மனைவிகள் எத்தனை என்ற விவரம் தற்சமயம் கையில் இல்லை. 
 
http://en.wikipedia.org/wiki/Ismail_Ibn_Sharif

ஆணும் பெண்னுமாகப் பிரிவதில் அவை எந்த வழிமுறைகளை பின்பற்றி ஒரு சமத்துவத்தை எட்டுகிறது என்பதை அறிவதுதான் என்னுடைய இந்தக் கட்டுரையின் முக்கியமான நோக்கம்.முதலில் எண்ணிக்கையில் ஒரு சமத்துவத்தை எட்டி விட முயற்சி செய்தது. ஆனாலும் அதற்கிடையில் ஆண்மையையும் பெண்மையும் எடை போட்டு அதிலும் ஒரு சமத்துவத்தை எப்படி எட்டுகிறது என்பதை அடுத்தபதிவில் காண்போம்.

 மனிதனுக்கு அறிவு வந்த நாளிலிருந்து பிறக்கப் போகும் குழந்தை ஆணா பெண்ணா என்பதை அறிவதற்கு என்றைக்குமே ஒரு ஆர்வம் இருக்கத்தான் செய்தது . மக்கள் எப்படி அறிந்தனர் என்பதையும் தமிழர்களிடம் அதற்கான வழிமுறைகள் என்ன இருந்தது என்பதையும் அடுத்த பதிவில் கண்போம்.

என்னுடைய உயிரும் உயிரின் பிரிவும் தொடரின் வரிசையான பதிவுகளின் சுட்டிகளை இங்கே கொடுத்துள்ளேன்.

உயிரும் உயிரின் பிரிவும் (பாகம் 1)
உயிரும் உயிரின் பிரிவும் (பாகம் 2)
உயிரும் உயிரின் பிரிவும் (பாகம் 3)
 உயிரும் உயிரின் பிரிவும் (பாகம் 4)
உயிரும் உயிரின் பிரிவும் (பாகம் 5)

உயிரும் உயிரின் பிரிவும் (பாகம் 7)
உயிரும் உயிரின் பிரிவும் (பாகம் 8)
உயிரும் உயிரின் பிரிவும் (பாகம் 9)
உயிரும் உயிரின் பிரிவும் (பாகம்10)
உயிரும் உயிரின் பிரிவும் (பாகம் 11)
உயிரும் உயிரின் பிரிவும் (பாகம் 12)
தொடர்வோம்.....................

மேலும் படிக்க...!
பிறக்கப் போகும் குழந்தை ஆணா பெண்ணா என அறிய உதவும் அறிவியல் தொடர்.
.


என்னுடைய ”உயிரும் உயிரின் பிரிவும்” தொடரின் வரிசையான பதிவுகளின் சுட்டிகளை இங்கே கொடுத்துள்ளேன்.

உயிரும் உயிரின் பிரிவும் (பாகம் 1)
உயிரும் உயிரின் பிரிவும் (பாகம் 2)
உயிரும் உயிரின் பிரிவும் (பாகம் 3)
உயிரும் உயிரின் பிரிவும் (பாகம் 4)
உயிரும் உயிரின் பிரிவும் (பாகம் 5)
உயிரும் உயிரின் பிரிவும் (பாகம் 6)
உயிரும் உயிரின் பிரிவும் (பாகம் 7)
உயிரும் உயிரின் பிரிவும் (பாகம் 8)
உயிரும் உயிரின் பிரிவும் (பாகம் 9)
உயிரும் உயிரின் பிரிவும் (பாகம்10)
உயிரும் உயிரின் பிரிவும் (பாகம் 11)



சென்ற பதிவின் தொடர்ச்சி............

ஆகவே வாழ்க்கையில் சவால்களை ஏற்றுக் கொள்ளுங்கள். ஆனால் ”அடைந்தால் மகாதேவி அடையாவிட்டால் மரணதேவி” என்ற வசனம் சத்தியமாக குலம் தழைக்க உதவாது என்பது இதன் மூலம் தெரிகிறது.(அதுமட்டுமில்லாமல் அது வில்லனின் வசனம்) ஏன அடைய முடியவில்லை என்பதை வாரிசுகளுக்கு சொன்னால்தானே மாற்று வழி பிறக்கும். ஆகவே திருமணத்திற்கு முன் சவால்களை சந்தித்து தெளிவடைந்து கொள்ளுங்கள். சவால்களை சந்திக்காவிட்டாலும் பரவாயில்லை உலகத்தை சுற்றிப் பாருங்கள் அல்லது படியுங்கள். நீங்கள் சந்திக்கும் தீர்க்க முடியாத, நிலைத்து வாழ்வதற்கான சவால்களுக்கு தீர்வு உங்கள் வாரிசுகளிடம் ஏற்றப்படும்.

இதனால்தான் விவசாயிகளிடம் பூச்சி மருந்து அடிக்கும் போது பூச்சிகளையோ, எலிகளையோ தப்பிக்க விடாதீர்கள் என அறிவுறுத்தப் படுகிறது.( Some time over dose is recommented). ஏனென்றால் தப்பித்துவிட்டால், வாரிசுகளுக்கு அந்த மருந்து எப்படிப் பட்டது? அதற்கு மாற்று என்ன? என்று கண்டுபிடிக்கும் வழிமுறையை ஏற்றிவிடும்.

இதற்காகத்தான் மைக்ரோசாப்ட் நிறுவனம் கூட, உங்கள் கணினி இடர்ப்பாட்டில் இருந்து மீண்டவுடன் Send error report என்று கேட்கிறார்கள். ஏனென்றால் அப்பொழுதுதான் அடுத்து வெளியி்டப்படும் OS ல் அதற்கான தீர்வை அறிமுகப் படுத்தமுடியும். இடர்ப்பாட்டில்தான் பாடம் படிக்கமுடியும்.

உங்களுக்கு காய்ச்சல் வந்தால், வந்தவுடன் டாக்டரிடம் செல்லவேண்டாம். உடம்பு மூளைக்கு Error report அனுப்பும் வரையாவது பொறுத்துக் கொள்ளுங்கள்.அதற்கும் கூட தீர்வு உங்களிடமே கிடைக்கலாம்.

இனப்பெருக்கம் என்றால், பிளவுபடுதலில்தான் தேவை நிறைவேற்றப்படுகிறதே பின் ஏன் முட்டையின் தேவை? ஆண், பெண் என்ற பிரிவு ஏன்? தாவரஙகளில் ஆண் பெண் என்ற பிரிவு இல்லையே அவைகளும் இன்றளவும் பூமியை ஆள்கின்றனவே?

ஒற்றைச்செல்லாக இருக்கும் பொழுதே கலவி இனப்பெருக்கத்தின் அருமையை உணர்ந்து கொண்டதால்தான் முட்டையின் தேவை நிலை பெற்றுவிட்டது. தாவரங்களில் முதலில் ஆண், பெண் இல்லாமல் இருந்திருக்கலாம். அவைகள் தன்மகரந்த சேர்க்கையினால் இனப்பெருக்கம் செய்தாலும் அவைகளும் நாளடைவில் தாங்குதிறன், மற்றும் நிலைத்துவாழும் (Survival) பண்புகளுக்காக, வண்டுகளுக்கு தேனை லஞ்சமாகக் கொடுத்தும் அயல் மகரந்த சேர்க்கையை பின்பற்ற ஆரம்பித்தன. மரமாக, செடியாக நின்றாலும் ஏதோ ஒருவித கண் கொண்டு சூழ்நிலையை கவணிக்கின்றன என்பது புலப்படுகிறது.

முன்னேறிய விலங்கினங்கள் எல்லாம் ஆண் பெண் பிரிவுகளாகப் பிரிந்து பின் கலப்பு முறையில் சேர்ந்து இனத்தை பெருக்குகின்றன. இதில் பல சூழ்நிலையில் வாழ்ந்த இனங்கள் கலப்பதற்கு வாய்ப்பு இருப்பதால் அவைகளின் அனுபவங்கள் திறன்கள் ஆகியவை மரபணுக்கள் மூலமாக கலந்துவிடும். ஆனால் இரண்டு படுதலில் இந்த வசதி கிடையாது.

ஆணும் பெண்ணும் வெவ்வேறு கண்டங்களில், வெவ்வேறு சூழலில் பிறந்து, கலந்து திறமையான வாரிசை உருவாக்கமுடியும் என்பதற்கான இந்த ஏற்பாட்டிற்காகத்தான் உயிரும் அதனுள் உயிரின் பிரிவுமாகிய ஆண், பெண் ஏற்பட்டது. (அப்பாடா தலைப்பை எப்படியோ சொருகியாச்சு, நல்லவேளை தலைப்பை மறந்து விடவில்லை) அந்தப் பிரிவுகள்தான் ஆண்,பெண் ஆகிற்று.

இவ்விதமான பரவலான கலப்புக்கு வழி இல்லாததால்தான் அமெரிக்காவின் பழங்குடி மக்கள் 20 கோடி பேர் கண்டம் விட்டு கண்டம் தாண்டி வந்த ஐரோப்பியரின் தாங்குதிறனுக்கு எதிராக (அவர்கள் கொண்டு வந்த நோய்க்கும்தான்) தாக்குப் பிடிக்க முடியாமல் கிட்டதட்ட பெரும்பாண்மையினர் (99.8%)அழிந்தே போய்விட்டனர்.

அதே ஐரோப்பியர் இந்தியாவை விட்டு சுத்தமாக வெளியேறியதும் இந்தியரின் (பலசாதிக் கலப்பினால் ஏற்பட்ட) அதீத தாங்குதிறன்தான் காரணம்.

இதனால்தான் ஒரே உறவு முறையிலும் திருமணம் (consanguineous marriage) செய்வதால் பிறக்கும் வாரிசுகள் நிலைத்து வாழும் பண்பில் குறையுள்ளவர்கள் என அறிவியல் கூறுகிறது.

இருபாலினங்களையும் தன்னகத்தே கொண்ட, அதாவது ஆணாகவோ பெண்ணாகவோ வசதிக்கும் சூழ்நிலைக்கும் ஏற்றவாறு தன்னையே மாற்றிக் கொள்ளும் உயிரினங்களும் சில உண்டு. ஆனால் அவைகளினால் மேம்பட்ட சந்ததிகளை உருவாக்க முடியவில்லை என்பதால், அவைகள் பரவலாகக் காணப் படவில்லை.

ஒரே தலைமுறையிலும் கூட கடைசியாக (Latest ) பிறந்த பிறவிகள் ஆளுமை,மற்றும் நிலைத்து வாழும் பண்பு ஆகியவற்றில் சிறந்து இருப்பதைக் காணலாம்। இதையெல்லாம் தமிழ்மக்கள் கண்டறிந்து உள்ளனர் என்பதற்கு பழமொழிகள் சான்றுகளாக உள்ளன। ”மூத்தது மோழை, இளையது காளை” என்ற பழமொழியை ஆராய்ந்தால் டார்வினின் கூற்றில் உள்ள உண்மை புரியும். ஒரு குடும்பத்தில் பிறந்த சகோதரர்களில் மூத்தவர்களை விட இளையவர்கள் திறமையாக செயல்படுவதை காணலாம். அதாவது நிலைத்து வாழும் பண்புகளான ”ஏறி மிதித்துச் செல்லும் திறன்” அதிகமாக காணப் படும். இது அப்பிறவிகளின் தோற்றக்கால இடைவெளியில் பெற்றோர்களின் அனுபவம் கூடுவதால் அதன் பலன் இளைய பிறவிகளுக்கு அதிகமாக கிடைப்பதால் இருக்கலாம்.அது பற்றி பின்னர் பார்ப்போம்.

