தமிழக மின்வெட்டும், யுபிஎஸ்ஸூம்.6
தமிழகத்தின் கடன் 53,000 கோடி என்பது படித்தவர்களையும், முறையான, நேர்மையான அரசாட்சியில் நம்பிக்கை உள்ளவர்களையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கும். ஆனால் இன்றைய அரசாள்பவர்களுக்கும் அரசியல் வாதிகளுக்கும் இதெல்லாம் ஜூஜூபி என்று நிரூபித்துவிட்டார்கள். இன்னும் இரண்டு வருடங்களில் தமிழக மின் துறை தன்னிறைவு அடைந்து மிகுதியான லாபம் ஈட்டும் துறையாக மாறிவிடும். அதைத் தொடர்ந்து ஊழியர்களின் சம்பள உயர்வு கோரிக்கை வலுவடைந்து போராட்டம் வெடிக்கலாம்.
கடந்த ஆண்டில் வீடுகளுக்கு, 8,678 கோடி ரூபாய்க்கு வினியோகிக்கப்பட்டு, கட்டணம் வசூலிக்கப் பட்டுள்ளது. வரும் ஆண்டில் மிதமிஞ்சிய கட்டண உயர்வால் 20,000 கோடி வருவாய் ஈட்டும் அந்த அளவிற்கு ஈவு இரக்கமின்றி கட்டணம் உயர்த்தப் பட்டுள்ளது. 20,000 கோடி வருவாய் இருந்தால் 53,000 கோடி கடன் என்பது எளிதான விஷயம்தானே. இதெல்லாம் கிடக்கட்டும். இதை எழுதினால் மனவழுத்தம் அதிகமாகும். ஆகவே நான் யுபிஎஸ் வாங்கிய கதையை பகிர்ந்து கொள்கிறேன்.
மின்வெட்டால் ஒரு நாளைக்கு, 8 மணிநேரம் கணிணி உபயோகம் , மின் விசிறி உபயோகம் இல்லாமல் பொழுதைப் போக்குவது பெரும் பாடாய் இருந்தது. இருந்தாலும் மூன்றில் ஒரு பங்கு மின் உபயோகம் மிச்சமாவதால் அமைதி காத்து ஆறு மாதங்கள் இருந்தேன். ஆனால் ஒரு கட்டத்தில் எட்டு மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டு என்பது அரசாங்கத்தின் அராஜகமாகத் தெரிந்தது. ஆகவே யுபிஎஸ் வாங்கலாமா அல்லது போர்ட்டபிள் ஜென்செட் வாங்கலாமா என்று யோசித்தேன். முதலில் நமக்குத் தேவையான மின்சாரத்தின் அளவை கணக்கிட வேண்டும். அதை எப்படி கணக்கிடுவது.
மின்வாரிய கட்டண கணக்கீட்டு அட்டையைப் பார்த்த பொழுது சராசரியாக இரண்டுமாதத்திற்கு ஒரு முறை 400 யூனிட்டுகள் உபயோகிப்பது தெரிய வந்தது. அதாவது ஒரு மாதத்திற்கு 200 யூனிட்டுகள். ஒரு நாளைக்கு சுமார் 7 யூனிட்டுகள் . இதில் பெருந்தீனிக்காரர்களான, மிக்ஸி, கிரைண்டர், வாஷிங் மிஷின், ஃப்ரிட்ஜ், ஹீட்டர் இவைகளை ஒதுக்கி வைத்தாலும், ஒரு நாளில் 8 மணி நேரத்திற்கு, சராசரியாக 2 யூனிட்டுகள் தேவைப் படும்.. அதாவது ஒரு மணி நேரத்திற்கு (2000/8 +250) 300 வாட்ஸ் டெலிவிரி செய்யக் கூடிய சோர்ஸ் தேவைப்படும். இது ஒரு சராசரி என்பதாலும் சமயங்களில் ஒரே நேரத்தில் 2 ஃபேன் (60 X 2) , ஒரு கம்ப்யூட்டர் 250 ,2 ட்யூப் லைட் (2 X 60 ), வேலை செய்ய வேண்டிய சூழல் என்று கணக்கிட்டால் (120 + 250 120 =490 வாட்ஸ்) தேவைப்படுகிறது. தேவைப் பட்டால் ஒரு ஐந்து நிமிடத்திற்கு மிக்ஸியை உபயோகித்துக் கொள்ளக் கூடிய வகையிலும் , பாதுகாப்பு மற்றும் தேவையை கருதி 1000 வாட்ஸ் சப்ளை செய்யக் கூடிய சோர்ஸ் வாங்கவேண்டும்.
