(முந்தைய பதிவிற்கு)

சதுரங்கத்தின் மூலத்தைப் பற்றி அதாவது முற்றிலும் மாறுபட்ட விஷயத்தைப் பற்றி அடுத்த பதிவில் ஆராயப் போகிறோம். என்று சொல்லியிருந்தேன். அதற்கு முன் சதுரங்க விளையாட்டின் விதிகள் பற்றி தெரிந்து கொள்வோம்.

மற்ற விளையாட்டுக்களை போல் அல்லாது செஸ் விளையாடுவதற்கு உண்மையிலே மூளைத்திறன் தேவைதான். செஸ் என்பதை நாமாவது நாலு பேருக்கு எடுத்துச் செல்வோம். நாம் ஒரு இந்தியனாக இருப்பதால் அந்த விளையாட்டுக்கான விதிகளை விரும்பினாலும், விரும்பா விட்டாலும் தெரிந்து கொள்ளுங்கள். பின்னாளில் உங்கள் பிள்ளைகளுடன், அல்லது பேரப் பிள்ளைகளுடன் விளையாடலாம். அல்லது ஆயுளை *”நீட்டிக்க” வாழ்க்கையில் பயன்படலாம்.

* http://chandroosblog.blogspot.in/2010/08/immortality-3.html
போர்டில் 1,2,………. என்ற எண்கள் ஆரம்பிக்கும் பகுதியில் வெள்ளைக் காய்களை வைத்து அடுக்க வேண்டும். வெள்ளை, கருப்பில் முறையே ஒவ்வொன்றிலும் ஒரு ராஜா, ஒரு மந்திரி, 2 மதகுரு, 2 குதிரை, 2 யானை, 8 படைவீரர்கள். என மொத்தம் 32 காய்கள் உள்ளன.

ராஜாவுக்கு நேர் எதிரில் ராஜாவும், வெள்ளைமந்திரி வெள்ளைக் கட்டத்திலும் கருப்புமந்திரி கருப்புக் கட்டத்திலும், கீழே உள்ள படத்தில் கண்டவாறு அமைத்துக் கொள்ள வேண்டும்.
ஆரம்ப நிலை



ஒரு ராஜா, குறைந்த பட்சம் தனது ஒரு வீரனுடனாவது அல்லது தனித்தாவது எதிரி ராஜாவை இயங்கவிடாமல் தாக்குவதே வெற்றியாகும். வெற்றி என்பது எதிரியின் காய்களை வெட்டுவதில், மற்றும் முன்னேறுவதில் மட்டுமில்லை, அத்தனை காய்கள் இருக்கும் பொழுது கூட ராஜாவைத் தாக்கி இயங்கவிடாமல் செய்வதும்தான் வெற்றி.

விதிகள்:
ராஜா: (King)
தான் இருக்கும் இடத்தில் இருந்து எட்டுத்திசையிலும் ஒரே ஒரு கட்டம் மட்டுமே நகரலாம். அவ்வாறு நகரும் போது அந்த இடத்தில் உள்ள எதிரியின் எந்த காய்களையும் வெட்டி வீழ்த்த முடியும்.



மந்திரி: (Queen)
(மன்னிக்கவும் ராணி என்று சொல்வதற்கு  நமது மரபு தடுக்கிறது. அதைப் பற்றி பின்பு சொல்கிறேன்) தான் இருக்கும் இடத்தில் இருந்து எட்டுத் திசையிலும் நேர்கோட்டில் எத்தனை கட்டத்துக்கும் நகரமுடியும். வழியில் எதிரியின் எந்தக் காயையையும் வெட்டினால், அங்கு நிலை கொள்ள வேண்டும். ஆனால் ஒரு காயைத் தாண்டிச் செல்ல முடியாது.



மதகுரு: (Bishop)
மதகுரு மூலைவிட்டமாக நான்கு திதைசைகளில் நேர்கோட்டில் எத்தனை கட்டத்துக்கும் நகரமுடியும். வழியில் எதிரியின் எந்தக் காயையையும் வெட்டினால் அங்கு நிலை கொள்ள வேண்டும். ஆனால் ஒரு காயைத் தாண்டிச் செல்ல முடியாது.



குதிரை:(Horse or Knight)
ட” வடிவில் அதனுடைய இருப்பிடத்தையும் சேர்த்து நான்கு கட்டங்கள் நகரலாம் ஆனால் அதில் ”ட” வடிவம் இருக்க வேண்டும். காயைத்தாண்டிச் செல்லும் திறம் கொண்டது. அது போகும் இடத்தில் உள்ள எதிரியின் எந்தக் காயையையும் வெட்டலாம்.



யானை:(Rook)
யானை நான்கு திசைகளில், முன், பின், இட, வலமாக, எத்தனை கட்டத்துக்கும் நகரமுடியும். வழியில் எதிரியின் எந்தக் காயையையும் வெட்டலாம் வெட்டிய இடத்தில் நிலை கொள்ள வேண்டும் ஆனால் ஒரு காயைத் தாண்டிச் செல்ல முடியாது.



படைவீரன்: (Pawn)
முன் வைத்த காலை பின் வைக்கக்கூடாது. ஒரு கட்டம்தான் நகர முடியும். ஆனால் விரும்பினால் ஆரம்ப நிலையையில் இருந்து முன்நோக்கி இரு கட்டங்கள் நகரலாம். ஆனால், தாக்குதலில் இருந்து தப்பும் நோக்கில் ஆரம்ப நிலையில் இருந்து இரு கட்டங்கள் நகரக்கூடாது. படைவீரர் தனது தாக்குதலை, முன் நோக்கிய மூலை விட்டத் திசையில் மட்டுமே மேற்கொள்ளலாம்.