உயிரினங்கள் வாழ்ந்து கொண்டே, தனது மேம்பட்ட சந்ததியினருக்கும், பூமியில் நிலைத்து இருப்பதற்குமான வழிகளை தன்னை அறியாமலே ஆராய்ந்து கொண்டே இருக்கின்றன என்பதையும், ஆராய்ச்சியின் முடிவுகளால் ஏற்படும் தீர்மானங்களை தன் மரபணுக்களில் ஏற்றிக் கொள்கின்றன என்பதும்தான் பரிணாமத்தின் வழிமுறைகள்.
தொடரும்.............


முந்தைய பதிவு

மேலும் படிக்க...!
பிறக்கப் போகும் குழந்தை ஆணா பெண்ணா என அறிய உதவும் அறிவியல் தொடர்.

சென்ற பதிவின் தொடர்ச்சி............

அம்மாதிரியான கட்டளைப்படி செயல்படும் ஒரு உயிரினத்தின் இனப் பெருக்கச் செயல்பாட்டை தனது கவிதையின் இடையில் செருகி காதலியை வர்ணிக்கும் வைரமுத்துவின் பாடலொன்றைப் பார்ப்போம்.

”விழியில் விழுந்து இதயம் நுழைந்து
உயிரில் கலந்த உறவே”

என்று ஆரம்பித்து

"நீ பட்டுப் புடவை கட்டிக்கொண்டால் பட்டுப்பூச்சிகள் மோட்சம் பெறும்"

என்று பாடிச்செல்வார்.

பட்டுப் பூச்சிகள் எப்படி மோட்சம் பெறும். இதற்கான விளக்கம் தெரிந்தால்தான் புலவனின் கவிதை நுட்பம் நமக்குப் புரியும்.

பட்டுப்பூச்சி (வண்ணத்துப் பூச்சி அல்ல) தனது நூற்றுக்கணக்கான முட்டைகளை முசுக் கொட்டை செடியின் இலையில் இட்டுவிட்டுச் சென்றுவிடும்.



சூரிய வெப்பத்தில் முட்டையிலிருந்து புழுக்கள் வெளிவந்து அந்த இலைகளையே அசுரப் பசியோடு தின்று,அசுரத்தோற்றம் அடைந்து விடுகிறது. ஆமாம் சுமார் 100 மடங்கு வளர்ந்து விடுகிறது.



தேவையான அளவுக்கு வளர்ந்தவுடன் தான் தின்று சேமித்து வைத்த சத்துக்களால் ஒருவித நூலை தயார் செய்து, தனக்குத்தானே சுழன்று, சுழன்று தன்னைச் சுற்றி ஒரு நூலால் ஆகிய கூட்டை உருவாக்கிக் கொண்டு, அந்தக் கூட்டுக்குள் தனது கூட்டுப்புழு பருவத்தை பாதுகாப்பாக கழித்துவிடுகிறது.

கூட்டை குறுக்கே வெட்டிய்தால் ஏற்பட்ட பிரிவுகள்.



தனக்குத் தேவையான சிறகுகள் வளர்ந்து பூச்சியாக மாறியவுடன் (அந்த நூலின் மகத்துவம் தெரியாமல்!!!), சுதந்திரமே பெரிதென கூட்டை கடித்து வெட்டியெறிந்துவிட்டு சுதந்திரப் பூச்சியாக பறந்துவிடுகிறது. ஒரு கெட்டியான நூலினால் ஒரு கூடு செய்து தனது பாதுகாப்பை தேடிக் கொள்ளும் அறிவு புழுவாய் இருக்கும் பொழுது எப்படி வந்தது. அறிவு வரவில்லை, அது பயாஸில் (BIOS) உள்ள விஷயம்.

தனது இனப் பெருக்கத்திற்கான பாதுகாப்பான வழியாக இதைத் தேர்ந்தெடுத்து செய்து வருகிறது. இது ஓரிரவுக்குள் செய்த ஏற்பாடன்று. பல்லாயிரக் கணக்கான வருடங்களாக செய்த சோதனைத் தோல்விகளுக்குப் பின் மெருகூட்டப் பட்ட விந்தையான வித்தை இது. இன்றும் வாழ்கிறது, வாழ்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் மனிதன், அப்புழு, பூச்சியாக மாறி கூட்டைக் கடித்து நூலை சேதப் படுத்தி வெளியேறும் தறுவாயில் அந்தக் கூட்டை வெண்ணீரில் போட்டு பூச்சியைக் கொன்று நூலைச் சேதமில்லாமல் எடுக்கிறான். அது போன்ற நூற்றுக்கணக்கான புழுக்களை கொன்று அந்த நூற்களை எடுத்து பட்டுச் சேலை செய்து பெண்களுக்கு தருகிறான்.அப்படி உருவான சேலையைக் கட்டிய காதலியைப் பற்றிய வர்ணனைப் பாடல்தான் இது.

கொலை அல்லது தற்கொலை செய்யப் பட்ட உயிர்கள் மோட்சம் அடையாது என்பதும், கொலைக்கு காரணமானவர்களை, கொலை செய்யப்பட்ட உயிர்கள் பழிதீர்க்க இப்பூவுலகில் அலையும் என்பதும் மனிதனை நெறிப் படுத்த ஏற்பட்ட வழக்கு. ஏனென்றால் அப்படியாவது கொலை செய்யப் பயப்படுவானா என்றுதான.(அதெல்லாம் கிடையாது,இவை எல்லாம் மூட நம்பிக்கை என்று சொல்லி கொலைக்கு வக்காலத்து வாங்கும் சமூக அக்கறை இல்லாதவன் அல்ல !! )

அவ்வாறு அலையும் பட்டுப் புழுவின் உயிர்கள், தனது கொலைக்கு காரனமான வெண்ணீரில் போட்டவன்,பட்டுச் சேலை நெய்தவன், மற்றும் அந்த பட்டு நூலால் நெய்யப்பட்ட சேலையைக் கட்டியிருக்கும் பெண் ஆகியோரைத் தேடி அலையுமாம். அவ்வாறு அலையும் போது அந்த நூலால் நெய்யப்பட்ட சேலையை அணிந்த இந்தப் பெண்ணைக் கண்டவுடன், ஆஹா இவ்வளவு அழகான பெண்ணுக்காகத்தான் நாம் கொலை செய்யப்பட்டோமா என அறிந்து, இந்த பெண்ணுக்காக என்றால் இன்னும் பத்து உயிர்களைக் கூட கொடுக்கலாம் என எண்ணி எல்லோரையும் மன்னித்து விடுவதால் அவைகள் மோட்சம் பெறுகிறதாம்.

இந்த சேலைக்காக கொலை செய்யப் ப்ட்ட உயிர்களுக்கு மோட்சம் நிச்சயம்


ஆகா என்ன அழகான கற்பனை. கவிஞன் ஒற்றை வரியில் பட்டுநூல் தயாரிக்கும் நுட்பத்தை வைத்து பெண்ணின் அழகைச் சொல்லிவிட்டான்.

இதுமட்டுமா?

”வண்ணத்துப் பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம்”



ஆமாம் அந்த ஒவியங்களை நீங்கள் உற்றுப் பார்த்தது உண்டா? உற்றுப் பார்த்திருந்தால் இந்த வரியில் உள்ள பேரதிசயம் புரியும்.

ஆமாம் அந்த ஒவியங்கள் எல்லாம் ஒன்றை குறிப்பிடுவதை காணலாம். அவைகள் இரண்டு கண்கள் பெரிதாக உள்ள ஒரு கோரமூஞ்சியையும், பூக்களையும், சருகுகளையும் நினைவு படுத்துவதைக் காணலாம். பெரும்பாலும் கோரமூஞ்சிகள் அவைகளின் தீவிர எதிரியான பறவைகளில், கழுகு அல்லது ஆந்தை முகத்தை நினைவுபடுத்தும். ஏனென்றால் அப்பறவைகளின் வாயிலிருக்கும் போது அவைகளின் கண்களைக் கண்டு பயந்து, அதிர்ஷ்டவசமாக தப்பித்ததால், சாவின் விளிம்பில், கண்ணுக்கு தெரிந்த குளோசப் காட்சி, நெஞ்சில் நின்று கருவிலும் பதிந்து விட்டதோ.அதையே தனது இறகுகளில் வரைந்து கொண்டு பிற ஊணுன்னிகளிடமிருந்து தப்பிக்கிறது.கண்ணால் கண்டதை நினைவில் வைத்து சாயக் கலவை, தூரிகை, இல்லாமல் தனது இறக்கையில் ஓவியம் வரைவது அதிசயம் தானே.



இது மட்டுமா உடம்பின் வண்ணத்தை சூழ்நிலைக்கு தக்கவாறு மாற்றிக் கொள்ளும் உயிரிகளும்(பச்சோந்தி) உண்டு. இதில் கில்லாடி ஆக்டபஸ்தான். அது வண்ணத்தை மட்டுமல்ல உருவத்தையே விதம் விதமாக மாற்றி கொள்ளும் பிரானி.

”பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக் கூட்டம் அதிசயம்”.

புலவர் ஒருவேளை வாழைப் பூவை பார்த்து பாடியிருப்பார். எனக்கு கனிக்கூட்டமல்ல, மரக் கூட்டமே தெரிகிறது உங்களுக்கு?

இவ்வாறு தங்களுக்குள் பிறவியிலே தங்களது முன்னோர்களின் சூழ்நிலையினாலும், தேவைகளாலும், விருப்பத்தினாலும், ஒவ்வொரு தலைமுறையினாலும், உயிருடன் நிலைத்து வாழ செய்யப்பட்ட சிற்சிறு மாற்றங்களுடன் ஏற்றப்பட்ட கட்டளைப் (Traits) படி செய்கின்றன. இதில் சொந்த அறிவு என்பது மிகவும் குறைவு எனவும் நிரூபித்துள்ளனர்.

உதாரனமாக குளவிகளின் இனப்பெருக்கத்தைப் பார்த்தோம் என்றால் இது தெளிவாகப் புரியும். அவைகள் நல்ல ஆரோக்கியமான புழுக்களை தேடி, அவற்றை தனது கொடுக்கினால் கொட்டி,கொட்டி அதாவது அவற்றின் உடம்பில் முதலில் ஒரு திரவத்தை செலுத்தி அவை நீண்ட நாளைக்கு கெட்டுப் போகாதாவாறு செய்து பின் தனது முட்டையை அதன் உடலுக்குள் செலுத்தி விடுகிறது.

இதைக் கண்ணுற்ற தமிழன் ஒரு பழமொழியை உருவாக்கியுள்ளான் அதாவது, “கொட்டி கொட்டி குளவியாக மாற்றிய கதை”என்பான். அதாவது ஏதோ ஒரு புழுவை எடுத்து ”கொட்டி கொட்டி வளர்த்து” தனது இனமாக மாற்றிவிடுமாம். உயிரியலுக்கு முரண்பாடான கதை வெகுநாட்களாக உண்மை என நம்பபட்டு வருகிறது.