ஜென்செட்டா அல்லது யுபிஎஸ்ஸா எது பெஸ்ட்.?
முதலில் ஜென்செட் பற்றிய கணக்கீட்டைப் பார்ப்போம்.
ஜென்செட் 500வாட்ஸ்லிருந்து 5000 வாட்ஸ் வரை ரூபாய் 20,000 லிருந்து 70,000 வரை சந்தையில் கிடைக்கிறது. குறைந்த பட்சம் 1 கேவி(1000 வாட்ஸ்) ஜென்செட் வாங்கினால் சுமார் ரூபாய் 30,000 ஆகும்.
http://www.pricelist.co.in/index.php/office/generators/portable-generators
ஜென்செட்கள், ஒரு யூனிட் தயாரிக்க எவ்வளவு எரிபொருள் எடுத்துக் கொள்கின்றன என்பதுதான் மிக முக்கியமான விஷயமாகும்.
A conservative rule of thumb is one gallon of fuel per hour for a 5,000 watt generator.
அதாவது 5000வாட்ஸூக்கு ஒருமணி நேரத்திற்கு ஒரு கேலன் பெட்ரோல் என்பது ஜென்செட்களின் தலையெழுத்து.
அந்த வகையில் பார்த்தால் 1000 வாட்ஸ்க்கு ஒரு மணி நேரத்திற்கு சுமார் ஒருலிட்டர் எனக் கணக்கிட்டுக் கொள்ளலாம்..
சிக்கனமாக பயன்படுத்தினால் 8 மணி நேரத்திற்கு குறைந்தது 4 லிட்டர் பெட்ரோல் அல்லது கெரஸின் தேவைப் படும். அதற்கான செலவு சுமார் 300 ரூபாய் . இந்த ரீதியில் கணக்கிட்டால் ஒரு மாதத்திற்கு 10,000 ரூபாய் எரி பொருளுக்காக செலவிட வேண்டும். மேலும் இயக்கத்தை கட்டுப் படுத்த விவரமான ஆள் தேவை. இரைச்சல், மாசு என்று அதிகப் படியான கவலைதரும் விஷயங்கள் வேறு உள்ளது. ஆகவே வீட்டைப் பொறுத்தவரை, அதாவது மின்வெட்டு நேரங்களில் சராசரியாக மணிக்கு 500 வாட்ஸ் உபயோகத்திற்கு ஜென்செட் என்பது ஒரு குவார்ட்டர் அடிக்கிறதுக்கு ஒயின்ஷாப்பை விலைக்கு வாங்கிய கதை தான்.
மின்சாரத்திற்கான இணைப்பு அறவே இல்லாத இடங்களுக்கு வேண்டுமென்றால், ஜென்செட்டை விட்டால் வேறு வழி இல்லை. மேலும் இதில் ஒரு யூனிட் மின்சாரம் அறுபது ரூபாய் ஆகிவிடுகிறது. ஒருமணி நேரத்தில் 100 ரூபாய் வருமானம் பார்ப்பவர்கள் வேண்டுமென்றால் ஜென்செட் வைத்துக் கொள்ளலாம். இது நமக்கு கட்டுப் படியாகாது. ஆகவே அடுத்த ஏற்பாட்டை பார்க்கலாம்.
யுபிஎஸ்ஸா?
