இராகு கேது (பாகம் 3)

1)இராகுவும் கேதுவும் பூமியை சுற்றிவர 18 வருடங்கள் எடுத்துக்கொள்வார்கள்
2)ஜோதிட இயல் படி இராகுவும் கேதுவும் சூரிய சந்திரர்களுக்கு எதிரிகள்
3)இராகுவும் கேதுவும் உருவமில்லாத நிழல் கிரகங்கள்
4)இராகுவும் கேதுவும் ஜாதகக் கட்டத்தில் சொந்த வீடற்றவர்கள் (வீடு பற்றி பின்னர் பார்ப்போம்)
5)சூரிய சந்திரர்களை விட பலமானவர்கள்.

செய்யுங்காரி தனக்கதிகம் செவ்வாய், வலிது செவ்வாயில்
வெய்ய புதனும் வலிவதனை விடவே அரசன் மிக வலியன்
துய்ய அரசன் தனில் வெள்ளி வலியன் அவனில் சோமன் மிகும்
பைய சசிக்கு கதிர் வலிது பானுவில் பாம்பே வலிதே

தமிழில் யாப்பிலக்கண முறைப்படி இயற்றப் பட்ட பாடல்.


காரி- சனி
அரசன் - வியாழன்
சோமன் - சந்திரன்
சசி - சந்திரன்
கதிர் - சூரியன்
பானு - சூரியன்
பாம்பு - ராகு ,கேது

பாடலின் பொருள்

சனியை விட செவ்வாய் பலமுள்ளவன்
செவ்வாயை விட புதன் வலியவன்
புதனைவிட வியாழன் வலியவன்
வியாழனை விட வெள்ளி வலியவன்
வெள்ளியை விட சந்திரன் வலியவன்
சந்திரனை விட சூரியன் வலியவன்
சூரியனை விட பாம்பு வலியது.


6)மற்ற எல்லா கிரகங்களூக்கும் தலா இரண்டு சொந்த வீடுகள் உள்ளன. ஆனால் சூரிய சந்திரர்களுக்கு தலா ஒரு வீடு தான் உள்ளது. இராகு கேதுவுக்கு அதுவும் இல்லை.

7) ராகுவைப் போல் கொடுப்பாரும் இல்லை அவனைப் போல் கெடுப்பாருமில்லை.பொதுவில் கெட்டவன். கேது ஞானகாரகன், மோட்ச காரகன்.ஆனாலும் பொதுவில் கெட்டவன்

இக்கதையின் விவரப்படி அல்லது ஜோதிட விவரப்படி (நன்றாக கவனிக்கவும், இன்றைய அறிவியல்படி அல்ல )இவர்களின் இருப்பிடத்தை தீர்மானிப்போம். யாராவது ஒருவரின் இருப்பிடத்தை அறிந்தால் போதும் மற்றவரின் இருப்பிடத்தை எளிதாகக் கண்டுபிடித்து விடலாம்.