அந்த புழுவை எடுத்து ஒரு பத்திரமான இடத்தில், ஒரு பொந்தில் (வீட்டில் உபயோகத்தில் இல்லாத மின் இணைப்பிற்கான பிளக்கில் உள்ள துவாரத்தில்) வைத்து அதைச் சுற்றி ஒரு கான்கீரீட் போன்ற களிமண் கூட்டை கட்டி வைத்து விடுகிறது. அந்த கூடுகட்ட களிமண் தேடி எடுத்து பலமுறை கூட்டிற்கு வருகை தந்து, தனது உமிழ்நீரில் கலந்து கட்டுவதைத் தான் ”கொட்டி கொட்டி வளர்ப்பதாக” நினைத்துக் கொள்கிறான்.

ஆகவே அந்தக் கூட்டில் தனது சந்ததி சர்வ நிச்சயமாக உயிர் பிழைத்து வாழும் என்ற நம்பிக்கையோடு தன் கடமை முடிந்து விட்டதாக எண்ணிச் சென்று விடுகிறது. அதனது முட்டை அந்த புழுவின் உடம்பிற்குள் பொரிந்து அந்த புழுவை உண்டு, புழு பருவத்திலிருந்து கூட்டுப் புழு பருவத்திற்கு மாறிவிடுகிறது. பின் இறக்கைகள் முளைத்து குளவியாக மாறி கான்கிரீட் பலமுள்ள அந்த கூட்டை தனது பற்களால் கடித்து உடைத்துவிட்டு வெளியேறி விடுகிறது. இந்த முறையில்தான் அவைகளும் பன்னெடுங் காலமாக பூமியில் நிலைத்து இருக்கின்றன.

சிலர் அதை தவறாகப் புரிந்து கொண்டு ஏதோ ஒரு புழுவை எடுத்து வந்து, கொட்டிக் கொட்டி குளவியாக மாற்றிவிடுவதாகத் தான் இன்னும் நினைத்துக் கொடிருக்கின்றனர்.இதற்குத்தான் கண்ணால் காண்பதும் பொய்,காதால் கேட்பதும் பொய் தீர ஆராய்ந்து அறிவதே மெய் என்றார்கள்.

இப்பொழுது இந்த களிமண் கூட்டை உடைத்து வெளியேறும் முன்பாக, அந்தக் கூட்டை அடுத்து ஒரு மெல்லிய தாளினால் ஆன குப்பியை வைத்துப் பார்த்தனர். அவ்வளவு பலமுள்ள களிமண் கூட்டை கடித்து வெளியேறிய குளவிக்கு அந்த மெல்லியதாளை கடித்து வெளிவரமுடியாமல் இறந்து விட்டது.ஏனென்றால் அது முயற்சிக்க வில்லை. காரணம் அதற்கான அடிப்படை கட்டளைகளில் (BIOS) அதனுடைய பயாஸில், மெல்லிய தாளினால் ஆன குப்பியைப் பற்றிய செய்தி அதற்கு சொல்லப் படவில்லை. ஏதோ ஒரு வகையில் அந்தத் தாளை தெரியாமல் மோதலில் கிழித்து வெளியேறினால் அது கட்டளையாக அடுத்த தலைமுறைக்குப் பதியப் படும்.

ஆகவே இடர்ப்பாடுகளை சந்தித்து மீண்டு, உயிர் வாழ்ந்தால்தான் அதைப் பற்றிய பதிவும், பாதுகாப்பு பற்றிய தேவையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லப்படும். வண்ணத்துப் பூச்சி தான் கண்டு பயந்த பறவைகளின் கண்களை பற்றிய தகவல் சொல்ல உயிருடன் தப்பித்து பின் கலவியில் ஈடுபட்டு, கண்களை பற்றிய தகவலை கருவில் ஏற்றியிருக்க வேண்டும்.

ஆகவே வாழ்க்கையில் சவால்களை ஏற்றுக் கொள்ளுங்கள். ஆனால் ”அடைந்தால் மகாதேவி அடையாவிட்டால் மரணதேவி” என்ற வசனம் சத்தியமாக குலம் தழைக்க உதவாது என்பது இதன் மூலம் தெரிகிறது., ஏன அடைய முடியவில்லை என்பதை வாரிசுகளுக்கு சொன்னால்தானே மாற்று வழி பிறக்கும். ஆகவே திருமணத்திற்கு முன் சவால்களை சந்தித்து தெளிவடைந்து கொள்ளுங்கள். சவாலகளை சந்திக்காவிட்டாலும் பரவாயில்லை உலகத்தை சுற்றிப் பாருங்கள் அல்லது படியுங்கள். நீங்கள் சந்திக்கும் தீர்க்க முடியாத சவால்களுக்கு தீர்வு உங்கள் வாரிசுகளிடம் ஏற்றப்படும்.
தொடரும்.................


முந்தைய பதிவு

மேலும் படிக்க...!
எனது முந்தைய பதிப்பின் பின்னூட்டமாக நாட்டாமை இட்ட கேள்விக்கான பதிலை முதலில் பார்ப்போம்

கேள்வி
//இனப்பெருக்கம் அதாவது பிரதி எடுத்தல் என்பதற்கான அறிவியல் விளக்கத்தின் குறைபாடு ஒன்றுதான், அறிவு ஜீவியின் படைப்பில் அக்கறை உள்ளவர்கள் எடுத்துப் போடும் துருப்புச்சீட்டாக உள்ளது.//

இதற்கு உங்களிடம் உள்ள விளக்கம் என்ன?

துருப்புச் சீட்டு சமயத்தில் ஜோக்கராக இருக்கும்.

ஒன்றைப் போல் மற்றொன்றை, ஒருமுறையல்ல பல்லாயிரக்கணக்கான முறை இடைவிடாமல் உருவாக்கும் தொழிநுட்பம் கல் தோன்றி செல் தோன்றா காலத்துக்கு முன்னே இயற்கைக்கு கை வந்த கலை. இதைக் காண்பதற்கு நாம் காடுமலை எல்லாம் தேடி அலைய வேண்டியதில்லை.
ஒழுகும் குழாயில் உற்பத்தியாகும் நீர்த்துளி சொல்லும், இந்த வித்தை மிகப் பழமையானது என்று. நீங்கள் சற்று மாறுபட்ட கோனத்தில் யோசிக்க கூடியவராக இருந்தால் இந்த நீர்த் துளியின் அற்புதம் உங்களை ஆச்சிரியத்தில் முழ்கடிக்கும். அது ஏன் ஒழுகும் நீர் ஒரு குறிப்பிட்ட அளவு வந்தபின் கீழே விழுகிறது. அதுவும் ஒவ்வொரு நீர்த்துளியும் அளவிலும், எடையிலும், உருவத்திலும் ஒன்று போல் இருக்க என்ன காரணம். முப்பரிமாணத்தில், வண்ணத்தில் ஜெராக்ஸ் எடுக்கும் இந்த கலையை அதற்கு யார் கற்றுக் கொடுத்தது.




காரணத்தை ஆராய்ந்தால் அது ஈர்ப்பு , பரப்பு இழுவிசை. போன்றவைகளின் கூட்டு முயற்சியே. ஆகவே பிரதி எடுக்கும் (Replicate) வேலை என்பது இது போன்ற குட்டி விசைகளின் விளையாட்டுதான். இது மட்டுமா? உப்புக்கல் உருவாகும் உப்பளங்களும் ஜெராக்ஸ் மிஷின்கள்தான்.

உப்புக் கரைசலில் உள்ள நீர் ஆவியாகும் போது உப்பு எடுக்கும் அவதாரங்கள் எத்தனை விதங்கள் என்பது தெரிந்தால் அசந்துவிடுவீர்கள். அது பற்றி படிப்பதற்கே ஒரு அறிவியல் பிரிவும் (Crystalization) உள்ளது.

உப்பும் மிளகும்.உப்பின் சதுர வடிவம்




உப்பு மட்டுமல்ல காற்றிலுள்ள நீராவி உறையும் போது வெண்பனியாய் படர்ந்தும், துராலாய் கொட்டியும், ஆலங்கட்டியாய் அடித்தும் சொல்லும் உன்மைகள் பிரதி எடுத்தலின் திறமை பற்றிதானே. ஆச்சரியப் பட வைக்கும், மனிதன் வரையமுடியாத வடிவங்களில் இயற்கை பிரதி எடுக்கும் வித்தையை பார்த்தால் தலை சுற்றும்.

சாவுப் பள்ளத்தாக்கு ஒருகாலத்தில் கடலாக இருந்து நீர் வற்றிய பின் உப்பு எடுத்த தோற்றத்தைதான் கீழே பார்க்கிறீர்கள்.



வெண்பனி


இது போன்ற பனிக்கட்டியின் படிகங்களை எளிதாக உருவாக்கலாம்





நீர்த்துளியைப் பற்றி கவிஞனின் மொழியில் கேட்டால் ஆச்சரியமாகத்தான் இருக்கும். அறிவியல் மொழியில் கேட்டால் சாதாராண இயற்கை நிகழ்வுகளில் ஒன்றாகும். சமதூரத்தில் பொருட்கள் அமைந்து, குறைந்த பரப்பளவுடன் உருவாகும் வடிவம் (கோளம்)உருண்டை என்பது ஜியோமிதியின் பாலபாடம்.

ஆகவே பிரதி எடுத்தலுக்கான ”அறிவுஜீவியின் படைப்பில்” (Intellectual Creation) அக்கறை உள்ளவர்களின் கேள்வி பற்றி நாம் கவலைப்படாமல் நாம் மேலே தொடருவோம்.

நான் ஏற்கனவே கூறியவாறு இதற்கெல்லாம் காரணம் எலக்ட்ரான்களின் முக்தி நிலைக்கான அல்லது சமநிலைக்கான போராட்டம் தான். அந்த போராட்டத்தின் வழியில் ஒற்றை செல் உயிரிகள் ஏறத்தாழ இருபதாயிரம் வகைகளுக்கு மேல் தோன்றியிருக்கலாம்.


அவைகளில் பிரதானமானவை அமீபா (Ameoba), பாரமசியம் (Paramecium), யூக்ளினா (Euglena), வால்வாக்ஸ் (Volvox) ஆகியவை ஆகும். இயற்கை விட்டு வைத்த மிச்சங்களில், ஆற்றல் சமநிலைக்கு எனது வழிதான் சிறந்தது என உயிரிகள் செல்லும் பாதைதான் நமக்கு போராட்டமாகத் தெரிகிறது. இன்றும் நிலைத்து நிற்கும் நமது மூதாதையர்களான ஓரணுவுயிர்களில், முக்கியமான சிலவற்றைப் பார்ப்போம்.

அமீபா (Ameoba),




அமீபா நிறமற்ற பாகு உருண்டை போன்றது, திரவம் போன்றிருப்பதால் வடிவம் மாறிக் கொண்டே இருக்கும். புரோட்டோபிளாசம் என்ற புரோட்டீன் வகைசார்ந்த உயிர்ப்பொருள் மற்றும் அல்புமென் கூழ்ப் பொருளால் ஆனது.