நமது தேவை 1000வாட்ஸ் கொடுக்கக்கூடிய சோர்ஸ். சந்தையில் 1000 வாட்ஸ் தொடர்ந்து கொடுக்கக் கூடிய இன்வர்ட்டர் கிட்டத்தட்ட இல்லை எனக் கொள்ளலாம். 850 வாட்ஸ் அல்லது 1500 வாட்ஸ்களில்தான் கிடைக்கும் இன்வர்ட்டர்களில் 99 சதவீதம் 850 வாட்ஸ்தான் . இதில் குறிப்பிட்டுள்ள வாட்ஸ் என்பது, மிக அதிகபட்சமாக, பாதுகாப்பாக (in the safer side) ஒரு மணி நேரத்திற்கு இன்வர்ட்டர் வழியாக 850 வாட்ஸ் எடுக்கலாம் என்று அர்த்தம்.
850 வாட்ஸூக்கான இன்வர்ட்டர் 4500 ரூபாயிலிருந்து 5500 ரூபாய் வரை உள்ளது. மின்கலம் 100 ஆம்பியரில் வாங்கினால் 10,000 ரூபாய். ஆக மொத்தம் 15,000 ரூபாயில் முடித்துவிடலாம்.
http://www.priceindia.in/consumer-electronics/inverter-battery-price/
இதில் பிரதானமானது மின்கலம் தான். அதை எப்படி கணக்கிடுவது.சந்தையில் 12 V வோல்ட் மின் கலங்கள்தான் 99 சதவீதம் உள்ளது. நமக்கு தேவையான ஆம்பியரை எப்படி கணக்கிடுவது.?
எனது ஒரு நாளைய தேவை 2 யூனிட்கள் என்று பார்த்தோம் அதாவது 2000 வாட்ஸ். இதை மின்கலத்தின் வோல்ட்டால் வகுத்தால் தேவையான மின்கலத்தின் ஆம்பியர் கிடைத்துவிடும். 2000 Watts/12 Volt= 166.6AH.
சந்தையில் 100AH, 120AH, 150AH, 165AH, 180AH, 200AH ஆம்பியர்களில் 12 V மின்கலங்கள் கிடைக்கிறது.
http://www.brightnpowerups.com/batteries/lead-acid-batteries.html
200(AH) ஆம்பியர் என்று போட்டிருந்தால், 200 ஆம்பியரில் வேலை செய்யும் மின் சாதனம் (லோடு) இணைத்தால் 1மணிநேரம் தாக்குபிடிக்கும் என்று அர்த்தம். அல்லது 1000 ஆம்பியர் லோடு இணைத்தால் 12 நிமிடங்களுக்கு வேலைசெய்யும்.
செய்கூலி, சேதாரம்
கம்ப்யூட்டர் யுபிஎஸ்ஸின் மின் கலம் 12 வோல்ட் ,7 ஆம்பியர்தான் இதனுடைய மொத்த வாட்டேஜ் 84வாட்ஸ்தான். இதில் செய்கூலி, சேதாரம் போனால் நமக்கு கிடைப்பது 60 வாட்ஸ்தான். கம்ப்யூட்டருக்கு ஒரு மணி நேரத்திற்கு 250 வாட்ஸ் வேண்டும் 60 வாட்ஸ்ஸில் 15 நிமிடம் தான் வேலை செய்யும்.ஒரு வருடம் ஆகிவிட்டால் ஐந்து நிமிடம்தான் வேலை செய்யும்.
200 ஆம்பியர் மின்கலம் 200 X 12= 2400 வாட்ஸ் கொடுக்கவேண்டும். அதை 230 வோல்ட்டாக மாற்றும் போது அதில் 15% செலவானது (செய்கூலி, ) போக 2000 வாட்ஸ் இருக்கும். அதிலும் முழுவதுமாக சுரண்டி எடுக்கமுடியாது. 10.5V அல்லது 11 V வோல்ட்க்கு குறையும் வரை எடுக்கலாம். ஆகவே அதில் தங்கியிருக்கும் (சேதாரம்) அந்த இருப்பைக் கழித்துவிட்டால் 1800 வாட்ஸ் நிச்சயம் பயன்படுத்த கிடைக்கும்.
இன்வர்ட்டர் கள் 850 வாட்ஸ், மற்றும் 1500 வாட்ஸில் இருக்கிறது. ஆனால் 1500 வாட்ஸ் (24 Volt) இன்வர்ட்டர் என்று போய்விட்டால் அதற்கு இரண்டு மின்கலங்கள் தேவைப் படுகிறது. அதனால் விலையும் (2 X 10,000 = 20000) கூடி விடுகிறது.
