இறவாமை ( IMMORTALITY). பாகம் 1

இறவாமை

நாம் பிறந்த மறு நிமிடமே காலத்துளிகள் எண்ணப்படுகிறது . எதற்கு? வேறெதற்கு நமது முடிவைத் தேடித்தான். நாம் ஒவ்வொரு விநாடியும் மரணத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். பல இலட்சம் கோடிப் பேர் பிறந்து இறந்து விட்டார்கள் ஆனாலும் இவர்களில் ஒருவர் கூட மரணத்தை வென்றவர் யாருமில்லை. இன்றைக்கு வாழ்பவர்களில் யாருக்கேனும் அந்த வாய்ப்பு உள்ளதா என்றாலும் அதற்கும் இல்லை. ஆகவே இறவாமை என்ற தலைப்பு தேவையில்லை என்கிறீர்களா?. இல்லை தலைப்பைப் பற்றிய ஒரு சிறு விளக்கம் உள்ளது அதைக் கடைசியில் பார்ப்போம்.

வந்தது தெரியும் போவது எங்கே?

எல்லோருக்கும் போகும் போது வந்த வழி தெரிகிறது ஆனால் போவது எங்கே என்று தெரியாது. ஆனால் போவதற்கு எல்லோருக்கும் ஒரு வழியில் பயமாகத்தான் இருக்கிறது. மரனம் பலவகைப் பட்டது. துணிந்து மரணத்தை தழுவுபவர்களை (தற்கொலை செய்து கொள்பவர்களை) ஒருவிதத்தில் கோழை என்றும் இன்னொரு புறத்தில் வீரனென்றும் (ராணுவத்தில் இறப்பவனை) சொல்கிறோம்.அகால மரணத்திற்கு இயற்கையையும், பிற மனிதர்களின் தவற்றையும். சில சமயங்களில் விதியையும் காரணமாக்குகிறோம். நோய்வாய்ப் பட்டு இறப்பவனை அவனது மரணத்துக்கு அவனையே காரணமாக்குகிறோம். அறுபதில் இறந்தாலும் நூறில் இறந்தாலும் முதுமை என்கிறோம். மற்றவற்றை ”வாங்கி வந்த வரம்” என்கிறோம். ஆக மரணத்தை தள்ளிப் போடலாம் ஆனால் தவிர்க்கவே முடியாது.

கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்.

கடவுள்கள் கூட பூமியில் பிறந்து வாழ்ந்ததாகச் சொல்கிறார்கள் கடைசியில் அவர்களும் இறந்து விட்டதாகத்தான் கூறுகிறார்கள். ஆக யாரும் நீண்டநாள் வாழ்ந்து கொண்டிருப்பதாக தகவல் ஏதுமில்லை. மார்க்கண்டேயர் என்றும் பதினாறு பெற்று பெருவாழ்வு வாழ்ந்ததாக புராணங்களில் இருந்தாலும் இப்பொழுது எங்கு இருக்கிறார் என்பதற்கு பதில் இல்லை. ஆக மனிதனைப் பொறுத்தவரை மரணத்தை வெல்ல முடியாது என்பது உறுதியான ஒன்று. ஒரு வேளை சாகா வரம் பெற்றவர்களாக மனிதர்கள் வாழ்ந்து, பின்னர் வாழ்க்கை போரடித்து தற்கொலை செய்து கொண்டார்களோ. அந்தத் தற்கொலைகள் ஜீனில் பதிந்து, கடைசியில் கூட்டிக் கழித்துப் பார்த்து தற்கொலைக்கும் இறவாமைக்கும் சராசரி போட்டு ஆயுளை ஒரு 100 வருடம் என காலப் போக்கில் நமது ஜீன்கள் தீர்மானித்து முடிவு செய்து விட்டதோ?.

வந்தவர்கள் எல்லாம் தங்கி விட்டால் இந்த பூமியில் இடமேது.

இந்த இடத்தில் சிலர் ஒரு வாதத்தை வைப்பர், மரணத்தை வென்றவர்களூம் உண்டு ஆனால் அவர்கள் தங்கள் கடமைகளை முடித்தபின் ஏன் வாழ வேண்டும். ஆகவே தாங்களாகவே ஜீவசமாதி அடைந்து விடுவார்கள். அல்லது மரணம் என்றொரு வழியில் வேறு வாழ்க்கைக்கு பயணிக்கிறார்கள். மரணம் ஒரு மார்க்கம் என்றும் மரணம் கடவுளை காணும் வழி , முக்தியின் ஆரம்பம் என்றும் வாதிடுபவர்களும் உண்டு. நாமும் வாதத்திற்காக இதெல்லாம் இறந்தவர்களையும் அவர்களது செயல்களையும் தெய்வீகமாக்கும் முயற்சி என்று சொல்லலாம்.