இவைகள்.
1)உணவு உட்கொள்ளும்,
2)மூச்சுவிடும்,
3)கழிவு வெளியேற்றும்,
4) தூண்டலுக்கு துலங்கும்,
5) கிளர்ச்சியுறும்,
6) இரண்டுபடுதலால் இனப்பெருக்கம் செய்யும்.

மேலே சொல்லப்பட்ட விஷயங்களை வேதியல் முறையில் சொன்னால்,

1)சிலபொருட்கள் குறிப்பிட்ட பொருட்களுடன் (உணவு) தான் வினை புரியும்.
2) வினையின் விளைவாக காற்று (மூச்சு)உருமாற்றப்படுகிறது.
3) வினையின் விளைவாக பொருட்களும்(கழிவு) உருமாறுகிறது.
4)வினையின் போது சக்தியை கிரகிக்கவோ வெளியிடவோ ( இயக்கம்) செய்கின்றன.
5) சக்தியை உள்வாங்கி அசாதாரண நிலையில்(கிளர்ச்சி) இருப்பது.
6) பரப்பு இழுவிசை (Surface Tension , Osmosis, Diffusion, Viscosity) போன்றவைகளால் உருமாறுவது (இனப் பெருக்கம்).

அமீபா ஒளி ஊடுருவதால் கிளர்ச்சியுற்று இடம் பெயரும் தன்மையுடையவை. நாளடைவில் பாதுகாப்பிற்காக தனது திரவ வடிவத்திற்கு ஒரு உறை ஏற்பாடு செய்து கொண்டன.

இனப்பெருக்கத்தை இவ்வாறு விளக்கலாம். நீர்த்துளி ஒரு குறிப்பிட்ட அளவு வந்தவுடன் பிரிந்து எவ்வாறு வெளியேறுகிறதோ அது போன்றே உருவத்தில் பெரிதாகும் போது இரண்டு படுகிறது. ஆக அடிப்படையாக இரண்டுபடுதலில் தான் இனப் பெருக்கம் ஆரம்பிக்கப்பட்டது. நீர்த்துளியின் உருவாக்கமே இனப்பெருக்கத்தின் வழிகாட்டி.

பாரமசியம் (Paramecium)



பாரமீசியம் நீரில் மிதக்கும் பல்வகைத் துணுக்குகளை உண்டு நீந்தி வாழ்கிறது. உடல் முழுவதாலும் ஆக்சிஸனை சுவாசிக்கிறது. இருபத்துநான்கு மணி நேரத்தில் இளம் பாரமீசியங்கள் பிளவுற்று இனப்பெருக்கம் செய்கின்றன. இவைகள் கலவியிலா இனப்பெருக்கம், மற்றும் கலவி இனப்பெருக்கமும் செய்கின்றன. ஒற்றை செல்லாக இருக்கும் பொழுதே கலவி இன்பத்தை உலகுக்கு அறிமுகப் படுத்தியது பாரமீசியமே. முத்தம் கொடுக்கும் முறையில் உட்கரு பரிமாற்றத்தை நிகழ்த்தி கலப்பு முறையிலும் இனப்பெருக்கத்தை தொடங்கி பூமியில் நிலைத்திருக்கும் போராட்டத்தை ஒற்றை செல்லாக இருக்கும் போதே ஆரம்பித்த பாரமீசியமே வாழ்க!

யூக்ளினா (Euglena),




அமைதியான நீர் நிலைகளில் தண்ணீர் சில நேரங்களில் பச்சையாக ஒளிரும். பச்சைக்கு காரணம் அதிலுள்ள யூக்ளினா எனப்படும் ஒற்றைச் செல் உயிரிகள் தான். தன் மீது உள்ள சிவப்பு புள்ளியினால் ஒளியை உணர்ந்து ஒளியை நோக்கி செல்லும். அதே போல் தன் மீது உள்ள பச்சையம் மற்றும் ஒளியின் உதவியால் கரியமில வாயுவை உட்கொள்கிறது. ஒளி இல்லாத இடத்திலும் அமீபா போல் உணவு உட்கொள்ளவும் முடியும். விலங்குகளும் தாவரங்களும், ஒரே பொது முன்னோர்களின் மூதாதையின் வழிவந்தவை என்பதற்கு யூக்ளினா ஒரு உயிருள்ள சான்று.

வால்வாக்ஸ் (Volvox)




ஒற்றை அணுச்செல்களிலிருந்து பல்லுயிரணுப் பிராணிகள் எவ்வாறு தோன்றின என்பதற்கு வால்வாக்ஸ் எனப்படும் பல்லுயிரணு செல்கள் சிறந்த எடுத்துக்காட்டாகும். வால்வாக்ஸ் ஒரு பச்சை உயிரணுவிலிருந்து பிறக்கிறது. இது ஒற்றை செல்லாக வாழ்க்கையை தொடங்கி தொகுப்பான அமைப்பில் வாழ்கிறது. இவைகளும் கலவியிலா இனப்பெருக்கம் தவிர கலவி இனப்பெருக்கமும் செய்கின்றன. இந்த உயிரணு பிளவுரும் போது பிளவுற்ற உயிரிகள் தனியாகப் பிரிந்துவிடாமல் சேர்ந்தே வாழ்கின்றன. அடுத்தடுத்து நிகழும் பிளவுருதல் மூலம் தாய் உயிரணுவிலிருந்து நாளடைவில் 50,000 க்கும் மேற்க்கொண்ட உயிரணுக்கள் தோன்றி பிரிந்து செல்லாமல் சேர்ந்து வாழும் தொகுப்புயிர் உருவாகிறது. அப்போது அது குண்டூசித் தலை அளவான பச்சை உருண்டையாக தோற்றமளிக்கிறது.

இதில் முக்கியமாக கவணிக்க வேண்டிய விஷயம், தொகுப்புயிராக அமைந்தபின் தனி உயிரிகளின் நீண்ட வால் போன்ற கசைகள் (மயிர்க்கால்கள்) கூட்டத்தோடு சேர்ந்தவுடன் மற்றவைகளுடன் ஒத்திசைவாக அசைகின்றன!. அதனால் தான் இயக்கத்தில் தடையில்லாமல் கூட்டமாக இயங்க முடிகிறது. ஒரே தொகுப்பாக மாறிய பின் சொந்த விருப்பு வெறுப்புகளை மூட்டை கட்டிக் கொள்வதில் முன்னோடியாகத் திகழ்கிறது. அவ்வாறு தொகுப்பாக வாழும் போது தேர்ந்தெடுக்கப் பட்டு தலைமைப் பதவி கொடுக்கப் பட்ட செல்கூட்டமே பின்னாளில் உயர் நிலை பிராணிகளுக்கு ”தலை”யாக மாறியது.

வால்வாக்ஸ் போன்ற தொகுப்புயிர்கள் பல்லுயிரணுப் பிராணிகளின் வளர்ச்சியில் முதல் கட்டமாக விளங்குகின்றன. ஓன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற கொள்கைக்கு அடித்தளம் அமைத்த வால்வாக்ஸைப் போற்றுவோம்.

கலவி இல்லா இனப்பெருக்கம் இருக்கும் போது ஏன் கலவி இனப் பெருக்கத்தை நாடின? கலவி இனப்பெருக்கத்தால் தோன்றியவைகளுக்கு தாங்குதிறன்(Survival Capacity) அதிகமாக இருந்ததுதான் காரணம். ஒற்றை செல்லாக இருக்கும் பொழுதே செல்களுக்கிடையே இருந்த தாங்குதிறன், நிலைத்து வாழும் பண்பு, இவற்றையெல்லாம் உற்று, உணர்ந்து மரபணுவில் கட்டளை(Traits) எழுதப் பழகிவிட்டன. உலகின் முதல் மென்பொருள் எழுத்தர்!!! (Software Programmer !!!.)

ஓரணுவுயிர்கள் உலகில் சுமார் 1000 மில்லியன் ஆண்டுகளாக வாழ்கின்றன. கடல் முழுவதும் பல்கிப் பெருகி பூமியை முழுவதுமாக ஆக்கிரமிக்க போட்டி ஏற்பட்டது. அவற்றில் எவை அதிக விரைவாக உணவைப் பெற்றும் ஆபத்திலிருந்து அதிக நிச்சயமாக விலகிச்சென்றும் வந்தனவோ, அவை உயிர் பிழைக்கவும் தங்கள் சிறப்பு இயல்புகளைச் சந்ததிகளுக்கு வழங்கவும் அதிக வாய்ப்புகள் பெற்றன. இவற்றில் ஒன்றை ஒன்று அழித்து, விழுங்கி, இணைத்து சற்றேக்குறைய 10000 உயிரிகள் இருக்கின்றன. இவைகளுக்குள்ளே ஒரு மறைமுக யுத்தம் ஒன்று நடந்து கொண்டுதான் இருந்தது. பொதுவான நோக்கம் உறுதிப்பாட்டை நோக்கிய சமநிலை. (Stablity through Equalibrium)

வெப்ப நீர்நிலைகளில் நூறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு தாழ்நிலை பல்லுயிரணுப் பிராணிகள், கால இடைவெளியில் உயர்நிலை பல்லுயிரணுப் பிராணிகளாகிய ஹைட்ரா, கடற்பஞ்சுகள் என உருமாறி பரிணாமத்தின் அடுத்த கட்டத்திற்கு சென்றன.
எல்லா உயிரினங்களும் தங்கள் இனவிருத்தியை பல கோணங்களில், பல சூழ்நிலைகளில், கணக்கிட்டு வரையறுக்க முடியாத, ஆச்சரியப்பட வைக்ககூடிய, அதிர்ச்சியூட்டக்கூடிய, கோமாளித்தனமான, பயங்கரமான முறைகளில் செயல்படுத்துகின்றன. மேலும் இனவிருத்தியுடன் கூடிய அழியாத்தன்மைக்கும் ஏற்ற செயல்பாடுகளை கற்றுக் கொண்டு செயல் படுத்துகின்றன. இவற்றையெல்லாம் அவைகள் ஓர் இரவுக்குள் சிந்தித்து செயல் படுத்தியது இல்லை.

இங்கு தனிநபர் செயல்திறனுக்கு தேவையான தகவல்களை ஒரு பிறவியில் கற்றுத் தேர்வது கிடையாது. அந்த திறமை வளராத பிரானிகளிடம் இல்லை. ஆகவே ஒட்டு மொத்தமாக, பரம்பரை பரம்பரையாக படிக்கும் பாடங்களில் முக்கியமானவற்றையும் அதனால் ஏற்படும் விளைவுகளில் முக்கியமானவற்றையும் எதிர் கொள்ள வேண்டிய வழிமுறைகளுக்கு அடிப்படையான தேவைகள் ரகசிய குறியீட்டு முறையில் தலைமுறை தலைமுறையாக சுருக்கமாகக் கட்டளைகளாகப் (Traits) பதிந்து, அந்தக் கட்டளைகளை ("Programmes" in computer language) அவைகளின் வாரிசுகள், கண்களை மூடிக் கொண்டு பின்பற்றுகின்றன. அவ்வாறு கண்களை மூடிக் கொண்டு பின்பற்ற வேண்டுமென்பதும் முன்னர் எழுதி வைத்த கட்டளையில் முக்கியமான ஒன்று.

