அரசியல் மாற்றம்.
தமிழ்நாட்டு மக்கள் அரசியல் தெரியாமல் இருப்பதால்தான் அரசு உயர் பதவியில் இருக்கும் சகாயத்தையும், சைலேந்திர பாபுவையும் தலைமை ஏற்க அழைக்கிறார்கள்.
பாரளுமன்றத்தைக் கைப் பற்றிய மோடியால் தான் நினைத்த சட்டத்தை அவரால் அதிரடியாக நிறைவேற்ற முடியாமல் ராஜ்யசபா முட்டுக்கட்டை போடுகிறது. ஏனெனில் ராஜ்யசபா உறுப்பினர்கள், மாநிலங்களை ஆளும் மற்றும் ஆண்ட கட்சியினராக இருப்பதால்தான். மோடி மூண்று வருடங்களுக்குப் பொறுமையாக இருந்து மாநிலங்களைக் கைப்பற்றினால் மட்டுமே தான் நினைத்தமாதிரி ஆள முடியும். இல்லாவிட்டால் பதவி ஏற்றும் வீண்தான். இந்திய ஜனநாயக முறையில் சில சமயம் ஏற்படும் சர்வாதிகாரப் போக்கை தவிர்க்க, இது போன்ற பல வழிமுறைகள் சட்டமாக்கப் பட்டுள்ளன.
ராமதாஸ், கிருஷ்ணசாமி, திருமாவளவன், ஆகியோர் ஜாதீயப் பின்னனி கொண்டவர்கள்.
இதற்கிடையில் சகாயத்தை அவரின் விருப்பத்திற்கு மாறாக அரசியலில் இழுப்பது அவருக்கு இக்கட்டான நிலையை ஏற்படுத்தும் அல்லது உமா சங்கரைப் போல் பைத்தியமாக மாற்றி விடுவார்கள், என்பதை இந்த மக்கள் உணர மாட்டார்கள். அவர் மூலம் தொகுதிக்கு ஐயாயிரம் ஒட்டு கிடைக்கும் என்றால் அவரை எப்படியும் அரசியல் கட்சிகள் இழுக்கப் பார்ப்பார்கள். அதுவே ஆளும் கட்சியாக இருந்தால் அவரை பதவி விலக நிர்பந்தம் கொடுத்து சீட்டும் கொடுத்து நிற்க வைத்து அந்த ஓட்டு வங்கியை இந்தத் தேர்தலுக்குப் பயன் படுத்திவிட்டு அவரது பெயருக்குக் களங்கம் கற்பித்து ஐந்து வருடத்தில் அந்த ஓட்டு வங்கியை செல்லாததாக மாற்றி விடுவார்கள். அல்லது அவரைக் களத்திலிருந்து சுத்தமாக அப்புறப்படுத்தப் பார்ப்பார்கள். ஆகவே வாய்ப்பு குறைவு.
தமிழ்நாட்டில் நிலையான ஆட்சி அமைய 234 சட்டமன்ற உறுப்பினர்களில் குறைந்தது பாதிப்பேரின் ஆதரவு வேண்டும். அதில் ஒரு முப்பது கண்ணியமானவர்களை மந்திரியாக்க வேண்டும் என்றால், 150 நேர்மையான உறுப்பினர்களின் நிபந்தனை அற்ற ஆதரவு வேண்டும். மேலும் 40 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவும் வேண்டும். ஆட்சி கவிழ்ந்து விடாது என நிலைத்திருக்க லோக்கல் பாடியிலும் உறுப்பினர்கள் வேண்டும். அது மட்டுமில்லாமல் தமிழகத்தின் கீழ்க்கண்டுள்ள பல்வேறு பிரிவுகளிலும் (Local body) உள்ள ஒவ்வொரு வார்டிலும் குறைந்தது முப்பது சதவீத மக்களின் ஆதரவு இருந்தால் தான் எங்கும் நேர்மை எதிலும் நேர்மை என ஆள முடியும்.