ஞானிகளும் அறிஞர்களூம் கால காலத்திற்கும் இருந்து தங்களது ஞானத்தையும் அறிவையும் பிறக்கும் எல்லோரிடமும் பங்கிட்டால் மானுடத்திற்கு நன்மைதானே? அதைத்தான் நாம் இறவாமையின் மூலம் எதிர் பார்க்கிறோம். ஆனாலும் ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் உள்ளது போல் சமூகத்தில் நல்லவர்களும் கெட்டவர்களும் தோன்றுகின்றனர். இதில் இறவாமையின் ரகசியம் ஹிட்லர் போன்றவர்களிடம் சிக்கினால் என்னாவது. ஒரு வேளை அதற்காகத்தான் இறைவன் இறவாமையை இல்லாமை ஆக்கிவிட்டான் போலும். இறவாமை இல்லாமை ஆகிவிட்டதால் நமது வாதத்தை அடுத்த நிலையான ”நீண்ட ஆயுளுக்கு” கொண்டு செல்வோம்.

நீண்ட ஆயுள்

நீண்ட ஆயுள் என்றவுடன் பூமியில் யார் அல்லது எது நீண்ட ஆயுளுடன் உள்ளது என்று பார்த்தால் வளரும் தன்மையுடன் நீண்ட ஆயுள் கொண்டது தாவர இனம் தான்.

பென்சில்வேனியாவின் வெஸ்ட் செஸ்டர் யுனிவர்சிட்டியில் ரஸ்ஸல் ரீலாண்ட் மற்றும் குழுவினர், நெடிய உறக்கத்தில் ஆழ்ந்திருந்த 250 மில்லியன் வருடங்கள் பழமையான ஹாலோ பாக்டீரியாவை 18-10-2000 ல் உயிர்பித்தனர். அதனால் அதுதான் மூத்தகுடி என முழங்கினர்.

http://www.bioinformatics.org/forum/forum.php?forum_id=283


http://www.extremescience.com/zoom/index.php/animal-kingdom-records/96-longest-life

அமெரிக்காவில் நிவேடாவின், கிரேட் பேஸின் நேஷனல் பார்க்கில் 1964ல் வெட்டப் பட்ட புரோமீதியஸ் என்றழைக்கப் படும் பிரிஸ்டல் கோன் பைன் மரம், 4900 வருடங்கள் பழமையானது. மனிதன் செய்த மிகப் பெரும் தவறுகளுள் ஒன்று அதை ஆராய்ச்சிக்காக வெட்டியது தான்.அதை வெட்டிய புண்ணியவாளன் டொனால்ட் ரஸ்க் கரே (Donald Rusk Currey) என்ற அறிவியலார். எனக்கு இந்த மரத்தை வெட்ட அனுமதி கொடுத்தால் இந்த மரம் 3000 ஆண்டுகள் பழமையானது என்பதை நிரூபிக்கிறேன் என்று அனுமதி வாங்கி வெட்டிய பின்னர் தான் அது 4900 வருடங்கள் பழமையானது என நிரூபித்து அசடு வழிந்தார்.
இவரைப் பற்றி அறிய விக்கியில் அலசுங்கள். அவர் வெட்டி எறிந்த மரத்தின் மிச்சங்கள்தான் இவை.
மெதுஸ்லா என்ற பிரிஸ்டல் கோன் பைன் மரம் 4000 வருடங்களுக்கு மேல் பழமையான மரக் கூட்டமே இன்றும் கலிபோர்னியோவின் பாலைப் பகுதியில் இருக்கிறது.அதில் சில வற்றை கீழே காணலாம்.
அடுத்ததாக நகரும் உயிரிகளில் 400 வருடங்கள் பழமையான குவாகாக்கிலாம் (quahog clam (Arctica islandica),என்ற சிப்பி வகை கண்டுபிடிக்கப் பட்டது. ஆனால் அதே இனத்தை சார்ந்த மற்றவைகள் பொதுவாக 350 லிருந்து 375 வருடங்கள் வாழ்வதாக பதிவு செய்யப் பட்டுள்ளது.

(quahog clam (Arctica islandica)

கடல்வாழ் புழுவாகிய (Lamellibrachia luymesi) 250 வருடங்கள் வாழ்வதாக கூறப் படுகிறது.