கம்ப்யூட்டர் மொழியில் சொன்னால் மதர் போர்டில் உள்ள பயாஸ் போன்றது. புதிதாக வரும் ஒவ்வொரு மதர் போடும் பயாஸில் அப்கிரேடு செய்யப்படுவது போல் உயிரிகளும் வரும் தலைமுறைக்கு தேவையான வகையில் மாற்றங்களை செய்து கொள்கிறது.

உதாரணமாக மான்குட்டி பிறந்தவுடன் அதனுடைய அடிப்படைத் (Basic Input&output Operating System BIOS) தேவை உணவைத் தேடுவது அது தானாகவே பால் காம்புகளை கண்டுபிடித்து பாலை அருந்துகிறது அது பயாஸில் உள்ள விஷயம். அடுத்த தேவை ஓட்டம். அது மிகவும் எளிதாக உடனடியாக இன்ஸ்டால் செய்யப் படுகிறது. முட்டையிலிருந்து வெளிவரும் ஆமைக் குஞ்சுக்கு உடனடித் தேவை பாதுகாப்பு தரும் கடலாகிய இருப்பிடம்தான், அதைக் கண்டுபிடிக்கும் மென்பொருள் அதன் பயாஸில் உள்ளது. அதனாலதான் மண்ணுக்குள் இருக்கும் முட்டையிலிருந்து வெளியே வந்தவுடன் வேறு எந்த திசையிலும் செல்லாமல் கடலை மட்டும் தேடி ஓடுகிறது. கங்காரு குட்டிக்கு அதன் தாயின் வயிற்றிலுள்ள தனது இருப்பிடமாக மாறப்போகும் பையைத் தேடுவதுதான் பயாஸில் உள்ள விஷயம்.

மன்னிக்கவும், இடையில் வைரமுத்துவின் கவிதை பிரேக்.

அம்மாதிரியான கட்டளைப்படி செயல்படும் ஒரு உயிரினத்தின் இனப்பெருக்கச் செயல்பாட்டை தனது கவிதையின் இடையில் செருகி காதலியை வர்ணிக்கும் வைரமுத்துவின் பாட்டொன்றைப் பார்ப்போம்.

”விழியில் விழுந்து இதயம் நுழைந்து
உயிரில் கலந்த உறவே”

என்று ஆரம்பித்து

"நீ பட்டு புடவை கட்டிக்கொண்டால் பட்டுப்பூச்சிகள் மோட்சம் பெறும்"என்று பாடிச்செல்வார்.
பட்டுப் பூச்சிகள் எப்படி மோட்சம் பெறும். இதற்கான விளக்கம் தெரிந்தால்தான் புலவனின் அறிவியலோடு கலந்த கவிதை நுட்பம் நமக்குப் புரியும். அதை அடுத்த பதிவில் காண்போம்.

  தொடர்வோம்.....................

முந்தைய பதிவு

மேலும் படிக்க...!
இவையெல்லாம சமநிலை எய்துவதற்கான ஏற்பாடுதான். அது சரி இந்த சமநிலை எய்தும் ஏற்பாட்டில் உயிரினத்துக்கு என்ன வேலை? அல்லது உயிர் எப்படி வந்தது?

பரிணாம முறைப்படி பருப் பொருள்தான் உயிர்ப் பொருளாய் ஆனது.
புதிய பொருட்களின் தோற்றத்திற்கு காரணம், அடிப்படைத் தனிமங்களின் அணு அமைப்பில் எஞ்சி நிற்கும் சக்தியை இழந்தோ அல்லது தேவைப்படும் சக்தியை பெற்றோ ஒன்றுடன் ஒன்று இணையும் போது சமநிலை எய்தும் முயற்சிதான். பொருட்கள் சமநிலை நோக்கி செல்லும் வழியில் தோன்றிய வழிப் பொருள்தான் (By product) உயிர் எனப்படும் வேதியல் வினை.

முதலில் உயிர் என்றால் என்ன?. பருப்பொருளுக்கு உயிர் வந்தது எப்படி?.

சார்லஸ் டார்வின் கூற்றுப்படி கடலில்தான் முதன் முதலில் உயிரோட்டம் தோன்றியது என்று அறிவியலார் ஒத்துக் கொள்கிறார்கள். உயிர்கள் தோன்றிய காலகட்டத்தில் கடல் நீர் இவ்வளவு உப்பாக இருந்திருக்காது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. அதிலும் டார்வினின் கனவுத்தீவான கலாபகாஸ்க்கருகில் தான் உயிர் உருவானதற்கு வாய்ப்புகள் அதிகம் என்கின்றனர். ஏனென்றால் அங்குதான் அதிக வெப்ப நிலையிலுள்ள எரிமலைக் குழம்பு, கரி மற்றும் கந்தக வாயுக்கள், நீருடன் கலந்து மிகவும் சிக்கலான பிரம்மாண்டமான மூலக்கூறுகள் உருவாகி உயிர் உருவாவதற்கு ஏற்ற சூழ்நிலை ஏற்பட்டது. எரிமலை, நன்னீர்கடல், மிதமான வெப்பம், காற்று, இடி, மின்னல் ஆகியவையின் கலவைதான் உயிர்ப்பாகு உருவாகுவதற்கு முக்கியமான காரணிகள். உயிர் உருவான கதை இன்னும் முழுமையாக எழுதப்படவில்லை என்ற போதிலும் அறிந்து கொண்ட அறிவியல்படி அன்றாட அறிவை பயன்படுத்தி யூகித்துக் கொள்ள முடிகிறது

அணுவிலிருந்து முக்தி தேடி மூலக்கூறு நிலைக்கு சென்ற பின்னும் திருப்தி இல்லாமல் மிகவும் சிக்கலான கட்டமைப்பு கொண்ட (complex molecule) மூலக்கூறு நிலைக்கு மாறி, கரியின் தீராத தவத்தினால் பின் பலவிதமான அங்ககப் (Organic compounds) பொருட்களாகி (Alkanes. Ethers,Carboxylic Acids,Esters,Oils,Ureides, Carbohydrates, Amino Acids,Proteins) அங்ககப் பொருடகள் புரதப் பொருட்களாகி, முடிவில் மூலக்கூறுகளின் பெரிய வடிவங்களில் ஒற்றை செல்லான பாரமசியமாக பரிணமித்து, பின்னர் ஒற்றைசெல்கள் வால்வாக்ஸ் போன்ற குழுமத்தொகுப்பு உயிரிகளாக மாறி, அவை பின் கடற் பூஞ்சையாய், மீனாய், ஆமையாய், பன்றியாய், விலங்காய், வாமனனாய். மனிதனாய் மாறிய வரலாற்றில் சிக்கலான புரோட்டீன் மூலக்கூறுக்கும் (complex molecule)ஒற்றை செல்லுக்கும் இடையில் தேடினால் உயிர் கிடைக்கும்.

அஸோஸ்பைரிலம், அடுமனை ஈஸ்ட் (Bakery Yeast)ஆகியவற்றை உங்கள் கையில் கொடுத்து அவைகள் நுண் உயிரிகளா என்று கேட்டால் இல்லவே இல்லை பருப்பொருள் தான் என்று சூடம் அணைத்து சத்தியம் செய்வீர்கள். குருணை வடிவில் உள்ள இயக்கமற்ற மாவுப் பொருளை எப்படி உயிர்ப் பொருள் என்று கூறமுடியும்.


ஈஸ்ட்


அசோஸ்பைரிலம்


ஆனால் உன்மையில் அவைகள் நீரில் கலந்து, உறக்கம் கலைந்து, உயிர் பெற்று விடும் நுண் உயிரிகள்தான். இது எப்படி?. இதுமட்டுமா இவைகள் போன்று உயிரா? பொருளா? என்று விளங்கிக் கொள்ள முடியாத லட்சக் கணக்கான இரண்டும் கெட்டான்கள் இப்புவியில் ஏராளம் உள்ளது. "அறிவு ஜீவியின் படைப்பில்" (Intellectual Creations) அக்கறை உள்ளவர்களை வெறுப்படைய வைப்பதும் அவைகள்தான். உதாரணமாக ஈஸ்ட்டை குறிப்பிட்ட சூழலில் 250 வருடங்கள் கூட உறங்க வைக்க முடியுமாம். . இது போன்று பல மில்லியன் வருடங்கள் உறங்கிய பாக்டீரியாக்களை சமீபத்தில் எழுப்பிய சான்றுகள் உள்ளன. இங்குதான் உயிரின் கோட்பாடு நொறுங்குகிறது

உறங்கிக் கொண்டிருக்கும் உயிரை பல்லாயிரக்கணக்கான விதையில் காணலாம், கொசு முட்டையில் காணலாம். வெட்டி நட்டு வைத்தால் தளிர்க்கும் மரக் குச்சியில் உயிரைக் காணலாம். உயிர் என்பது ஒரு வேதியல் வினைதான். ஆனால் அந்த வினையில் ஈடுபடும் வேதிப் பொருட்களின் கலவையும், சூழ்நிலையும்தான் முக்கியம். முட்டையில் உறங்கும் உயிரை எழுப்ப வெப்பம் தேவைப்படுகிறது ஒரு சில சமயம் நீரும் எழுப்பி விடுகிறது. அது பற்றி மேலும் தெரிந்து கொள்ளுமுன் உயிர்ப் பொருட்களுக்கும் பருப் பொருட்களுக்கும் உள்ள வேற்றுமையை தெரிந்து கொள்வோம்.

ஆக முடிவில் தற்போதைய நிலைப்படி உயிரின் இலக்கணம் என்ன? உயிருக்கும் உயிரற்றதற்குமான தெளிவான எல்லைக் கோடு கிடையாது. அப்படியே இருந்தாலும் அது பிரம்மன் போன்றவர்களுக்குத்தான் கோடாக காட்சி அளிக்கும். ஏனென்றால் அக்கோடு மிகவும் அகன்றது. குறுகிய முறையில் வரையறுத்துக் கூறவே முடியாதது. இந்த எல்லைக் கோட்டைக் கடப்பதற்கு இயற்கை எடுத்துக் கொண்ட காலமும் (1500,000,000 வருடங்கள் )மிகவும் பெரியது. இயற்கை விட்டு வைத்த மிச்சங்களிலோ விடையை கண்டுபிடிக்க இன்றைய தொழில்நுட்பம் கை கொடுக்க வில்லை. அதில் ஏதும் சூட்சுமம் பெரிதாக இருக்கப் போவதில்லை.

தமிழன் தனக்குத் தெரிந்த வகையில் அந்த எல்லைக் கோட்டை ஓரறிவில் தொடங்கி ஆறறிவு வரை உள்ள உயிரிகளாக அதாவது ஆறு பிரிவுகளாகப் பிரித்துள்ளான்.

1) தாவரம் 2) புழு,பூச்சிகள், 3)ஊர்வன, 4) பறப்பன,5) நடப்பன 6) ரூம் போட்டு யோசிப்பவை.