இடையில் ஒரு புதிர்

முன்பெல்லாம் கடைகளில் உண்மை விலை விவரம் பொருட்களின் மேல் சங்கேத எழுத்துக்களில் எழுதியிருப்பார்கள். விற்கும் விலை ஆளைப் பொறுத்து மாறுபடும் என்பதால் லாபத்தை எவ்வளவு வைக்கலாம் என்பது அந்த விலைப் பார்த்து உரிமையாளர்கள் தெரிந்து கொள்வாரகள். அந்த சங்கேதத்திற்கு ”புள்ளி” என்பார்கள். அந்த மாதிரியான ஒரு காலகட்டத்தில் ஒரு ரெடி மேட் கடையின் உரிமையாளர் வெளியூருக்கு செல்ல வேண்டிய சூழ்நிலையில் அப்பொழுதான் படிப்பை முடித்துவிட்டு வந்த தன் மகனிட்ம் பொறுப்பை விட்டுச் செல்கிறார். திரும்பி வருவதற்கு பத்து நாட்களாகும் ஆகவே கடையை பார்த்துக் கொள், என்று சொல்லி விட்டுச் சென்றார். அவனுக்கு சங்கேத குறியீடு பற்றி தெரியாது. ஆனாலும் கிளம்பும் அவசரத்தில் மகன் அந்த குறியீடு பற்றி கேட்கும் பொழுது, தன்னை விட பெரிய படிப்பு படித்த தனது மகன் புரிந்து கொள்வான் என்று எண்ணி, போர்ன்விட்டாவை வைத்துப் போட்டுப் பார் சரியாக வரும் என்று சொல்லிவிட்டு சென்றார். மகனும் போர்ன்விட்டாவை கலக்கி குடித்துவிட்டு அந்த சங்கேத குறீயீடுகளை வைத்து கணக்குப் போட்டுப் பார்த்தான் ஒன்றும் வரவில்லை. போர்ன்விட்டா பாக்கெட்டுகள் காலியானதுதான் மிச்சம், அப்பொழுது ஒரு பெரியார் வந்தார். அவர் பெரிய அறிவாளி என்று ஊருக்குள் பெயர் பெற்றவர். என்னப்பா விஷயம் என்றார். இவன் தகவலைச் சொன்னான். அதைக் கேட்டுவிட்டு அந்த பெரியார் ”உங்க அப்பன் ஒரு காட்டு மிராண்டி நீயும் ஒரு காட்டு மிராண்டி, போர்ன்விட்டாவை குடித்து விட்டு கணக்குப் போட்டால் கணக்கு வராது உனக்கு கொழுப்புதான் வரும் போங்கடா முட்டாள்களா உங்களை எல்லாம் திருத்தவே முடியாது” என்று ஏசி விட்டுச் சென்றார். அவன் பாவம் இரண்டு நாள் கஷ்டப் பட்டு , நஷ்டப் பட்டு இருக்கும் பொழுது நான் சென்று தகவல் கேட்டு அறிந்து, அவன் கலக்கி குடுத்த போர்ன்விட்டாவை குடித்துவிட்டு, குறீயீட்டுச் சங்கதியை எடுத்துக் கூறினேன். அப்பொழுதான் அவனுக்கு யார் காட்டு மிராண்டி என்று தெரிந்தது. உங்களுக்கு புரிந்தால் நீங்கள் எனக்கு எழுதுங்கள். புரியாவிட்டாலும் கேட்டு எழுதுங்கள்.

chandrustudio@gmail.com.


சரி நாம் ”ராகு கேது”வில் விட்ட இடத்தை பிடிப்போம்.முதலில் இந்த பதிவில் உள்ள சில பதங்களுக்கு முழுமையான, சரியான அர்த்தத்தைப் புரிந்து கொள்ளுவோம்

தளம்

தளம் என்றால் கற்பனையான ஒரு சமதளமான தகடு போன்ற பரப்பாகும். உண்மையில் வான வெளியில் தளம் என்று ஏதுமில்லை. நமது வசதிக்காகவும் எளிதாக புரிந்து கொள்ள உதவுவதற்குமான முற்றிலும் ஒரு கற்பனைத் தளத்தைத்தான் இங்கு தளம் என்று குறிப்பிடுகிறேன்.

சுற்று வட்டப் பாதை:

இதுவும் மேற் கூறியது போன்றே கற்பனையானதுதான். வான்வெளியில் கிரகங்கள் செல்லும் பாதையை கற்பனையாக நாம் பேப்பரில் வரைந்து கொள்கிறோம். மற்றபடி பாதை என்பது எதுவும் கிடையாது, கண்ணுக்கும் தெரியாது.

உண்மையில் இப்படி இருப்பதைஇப்படி யோசித்து,இப்படி வரையலாம்.

இராகுவையும் கேதுவையும் கதைப்படி காட்டிக் கொடுத்தவர்களாகிய சூரிய சந்திரர்கள் தான் இப்பொழுதும், எப்பொழுதும் காட்டிக் கொடுக்ககிறார்கள். இவர்களை வைத்துத் தான் இராகு கேதுவின் இருப்பிடம் அடையாளம் காணமுடிகிறது.

இராகு கேது பூமியை சுற்றிவருவதாலும், சூரியன் சந்திரன் சம்பந்தப் பட்டிருப்பதாலும். சூரியன், சந்திரன், பூமி இவை மூன்றின் சுற்று வட்டப் பாதைக்குள் தான் எங்காவது இருக்க வேண்டும். மேலும் சூரிய, சந்திர கிரகணங்களை வைத்தும் அவர்களது இடத்தை நமக்கு தெரிந்த வகையில் துல்லியமாக மதிப்பிடலாம். அவ்வாறு பார்க்கும் போது சந்திரன் பூமியை சுற்றும் பாதையின் தளமும், பூமி சூரியனை சுற்றும் பாதையின் தளமும் சந்திக்கும் இடத்தில் தான் அவைகள் இருக்கமுடியும்.

முதலில் சூரிய-பூமி தளத்தைப் பார்ப்போம். இதற்கு விளக்கம் தேவையில்லை எனக் கருதுகிறேன். இங்கு இரண்டு படங்கள் உள்ளது ஒன்று கற்பனையான தளம் என்ற அமைப்புடனும் மற்றொன்று கற்பனையான வட்டபாதையுடனும் உள்ளது.
படம் (1)
இப்பொழுது பூமி -சந்திர தளத்தைப் பார்ப்போம்.