(Lamellibrachia luymesi)

மீன்களில் அதிககாலம் வாழ்வது Hanako (Koi Fish) 215 வருடங்கள்.

Hanako (Koi Fish)

ஆமைகள் 250 வருடங்கள் வாழ்கின்றன.
சில வகைத் திமிங்கலங்களும் 200 வருடங்கள் வாழ்கின்றன.
கேப்டன் குக் நியுஜிலாந்துக் அருகிலுள்ள தீவுக் கூட்டங்களுக்கு அருகில் செல்லும் போது அங்கு ஆட்சி செய்த டொங்கன் அரச குடும்பத்திற்கு 1773 ல் (ஒருவருட குட்டியாகத்தான் இருக்கும்) பரிசளித்த ஆமை 193 வருடங்கள் வாழ்ந்ததற்கான ஆதாரம் உள்ளது. அது ஒரு அபூர்வ வகை ஆமை.(நட்சத்திர ஆமையோ) அது 1965 ல் இறந்துவிட்டது. அது அரச மரியாதையுடன் அடக்கம் செய்யப் பட்டது என்பது ஒரு விசேஷம். ஆமை புகுந்த வீடுதான் விளங்காது என்பார்கள். அரண்மனை நன்றாகத்தான் இருக்கும். அந்த வகை ஆமையின் படம்தான் இது.

(Radiated Tortoise

அதை ஒரு சமயம் ராணி இரண்டம் எலிசபெத்II 1953ல் அங்கு சென்ற போது பார்வையிட்ட காட்சிதான் இது,


(Tu'i Malila, a radiated tortoise presented to the Tongan royal family by Captain Cook, lived for over 193 years. It is the oldest documented reptile.)


மரணத்தை வெல்ல முடியாது என்று யார் சொன்னது?

டரிட்டாப்ஸிஸ் நியுட்ரிகுலா (Turritopsis nutricula) என்னும் ஜெல்லி ஃபிஷ் வளர்ந்து பருவம் அடைந்து இனப் பெருக்கம் செய்த பின் மீண்டும் பருவம் எய்த தயாரான நிலைக்கு வந்துவிடும். இவ்வாறு மீண்டும் மீண்டும் சுழற்சி முறையில் பருவங்களில் இருப்பதால் இதுதான் உலகிலேயே உயிரியல் படி சாகா வரம் பெற்ற உயிரினமாக கருதப் படுகிறது. சாகா வரத்திற்கான போட்டியில் ஜெயித்து விட்டது.
மனிதனுக்கு கிட்டாத அந்த அற்புத வித்தை இந்த எளிய ஜந்துக்கு எப்படி கை கூடிற்று. ஆனால் ”இறவாமை” இருந்தென்ன அதைவிடப் பெரிய ஊணுன்னி களிடமிருந்து தப்பிக்கவே அதற்கு போராட்டமே வாழ்க்கையாகி விட்டதே. “பூரண ஆயுசு நித்தியகண்டம்” என்பது இதற்குத்தான் பொருந்தும். வரம் வாங்கினால் மட்டும் போதாது, சரியாக் கேட்டு வாங்க வேண்டும். இதைத் தான் புராணங்களிலும் கதைகதையா கூறுவார்கள். பத்மாசூரன், இரணியன் ஆகியோரின் கதையும் இப்படித்தான்.

மரணத்தை வென்றவன் நீ,(Turritopsis nutricula)
 
கொறிக்கும் மிருகங்களும் பற்களால் மென்று தின்னும் மிருகங்களும் தங்கள் பற்களை இழந்தால் மரித்துவிடும்.அதாவது ”பல்லு போச்சுன்னா உயிரு போச்சு”

சிம்பன்ஸிகளுக்கும் மனிதனுக்கும் 6% தான் ஜீனில் வித்தியாசம். ஜீனில் மனிதனை மிகவும் நெருங்கியுள்ள மிருகம் அதுதான். ஆனாலும் அதன் ஆயுள் மனிதனின் ஆயுளில் பாதிதான். ஆறு சதவீத ஜீனில், அரை ஆயுள் குறைந்து விட்டதா?

சில உயிவாழ்வனவற்றின் அதிக பட்ச ஆயுள்.