மனிதன் தீவனங்களைப் போட்டு தனக்கு தேவையான முட்டைக் கோழி, கறிக் கோழி, எலும்புக் கோழி என கோழியை தனது தேவைக் கேற்றவாறு மாற்றி அமைத்துக் கொள்ளக் கற்றுக் கொண்டான். அதாவது பொருட்களை தயாரிப்பது போல் தயாரிக்கிறான். கறிக் கோழி இனமான கெண்டக்கி சிக்கனை அமெரிக்க அரசு கோழி லிஸ்ட்டில் வைக்கவில்லை என சில தகவல்கள் கூறுகிறது.ஆமாம் இந்த படத்தில் உள்ளது போல் இருந்தால் கோழி என்றா சொல்லமுடியும்.




ஆனாலும் உயிருக்கு இலக்கணம் என்று ஒன்றை மிகக் குறுகிய முறையில் வரையறுக்க சில முக்கிய பண்புகள் மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. அவை முறையே

1) தூண்டலுக்கு துலங்குவதும்,
2) இம்மண்ணில் நிலைத்து இருப்பதற்குமான யுக்திடன் இருப்பதும்,
3) அதற்குத் தேவையான இனப்பெருக்கம் செய்வதும்.
ஆகிய மூன்று குணங்களே. அதையும் நெருங்கி ஆராயும் பொழுது கீழ்க் கண்டவைகள் மிக முக்கியமாக கருதப் படுகின்றன.

உயிர்ப்பொருளின் தன்மைகள்
தூண்டலுக்கு துலங்கல்,
வளர்சிதை மாற்றம்
இனப்பெருக்கம்.

இதில் முதலாவது குணம், பருப்பொருட்களின் பொதுத்தன்மை. வெப்ப நிலைக்குத் தக்கவாறு தனது தோற்றத்தை மாற்றிக் கொள்கிறது. இயக்கம் என்பது சில வகை பொருட்களின் தன்மையாகும். அதற்கு ஈர்ப்பும் வெப்பமும் காரணமாகும். ஆனால் இந்த வகையான துலங்கலையும் இயக்கத்தையும் கணக்கில் கொள்ளாமல் நுண்ணிய துலங்கல் கொண்ட உயிர்ப் பொருளாய் மாறுவதற்கு எடுத்துக் கொண்ட காலத்தின் அளவும், உருமாற்றங்களும் கணக்கிலடங்கா. இடைப்பட்ட காலத்தில் தோன்றிய அந்த இரண்டும் கெட்டான் நிலையிலுள்ள லட்சக் கணக்கான பொருட்களும் டார்வினுக்கு சாட்சிகளாக உள்ளன.

இனபெருக்கம் ஒன்றுதான் உயிர்ப் பொருட்களின் தலையாய பண்பு. உயிரிகள் சர்வாதிகாரத்திற்கான யுத்தத்தை ஒற்றைச் செல்லாக இருக்கும் போதே ஆரம்பித்து விட்டன. ஆரம்பித்த உடன் இனப்பெருக்கத்தில் தீவிர அக்கறை கொண்டன. அதில் உருவானாதுதான் சிக்கலான அணுத்தொகுப்புகளின் கூட்டமைப்பு(Complex Molecule).

உயிரின் ஆரம்பம் படிகமாதல் அல்லது உறைதலில் தொடங்கியிருக்க வேண்டும். படிகமாதலில் தொடங்கி மனிதனாக உருமாறியுள்ளது. ஏனென்றால் இங்குதான் வெப்ப நிலை மாற்றத்தால் ஒன்றுபடுதல் ஒன்றுபடுதலில் நிறைவு நிலை அடைந்தவுடன், இரண்டுபடுதல், பின்னர் அடுக்கடுக்காக இரண்டுபடுதல், இணைதல், உருப்பெறுதல், உருமாறுதல் என்ற துலங்கலுடன் கூடிய மிகவும் அடிப்படையான இனப் பெருக்க நிகழ்வுகள் காணப் படுகின்றது. தூண்டலுக்கு துலங்கல் என்பதில் தான் உயிரின் சூட்சுமம் அடங்கியுள்ளது.

தூண்டலுக்கு துலங்கல் என்றால் என்னவென்று கொஞ்சம் தெளிவாக பார்ப்போம். அந்த வேதியல் வினைக்கும் கண், காது, மூக்கு, வைத்து அதை உயிராக எப்படி மாற்றிச் சொல்லி ஆச்சரியப் படவைப்பது என்றும் பார்ப்போம்..

1) ஒரு பாத்திரத்தில் பாலை ( Complex molecule in colloidal state) விட்டு அடுப்பில் வைத்து சூடேற்றுகிறீர்கள். சூடேற்றியதால் கோபமுற்ற பால் பொங்கி எழுந்து நெருப்பை அணைக்கிறது.பால் தப்பி பிழைத்து மிச்சமும் இருக்கிறது. பொங்குவதன் மர்மம் என்ன? முதலில் ஒரு காப்பு உறை (பாலாடை)தயாரிக்கிறது. அந்த உறையில் அடக்கப் பார்க்கிறது முடியவில்லை, அடக்கிய வேகத்தில் பொங்குகிறது

2) இப்பொழுது மண்ணென்னெயை (Complex molecule) வைத்து சூடேற்றுகிறீர்கள். சூடேற்றியதால் கோபமுறவில்லை. மாறாக ஜோதியில் ஐக்கியமாகி,அதாவது தானும் நெருப்புடன் சேர்ந்து எரிந்து மறைந்து விடுகிறது.

3) இப்பொழுது பாலுக்கு பதில் தண்ணீரை (Simple Molecule) வைத்து சூடேற்றுகிறீர்கள். சூடேற்றியதால் கோபமுற்ற நீர் கொதிக்கிறது ஆனால் பொங்கி எழுவில்லை. ஆகவே அப்பாவியாக ஆவியாய் மாறி அலைகிறது.

பாலுடன் ஒப்பிடும் பொழுது, வெப்பத்திற்கு கொதித்து எழுந்தும் ஒன்றும் செய்ய முடியாமல் இருந்த நீர் குளிர் காலத்தில் கடலில் அமைதியாய் அஹிம்சை முறையில் மேற் பரப்பு மட்டும் பனிக் கட்டியாய் மாறி வெப்பத்தைக் கடத்தாத கவசம் (Thermal insulator) போல் மிதந்து கொண்டு கடல் நீர் முழுவதும் உறையாமல், கடலில் உள்ள உயிர்கள் உறையாமல் பாதுகாக்கிறது.

இதில் நான குறிப்பிட்ட சிறு பிள்ளைத் தனமான, கோப தாபமெல்லாம் நமது மாத்தி யோசித்த கற்பனை. அதற்கு உயிர் உள்ளதாக நினைத்தால் நான் பொறுப்பல்ல. மற்றபடி நிலைமாறுதல் என்பதுதான் முக்கியம். அதற்கு என்ன கதை சொன்னாலும் பொருந்தினால் சரிதான். ஒன்றை வைத்து ஒன்றை புரிந்து கொள்வது எளிது என்பதற்காக சொல்லப் பட்டது. அந்த நிலை மாற்றத்திற்கு பெயர்தான் துலங்கல். இங்கு வெப்பத்தினால் ஏற்பட்ட துலங்கல்தான்.

இதைப் போன்று ஒளி, ஒலி, நறுமணம், தொடுதல், ஆகியவற்றிற்கு வெவ்வேறு விதமாக எதிர் வினை புரியும் பொருட்களைப் பற்றி யோசித்துப் பாருங்கள். உரசினால் பற்றிக் கொள்வது, தட்டினால் வெடிப்பது, ஒளியில் கறுப்பது, இருட்டில் ஒளிர்வது, தொட்டால் சுருங்குவது, பட்டால் அரிப்பது ஆக பட்டியலுக்குள் அடக்க முடியாத எண்ணிலடங்காத சமாச்சாரங்கள் உள்ளன. இவைகளின் கலவையில் உயிர் தோன்றுவது என்பது, எடுத்துக் கொண்ட காலத்தை கணக்கில் எடுத்துக் கொண்டால், ஒரு ஆச்சரியமல்ல.

இனப்பெருக்கம் அதாவது பிரதி எடுத்தல் என்பதற்கான அறிவியல் விளக்கத்தின் குறைபாடு ஒன்றுதான், அறிவு ஜீவியின் படைப்பில் அக்கறை உள்ளவர்கள் எடுத்துப் போடும் துருப்புச்சீட்டாக உள்ளது. மேலும் உயிரிகளின் கண்களை ஒரு பேராச்சிரியமாக கற்பனை செய்து பேசுவதும் வாடிக்கை ஆகிவிட்டது. எதுதான் ஆச்சரியமில்லை?.( Truth is stranger than fiction) . உங்களது கற்பனைக்கு எட்டாத விஷயத்தை இயற்கை படைத்தால் அது ”அறிவு ஜீவியின்” கைவேலை என எண்ணலாமா?. அப்படி எண்ணுபவர்கள் காலத்தின் போக்கில் அவமானத்தை சந்திக்கப் போகிறார்கள்.

ஒளிபட்டவுடன் உருமாறி நின்று, கழுவிய உடன் கதைசொல்லும் செல்லுலாய்டு சுருள்களில் (Film Reel) உள்ள பொருட்கள்,
எலக்ட்ரான கற்றையின் வீச்சுக்கு தகுந்த படத்தை வரைய மின்னணுக் குழாய்களில்(CRT) தடவப் பட்ட பொருட்கள்.
காந்தவிசையின் தாக்குதலில் சுழலும் சக்கரங்கள்(Motors) எல்லாமே தூண்டலுக்கு துலங்கல்தான்.அதுவும் முக்தி நிலைக்கான எளிய முயற்சிதான்.

பல்லாயிரக்கணக்கான பருப்பொருட்கள் தூண்டலின் போது பல்வேறு விதமாக எதிர்வினை புரிகின்றன. இது போன்ற பல்வேறு தூண்டுதல்களுடன் ஒத்த பொருட்கள் சரியான முறையில் தற்செயலாக இணைந்து மூலக்கூறுகள் உருவாகின. பல மூலக்கூறுகள் இணைந்து ஒற்றைச் செல் உயிரிகள் உருவாகியுள்ளன.

பூமி என்ற ஆராய்ச்சி சாலையில் இயற்கை என்ற விஞ்ஞானி 1500 மில்லியன் வருடங்கள் பாடுபட்டு உருவாக்கிய விஷயத்தை கடந்த நான்கு வரிகளில் கூறிவிட்டேன். நான் ஏற்கனவே கூறியவாறு இதற்கெல்லாம் காரணம் எலக்ட்ரான்களின் முக்தி நிலைக்கான அல்லது சமநிலைக்கான போராட்டம் தான். ஒற்றை செல் உயிரிகள் ஏறத்தாழ இருபதாயிரம் வகைகளுக்கு மேல் தோன்றியிருக்கலாம்.

அவைகளில் முக்கியமானவற்றை அடுத்தபதிவில் பார்ப்போம்.


முந்தைய பதிவு

மேலும் படிக்க...!
என்னுடைய ”உயிரும் உயிரின் பிரிவும்” தொடரின் வரிசையான பதிவுகளின் சுட்டிகளை இங்கே கொடுத்துள்ளேன்.

