Previous
நாம் அடுத்த கட்டத் தகவல்களுக்கு செல்லும் முன் அதற்கான சில வார்த்தைகளை மேலோட்டமாக அறிந்து கொள்வோம். செல், டி.என்.ஏ, குரோமோசம்கள் ஆகியவை பற்றி எனத்குத் தெரிந்ததை பகிர்ந்து கொள்கிறேன்.

ஒரு கம்ப்யூட்டரில் தகவல்கள் பிட், பைட் போன்ற டிஜிட்டல் முறையில் மாற்றி நினைவகத்தில் பதிவு செய்யப் படுவதைப் போல் ஒரு முழு மனிதனின் அங்க அமைப்புகள், அளவுகள், எண்ணிக்கை பற்றிய விவரங்கள், குணாதிசயங்கள், நோய்கள், அவன், அவனது முன்னோர்கள் வாழ்க்கையில் பெற்ற அனுபவங்கள் ஆகியவை அவற்றின் முக்கியத்துவத்தைப் பொறுத்து, அதாவது எவையெல்லாம் அவனது சந்ததிகள் நிலைத்து வாழத் தேவையோ அவையெல்லாம் பயோ-நியூரான் முறையில் பதிவு செய்யப் படுகிறது.

இதில் ஆச்சரியப் படுத்தும் விஷயம் என்னவென்றால் பதிவு செய்யப் பட்ட அத்தனை விஷயங்களும் ஒரு கேப்ஸூல் போன்று ஒரு மூலக்கூறு வடிவில் மனிதனது எல்லா செல்களிலும் உட்கருவோடு இணைக்கப் படுகிறது. இது எல்லா உயிரினங்களுக்கும் பொதுவான தன்மையாக இருக்கிறது

செல்
முதலில் செல் பற்றி அறிந்து கொள்வோம். எனது கட்டுரையின் 9, மற்றும் 10 பாகங்களில் சில விளக்கங்கள் உள்ளது. உயிர்கள் இரண்டு விதமாக உள்ளது, ஒற்றைச் செல்லாய் வாழ்வது ஒரு விதம்( அமீபா), பல விதமான செல்கள் சேர்ந்து ஒற்றுமையாய் வாழும் விதம் (மிருகங்கள்). ஆகவே செல் என்பது ஆதாரமான விஷயம். ஒரு உட்கரு, உடல், உயிர் சேர்ந்தது தான் செல். உதாரணமாக மனிதன் என்பது ஒற்றை உயிராக தோன்றினாலும் அவன் 100 டிரில்லியன் செல்களின் (உயிர்களின்) காலனி. ஒரு நானோ கிராமிற்கும் குறைவான எடையிலிருந்து  1500 கிராம் அளவிலான பெரிய செல்களும் உண்டு. ஒரு மைக்ரோன் அளவிலிருந்து 150 மைக்ரோன் வரை உள்ளது.

டி என் ஏ
ஒரு குறிப்பிட்ட செல்லின் வரலாற்று காலப் பெட்டகம்தான் DNA.அது டீஆக்ஸிரைபோ நியூக்ளியஸ் ஆசிட். ஒரு செல்லின் அல்லது உயிரியின் முக்கியமான மூன்று மூலக்கூறு பாகங்களில்(கார்போஹைடிரேட், புரோட்டீன், நியூக்கிளியஸ் ஆசிட்) DNA, RNA, மற்றும் புரோட்டீன் கலந்த கலவையாகிய ஒன்றாகும்.எல்லா செல்களுக்கும் இன்றியமையாத ஒன்றாகும். இரத்த தானத்தினால் டி என் ஏ மாற்றம் ஏற்படுவதில்லை. ஆனால் (Bone Morrow Transplantation) எலும்பு மஜ்ஜை மாற்றத்தினால், மற்றும் முட்டை, விந்து தானத்தினால்  மாறும் வாய்ப்புள்ளது. ஆதலால்தான் கூடுமான வரை இந்த தானங்கள் குடும்ப உறுப்பினர்களுக்குள் செய்யப் பட்டு ஜெனிட்டிக் மாற்றம் அதிகளவில் ஏற்படுவது தடுக்கப் படுகிறது..

ஜீன்
செல்லின் இயக்கத்திற்கும், வளர்ச்சிக்கும்,தேவையான குறீயீடுகள் அதில் ரகசியமாக அல்லது இயற்கைக்கு தெரிந்த எளிய முறையில் பதிவு செய்யப்படுகிறது. அந்த DNA பதிவைத்தான் ஜீன் என்றும், குரோமோசம் என்றும் சொல்கிறோம். இரண்டையும் கலந்து ஜீனோம் என்றும் சொல்கிறோம். செல்லுக்குள் டிஎன்ஏ, டிஎன்ஏக்குள் குரோமோசம்.

மனித உடலிலுள்ள இனப்பெருக்க அணுக்களான கருமுட்டை, மற்றும் விந்தணுக்களில் உள்ள குரோமோசோம்கள்தான் பிறக்கப்போகும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை நிர்ணயிக்கின்றன.

அதாவது ஆணின் விந்தணுவில் உள்ள X,Y குரோமோசோம்களில், பெண்ணின் அண்ட அணுக்களில் உள்ள X குரோமோசோமுடன் ஆணின் விந்தணுவில் உள்ள X குரோமோசம் XX என்ற வகையில் இணைந்தால் பிறக்கப் போகும் குழந்தை பெண்ணாகவும் அதை விடுத்து பெண்ணின் அண்ட அணுக்களில் உள்ள X குரோமோசோமுடன் ஆணின் விந்தணுவில் உள்ள Y குரோமோசம் X-Y என்ற வகையில் இணைந்தால் குழந்தை. ஆணாகவும், பிறக்கும் என்று அறிவியல் கூறுகிறது.

