கிஸ்ஸும் பிஸ்ஸும்


கிஸ்ஸும் பிஸ்ஸும்

ஏன் பொது இடத்தில் கிஸ்ஸடிக்கிறீங்கன்னா, பொது இடத்தில் பிஸ்ஸடிக்கும் போது ஏன் கிஸ்ஸடிக்கக் கூடாது என்கிறார்கள். பிஸ்ஸடிக்கிறததையும் கிஸ்ஸடிக்கிறதையும் ஒப்பிட்டுப் பேசுகிறவர்களுக்கு அறிவே இல்லையா? அல்லது எதுகைக்கும் மோனைக்கும் ஆசைப் பட்டு ஏடாகூடமா பேசித் தொலையிறானுகளா? எச்சிலும் மூத்திரமும் ஒன்றாகுமா?


1) பிஸ்ஸடிப்பது பற்றி  பிறந்ததிலிருந்து  போதிக்கப்படுவது,  அதை ஒருவனுக்கு போராட்டம் செய்து சொல்ல வேண்டிய அவசியம் இல்லை  என்பதை இந்த மரமண்டைகளுக்கு எப்படி புரிய வைப்பது . ஒருவன் அவஸ்தையினால், தன்மானத்தை இழந்து, வெட்கங் கெட்டுதான் பொது இடத்தில் பிஸ்ஸடிக்கிறான்.

2) பிஸ்ஸடிப்பதற்கு  சம்பந்த பட்ட ஆள் மட்டும்  சட்டத்தை மீறினால் போதும், ஆனால் பொது இடத்தில் அனுமதி இல்லாமல் கிஸ்ஸடிக்க இரண்டு  மாறுபட்ட பாலின வெட்கங் கெட்ட நாதாரிகள் தேவை.

3) பொது இடத்தில் முத்தம் கொடுக்கக் கூடாது என்பதை சிறு வயதிலிருந்து போதிக்கிறோம். அதிலும் சிறு குழந்தைகளை கண்டவர்கள் கிஸ்ஸடிக்க அனுமதிக்காதீர்கள் என்றுதான் சொல்லிக் கொடுக்கப் படுகிறது. அதிலும் பெண் குழந்தைகளுக்கு, தங்கள் மீது மற்றவர்கள் கை படக் கூடாத இடங்கள் பற்றி சொல்லிக் கொடுங்கடான்னா கிஸ்ஸடிக்கலாம்ங்கிறானுக இவர்களை எதைக் கொண்டு அடிப்பது.

4) கிஸ்ஸடிப்பதை எவ்வளவு காலம் வேண்டுமென்றாலும் தள்ளிப் போடலாம். பிஸ்ஸடிப்பதை தள்ளிப் போட முடியாது. ரோட்ல பிஸ்ஸடிக்க கூடாதுன்னு சொல்வதற்கு முன் சரியான வசதிகள் செய்துதராமல் சொல்ல முடியாது. போலீஸ் வந்து பிடிச்சிட்டு போயிருவாங்கன்னு சொன்னா, வீணாகப் போவதை போலீஸ் பிடிச்சிட்டு போனாப் போகட்டும் என்பான். மீறீச் சொன்னால்  எனக்கு அவசரம், நீ வேண்டுமென்றால் கையில் பிடித்துக் கொள்கிறாயா என்று நியாமான கேள்வி கேட்பானுக

5) பிஸ்ஸடிப்பதற்கு அவசியம் கட்டிடம் கட்டி விட வேண்டும். கட்டிடம் இல்லாத குறையினால் மன்னித்து விடலாம் ஆனால் கிஸ்ஸடிப்பதற்கு கட்டிடமா? கேட்டாலும் கேட்பானுக ..மாமாப்   பயலுக..

6) ரோட்ல கிஸ் அடிச்சா, முதல்ல வேடிக்கை பார்ப்பானுங்க, அப்புறம் உதவிக்கு வருவானுங்க, அப்புறம் வலிமையுள்ளவனுக்குதான் கிஸ்ஸடிக்க உரிமைன்னுவானுக. சட்டத்தை மீறுவானுக  பரவாயில்லையா? வேலியில போற ஓணான வேட்டிக்குள்ள போட்ட கதைதான். ரோட்டில் தாராளமா கிஸ்ஸடியுங்க பாயைப் போட்டு சல்லாபியுங்க அது உங்கள் உரிமை. ஆனால் வலிமையுள்ளவனுகளும் பொறுக்கிகளும் ஒரு கோஷ்டியா ரோட்டில் அலையறானுக என்பதை கருத்தில் கொள்ள வேண்டும் .ஆனால் அவனுக சத்தியமா பிஸ்ஸடிப்பதில் பங்குக்கு வரமாட்டானுக.

7) பொது இடத்தில் ஒரு பெண் கிஸ்ஸடிக்கிறதுக்கு உடன்படுகிறாள் என்றால் அந்த வெட்கம் கெட்டவளை, எந்த ஆண்மகனாலும் எளிதில் அடைய முடியும் என்பதை அவள் நிரூபிப்பதாகத்தான் எல்லா சமூகமும் காலம் காலமாக கணித்து வைத்திருக்கிறது. இதில் ஆணுக்கு எந்த கேவலமும் கிடையாது, பெண்ணுக்குத்தான் பாதிப்பாக இருக்கலாம் அல்லது வருமானத்திற்கு வழியாக இருக்கலாம்.