கொசு 30 நாட்கள்
ஈ 30 நாட்கள்
எலி 4 வருடம்
சிங்கம் 25 வருடங்கள்
நாய் 15 வருடங்கள்
பூனை 20 வருடங்கள்
மாடு 20 வருடங்கள்
கழுதை 40 வருடங்கள்
துருவக் கரடி 42 வருடங்கள்
கோல்ட் ஃபிஷ் 45 வருடங்கள்
சிம்பன்ஸி 50 வருடங்கள்
யானை 76 வருடங்கள்
ஆமை 200 வருடங்கள்
சுறா 200 வருடங்கள்
Bivalve Mellusc 400 வருடங்கள்

தாவரங்களின் வாழ்வாதாரம் என்ன?.மரங்களின் செல்கள் தொடர்ந்து புதுப்பிக்கப் படுவதாலும் மாறாத சூழலில் கிடைக்கும் ஆக்ஸிஸனும் தான் காரணிகள்.(1)

அடுத்து மிருக இனங்களில் நீண்ட ஆயுள் கொண்டதாகப் பார்த்தால் கடல் ஆமையும், சுறாவும் போட்டியாளர்களாக வருகின்றனர். இதில் ஆமை ஆட்சேபணை இன்றி தேர்ந்தெடுக்கப் படும் ஏனென்றால் அது 300 வருடங்கள் கூட வாழ்கிறது. சுறா 200 வருடங்கள் வாழ்வதாக கூறப் படுகிறது. இவற்றின் வாழ்வாதாரம் என்ன?

ஆமை உப்புநீரில் வாழும் முட்டையிடும் மிருகம்
சுறா உப்புநீரில் வாழும் குட்டி போடும் மிருகம்

இரண்டுக்கும் பொதுவான குணம் மூச்சடக்கி சுமார் 2 மணி நேரம் கூட தண்ணீருக்குள் இருக்கும் திறமை உள்ளவை. உடலுக்கு கெட்டியான தோல் அமைப்பு உள்ளது.

பறவைகள் இந்தப் போட்டியில் கலந்து கொள்ள முடியாது. ஏனெனில் அவைகளின் ஆயுள் அதிகபட்சமாக 80 வருடங்களுக்கு மேல் இல்லை.

மனித வரலாற்றில் மரணத்தை தள்ளிப் போட்டவர்கள் அல்லது நீண்ட ஆயுள் உடையவர்கள் யார் என்று பார்க்கும் போது ஆதாரங்கள் இல்லாதவற்றை ஒதுக்கி தள்ளிவிடினும் ஏனோ திருமூலர் 3000 வருடங்கள் வாழ்ந்ததாக கூறப் படுவதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். இதையும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

................................தொடரும். இறவாமை ( IMMORTALITY). பாகம் 2

7 comments:

VELU.G said...

மிக அருமையான பதிவு நன்பரே

வாழ்த்துக்கள்

Nilavan said...

மிகச் சிறந்த ஆராய்ச்சிக் கட்டுரை.. என்ன தான் வளர்ந்தாலும், அறிந்தாலும் இறப்பு பற்றிய ஒருவித பயம்,அறியாமை நம்முள் இருந்து கொண்டே இருக்கும்.

இப்பதிவு ஏனைய அறிவை அளிக்கும் என நம்புகிறேன்.

கீழ்க்கண்டவற்றிலுள்ள மீண்டும் பருவம் எய்த தயாரான நிலை பற்றி சற்று விரிவாக விளக்கினால் நன்றாக இருக்கும்.

// டரிட்டாப்ஸிஸ் நியுட்ரிகுலா (Turritopsis nutricula) என்னும் ஜெல்லி ஃபிஷ் வளர்ந்து பருவம் அடைந்து இனப் பெருக்கம் செய்த பின் மீண்டும் பருவம் எய்த தயாரான நிலைக்கு வந்துவிடு //


அன்புடன்,
நிலவன்

http://blog.nilavan.net

Chandru said...

வேலுவுக்கும், நிலவனுக்கும் நன்றிகள்.

தொடர்ந்து படியுங்கள் விளக்கங்கள் தரப் படும்

Arun said...

சிறப்பான பதிவு, அருமையான தகவல். முறையான ஆராய்ச்சி அலசல். காத்திருக்கிறேன் உங்களின் அடுத்த பாகங்களுக்காக...

முகுந்த்; Amma said...

First time visiting your blog. Very informative stories
Keep it up.

கலாகுமரன் said...

பார்த்தேன் ஆனா முழுமையா இப்ப படிக்க முடியல அநேக விசயங்கள எழுதி இருக்கீங்க ஜூலை2012 வரை நிறைய எழுதி இருக்கீங்க. நன்றிங்க சந்துரு !

Anonymous said...

Thank you for the good writeup. It in fact was a amusement account it.
Look advanced to more added agreeable from you! However, how can we communicate?


Review my web blog - ジョーダン

top