இதிலிருந்து ஒன்று புரிகிறது. பெண்மைதான் முழுமையானது. XX என்ற கலவையில் பெண்மை மட்டும்தான் இருக்கிறது. ஆண்மை இரட்டைத் தன்மை உடையதாக இருக்கிறது ஆதலால் தான் முட்டைக் கருவில் பெண்மை மட்டும் இருக்கிறது. விந்தணுவின் XY கலவையில் ஆணும் பெண்ணும் இருக்கிறது. ஆக பிறக்க போகும் குழந்தை ஆணா பெண்ணா என்பதை ஆண்தான் தீர்மானிக்கிறான். சூட்சுமம் ஆணிடம்தான் உள்ளது.

விந்தணுக்களின் தலைப் பகுதியில்தான் மரபணுக்களைக் கொண்டுள்ள குரோமோசோம்கள் உள்ளன. இவைதான் பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணா எனத் தீர்மானிக்கின்றன. மனிதனது அண்ட அணுவாகிய முட்டையோ அல்லது விந்தணுவோ இரண்டிலுமே மனிதனது அத்தனை தகவல்களும் அதாவது அங்க அடையாளங்கள், குணாதிசயங்கள், நோய்கள், அவன் வாழ்க்கையில் பெற்ற அனுபவங்கள் ஆகிய அத்தனையும் அடங்கிய சிம் அல்லது சிப்(Bio-Sim or Bio-Chip) போன்ற முறையில் ஒவ்வொரு செல்களிலும் இணைந்துள்ளது

பெண்மையின் குரோமோசத்தின் 23 ஜோடியில் எல்லா ஜோடியும் சரிசமமாய் இருக்கும் அது இரண்டாகப் பிரிந்து ஒரு முட்டையாக மாறுகிறது. ஆக எல்லா முட்டையும் ஒன்று போல்தான் இருக்கும்.ஆனால் ஆணின் குரோமோசத்தில் 23 ஜோடிகள் பிரிந்து விந்தணுவாக மாறுகிறது. ஆனால் ஆணின் குரோமோசம்மில் 23 வது ஜோடி XY ஆக இருப்பதால் ஆணின் விந்தணுவில் அந்தக் கடைசி அணு X அல்லது Y என இரண்டு விதமான விந்தணுக்களாக உருவாகுகிறது. இதில் ஆணின் X,Y குரோமோசம்களின் வேகம், அடர்த்தி, ஆயுள் இவற்றால்தான் பிறக்கும் குழந்தையின் பாலினம் தீர்மானிக்கப் படுகிறது.

இதில் X பெரிதாகவும், வேகமற்றும், நீண்ட ஆயுள் கொண்டதாகவும் இருக்கிறது, Y வேகமுள்ளதாக, சிறியதாக, அற்ப ஆயுள் கொண்டதாக இருக்கும். இந்த தன்மைகளை கொண்டு விந்துவை எடுத்து அதை நவீன தொழில் நுட்பத்தினால் வடிகட்டி  X அல்லது Y யின் அடர்வு மிகும்படி செய்து தேவையான பாலினத்தில் குழந்தையை பெற்றுக் கொள்ளலாம். இந்த Y ஜீன்களை SRY,SOX9  என்ற ஜீன்கள் கட்டுப் படுத்துவதாக இப்பொழுது அறியப் பட்டுள்ளது. 


.இந்த தொழில் நுட்பத்தையும் மனிதன் ஓரளவு அறிந்து கொண்டு அதில் இயற்கை எப்படி எழுதுகிறது, என்ன எழுதியிருக்கிறது என்பதையும் டிகோட் செய்து படம் (DNA Mapping) அல்லது எழுத்து வடிவில் படிக்கவும், அதில் சில பிறவியினால், மற்றும் பாரம்பரியத்தினால் ஏற்படும் நோய்களுக்கான தகவல்கள் இருந்தால் அவற்றை அழித்து  திருத்தும் அளவிற்கும் வளர்ந்து விட்டான்.

அதைத்தான் .‘ப்ரி இம்ப்ளான்டேஷன் ஜெனடிக் டயாக்னோஸ்டிக்ஸ்’ (பி. ஜி. டி.) என்கிறார்கள் இம்முறை மூலம். கருப்பையில் உருவாகி, முதிராத கருவாக உள்ள நிலையில் உள்ள முட்டைக் கருவுயிரில் சில மாற்றங்களை செய்து அதன் மூலம், தேவையான பாலினத்தில், நோயற்ற, பிறவிக் குறைகளற்ற, எதிர்பார்த்த குணத்துடன் கூடிய கருவுயிராக மாற்றி குழந்தை பெறும் வித்தை உருவாகியுள்ளது. இதுதான் ‘டிசைனர் பேபி’ என்று அழைக்கப்படுகிறது. இன்னும் சில வருடங்களில் நமது ஊரில் கூட உங்களுக்கு என்ன பாலினத்தில் குழந்தை வேண்டும் என்றும், என்ன மாதிரியான குணாதிசயங்கள் மற்றும் உடலமைப்பு வேண்டும் என்றும் ஆர்டர் செய்யலாம். அதாவது இன்னும் சுமார் 30 ஆண்டுகளில் இந்தக் கட்டுரையில் நான் சொல்லப் போகும் சாராம்சம் உபயோகம் அற்றதாகி விடலாம். மீண்டும் விரைவில் சந்திப்போம்.
...............................................தொடரும் 


முந்தைய பதிவு

3 comments:

guna said...

intersting

Chandru said...

குணா அவர்களுக்கு வருகைக்கும் பதிவிற்கும் பாராட்டிற்கும் நன்றி

ranjini prasanth said...

nalla muyarchi vazhthukkal

top