8) சில பெண்கள் இதை ஆதரிக்கலாம், ஆதரிப்பவர்களை பெண்புத்தி பின் புத்தி என்று ஒதுக்கி வைத்து விடலாம். ஏனெனில் பெண்களுக்கான சுதந்திரம் எதுவரை போகும் என்பதை அவர்கள் கேட்கும் ஆடையின் உரிமையை "Femen" என்று அடித்து கூகுள் இமேஜில் தேடிப்பாருங்கள். பெரும்பாலும் பெண்களுக்கான சுதந்திரம் என்பது, ஆணின் கடுமையான பாதுகாப்பின் பின்னணி இருந்தால் தான் கிடைக்கும். தெருவில் போகும் போதே தன் மனைவியின் மீது மற்றவன் கண் பார்வை கூடப் படக்கூடாது என்ற பதைபதைப்போடு செல்பவன்தான் பெண் மீது அக்கறை கொண்ட இன்றையச் சமூகத்தை சேர்ந்த ஆண். அடுத்தவன் முறைத்துப் பார்ப்பதை குற்றம் சொல்லி மேல்நாட்டை உதாரணத்துக்கு இழுக்கக் கூடாது. ஏனெனில் நீங்கள் இப்பத்தானே பொது இடத்தில் கிஸ்ஸடிக்க கேட்கிறீர்கள். அவனுடைய கலாச்சாரத்தை அடைவதற்கு இன்னும் 30 வருடங்களாவது ஆகும்.  ஏனெனில் அவன் செக்ஸில் 12 வயதிலயே முதிர்ச்சி அடைகிறான். 13 வயதில் பெண்பிள்ளைகள் கர்ப்பமானாலும் கண்டு கொள்ள மாட்டான். கற்புக்காக பூட்டு செய்து ஓய்ந்து, கை விட்டவன். ஆகவே அவனுடன் உங்களை ஒப்பிடாதீர்கள். நீங்க அதுக்கு லாயக்கு படமாட்டீங்க.

9) இதை, ரோட்டில் முத்தமிடுவதை ஆண்கள் ஆதரிக்கிறார்கள் என்றால் ஒன்று அவர்களிடம் இந்த சமூகத்தில் அக்கறை இல்லை என்று பொருள்.அல்லது பெண்களைப் வெறும் பொருளாக மதிக்கும் சோஷலிசக் கொள்கையாளராக இருக்க வேண்டும். அதிலும் வயதான ஆண்கள் ஆதரிக்கிறார்கள் என்றால் அவர்களை ஆராய்ந்து பார்த்தால் அவர்களுக்கு பெண்கள் மீது மரியாதை இருக்காது, பெண் குழந்தைகள் இருக்காது. மேலும் அவர்கள் தங்களது இளமை இமேஜை நிலை நிறுத்த ஆதரிக்கிறமாதிரி எழுதலாம். அல்லது சிலரின் வக்கிர புத்திக்கு தீனியாக  ஆதரிக்கலாம்.  அந்தமாதிரி வக்கிரம் பிடித்தவர்கள் சிலர் ஒழுக்க சீலர்கள் மாதிரி பிஸ்ஸடிப்பதை கேடயமாக கொண்டு இதை மறைமுகமாக ஆதரிப்பார்கள். இவர்கள்தான் பிஸ்ஸடிப்பதையும் கிஸ்ஸடிப்பதையும் முடிச்சுப் போட்டு தங்களுக்கு ஏற்படும் அரிப்பை சொறிந்து கொள்கிறார்கள்.

10) ஒருவர் கிஸ்ஸடிப்பதற்கு ஏற்கனவே தெரிந்தவராகவும், மனதுக்கும், பார்வைக்கும், வயதுக்கும், பிடித்தவராகவும், ஆர்வமும் நேரமும் ஒத்துப் போனால் தான் கிஸ்ஸடிக்க முடியும். இதில் 25 வயதுக்கு மேலுள்ள பெண்கள் திருமணமானவர்கள் அவர்களை கணவன்மார்கள் பொது இடத்தில் முத்தம் கொடுக்க அனுமதிக்க மாட்டாரகள். அந்தவகையில் பார்த்தால் முத்தமிடத் துடிப்பவர்கள் 13 வயதிலிருந்து 25 வயது உள்ளவர்கள்தான். கூட்டிக் கழித்துப் பார்த்தால் பெண்ணினத்தில் 5 சதவீதம் பேரும் ஆண்களில் 25 சதவீதம்பேரும் தான் தயராக உள்ளனர். ஆகவே நிகழ்தகவு விதியின் படி போட்டு பார்த்தால் ரோட்டில் செல்பவர்களில் ஐம்பதாயிரத்தில் இருவர்  கூட தேற மாட்டார்கள்  என்பதுதான்  கணக்கு. அவர்களால்  சமூகத்திற்காக இதை தள்ளிப் போட்டு மறைவான இடத்திற்கு போக முடியும். ஆனால் இதை ஆதரிக்கும் போது பாலியல் தொழில் வளர வாய்ப்புள்ளது. வாயின் மூலம் பரவக் கூடிய எய்ட்ஸ், எபோலா போன்ற நோய்களுக்கு கொண்டாட்டம்தான். அவன் பொது இடத்தில் தண்ணி அடிக்கிறான்னு இங்க தண்ணி அடிக்க ஆரம்பிச்சானுக நிறுத்தத் தெரியல, முடியல. இனி கிஸ்ஸடிக்க ஆரம்பிச்சானுகன்னா  எங்க போய் முட்டுவானுகளோ?.

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின். போங்கடா போய் பெண் குழந்தைகளுக்கு மற்றவர்கள் கை படக்கூடாத இடங்களைப் பற்றியும், பட்டால் எவனாயிருந்தாலும் அறைவதற்கும் சொல்லிக் கொடுங்கள். அதை விடுத்து கண்டவனுக வாயில வாயை வைக்க சொல்லிக் கொடுக்காதீர்கள் நாளைக்கு வீடு தேடி வருவானுக. பரவாயில்லையா?


top