முனிசிபல் கார்ப்ரேசன் ................ 10
முனிசிபல் ................... 125
பஞ்சாயத்து யூனியன் .................... 385
நகரப் பஞ்சாயத்துகள் ................... 561
கிராமப் பஞ்சாயத்துகள் ......... ........12,618
மொத்தம் உள்ள 13699 இடங்களில் தலைமைப் பதவி ஏற்க உத்தமர்கள் தேவை. இன்னும் வாரியத்தலமைகள் இருக்கின்றன. இவர்களைத் தேர்ந்தெடுக்கப் பஞ்சாயத்து உறுப்பினர்கள் மற்றும் கவுன்சிலர்கள் என சுமார் இரண்டு இலட்சம் பேர் நல்லவர்களாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் ஊழல் செய்யும் அதிகாரியை, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினரைக் கூட உடனடியாகக் பதவியிலிருந்தும், கட்சியிலிருந்து தூக்கி எறிய முடியும். இப்பொழுது தெரிகிறதா?. ஒவ்வொரு கட்சியின் மதிப்பும், உழைப்பும், தொண்டர்களைத் தக்கவைத்துக் கொள்ளப் படும் பாடும். நாலாயிரம் கோடி எல்லாம் இவர்கள் பங்கிட்டால் ஆளுக்கு வெறும் 20,000 ரூபாய் கூடக் கிடைக்காது. யோசித்துப் பாருங்கள் உங்கள் தொகுதிக் கவுன்சிலர் எவ்வளவு சம்பாதித்திருப்பார் என்று. ஆனால் உண்மையில் சராசரியாக ஆளுக்கு ரூ 2,00,000க்கு மேல் சம்பாதிக்கிறார்கள் என்றால் 40,000 கோடியை சாப்பிடுகிறார்கள் என்று தானே அர்த்தம்.
இப்பொழுது ஏன் சினிமாத்துறையினர் அரசியலுக்கு வரமுடிகிறது என்பது விளங்கியிருக்கும்.. சினிமாதான் அத்தனை வார்டுகளையும் மக்களையும், முன்பு நேரடியாகவும், தற்காலத்தில் தொலைக்காட்சிப் பெட்டியின் மூலமாகவும் சென்றடைகிறது. அதனால்தான் தொலைக்காட்சிப் பெட்டியை இலவசமாக வழங்கி விட்டு, தொலைக்காட்சி சேனல் ஆரம்பித்து அதன் மூலம் மக்களைத் தன்வசமாக்க முயன்றனர். அடுத்தக் கட்டமாக இண்டர் நெட் வந்ததால் அதுவே லேப்டாப்பாக மாறியது.
திடீர் அரசியல் பிரவேசத்திற்கு ஒரு கண்ணியமான, மக்களுக்காகப் பாடுபடக் கூடிய, திரைத்துறை பிரபலத்தின் பின்னனி தேவை. அல்லது பெரிய ஜாதிப் பின்னனி தேவை. எம்ஜிஆரின் வழிமுறை சினிமாதான். அவரால்தான் திமுகக்கு அதிகமாகத் தொண்டர்கள் வந்தனர். அவருடைய கொடைத் தன்மையும், நேர்மையாளன் என்ற திரைத் தோற்றமும்தான், அவருக்கு பெண் ரசிகர்களையும் ஒரளவுக்கு ஆண் ரசிகர்களையும் சேர்த்தது. திமுகவின் தமிழும் குறிப்பிடும் அளவிற்கு தொண்டர்களை ஈர்த்தது. பின்னர் அதிலிருந்து அதிமுகக்குச் சேர்ந்தனர், அதனால் முழு ஆதரவுடன் எம்ஜிஆர் வந்தார். ஆனால் அவராலும் தனது மந்திரிகளை ஒரு அளவுக்கு மேல் கட்டுப்படுத்த முடியவில்லை.
கேஜ்ரிவால் தனி ஒருவனாக வந்தார் என்றால் அவர் அண்ணாஹசாரே என்ற "பிரபலத்தின்" மீது சவாரி செய்து அவரை பயன்படுத்தி அரசியலுக்கு வந்தார். ஆனால் தற்பொழுது நல்ல மந்திரிகள் இல்லாததால் தடுமாறுகிறார். மேலும் டெல்லி ஒரு சிறிய, படித்தவர்கள் நிறைந்த மாநிலம் என்பதால் அவர் பயணம் தொடர்கிறது.. ஜெயலலிதா , கருணாநிதி ஆகியோர் முறையே எம்ஜிஆர், அண்ணா என்ற பிரபலங்கள் மீது சவாரி செய்து வந்தவர்கள்.