நான் கம்ப்யூட்டருக்கு உபயோகிக்கும் யுபிஎஸ்ஸைப் பற்றி யோசித்து அதன் சப்ளை ரேட்டிங்கைப் பார்த்தேன்.. அது 650 வாட்ஸ் என்று போட்டிருந்தது ஆகா இதில் ஒரு 100 ஆம்பியர் சீல்ட் (Sealed) பேட்டரியை இணைத்து விட்டால் போதுமே, ஒரு பேட்டரி என்ன 5000 ரூபாய்தானே என்று கணக்கிட்டேன். எல்லாம் சேர்த்து 7000 ரூபாயில் முடித்து விடலாமே! .பின்னர் அதிக ரேட்டிங்கில் உள்ள கம்ப்யூட்டர் யுபிஎஸ் பற்றி தகவல் எடுத்தேன் 1500 வாட்ஸ் யுபிஎஸ் 2000 ரூபாயில் கம்ப்யூட்டர் விற்பனை யாளர்களிடம் இருந்தது. அதற்கு ஒரு 80+80 ஆம்பியர் சீல்ட் பேட்டரி இரண்டை வாங்கி மாட்டி விட்டால் போதுமே 12,000 ரூபாயில் தேவை நிறை வேறிவிடும்.
http://www.computerwarehousepricelist.com/productlist.asp?CurPage=1
அறிவின் கணக்கை புத்தி ஏற்க மாட்டேன் என்கிறது. ஒரு வேளை அவர்கள் குறைந்த நேர செயல் பாட்டிற்கு அந்த யுபிஎஸ்ஸை செய்திருந்தால் என்ன செய்வது என்று புத்தி சொல்லியது. அதுதான் ஒரு வருடத்திற்கான வாரண்டி இருக்கிறதே தாரளமாக செய்யலாமே என்றது அறிவு. அதெல்லாம் சரி இது பற்றி வள்ளுவர் என்ன சொல்லியிருக்கிரார் என்று பார்த்தபொழுது. (ஆஹா வள்ளுவர் யுபிஎஸ் பற்றி எல்லாம் சொல்லியிருக்கிறரா என்று கேட்பது தெரிகிறது. )
உலகத்தோடு ஒட்ட ஒழுகார் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்.
ஆகவே எல்லாரையும் போல இன்வெர்ட்டர் வாங்கிக் கொள்வோம் என்று முடிவெடுத்து ஆராய்ச்சியை கைவிட்டேன். கம்ப்யூட்டர் யுபிஸ், பெங்களுரில் கம்ப்யூட்டர் வேர் ஹவுஸில் பலதரப்பட்ட வகைகளில் கிடைக்கும். உங்களுக்கு வசதியும் நேரமும் இருந்தால் செய்து பாருங்கள்.
முடிவெடுத்தவுடன் இது பற்றி இதே தொழிலில் இருக்கும் நன்பரிடம் சொன்ன பொழுது உங்களுக்கு யுபிஎஸ்தானே கவலையை விடுங்கள் என்று சொல்லிவிட்டு போனவர், அரைமணி நேரத்தில் இன்வெர்ட்டர், பேட்ட்ரி, எலக்ட்ரிஷியன் என்று ஆட்டோவில் வந்து இறங்கி விட்டார். ஆகா என்னைக் கேட்கவில்லை, அவர்பாட்டுக்கு மாட்டி விட்டு சென்றார். பணம் (15,000 +500) எப்பொழுது கொடுக்க முடியுமோ அப்பொழுது கொடுங்கள் என்று சொல்லி விட்டுச் சென்றார்.
இதைத்தான் அன்புத்தொல்லை என்பது. நாம் இவ்வளவு ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறோம்.என்ன பிராண்ட் வாங்குவது என்ன பேட்டரி வாங்குவது என்று யோசிக்கவிடாமல் கொண்டு வந்து மாட்டி விட்டு சென்றார். நன்மைதான் செய்வார் என்றாலும் என்னைப் போன்ற விவரமானவர்களிடம்!! ஆலோசனை செய்ய வேண்டாமா?. வயரிங்கும் ஒரு குறிப்பிட்ட அறைக்கும் மட்டும் யுபிஎஸ் பயன் தரும் வகையில் இருந்தது.