இப்பொழுது இரண்டு தளங்களையும் இணைப்போம். இணைப்புகள் பலவகைகளில் இருக்கும். முதலில் இரண்டு (Two extreme positions)அதீத நிலைகளைப் பார்ப்போம்


1) தளங்கள் ஒன்றுக்கு ஒன்று செங்குத்து கோணமாக இருக்கலாமா?


இப்படி இருப்பதற்கு வாய்ப்பே இல்லை . ஏனெனில் சந்திரனும் சூரியனைப் போல் கிழக்கே தோன்றி மேற்கே மறைவதால் சூரியனின் பாதையில்தான் அவனும் இருக்க வேண்டும், இருக்கிறான், .மற்றும் செங்குத்து கோணமில்லை என்பதை விவரிக்க சோதிடமே சான்றாகும். செங்குத்து கோணமாக இருக்கும் சூழ்நிலையில் சந்திரன் வடக்கே தோன்றி தெற்கே மறைவான் அல்லது vice versa, மேலும் அதன் தோற்றங்கள் முற்றிலும் மாறுபட்டவையாக இருக்கும் . அது விவரிப்பதற்கு கொஞ்சம் சிக்கலானது. உங்களுக்கு கற்பனை வளம் இருந்தால் படுத்து கொண்டு அந்த செங்குத்து கோணம் அமையும் 360 பாகைகளையும் ( இதில் கவணிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் வானவியலில் கற்பனை எப்பொழுதும் 360X360 டிகிரியாக அதாவது 3D யில் இருக்க வேண்டும்.) கற்பனையில் யோசித்துப் பாருங்கள். அந்த நிலைமையில் ஒரு வேளை எப்பொழுதுமே அரைச் சந்திரனாகக் கூடத் தெரியலாம். ஆகவே செங்குத்து (Perpendicular) கோணம் என்பதையும் மறந்து விடுவோம்.
படம் (3)

2) தளங்கள் ஒன்றுக்கு ஒன்று இணையாக இருக்கலாமா?
தளத்தோடு தளமாக இரண்டும் இணையாக (Parellel) இணைப்போம் (sandwitched). படத்தில் காட்டியுள்ளவாறு. இரண்டு சுற்று வட்டப் பாதைகளும் (தளங்களும்) ஒரே தளத்தில் இருந்தால் எல்லாப் பௌர்னமியும் முழு சந்திரகிரகணமாக இருக்க வேண்டும் என்பதும், எல்லா அமாவாசைகளும் முழு சூரிய கிரகணமாக இருக்க வேண்டும் என்பதும் முடிவாகிறது. இதைத் தெளிவு படுத்த நாசா விஞ்ஞானிகளை கூப்பிட்டுக் கேட்க வேண்டிய அவசியமில்லை. அன்றாட அறிவியல் சிறிது தெரிந்தால் போதும்.இங்கு ராகு கேதுவுக்கு வேலை இல்லை.

ஆனால் உன்மையில் அவ்வாறு நிகழாமல் இருப்பதாலும், ஆனால் வருடத்திற்கு ஒருமுறையாவது ஏதோ ஒரு கிரகணம் தன்னிச்சையாக (Random ) நடப்பது போல் தோன்றுவதாலும், எப்பொழுதும் சூரியன், மற்றும் மற்ற கிரகங்கள் பயணிக்கும் திசையிலேயே சந்திரன் பயனிப்பதாலும் ஒரே தளத்தில் ஒரு சிறிய கோணத்தில் வெட்டிக் கொண்டு சாய்வாகத்தான் இருக்க வேண்டும் என்பதை உறுதிப் படுத்த நாம் யாரையும் கேட்க வேண்டிய தேவையில்லை. சிறிது ”பொதுப் புத்தி”(common sense) யை பயன் படுத்தினால் புரிந்து கொள்ளலாம்.


ஒரு 5 டிகிரி சாய்வாக உள்ளதால்தான் ராகுவும் கேதுவும் தேவைப் பட்டார்கள்.இங்கு படத்தில் ராகு கேதுவுக்கு முறையே சிவப்பும் பச்சை நிறமும் கொடுத்து ஒரு சிறிய உருவமும் கொடுத்துள்ளேன் அவை எல்லாம் எளிதில் புரிந்து கொள்வதற்குதான் என்பதை மறந்து விடாதீர்கள். உண்மையி அப்படி ஏதும் நிறமோ வடிவமோ கிடையாது முற்றிலும் கற்பிதமானதுதான் (Imaginary)


சரி கிரகணத்தைக் கணக்கிட சூரிய சந்திரர்களின் கோண அளவும், அவற்றின் வேகமும் தெரிந்தால் போதுமே. அதில்தான் இவர்கள் கில்லாடி என்கிறீர்களே அதை வைத்துச் சொல்ல முடியாதா? சூரிய சந்திரர்களின் பாதையும், பயணமும் மாறாது இருக்கும் பொழுது எதற்கு இந்த கற்பனைப் புள்ளிகளும், பாம்புகளும்.? இவைகளின் அவசியம்தான் என்ன?. என்று பலவிதமான கேள்விகளை கேடபார்கள் இந்த வாலுப்பசங்க.