கேஜ்ரிவால் தனி ஒருவனாக வந்தார் என்றால் அவர் அண்ணாஹசாரே என்ற "பிரபலத்தின்" மீது சவாரி செய்து அவரை பயன்படுத்தி அரசியலுக்கு வந்தார். ஆனால் தற்பொழுது நல்ல மந்திரிகள் இல்லாததால் தடுமாறுகிறார். மேலும் டெல்லி ஒரு சிறிய, படித்தவர்கள் நிறைந்த மாநிலம் என்பதால் அவர் பயணம் தொடர்கிறது.. ஜெயலலிதா , கருணாநிதி ஆகியோர் முறையே எம்ஜிஆர், அண்ணா என்ற பிரபலங்கள் மீது சவாரி செய்து வந்தவர்கள்.
விஜய்காந்த் தனது திரைப் பிரபலத்தால் முன் வந்தார். அவரிடம் ஆரம்பத்தில் முழுமையான நம்பிக்கை ஏற்படவில்லை ஆனாலும் தனக்களிக்கப் பட்ட கணிசமான வாய்ப்பை அவர் பயன் படுத்திக் கொள்ளவில்லை. அவரிடம் ஒரு சரியான கட்டமைப்பு இல்லை. அவருக்கு அரசியல் நிர்வாகத்திறமை(அடிதடி) இருந்தும், நேர்மையாளர்கள் பற்றாக் குறை. தமிழ்நாட்டின் சாபக் கேடே நேர்மையாளர் பற்றாக் குறைதான்.
ராமதாஸ், கிருஷ்ணசாமி, திருமாவளவன், ஆகியோர் ஜாதீயப் பின்னனி கொண்டவர்கள்.
இதற்கிடையில் சகாயத்தை அவரின் விருப்பத்திற்கு மாறாக அரசியலில் இழுப்பது அவருக்கு இக்கட்டான நிலையை ஏற்படுத்தும் அல்லது உமா சங்கரைப் போல் பைத்தியமாக மாற்றி விடுவார்கள், என்பதை இந்த மக்கள் உணர மாட்டார்கள். அவர் மூலம் தொகுதிக்கு ஐயாயிரம் ஒட்டு கிடைக்கும் என்றால் அவரை எப்படியும் அரசியல் கட்சிகள் இழுக்கப் பார்ப்பார்கள். அதுவே ஆளும் கட்சியாக இருந்தால் அவரை பதவி விலக நிர்பந்தம் கொடுத்து சீட்டும் கொடுத்து நிற்க வைத்து அந்த ஓட்டு வங்கியை இந்தத் தேர்தலுக்குப் பயன் படுத்திவிட்டு அவரது பெயருக்குக் களங்கம் கற்பித்து ஐந்து வருடத்தில் அந்த ஓட்டு வங்கியை செல்லாததாக மாற்றி விடுவார்கள். அல்லது அவரைக் களத்திலிருந்து சுத்தமாக அப்புறப்படுத்தப் பார்ப்பார்கள். ஆகவே வாய்ப்பு குறைவு.
மாற்றம் ஏற்படுத்தக் கூடிய மாற்று வழிகளைப் பார்ப் போம்.
தமிழக மக்கள் அடிமைப் புத்தியுடனும் ஒரு வகை ஈகோவுடன் இருக்கிறார்கள் . தான் தேர்ந்தெடுத்து விட்டவன் ஒரு போதும் தப்பு செய்யமாட்டான் என்றும், அப்படியே தவறு செய்தாலும், அவன் செய்து விட்டான் என ஒப்புக் கொண்டால், தன்னுடைய தேர்வு தப்பென்று கருதப்படும் என்ற ஈகோவுடனே சாகும் வரைக்கும் அவன் நல்லவன், வல்லவன் எனக் கூறிக்கொண்டே இருந்து விட்டு, தனது வாரிசுகளையும் பலி கொடுக்கிறான். அரசியல் வாதிக்கும் அவனுக்கும் என்ன தொடர்பு?. அவன் கோடிக்கணக்கில் ஊழல் செய்தாலும், தனது இனத்தையே அழித்தாலும் அவனையே தலைவன் என்று ஏற்றுக் கொள்ளும் செம்மறியாடுகள். முன்னால் செல்லும் ஆடு ரயிலில் விழுந்து அடிபட்டாலும் தானும் விழுந்து மடியும் மனநிலை மாறாத வரை மாற்றம் இல்லை.