நமது ஆராய்ச்சி இன்னும் முடியவில்லை அதற்குள் நண்பர் கொண்டு வந்து வைத்து விட்டார் ஆனாலும் என்ன தொடருவோம்.அடுத்து நான் என்ன செய்தேன் தெரியுமா?
தொடரும்...............
இரா.சந்திர சேகர்,
பழனி
தமிழகத்தின் கடன் 53,000 கோடி என்பது படித்தவர்களையும், முறையான, நேர்மையான அரசாட்சியில் நம்பிக்கை உள்ளவர்களையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கும். ஆனால் இன்றைய அரசாள்பவர்களுக்கும் அரசியல் வாதிகளுக்கும் இதெல்லாம் ஜூஜூபி என்று நிரூபித்துவிட்டார்கள். இன்னும் இரண்டு வருடங்களில் தமிழக மின் துறை தன்னிறைவு அடைந்து மிகுதியான லாபம் ஈட்டும் துறையாக மாறிவிடும். அதைத் தொடர்ந்து ஊழியர்களின் சம்பள உயர்வு கோரிக்கை வலுவடைந்து போராட்டம் வெடிக்கலாம்.
கடந்த ஆண்டில் வீடுகளுக்கு, 8,678 கோடி ரூபாய்க்கு வினியோகிக்கப்பட்டு, கட்டணம் வசூலிக்கப் பட்டுள்ளது. வரும் ஆண்டில் மிதமிஞ்சிய கட்டண உயர்வால் 20,000 கோடி வருவாய் ஈட்டும் அந்த அளவிற்கு ஈவு இரக்கமின்றி கட்டணம் உயர்த்தப் பட்டுள்ளது. 20,000 கோடி வருவாய் இருந்தால் 53,000 கோடி கடன் என்பது எளிதான விஷயம்தானே. இதெல்லாம் கிடக்கட்டும். இதை எழுதினால் மனவழுத்தம் அதிகமாகும். ஆகவே நான் யுபிஎஸ் வாங்கிய கதையை பகிர்ந்து கொள்கிறேன்.
மின்வெட்டால் ஒரு நாளைக்கு, 8 மணிநேரம் கணிணி உபயோகம் , மின் விசிறி உபயோகம் இல்லாமல் பொழுதைப் போக்குவது பெரும் பாடாய் இருந்தது. இருந்தாலும் மூன்றில் ஒரு பங்கு மின் உபயோகம் மிச்சமாவதால் அமைதி காத்து ஆறு மாதங்கள் இருந்தேன். ஆனால் ஒரு கட்டத்தில் எட்டு மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டு என்பது அரசாங்கத்தின் அராஜகமாகத் தெரிந்தது. ஆகவே யுபிஎஸ் வாங்கலாமா அல்லது போர்ட்டபிள் ஜென்செட் வாங்கலாமா என்று யோசித்தேன். முதலில் நமக்குத் தேவையான மின்சாரத்தின் அளவை கணக்கிட வேண்டும். அதை எப்படி கணக்கிடுவது.
