Previous
சென்ற பதிவில் அதிக குழந்தைகள் பெற்ற தாயைப் பற்றியும், அதிகமான பிள்ளைகளுக்கு தகப்பனாக இருந்தவர் பற்றியும் கூறியிருந்தேன். மிகவும் வயதான தகப்பன் (Oldest Father) பற்றி இப்பொழுது தெரிந்து கொள்வோம்.
அவர் 1840ல் பிறந்த ஜார்ஜ் ஐசக் ஹியூஸ் என்ற 96 வயதானவர்தான். தனது 94 வயதில் இரண்டாவது மனைவி மூலம் ஒரு ஆண் குழந்தையும் 96 வயதில் ஒரு பெண் குழந்தையும் பெற்றாராம். அவரது 95ஆவது வயதில் அதாவது 1935ல் அமெரிக்கன் மெடிக்கல் அஸோசியேசன் தனது இதழில் அவர் மருத்துவ ரீதியான எல்லா வகைச் சோதனையின் படி இனவிருத்திக்கு தகுதியானவர் என அறிவித்தும் உள்ளது.1935ல் டைம் இதழில் தகவல் உள்ளது.
http://www.time.com/time/magazine/article/0,9171,848201,00.html
பொதுவாக மனிதனுக்கு அறிவு வந்த நாளிலிருந்து பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை அறிவதற்கு என்றைக்குமே ஒரு ஆர்வம் இருக்கத்தான் செய்தது. பொதுவாக மக்கள் எப்படி அறிந்தனர் என்பதையும் தமிழர்களிடம் அதற்கான வழிமுறைகள் என்ன இருந்தது என்பதையும் காண்போம்.
(அதற்கு முன் புதியவர்களுக்கு சில பயனுரைகள்.
1)எனது பதிவுகளை படிக்கும் பொழுது வண்ணத்தில் வார்த்தைகள் இருந்தால் அதில் மவுஸை வைத்துப் பாருங்கள்,அதில் கை அடையாளம் தெரிந்தால், மேல் விவரங்களுக்கு லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது என்றும், அதை டபுள்கிளிக் செய்து படித்துக் கொள்ளலாம்.
2)படங்களை டபுள்கிளிக் செய்தால் உன்மையான அளவில் தெளிவாகப் பார்க்கலாம், மீண்டும் பதிவிற்கு செல்ல (Back Arrow) பேக் ஆரோவை கிளிக் செய்யவும்.
3)மேலும் படிக்க, தொடரும், ஆகியவை வண்ணத்தில் இருந்தால் கிளிக் செய்து விரிவாக்கி படிக்கலாம்.)
1) கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றின் அளவை வைத்து, பெரு வயிறு என்றால் பெண் என்றும் சிறு வயிறு என்றால் ஆண் என்றும் கூறுவர்.மேலும் சிலர் முடி, நகம் இவைகளின் வளர்ச்சியை வைத்தும் சொல்வர்.
2) கர்ப்பிணிப் பெண்கள் உட்கார்ந்த பிறகு எழும் போது, பெரும்பாலும் வலது கையை ஊன்றி எழுகிறார் என்றால் ஆண் என்றும் இடது கை என்றால் பெண் என்றும் கூறுவர்.
3) மசக்கையின் போது (கர்ப்பகாலத்தில்) இனிப்பை அதிகம் விரும்பினால் ஆண் என்றும், புளிப்பை அதிகம் விரும்பிச் சாப்பிட்டால் பெண் என்றும் கூறுவர்.மேலும் கர்ப்பமாக உள்ள ஒரு பெண் உட்கொள்ளும் உணவின் அளவு, விரும்பும் உணவு வகைகள், இன்னும் பலவகையான வழிகளில் அவள் பெறப்போகும் குழந்தையினை பற்றிக் கூறலாம் என்றும் கூறுவர்.
கர்ப்பிணியின் நாடித்துடிப்பை வைத்து அப்பெண் பிள்ளை பெறும் நேரத்தையும், இரட்டைக் குழந்தையா அல்லது ஒரு குழந்தையா என்றும் கூறுவர், பெண்ணின் உடலின் நிறம் முகமாற்றங்களையும் வைத்து பெண் பெறப்போகும் குழந்தையானது ஆணா? பெண்ணா? குழந்தையின் உடல் நிறம், குணம், உடல்நிலை போன்றவற்றை அறிந்து கொள்ளலாம் என்றும் கூறுவர்.