உயிரும் உயிரின் பிரிவும் (பாகம் 1)
உயிரும் உயிரின் பிரிவும் (பாகம் 2)
உயிரும் உயிரின் பிரிவும் (பாகம் 3)உயிரும் உயிரின் பிரிவும் (பாகம் 4)
உயிரும் உயிரின் பிரிவும் (பாகம் 5)
உயிரும் உயிரின் பிரிவும் (பாகம் 6)
உயிரும் உயிரின் பிரிவும் (பாகம் 7)

நான் மூலகங்களின் அட்டவணையைப் பற்றி அடிக்கடி குறிப்பிடுவதால் அந்த அட்டவணை பற்றி இன்னும் விளக்கமாக கூறுமாறு என் நன்பர் கேட்டார்.

அட்டவணை பற்றி எழுத ஆரம்பித்தால் அது தனித்தொடராக மாறிவிடும். ஆகவே சுருக்கமாக பார்த்தால், விரிவாக தகவல் கொடுக்கக் கூடிய தளங்கள் வலைத்தளத்தில் நிறைய உள்ளது. அதில் (Dynamic and Interactive Periodic table) ஒன்றிற்கான சுட்டியை இங்கே கொடுத்துள்ளேன்। இதை புக்மார்க் (Bookmark) செய்து கொள்ளவும்.
http://www.ptable.com/

அதில் தகவல் எவ்வாறு பெறலாம் என்பதற்கான ஒரு சிறிய விளக்கமும் கொடுக்கிறேன். உங்களுக்கு நேரமும் ஆர்வமும் இருந்தால் பயன் படுத்திக் கொள்ளுங்கள்.


இதில் குறிப்பிடப் பட்ட இடது மேல் புறம் உள்ள நான்கு ஜன்னல்(window)களில் முதல் ஜன்னலில் wikipedia என்று தேர்வு செய்து விட்டு ஏதாவதொரு மூலகத்தை கிளிக் செய்தால் அது உங்களை விக்கிபீடியாவிற்கு அழைத்துச் சென்று அம்மூலகத்தைப் பற்றி அங்குள்ள விவரங்களைத் தரும்.

வீடியோ என்று தேர்வு செய்தால் அந்த மூலகம் பற்றிய வீடியோ விவரங்களைத்தரும். அது போல் Web Elements, Videos, Photos, Podcasts என்று தேர்ந்தெடுக்கப்பட்ட முறையில் தகவல் பெறலாம். மவுஸை நகர்த்தி தேவைப் பட்ட இடத்தில் வைத்தும் தகவலைப் பெறலாம்.

Orbitals தேர்ந்தெடுத்தால் ஷெல்கள், எலக்ட்ரான்கள் அமைந்த விதம் பற்றி தெரிந்து கொள்ளலாம். இங்கே (Au) தங்கத்திற்கான எலக்ட்ரான் அமைப்பு தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளதை கீழே உள்ள படத்தில் காணலாம்.



Isotopes தேர்ந்தெடுத்தால் அந்த மூலகத்திற்கு எத்தனை ஐசோடோப்புகள் உள்ளன என்பதை அறியலாம்.
அது போல் (Property) தேர்வு செய்தால் அதற்கு ஒரு துணை மெனு ஒன்று உருவாகும். அதில் கீழ்கண்டவாறு விரியும்.



இதில் உதாரணத்திற்கு ஹைட்ரஜன் மூலகம் தேர்ந்தெடுக்கப்பட்டதை பச்சை நிறத்தில் காணலாம். ஹைட்ரஜனின் 16 குணங்களின் அளவுகளும் தரப் பட்டுள்ளது. அதிலும் ஏதாவது ஒன்றை கிளிக் செய்தால் மேலதிகத் தகவல் கிடைக்கும். உதாரணத்திற்கு Universe Abundance தேர்ந்தெடுக்கப் பட்டதை மஞ்சள் நிறம் காட்டுகிறது . அண்டத்தில் ஹைட்ரஜன் 75% சதவீதம் உள்ளதை தெரிவிக்கிறது. நமது உடலில் எத்தனை சதவீதம் என்பதை தெரிந்து கொள்ள வலது ஓரத்தில் உள்ள Human என்பதை கிளிக் செய்தால் போதும். அது போல் முறையே சூரியமண்டலம், விண்கல், பூமிப் பரப்பு, கடல் ஆகியவற்றில் நாம் தேர்ந்தெடுத்த மூலகம் எவ்வளவு உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
Density என்று தேர்ந்தெடுத்தால் அந்த மூலகம் திட, திரவ நிலைகளில் உள்ள அடர்த்தி என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

அதிக அடர்த்தியான ஒரே மாதிரியான மூலகங்கள் ஒரே இடத்தில் சுற்றி இருப்பதை அட்டவணையை முழுமையாகப் பார்த்தால் புரியும். அது போல் எல்லாக் குணங்களும் அட்டவணையை சார்ந்து இருப்பதை ஒவ்வொன்றாக கிளிக்செய்து அட்டவணையை லாங்ஸாட்டில் பார்த்து, நிறத்தின் அடர்த்திக் கேற்ப குணங்கள் கூடுவதைக் காணலாம்.



Discovered தேர்ந்தெடுத்தால் மூலகம் எந்த ஆண்டு கண்டு பிடிக்கப்பட்டது, என்பதுடன் வலது ஓரம் உள்ள ஸ்லைடர் ஒன்று இருக்கிறது. அதை நகர்த்தி ஆண்டுவாரியாக எந்தெந்த மூலகங்கள் கண்டுபிடிக்கப் பட்டன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

அட்டவணை பற்றி சொன்னது கொஞ்சம், சொல்லாமல் விட்டது அதிகம். அதை கண்டுபிடித்து தெரிந்து கொள்ளுங்கள்.

கடந்த பதிவில் 4 டிகிரிக்கு கீழ் குளிர்வித்தால் நீரின் அடர்த்தி குறைகிறது என்று சொல்லியிருந்தேன். அதற்கான விளக்கப்படம். கீழே கொடுத்துள்ளேன்.



பனிக்கட்டியாக மாறும் போது, படிகத் தன்மைக்காக ஹைட்ரஜனின் இணைப்பினால் அணுக்கள் அதிக இடம் எடுத்துக் கொள்வதால் அடர்த்தி குறைந்து நீரில் மிதக்கிறது.

கெமிஸ்டரியை முடித்துக் கொள்வோம்.

தொடரும் பதிவில் சந்திப்போம்.......................


முந்தைய பதிவு

மேலும் படிக்க...!
ஆக்ஸிஸன் அணுவின் கடைசி அடுக்கான L அடுக்கில் ஆறு எலக்ட்ரான்கள் தான் உள்ளன.சமாதி நிலை அல்லது உன்னத நிலை அடைவதற்கு இன்னும் இரண்டு எலக்ட்ரான்கள் தேவைப்படுகிறது. ஆகவே ஒரு எலக்ட்ரான் உள்ள இரண்டு ஹைட்ரஜன் அணுக்களுடன் இணைந்து தனது கடைசி செல்லில் எட்டு எலக்ட்ரான்கள் வருமாறு பார்த்துக் கொண்டு H2O என சொல்லப்படும் எளிதில் பிரிக்க முடியாத தண்ணீராக உருவானது. அந்த தண்ணீரின் சிறப்புக் குணமே திட, திரவ, வாயு என்ற மூன்று நிலைகளிலும் இப்பூமியில் காணப்படுவது தான். தண்ணீருக்கு இந்த ஒரு சிறப்புக் குணம் மட்டுமில்லை பல உண்டு. தண்ணீரின் சிறப்பு பற்றி வைரமுத்து ஏற்கனவே ஒரு கவிதை பாடியுள்ளார்.

”நதியே நதியே காதல் நதியே நீயும் பெண்தானே
அடி நீயும் பெண்தானே
ஒன்றா இரண்டா காரணம் நூறு கேட்டால் சொல்வேனே
நீ கேட்டால் சொல்வேனே”.

முழுப்பாடலையும் கேட்டால் நீரின் மற்றொரு பரிமாணமாகிய நதியின் பெருமைகள் தெரியும். உண்மையிலே அருமையான பாடல்.




ஹைடிரஜன், ஆக்ஸிஸனுடன் இணைந்து நீர் உருவாகும்। Hydro என்றால் நீர் சம்பந்தப் பட்டது। Hydrogen என்றால் ”நீரை உருவாக்கும்” என்று பெயர் மேலே உள்ள படத்தைப் பார்த்தால் புரியும் ஹைட்ரஜன் தனது ஒற்றை எலக்ட்ரானுக்கான பாதையை ஆக்ஸிஸனுடன் பங்கிட்டுக் கொண்டு, சேர்வதால் அந்தப் பாதைச் செலவில் மிச்சமாகும் சக்தி வெப்பமாக வெடிச் சத்தத்துடன் வெளியேறுகிறது.

இந்த வினை விளக்க சமன்பாட்டை கடந்த பாகத்திலும் கொடுத்திருந்தேன். அதே சமன் பாட்டை இங்கே இன்னும் சற்று விளக்கமாக இங்கே கொடுத்துள்ளேன் இந்த சமன்பாட்டில் காணப்படும் அந்த மஞ்சள் முக்கோணம்தான் எதிர்கால விடிவெள்ளி. இந்தியா போன்ற நாடுகளுக்கு நம்பிக்கை நட்சத்திரம்.ஆகவே அதைப் பற்றியும் தெரிந்து கொள்வோம்.

வேதியல் வினைகள் பலமுறையில் நடக்கும். சில பொருட்களை சேர்க்கும் போது வெப்பம் உண்டாகும். சில வினைகள் வெப்பத்தை உள்வாங்கிக் கொண்டுதான் நடைபெறுகிறது. உதாரணமாக ”மிக்ஸிங்”(ஆல்கஹால் + நீர் சேர்ப்பு) இன் போது சொற்ப அளவில் வெப்பம் உண்டாவதை மிகுந்த அனுபவசாலிகள் உணர்ந்திருப்பார்கள். பெட்ரோல் காற்றுடன் கலந்து தீப்பிடிக்கும் போது வெப்பம் உண்டாகும். வினையின் போது உருவாகும் வெப்பத்தை குறிப்பிடத்தான் சமன்பாடுகளில் அந்த முக்கோணம் பயன்படுத்தப் படுகிறது.

நமது வாகனங்களை இயக்க பெட்ரோலை எரித்துக் கிடைக்கும் வெப்பத்தை பயன்படுத்துகிறோம்। இன்னும் சில ஆண்டுகளில் பெட்ரோல் தீர்ந்துவிடும் நிலை வந்து விட்டதால் மாற்று எரிபொருளாக ஆல்கஹாலும், ஹைட்ரஜனும் தான் வருகிறது. ஆல்கஹால் தயாரிப்பு நமது உணவுத் தேவைக்கான இடத்தை அபகரித்துக் கொள்வதால் அதைவிடச் சிறந்ததாக ஹைட்ரஜன் வாயுதான் நம்பப்படுகிறது. ஹைட்ரஜன் கார்கள் ஏற்கனவே வந்துவிட்டன. ஆனாலும் இன்னும் அந்த தொழில் நுட்பம் பரவலாக்கப் படவில்லை அல்லது எளிதாக்கப் படவில்லை. இனிமேல் இடையில் ஏதும் அற்புதங்கள் நிகழாத வரையில் ஹைட்ரஜன் தான் எதிர்கால எரிபொருள். ஆகவே இப்பொழுது தொடங்கி நமது விஞ்ஞானிகள் அதில் கவனம் செலுத்தினால் இத்துறையில் நாம் முன்னோடிகளாக இருப்போம். முன்பு விளையாட்டாக சொல்வார்கள் கார் என்ன தண்ணீரில் ஓடுகிறதா?, என்று. தண்ணீரில் ஓடும்காலம் விரைவில் வந்துவிடும்.ஏனென்றால் தண்ணீரில் தான் ஹைட்ரஜன் எளிதாக கிடைக்கிறது.