மின்வாரிய கட்டண கணக்கீட்டு அட்டையைப் பார்த்த பொழுது சராசரியாக இரண்டுமாதத்திற்கு ஒரு முறை 400 யூனிட்டுகள் உபயோகிப்பது தெரிய வந்தது. அதாவது ஒரு மாதத்திற்கு 200 யூனிட்டுகள். ஒரு நாளைக்கு சுமார் 7 யூனிட்டுகள் . இதில் பெருந்தீனிக்காரர்களான, மிக்ஸி, கிரைண்டர், வாஷிங் மிஷின், ஃப்ரிட்ஜ், ஹீட்டர் இவைகளை ஒதுக்கி வைத்தாலும், ஒரு நாளில் 8 மணி நேரத்திற்கு, சராசரியாக 2 யூனிட்டுகள் தேவைப் படும்.. அதாவது ஒரு மணி நேரத்திற்கு (2000/8 +250) 300 வாட்ஸ் டெலிவிரி செய்யக் கூடிய சோர்ஸ் தேவைப்படும். இது ஒரு சராசரி என்பதாலும் சமயங்களில் ஒரே நேரத்தில் 2 ஃபேன் (60 X 2) , ஒரு கம்ப்யூட்டர் 250 ,2 ட்யூப் லைட் (2 X 60 ), வேலை செய்ய வேண்டிய சூழல் என்று கணக்கிட்டால் (120 + 250 120 =490 வாட்ஸ்) தேவைப்படுகிறது. தேவைப் பட்டால் ஒரு ஐந்து நிமிடத்திற்கு மிக்ஸியை உபயோகித்துக் கொள்ளக் கூடிய வகையிலும் , பாதுகாப்பு மற்றும் தேவையை கருதி 1000 வாட்ஸ் சப்ளை செய்யக் கூடிய சோர்ஸ் வாங்கவேண்டும்.
ஜென்செட்டா அல்லது யுபிஎஸ்ஸா எது பெஸ்ட்.?
1200 வாட்ஸ் ஜென்செட் |
முதலில் ஜென்செட் பற்றிய கணக்கீட்டைப் பார்ப்போம்.
ஜென்செட் 500வாட்ஸ்லிருந்து 5000 வாட்ஸ் வரை ரூபாய் 20,000 லிருந்து 70,000 வரை சந்தையில் கிடைக்கிறது. குறைந்த பட்சம் 1 கேவி(1000 வாட்ஸ்) ஜென்செட் வாங்கினால் சுமார் ரூபாய் 30,000 ஆகும்.
http://www.pricelist.co.in/index.php/office/generators/portable-generators
ஜென்செட்கள், ஒரு யூனிட் தயாரிக்க எவ்வளவு எரிபொருள் எடுத்துக் கொள்கின்றன என்பதுதான் மிக முக்கியமான விஷயமாகும்.
A conservative rule of thumb is one gallon of fuel per hour for a 5,000 watt generator.
அதாவது 5000வாட்ஸூக்கு ஒருமணி நேரத்திற்கு ஒரு கேலன் பெட்ரோல் என்பது ஜென்செட்களின் தலையெழுத்து.
அந்த வகையில் பார்த்தால் 1000 வாட்ஸ்க்கு ஒரு மணி நேரத்திற்கு சுமார் ஒருலிட்டர் எனக் கணக்கிட்டுக் கொள்ளலாம்..
சிக்கனமாக பயன்படுத்தினால் 8 மணி நேரத்திற்கு குறைந்தது 4 லிட்டர் பெட்ரோல் அல்லது கெரஸின் தேவைப் படும். அதற்கான செலவு சுமார் 300 ரூபாய் . இந்த ரீதியில் கணக்கிட்டால் ஒரு மாதத்திற்கு 10,000 ரூபாய் எரி பொருளுக்காக செலவிட வேண்டும். மேலும் இயக்கத்தை கட்டுப் படுத்த விவரமான ஆள் தேவை. இரைச்சல், மாசு என்று அதிகப் படியான கவலைதரும் விஷயங்கள் வேறு உள்ளது. ஆகவே வீட்டைப் பொறுத்தவரை, அதாவது மின்வெட்டு நேரங்களில் சராசரியாக மணிக்கு 500 வாட்ஸ் உபயோகத்திற்கு ஜென்செட் என்பது ஒரு குவார்ட்டர் அடிக்கிறதுக்கு ஒயின்ஷாப்பை விலைக்கு வாங்கிய கதை தான்.
மின்சாரத்திற்கான இணைப்பு அறவே இல்லாத இடங்களுக்கு வேண்டுமென்றால், ஜென்செட்டை விட்டால் வேறு வழி இல்லை. மேலும் இதில் ஒரு யூனிட் மின்சாரம் அறுபது ரூபாய் ஆகிவிடுகிறது. ஒருமணி நேரத்தில் 100 ரூபாய் வருமானம் பார்ப்பவர்கள் வேண்டுமென்றால் ஜென்செட் வைத்துக் கொள்ளலாம். இது நமக்கு கட்டுப் படியாகாது. ஆகவே அடுத்த ஏற்பாட்டை பார்க்கலாம்.