4) ஒரு கண்ணாடிக் குடுவையில் இரண்டு தேக்கரண்டி ட்ரானோ உப்புடன் கர்ப்பிணியின் (காலையில் எடுக்கும்) சிறுநீரை கவனமுடன் கலக்க வேண்டும் . புகையுடன் கூடிய ஒரு வீரியமான வேதியல் வினை நடக்கும். அவ்வினை முடிந்த பின்னர் அதில் தெளிந்து நிற்கும் திரவம் கரும்பழுப்பு நிறத்தில் இருந்தால் ஆண் என்றும் நிறத்தில் மாற்றமில்லை என்றால் பெண் என்றும் அறியலாம்.
http://en.wikipedia.org/wiki/Drano
5) மல்லாக்கப் படுத்த நிலையில் கர்ப்பிணியின் தொப்புளில் விளக்கெண்னெய் ஊற்றி எந்தப் பக்கம் வழிகிறது என்பதை வைத்தும் கூறுவர்.
6)வயிற்றில் இருக்கும் குழந்தையின் இதயத்துடிப்பு 140 க்கு மேல் இருந்தால் பெண் என்றும் குறைவாக இருந்தால் ஆண் என்றும் அறிவர்.
7)டவுசர்கள் ) அல்லது டிவைனர்கள் என்று அழைக்கப் படுபவர்களால் ஒரு முறை கையாளப் படுகிறது. ஆறுபடத்தில், சூர்யா ”ஐந்து கிலோ அரிசி வாங்கி பஞ்சு பஞ்சா வேக வைத்து பொதைச்ச இடம் தெரியலேயே” என்று பாடிக் கொண்டே அந்த ”தண்ணி’ உள்ள இடத்தை கண்டுபிடிப்பதற்காக கையில் குச்சியை வைத்துக் கொண்டு சுற்றுவார். அந்த குச்சியைத்தான் டவுசிங் குச்சி என்பார்கள்.
http://en.wikipedia.org/wiki/Dowsing
நம்மூரில் தண்ணீருக்கு போர் போடுவதற்கு அவர்கள் உதவி இன்னும் நாடப் படுகிறது. அது போல் ஊசல் குண்டு வைத்தும் தொலைந்து போன பொருட்களை கண்டுபிடிப்பர். இந்த முறையில் ஜெர்மணியில் பரந்து விரிந்து கிடக்கும் கடலில் ஒரு தொலைந்த கப்பலை கண்டுபிடித்து கொடுத்தவரும் உண்டு.
http://en.wikipedia.org/wiki/Ludwig_Straniak#Pendulum_dowsing
ஊசல் அல்லது பெண்டுலம் கொண்டு அறியும் முறை. கர்ப்பிணியின் வயிற்றின் மீது ஒரு மெல்லிய செயினில் தொங்கவிடப் பட்ட மோதிரத்தின் அசைவைக் கொண்டு ஆணா, பெண்னா என அறிந்தனர். பெண்டுலம் மாதிரி ஆடினால் ஆண் என்றும் சுற்றினால் பெண் என்றும் கூறுவர். பெண்ணின் மணிக்கட்டிற்கு மேல் வைத்தும் கூட செய்து பார்ப்பர்.
கர்ப்பகாலம் 10 அல்லது 20 நாட்கள் தள்ளிப் போனால் பெண் என்றும் அறிவர்
8)சீன அட்டவணை முறையும் உள்ளது அதனுடைய விளக்கத்தை கீழ்க்கண்ட தளங்களில் சென்று அறியலாம்.
http://vetrigee-vetrigee.blogspot.com/2010/07/blog-post_7288.html
http://www.momswhothink.com/pregnancy/chinese-pregnancy-calendar.html
http://chinesepregnancycalendar.com/
இது வரை குறிபிட்டவை அணைத்தும் கருத்தரித்த பின் கண்டறியப் பயன்படும் முறைகள். ஆனால் மேற்க் கூறப்பட்ட முறைகளில் எந்த விதமான அறிவியல் ஆதாரமும் இல்லை என வல்லுனர்கள் மறுத்துள்ளனர்.
கருத்தரிக்கும் முன்பே என்ன குழந்தை என்பதை தீர்மாணிக்க முடியுமா?
இந்த விஷயத்தில் ஷீட்டில்ஸ் சுற்றி வளைத்து என்னுடைய கூற்றுக்கு சற்று அருகில் வருகிறார்.அவர் என்ன சொல்கிறார் என்பதை இந்த வளைத்தளங்களுக்குச் சென்று பாருங்கள்.கலவி முறையில் சில மாற்றங்களைச் செய்து வேண்டிய குழந்தையை பெற்றுக் கொள்ளலாம் என்கிறார்
http://pregnancy.about.com/od/genderselection/a/shettlesmethod.htm
http://en.wikipedia.org/wiki/Shettles_Method
கலவியின் காலத்தை தேர்ந்தெடுத்து எந்த குழந்தை வேண்டுமோ அந்த குழந்தையை பெற்றுக் கொள்ளலாம் எனறும் சிலர் கூறுவர்.