சரி இப்பொழுது நீரின் மற்றொரு சிறப்புக் குணம் என்னவென்று பார்ப்போம்। எல்லாப் பொருட்களும் கன அளவில் குறைந்துதான் திட நிலைக்கு மாறும்,ஆனால் தண்ணீரானது திரவ நிலையில் இருக்கும் பொழுது குளிர்வித்தால் 4 டிகிரி வரை சுருங்கி விட்டு பின் விரிவடைகிறது. அதனால் தான் திட நிலையில் உள்ள பனிக்கட்டி திரவ நிலையில் உள்ள நீரில் மிதக்கிறது. அவ்வாறு மிதக்காவிட்டால் ஒவ்வொரு குளிர் காலத்திலும் கடல் நீர் தொடர்ந்து பனிக் கட்டிகளாக மாறி கடலுக்கடியில் சென்று நிரந்தரமாக தங்கிவிடும். பூமியில் தட்ப வெட்ப மாற்றம் என்பது புறப்பரப்பு சம்பந்தப்பட்டது என்பதாலும் பூமியின் புறப்பரப்பில் கிட்டதட்ட 80 சதவீதத்தைக் கொண்ட கடல் விரைவில் பனிக்கட்டியாக மாறி முழ்கிக் கொண்டே இருப்பதால் கடல் முழுவதும் பனிக்கட்டியாக மாறி உயிரினம் வாழ அருகதை அற்றதாக மாறிவிடும். கடலுக்கடியில் சென்ற பனிக்கட்டி உருகுவதற்குள் அடுத்த குளிர்பருவகால பனிக்கட்டிகள் அதன் மீது படர்ந்து விடும். இவ்வாறு சிலவருடங்களில் கடல் முழுவதும் நீரோட்டமும் உயிரோட்டமும் இல்லாத பனிக்கட்டியாக மாறிவிடும்.




ஆனால் அப்படி மாறாமல் மேற்பரப்பு மட்டும் பனிக்கட்டியாய் மாறி வெப்பத்தைக் கடத்தாத கவசம் (Thermal insulator) போல் மிதந்து கொண்டு கடல் நீர் முழுவதும் உறையாமல் பாதுகாக்கிறது. இந்த தன்மைக்கு, H2O மூலக்கூறுகளின் ஈர்ப்பும், அமையப்பட்ட விதமும் தான் காரணம்

இந்த நீரின் தனிப்பட்ட குணத்தினால் ( Anamalous behaviour of water) தான் பூமியில் உயிரினம் தோன்றி, நிலை பெற்றிருக்கிறது..


திரவங்களை சூடேற்றும் போது பாத்திரத்திற்கு அடியில் நெருப்பை வைக்க வேண்டும், குளிரூட்டும் போது குளிர்ச்சியை பாத்திரத்திற்கு மேல் வைக்கவேண்டும். அப்பொழுதுதான் கடத்தல் (Conduction) முறையில் வெப்பம் பரவும்.

அதனால் தான் ப்ரிட்ஜ்ஜில் ப்ரீசர் மேலே வைக்கப்பட்டுள்ளது.



ஹீட்டரில் காயில் கீழே வைக்கப்பட்டுள்ளது.



ஆனால் இந்த பிரியானிக்கு மட்டும் பாத்திரத்திற்கு மேல் நெருப்பை போட்டு ”தம்” போடுவதில் உள்ள தத்துவம் சத்தியமாக எனக்கு புரியவில்லை. பாலைவன மக்களின் வழக்கத்தை குருட்டுத்தனமாக பின்பற்றும் முட்டாள்தனமா? அல்லது இது ஒரு வேளை குருகுலத்தில் சீடர்கள் பூனை வாங்கி கட்டிப் போட்டு விட்டு பாடம் நடத்திய கதை மாதிரியோ?

ஒரு ஆக்ஸிஸன் அணு இரண்டு ஹைட்ரஜன் அணுக்களுடன் இணைந்து H2O என சொல்லப்படும் தண்ணீர் உருவானது. இந்த மூன்று அணுக்களும் கூட்டணி முறையில் தங்களிடம் உள்ள எலக்ட்ரான்களை பொதுவில் போட்டு பின்னர் பொதுவில் பங்கிட்டு ஒவ்வொன்றும் தங்களுக்கு தேவையான எட்டை எட்டிவிடுகிறது. ஹைட்ரஜன் ஒரு அணுவை கொடுத்து எட்டை எடுத்துக் கொள்கிறது.ஆக்ஸிஸன் ஆறு எலக்ட்ரான்களை பொதுவில் போட்டு பின்னர் எட்டை எடுத்துக் கொள்கிறது. இவ்வாறு தான் புளுரினும், ஹைட்ரஜனும் முறையே ஏழு, ஒன்று, எலக்ட்ரான்கள் தங்களது கடைசி ஸெல்லில் உள்ளதால் இவையிரண்டும் சேர்ந்த கூட்டுப் பொருளாகிய ஹைட்ரஜன் புளுரைடு என்ற உலகிலேயே அதிகபட்ச பிணைப்பு கொண்ட பொருள் உருவாகிறது.

கார்பன் எனப்படும் கரி தனது கடைசி ஸெல்லில் நான்கு எலக்ட்ரான்கள் உள்ளன.






எட்டின் விதிப்படி தனது முக்தி நிலை அடைவதற்கு இன்னும் நான்கு எலக்ட்ரான்களை அடைய வேண்டும் அல்லது இழக்க வேண்டும். எட்டில் சரி பாதியாக இருப்பதால் இதுவே ஒரு சிறப்புத் தன்மை ஆகிவிட்டது. ஆகவே எல்லாவிதமான யுக்திகளையும் பயன்படுத்தி கார்பன் (தனக்குத் தானே கூட சேர்ந்து), உன்னால் என்மனம் இழந்தது பாதி, உன்னால் என்மனம் அடைந்தது பாதி என்று பாடிக்கொண்டே ஆக்ஸிசன், ஹைட்ரஜன், நைட்ரஜன் ஆகியவற்றுடன் குறைந்தது 2 அணுக்களிலிருந்து 100000 அணுக்கள் வரை கூட ஒன்றாக இணைந்து இலட்சக்கணக்கான அங்கக கூட்டுப் பொருட்கள்(Organic Compounds) உருவாயின.

வேதியல் உலகில் கார்பன் தனக்கென ஒரு இடத்தை வைத்துக் கொண்டு தன்னுடைய சில சொற்ப நன்பர்களுடன் தனியாக ஒரு பெரிய (Organic Chemistry) சாம்ராஜ்ஜியத்தையே நடத்துகிறது. உதாரணத்திற்கு கார்பன் ஹைட்ரஜன் கூட்டில் உருவான புரதப் பொருட்களாகிய முட்டைக் கரு சுமார் (Egg Albumin) 45000 மூலக்கூறு எடை கொண்டது. அது போன்று இரத்தத்திலுள்ள ஹீமோகுளோபின் (Haemoglobin) 68000 மூலக்கூறு எடை கொண்டவை. (Casein-190000, Urease-480000, Bushy stunt virus-10600000 Mwt) தாவரங்கள், மிருகங்கள், மனிதன் ஆகிய அனைத்தும் இந்த மாதிரியான அங்ககக் கூட்டுப் பொருட்களால் ஆனவையே. ஆகவே உயிரோட்டத்திற்கு கார்பன், ஆக்ஸிஸன், ஹைட்ரஜன், ஆகியவை மிகவும் முக்கியம் என்று தெரிகிறது.கார்பன் குடும்பத்திலுள்ள கார்பன் கூட்டாளிகளான (அட்டவணையில் 4G குரூப்பை பார்த்தால் தெரியும் ), சிலிக்கானும், ஜெர்மேனியமும் கடைசி செல்லில் நான்கு எலக்ட்ரான்களுடன் மனிதகுலத்திற்காக அதுவும் குறிப்பாக மின்னனு,கணினி துறைக்காக மிகவும் பாடுபடுகிறார்கள்.

அட்டவணையில் G1ல் உள்ளவர்களை காரவகையினர் (Alkali) என்றும், G2ல் உள்ளவர்களை கார மண் (Alkali Earths) வகையினர் என்றும், G3ல் உள்ளவர்களை ”ஏழை உலோகங்கள்” என்றும் G7 ல் குளோரின் கூட்டாளிகளுக்கு ”ஹாலஜன்” என்றும் G8 ஹீலியம் கூட்டாளிகளுக்கு ”உன்னத வாயுக்கள்” (Noble Gases) என்றும், குடும்பப் பெயர்களும் வழங்கப்பட்டுள்ளது. ஆக்ஸிஸன் G5 மற்றும் நைட்ரஜனின் G6 கூட்டாளிகளையும் அடையாளம் கண்டு கொள்ளுங்கள். பின்னாளில் உங்களுடன் யாரும் கெமிஸ்ட்ரி பேசினால் சமாளித்துக் கொள்ள உதவும்.

பொருட்களின் அணுக்கள் மூன்றுவிதமாக இணைந்து புதிய பொருட்கள் உருவாகுகின்றன.

1) தங்களிடமுள்ள எலக்ட்ரான்களை விட்டுக்கொடுத்தும், பெற்றுக் கொண்டும் ஒருவித இணைப்பு (Electrovalent bond), இணைகின்றன. இந்த இணைப்புதான் மிகவும் பலமானது. விட்டுக்கொடுத்து சேருவதில்தான் பலம் அதிகமாக இருக்கும்.

2) தங்களிடமுள்ளதை பங்கிட்டுக் கொண்டு ஒருவித இணைப்பு (Covalent bond), இணைகின்றன. பங்கிடுவதில் பலம் குறைவுதானே.

3) விட்டுக் கொடுக்காமலும், பங்கிடாமலும் பக்கத்து வீட்டுக்காரனைப் போன்ற பந்தமும் உண்டு (Weak bond like Hydrogen Bonding) . இந்த மாறுபட்ட பந்தத்தில்தான், கரியானது கிராபைட், வைரம் என்று உருமாறுகிறது. கூழ்மம் (collaidal), படிகம் (Crystal), ஒற்றைசெல் இவைகளின் தோற்றத்திற்கு இந்த இணைப்பும் ஒருவகையில் காரணம்.

இணைப்பிற்கு காரணம் எஞ்சி நிற்கும் சக்தியை இழந்தோ, அல்லது தேவைப்படும் சக்தியை பெற்றோ சமநிலை எய்தும் முயற்சிதான்.
இவையெல்லாம சமநிலை எய்துவதற்கான ஏற்பாடுதான்।

அது சரி இந்த சமநிலை எய்தும் ஏற்பாட்டில் உயிரினத்துக்கு என்ன வேலை?

பதிலை அடுத்த பாகத்தில் பார்ப்போம்.

முந்தைய பதிவு

மேலும் படிக்க...!
top