யுபிஎஸ்ஸா?
லுமினஸ் |
பவரால் - மகிந்திரா |
சு-கம் |
மைக்ரோடெக் |
850 வாட்ஸூக்கான இன்வர்ட்டர் 4500 ரூபாயிலிருந்து 5500 ரூபாய் வரை உள்ளது. மின்கலம் 100 ஆம்பியரில் வாங்கினால் 10,000 ரூபாய். ஆக மொத்தம் 15,000 ரூபாயில் முடித்துவிடலாம்.
http://www.priceindia.in/consumer-electronics/inverter-battery-price/
இதில் பிரதானமானது மின்கலம் தான். அதை எப்படி கணக்கிடுவது.சந்தையில் 12 V வோல்ட் மின் கலங்கள்தான் 99 சதவீதம் உள்ளது. நமக்கு தேவையான ஆம்பியரை எப்படி கணக்கிடுவது.?
எனது ஒரு நாளைய தேவை 2 யூனிட்கள் என்று பார்த்தோம் அதாவது 2000 வாட்ஸ். இதை மின்கலத்தின் வோல்ட்டால் வகுத்தால் தேவையான மின்கலத்தின் ஆம்பியர் கிடைத்துவிடும். 2000 Watts/12 Volt= 166.6AH.
சந்தையில் 100AH, 120AH, 150AH, 165AH, 180AH, 200AH ஆம்பியர்களில் 12 V மின்கலங்கள் கிடைக்கிறது.
லெட் ஆசிட் பேட்டரி (ஃப்ளாட்) |
சீல்ட் பேட்டரி |
http://www.brightnpowerups.com/batteries/lead-acid-batteries.html
200(AH) ஆம்பியர் என்று போட்டிருந்தால், 200 ஆம்பியரில் வேலை செய்யும் மின் சாதனம் (லோடு) இணைத்தால் 1மணிநேரம் தாக்குபிடிக்கும் என்று அர்த்தம். அல்லது 1000 ஆம்பியர் லோடு இணைத்தால் 12 நிமிடங்களுக்கு வேலைசெய்யும்.
செய்கூலி, சேதாரம்
12ஓல்ட்7ஆம்பியர் |
200 ஆம்பியர் மின்கலம் 200 X 12= 2400 வாட்ஸ் கொடுக்கவேண்டும். அதை 230 வோல்ட்டாக மாற்றும் போது அதில் 15% செலவானது (செய்கூலி, ) போக 2000 வாட்ஸ் இருக்கும். அதிலும் முழுவதுமாக சுரண்டி எடுக்கமுடியாது. 10.5V அல்லது 11 V வோல்ட்க்கு குறையும் வரை எடுக்கலாம். ஆகவே அதில் தங்கியிருக்கும் (சேதாரம்) அந்த இருப்பைக் கழித்துவிட்டால் 1800 வாட்ஸ் நிச்சயம் பயன்படுத்த கிடைக்கும்.
இன்வர்ட்டர் கள் 850 வாட்ஸ், மற்றும் 1500 வாட்ஸில் இருக்கிறது. ஆனால் 1500 வாட்ஸ் (24 Volt) இன்வர்ட்டர் என்று போய்விட்டால் அதற்கு இரண்டு மின்கலங்கள் தேவைப் படுகிறது. அதனால் விலையும் (2 X 10,000 = 20000) கூடி விடுகிறது.