சந்திரன் இருக்கும் ராசியைக் கொண்டு ஆணா பெண்ணா எனக் கூறுவதும் உண்டு.
9) ஆண் ராசிகளான மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தணுசு, கும்பம் ஆகியவற்றில் சந்திரன் இருக்கும் போது கலந்து கருத்தரித்தால் ஆண் குழந்தை என்றும், ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் ஆகியவற்றில் சந்திரன் இருக்கும் போது கலந்து கருத்தரித்தால் பெண் குழந்தை என்றும் கூறுவர்.
10) மாதவிலக்கு நாளிலிருந்து ஒற்றைப் படை நாட்களில் கலந்தால் ஆண் என்றும் இரட்டைப்படை நாட்களில் கலந்தால் பெண் என்றும் கூறுவர்
11) வாஸ்து சாஸ்திரப்படி படுக்கை அறை, கட்டில் அமைத்து ஆணாகவோ பெண்ணாகவோ பெற்றுக் கொள்ளலாம் என்றும் சிலர் கூறுவர். http://www.astrosuper.com/2011/05/blog-post_19.html
12) நமது சித்தர்கள் என்ன சொல்லியுள்ளனர் எனப் பார்ப்போம்.பொதுவாக சித்தர்களின் கூற்றுக்கள் பிரதானமாக வாசியோகத்தைப் பின்பற்றியதாக இருக்கும். சுவாசத்தை கட்டுப் படுத்துவதுதான் வாசியோகமாகும். இட கலை – இடது நாசியினுள்ளே செல்லும் காற்று. இதுவே சந்திர நாடி என்பர். பிங்கலை – வலது நாசியினுள்ளே செல்லும் மூச்சு. இதைச் சூரியநாடி என்பர்,. சித்தர்கள் கலவிக்காலத்தில் எந்த நாடி ஒடுகிறதோ அதைப் பொறுத்து குழந்தை அமையும் என்பார்கள் சாதாரண மனிதர்களால் மூச்சு ஒட்டத்தை கட்டுப்படுத்த முடியாது. அது தன்னிச்சையாக ஒருநேரம் பிங்கலையும் ஒருநேரம் இடகலையும் ஓடும். நீங்கள் அதை சோதனை செய்து பார்க்கலாம். எந்த மூச்சு ஓடுகிறது என்று மூக்கின் துவாரத்தின் கீழ் கையை அல்லது விரலை வைத்துப் பார்த்தால் தெரியும்.
http://siththan.com/archives/1493
சித்தர்கள் கூற்றின்படி ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒடும் மூச்சைப் பொறுத்து கலவி வைத்துக் கொள்ளவேண்டும். வலது பக்கம் ஓடினால் பெண், இடது பக்கம் ஒடினால் ஆண் என்றும், இருபக்கமும் குழப்பத்துடன் ஓடினால் கூண், குருடு அலி என்றும் கூறுவர். பெண்ணின் இரைப்பை, மற்றும் பெருங்குடல் இவற்றில் இருக்கும் அளவின் தன்மையைப் பொறுத்தும் எந்த மாதிரி குழந்தை என்று கூட சொல்கிறார்களாம். உங்களுக்கு ஆர்வமும் நேரமும் இருந்தால் இந்த தளங்களுக்கு சென்று பாருங்கள். பிராணாயாமம் செய்தால் சூரிய, சந்திர மூச்சுகளை கட்டுப் படுத்தலாம்.
http://siththarkal.blogspot.com/2010/08/blog-post_10.html
அகத்தியர், திருமூலர், சரகர் போன்றோரின் வைத்திய மற்றும் கலை நூல்களிலிருந்து பிறப்பானது நிர்ணியிக்ககூடிய ஒன்றாக, மாற்றக்கூடியதாகவும் நிரூபிக்கப்படுகிறது. பிறக்கப்போகும் குழந்தை ஆணா? பெண்ணா? என்றும் வயதையும், குணப்பண்புகளையும் எவ்வாறு நிர்ணயிப்பது என்று திருமூலர் வைத்தியசாரம் தெளிவாக உணர்த்துகிறது மனிதனின் உடலில் ஓடுகின்ற நாடிகளான வாதம், பித்தம், கபம் {சிலோத்துமம்} என்ற மூன்று முக்கிய நாடிகளிலிருந்து மனிதனின் உடலில் ஏற்படும் நோய் முதலான அனைத்து மாற்றங்களையும் அறிந்து கொள்ள முடியும். அதில் மகப்பேறுவும் உண்டு
விந்துப் பைகளின் பணி என்ன?