சிறப்பு நகர்த்தல்கள்(விதிகள்).
1.கேஸ்லிங்.
ராஜா ஒரே நகர்த்தலில் (Move) இரண்டு கட்டங்களும், யானை இரண்டு அல்லது மூன்று கட்டங்களும் கீழ்க்கண்டவாறு நகரலாம். இதை ஒரே நகர்த்தல் என கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இதற்குக் கேஸ்லிங் என்பர். இப்படி இரு கட்டங்கள் நகரும் பொழுது, யானை (rook), அரசரைத் தாண்டி அடுத்தக் கட்டத்தில் இடப்புறமோ வலப்புறமோ நிற்கும். கீழே உள்ள படத்தில் கருப்பு ராஜாவும், வெள்ளை ராஜாவும் கேஸ்ஸில் செய்யப்பட்டுள்ள விவரம் 2வது படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது.
அதற்கான நிபந்தனைகள்.
1) ராஜா, யானை அது வரையிலும் நகர்த்தாமல் இருந்திருக்கவேண்டும்.
2) அவ்வாறு கேஸில் செய்யும் போது ராஜாவுக்கும் யானைக்கும் இடையில் எந்த காய்களும் இருக்கக் கூடாது.
3) செக் வைக்கும் போது கேஸில் செய்யக்கூடாது.


மேலும் விவரங்களுக்கு
http://en.wikipedia.org/wiki/Castling

2. என்பாஸண்ட்:
1)வெட்டும் படைவீரன் (பான்) தனது பக்கத்திலிருந்து 5 வது கட்டத்திலிருக்க வேண்டும்.
2) வெட்டப்படும் பான் பக்கத்து வரிசையில் 2 கட்டங்கள் ஏறியிருக்க வேண்டும்.
3) தேவைப் பட்டால் மட்டுமே வெட்டிக் கொண்டு வெட்டப் பட்ட பானின் வரிசைக்கு மாறிக் கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு

http://en.wikipedia.org/wiki/En_passant
3.புரோமோஷன்.

படைவீரன் மந்திரிப் பதவி அடைதல்.
படை வீரன் எதிரியின் கட்டத்தில் அதாவது எட்டாமிடத்திற்கு சென்றுவிட்டால் அதற்கு ஈடாக மந்திரியோ, யானையோ, மதகுருவையோ, குதிரையையோ பெற்று கொண்டு விளையாடலாம்.
ஒவ்வொரு கட்டத்திற்கும் இடவலமாக a,b,c,d,e,f,g,h, என்றும் கீழிருந்து மேலாக 1,2,3,4,5,6,7,8 எனவும் பெயரிடப் பட்டு, ராஜா, மந்திரி, மதகுரு, குதிரை, யானை, ஆகியவற்றிற்கு முறையே K,Q,B,N,R என்றும், வெட்டுவதற்கு X எனவும் இட்டு முழு விளையாட்டின் நகர்த்தல்களையும் பேப்பரில் குறிப்பெடுக்க முடியும். கீழே சில குறிப்புகளையும் விளக்கங்களையும் பார்ப்போம்.

1.df,Nf6 என்பதன் விளக்கம் :

முதல் நகர்த்தல்.வெள்ளை பான் (மந்திரிக்குமுன் உள்ள பான்) தனது கட்டத்திலிருந்து 2 கட்டங்கள் முன்னேறியது, கருப்புக் குதிரை, f6 என்ற கட்டத்திற்கு முன்னேறி உள்ளது.

2.c4,g6

இரண்டாவது நகர்த்தல்: c வரிசையில் வெள்ளை பான் 2 கட்டங்கள் முன்னேறியுள்ளது. g வரிசையில் கருப்பு பான் ஒருகட்டம் முன்னேறியுள்ளது.

7.Nf3,O-O

ஏழாவது நகர்த்தல்: வெள்ளைக்குதிரை f3 மாறியுள்ளது. கருப்பு ராஜாவும் யானையும் கேஸ்ஸில் செய்யப்பட்டது.

19.f4,exf4

பத்தொன்பதவது நகர்த்தல்: வெள்ளை பான் f4 கட்டத்திற்கு வந்தது. கருப்புபான் f4க்கு வந்த வெள்ளைப்பானை வெட்டி வீழ்த்தியது. X என்ற குறி வெட்டுவதற்கும், 0-0 என்ற குறி கேஸ்லிங் செய்வதற்கும்
பயன் படுத்தப்படுகிறது. முழு விளையாட்டையும் விளையாடிப் பார்க்க கீழே உள்ள தளத்திற்கு சென்று பிளேயர் பட்டன்களை உபயோகித்து விளையாண்டு பாருங்கள்.

http://chessgamesofmine.blogspot.in/search/label/BROTHER
http://www.chess.com/echess/

விதிகள் மிகவும் எளிதானவைதான் படியுங்கள், நினைவில் கொள்ளுங்கள், விளையாடுங்கள். முயன்றால் நீங்களே வித்தகனாகலாம், அல்லது உங்கள் வாரிசுகளை வித்தகராக்குங்கள். பெயரும், புகழும், அறிவும், செல்வமும் பெருகும். சதுரங்கத்தின் மூலத்தைப் பற்றி அதாவது முற்றிலும் மாறுபட்ட விஷயத்தைப் பற்றி அடுத்த பதிவில் ஆராயப் போகிறோம்.
தொடரும்..............................................

மூன்றாம் பாகம் செல்ல

இரா.சந்திரசேகர்,
பழனி.


மேலும் படிக்க...!
top