நான் கம்ப்யூட்டருக்கு உபயோகிக்கும் யுபிஎஸ்ஸைப் பற்றி யோசித்து அதன் சப்ளை ரேட்டிங்கைப் பார்த்தேன்.. அது 650 வாட்ஸ் என்று போட்டிருந்தது ஆகா இதில் ஒரு 100 ஆம்பியர் சீல்ட் (Sealed) பேட்டரியை இணைத்து விட்டால் போதுமே, ஒரு பேட்டரி என்ன 5000 ரூபாய்தானே என்று கணக்கிட்டேன். எல்லாம் சேர்த்து 7000 ரூபாயில் முடித்து விடலாமே! .பின்னர் அதிக ரேட்டிங்கில் உள்ள கம்ப்யூட்டர் யுபிஎஸ் பற்றி தகவல் எடுத்தேன் 1500 வாட்ஸ் யுபிஎஸ் 2000 ரூபாயில் கம்ப்யூட்டர் விற்பனை யாளர்களிடம் இருந்தது. அதற்கு ஒரு 80+80 ஆம்பியர் சீல்ட் பேட்டரி இரண்டை வாங்கி மாட்டி விட்டால் போதுமே 12,000 ரூபாயில் தேவை நிறை வேறிவிடும்.
http://www.computerwarehousepricelist.com/productlist.asp?CurPage=1
அறிவின் கணக்கை புத்தி ஏற்க மாட்டேன் என்கிறது. ஒரு வேளை அவர்கள் குறைந்த நேர செயல் பாட்டிற்கு அந்த யுபிஎஸ்ஸை செய்திருந்தால் என்ன செய்வது என்று புத்தி சொல்லியது. அதுதான் ஒரு வருடத்திற்கான வாரண்டி இருக்கிறதே தாரளமாக செய்யலாமே என்றது அறிவு. அதெல்லாம் சரி இது பற்றி வள்ளுவர் என்ன சொல்லியிருக்கிரார் என்று பார்த்தபொழுது. (ஆஹா வள்ளுவர் யுபிஎஸ் பற்றி எல்லாம் சொல்லியிருக்கிறரா என்று கேட்பது தெரிகிறது. )
உலகத்தோடு ஒட்ட ஒழுகார் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்.
ஆகவே எல்லாரையும் போல இன்வெர்ட்டர் வாங்கிக் கொள்வோம் என்று முடிவெடுத்து ஆராய்ச்சியை கைவிட்டேன். கம்ப்யூட்டர் யுபிஸ், பெங்களுரில் கம்ப்யூட்டர் வேர் ஹவுஸில் பலதரப்பட்ட வகைகளில் கிடைக்கும். உங்களுக்கு வசதியும் நேரமும் இருந்தால் செய்து பாருங்கள்.
முடிவெடுத்தவுடன் இது பற்றி இதே தொழிலில் இருக்கும் நன்பரிடம் சொன்ன பொழுது உங்களுக்கு யுபிஎஸ்தானே கவலையை விடுங்கள் என்று சொல்லிவிட்டு போனவர், அரைமணி நேரத்தில் இன்வெர்ட்டர், பேட்ட்ரி, எலக்ட்ரிஷியன் என்று ஆட்டோவில் வந்து இறங்கி விட்டார். ஆகா என்னைக் கேட்கவில்லை, அவர்பாட்டுக்கு மாட்டி விட்டு சென்றார். பணம் (15,000 +500) எப்பொழுது கொடுக்க முடியுமோ அப்பொழுது கொடுங்கள் என்று சொல்லி விட்டுச் சென்றார்.
இதைத்தான் அன்புத்தொல்லை என்பது. நாம் இவ்வளவு ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறோம்.என்ன பிராண்ட் வாங்குவது என்ன பேட்டரி வாங்குவது என்று யோசிக்கவிடாமல் கொண்டு வந்து மாட்டி விட்டு சென்றார். நன்மைதான் செய்வார் என்றாலும் என்னைப் போன்ற விவரமானவர்களிடம்!! ஆலோசனை செய்ய வேண்டாமா?. வயரிங்கும் ஒரு குறிப்பிட்ட அறைக்கும் மட்டும் யுபிஎஸ் பயன் தரும் வகையில் இருந்தது.
நமது ஆராய்ச்சி இன்னும் முடியவில்லை அதற்குள் நண்பர் கொண்டு வந்து வைத்து விட்டார் ஆனாலும் என்ன தொடருவோம்.அடுத்து நான் என்ன செய்தேன் தெரியுமா?
தொடரும்...............
இரா.சந்திர சேகர்,
பழனி
மேலும் படிக்க...!