கூட்டணி என்பது கொள்ளைக்கு நாமே இடம் கொடுக்கிறோம் என அர்த்தம். நேர்மை இங்க்கே பிளாக் மெயில் செய்யப் படும். இப்படி பட்ட சூழ்நிலையில் எங்கே இவன் விரக்தியில் ஓட்டுப் போடாமல், யோசித்து யோசித்து வன்முறையில் இறங்கி விடுவானோ என்று பயந்து O49 என்றொரு, விழிப்புணர்ச்சியை மழுங்க வைக்கும் உபாயம் வைத்துள்ளனர். அதில் குத்தியவுடன் தேர்தலை வெற்றியுடன் சந்தித்த திருப்தி ஏற்பட்டு விடும் இந்த அடி முட்டாள்களுக்கு. இனி வாய்ப்புள்ள மாற்றங்களைப் பார்ப்போம்.
1)மாநிலம் முழுமைக்குமான கட்டமைப்புடன் கூடிய ஒரு அமைப்பினால் தான் திடீர் அரசியல் மாற்றம் ஏற்படுத்த முடியும். ஆனால் அது நேர்மையானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதம் இல்லை.
2)சகாயம் கூறியது போல் அரசு அதிகாரிகளும், மக்களும் நேர்மையானவர்களாக மாறவேண்டும்.
3)அரசியலில் நேர்மையை கொண்டுவர ஒரு எளிய வழி, மக்கள் முன் வந்து தவற்றை தைரியமாகத் தட்டிக் கேட்க வேண்டும். ஆகவில்லை என்றால் தொடர்ந்து அடுத்தடுத்த நடவடிக்கையிலும் துணிந்து இறங்க வேண்டும்.
4)படித்தத் திறமையான, எதையும் தியாகம் செய்யக் கூடிய ஆயிரம் பேர் தியாக உணர்வுடனும் உறுதியுடனும் இணைந்து இயக்கமாக செயல் பட வேண்டும். அநியாயங்களை தட்டிக் கேட்க ட்ராபிக் ராமசாமி போல் முன் வந்தால், ரமணா ஸ்டைல்தான்.
5) தேர்ந்தெடுத்தவர்கள் சரியில்லை என்றால் இனி அவர்களை ஒரு போதும் அரசியலுக்கு வர விடாதீர்கள். வேரடி மண்ணோடு (கவுன்சிலர் பதவி வரை) ஒழித்து விடுங்கள். இப்பொழுதுள்ள காங்கிரஸ், இரண்டு திமுக ஆகியவை பிடிக்கவில்லை என்றால் அவர்களை நிரந்தரமாக வீட்டுக்கு அனுப்பி விட்டு, விஜய்காந்தைத் தேர்ந்தெடுங்கள், அவர் சரியில்லை என்றால் அண்புமணியைத் தேர்ந்தெடுங்கள். அவர்கள் சரியில்லை என்றால் மீண்டும் பழையவர்களைத் தேடாதீர்கள். ஜனதாக் கட்சி இருக்கிறது, கம்யூனிஸ்ட் கட்சி இருக்கிறது. சரியாக ஆண்டால் மீண்டும் ஆட்சியைக் கொடுங்கள் இல்லாவிட்டால் நிரந்தரமாக வீட்டுக்கு விரட்டி விடுங்கள். இன்னொரு வாய்ப்பு தரலாம் என கனவிலும் எண்ணி விடாதீர்கள். தமிழகத்தை ஆள்வதற்கு நேர்மை தேவை என்பதை வாக்குகளால் உணர்த்துங்கள்.
ஒரு அமெரிக்கனைப் போல் இருங்கள்.சாதாரண குடிமக்கள் நாம் எப்படி வேண்டுமென்றாலும் இருக்கலாம் ஆனால் நம்மை ஆள்பவன் ஒழுக்கமுள்ளவனாக இருக்க வேண்டும். ஒரு ஜனாதிபதியை உள்ளாடை விஷயத்தில் பொது மன்னிப்பு கேட்க வைத்தார்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.
1 comments:
Sir, this blog was posted in Dec 2015. But, I come across today only. Finally. You have given five alternative ideas for selecting better parties. You have given a suggestion, even Vijayakanth was in list.
I wonder if you had no idea about NTK Seeman at the time of your posting. Please clarify your idea about Seeman in the political arena.
Post a Comment