பெண்களுக்கு பிறக்கும் முன்பே கருவில் உருவாகும் முட்டைகளைப் போல் அல்லாமல், ஆண்களுக்கு பருவ வயதின் போதுதான் விந்தணுக்கள் உருவாகின்றன. முட்டை வடிவத் தலையும் உடலாக நீண்ட வால் பகுதியையும் கொண்டது விந்தணு.
http://en.wikipedia.org/wiki/Spermatozoon
இவை அதிகபட்சமாக 15 நாட்களுக்கு முன்பு உருவாக்கப் பட்டவையாகத்தான் இருக்கும். விந்துப் பை தனது சுருங்கி விரியும் தன்மையினால் ஒரு சீரான வெப்ப நிலையில் விந்தனுவை வைத்திருக்கும். ஒரு சிலர் தங்கள் அலுவல் காரணமாக உட்கார்ந்த நிலையிலேயே இருப்பதால் அவைகளுக்கு வெப்ப நிலை மாற்றத்தை ஏற்படுத்துவதால் (அல்லது அதிக வெப்ப நிலையில்) விந்தணுவின் இயக்கம் பாதிக்கப் பட்டு குழந்தைப் பேறு இல்லாமல் போய் விடும் வாய்ப்புண்டு. ஆகவே காரியமே கண்ணாக இருந்து வாரிசுகளை தொலைத்து விடாதீர்கள். அடிக்கடி உட்கார்ந்திருக்கும் இடத்தை மாற்றுங்கள் அல்லது இடை வெளி கொடுங்கள்.
விந்து நாளம் மூலம் வந்து சேர்ந்த விந்தணுக்களைச் சேமித்து வைக்கும் கிடங்குகளாக விந்துப் பைகள் செயல்படுகின்றன. விந்தணுக்களை ஓரளவு மட்டுமே விந்துப் பைகளால் சேமித்து வைக்க முடியும்.
http://en.wikipedia.org/wiki/Testicles
எல்லோரும் சுற்றி வளைத்து சொல்லும் விஷயத்தை நான் சுருக்கமாக நேரடியாக சொல்லப் போவதால் உங்களுக்கு இவைகளைப் பற்றி அதிகம் தெரிய வேண்டியதில்லை. ஆனாலும் அறிவியல் எப்படி சுற்றி வளைத்து சொல்கிறது என்று அடுத்து பார்ப்போம்.
முந்தைய பதிவு

7 comments:
nalla thakaval ..vaalththukkal
அருமையான தகவல்களை எளிமையாக கொடுத்துள்ளீர்கள். நன்றி
//.பொதுவாக சித்தர்களின் கூற்றுக்கள் பிரதானமாக வாசியோகத்தைப் பின்பற்றியதாக இருக்கும்.//
தமிழர்களுக்கு தெரியாத விடயமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு நிறைய தகவல்களை நமக்கு விட்டு சென்றிருக்கிறார்கள். ஆனால் நாம் தான் எதனையும் தெரிந்து கொள்வதில்லை.
இன்னும் நிறைய தகவல்களை எதிர்பார்கிறேன்.
மதுரை சரவணன்,இந்துமதி.சி.பா,மதியின் வலையில் ஆகியோரின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி
மனிதன் இந்த இனபெருக்கத்தை கட்டுபடுத்தியதால் எந்த பாதிப்பும் இல்லையா ?
Guna Pollachi
வருகைக்கும் பதிவிற்கும் நன்றி.
கேள்வி புரியவில்லை.இருந்தாலும் ஊகித்தது. மனிதன் தனது இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தியதால் தனது அழிவை தடுத்துக் கொண்டான் என நினைக்கவேண்டும்.
நான் கேட்பது இயற்கையாக இனப்பெருக்கம் நடைபெற்று கொண்டு இருந்ததை மனிதன் அதில் கட்டுப்பாடு போட்டதால் பரிணாமன வளர்ச்சியின் தொடர்பு நின்று விட்டதோ என்று நான் நினைக்கிறேன் . எனக்கு புரியவில்லை நீங்கள் சொன்னது .......எவ்வாறு இனபெருக்கம் தடுக்க பட்டதால் மனிதன் அழிவிலிருந்து காத்து கொண்டான் ?
Post a Comment