நமக்கு உள்ளதோ மூன்று இஞ்ச் இடைவெளி உள்ள இரண்டு கண்கள்தான். இவைகளால் அதிக பட்சமாக முப்பது மீட்டர் தொலைவிற்கு சாதாரண பொருட்களின் முப்பரிமான காட்சியைதான் வழங்க முடியும். அனால் இங்கு நாம் பேசிக்கொண்டிருப்பதோ லட்சக் கணக்கான மைல்கள் தூரத்தைப் பற்றி அதற்கு 300 மீட்டர் இடை வெளி உள்ள கண்கள் கூட பத்தாது. .

ஆதிகால இந்திய சோதிடன் இருபரிமான கணக்குகள் போட்டு, சூரிய சந்திர பாதைகளை வைத்து கணக்கிட்டு கிரகணத்தை எதிர்பார்த்து விட்டு ஏமாந்து போனதால் காரணத்தை ஆராய்ந்து, முப்பரிமானத்தில் கணக்கை போட்டு திருத்தினான்.

பேப்பர், போட்டோ, திரைப் படம், கம்ப்யூட்டர் என வளர்ந்துவிட்ட இக்காலத்திலும் முப்பரிமானம் என்றால் என்ன என்று படித்தவர்களுக்கே தெளிவாகத் தெரியுமா என்பது கேள்விக் குறியாக உள்ளது. 3000 வருடங்களுக்கு முன் நிலைமையை யோசியுங்கள். நான் ஏற்கனவே கூறிய்து போல் வானியல் காட்சிகளை 3D யில் மனதில்தான் யோசிக்க வேண்டும், யோசிக்க முடியும். ஆகவேதான் முப்பரிமான விளக்கத்திற்கு போகாமல் எளிதாக கணக்குப் போட்டு, கண்டுபிடிக்க ஏற்பட்டதுதான் இராகுவும் கேதுவும். இதிலுள்ள கணிதம் புரியாவிட்டாலும் தகவலை(Data) தலை முறை தாண்டி சரியாக எடுத்துச் செல்ல ஏற்பட்டதுதான் ’திருநீல கண்டருக்கும் சூரியகிரஹனத்திற்கும் என்ன சம்பந்தம்?’ என்ற பாம்புக்கதை.

உதாரணத்திற்கு ஜனவரி மாதம் 26ந் தேதி முழு கங்கண சூரிய கிரகணம் ஏற்பட்டது என வைத்துக் கொள்வோம். இது போன்ற முழு கங்கண சூரிய கிரகணம் ஜனவரி மாதம் 26 ந்தேதி அடுத்து எந்த வருடம் ஏற்படும் என்பது கணக்கில் வராதது என்பதை விட அதைக் கணக்கிடுவது என்பது மிகவும் சிக்கலானது. சந்திரனின் சாய்வான சுழற்சி தளத்தினாலும் பூமியோடு சேர்ந்து கொண்டு சூரியனைச் சுற்றுவதோடு அல்லாமல் பூமியையும் சுற்றுவதாலும் அதன் பாதை மிகவும் சிக்கலாகிவிடுகிறது. அதில் ஒரு ஒழுங்குமுறையை காண ஒரு மனிதனுக்கு மட்டுமல்ல அவனது தலைமுறைகளுக்கும் வயது பத்தாது ஆகவேதான் ஒழுங்கற்றவைகளிலிருந்து ஒரு ஒழுங்கை கொண்டு வர ஏற்பட்ட ஒரு அற்புதமான கணித வடிவமைப்புதான் ராகுவும் கேதுவும். இதில் ராகு என்பது சூரியனின் நிழலாகவும், கேது என்பது சந்திரனின் நிழலாகவும் கருதப் படுகிறது. இவர்கள் இருவரும் சூரிய் சந்திரர்களை விட எப்பொழுதும் பூமிக்கு அருகில் இருப்பதாலும் சூரிய சந்திரர்களின் பிர்திநிதியாக இருந்து அவர்களின் இருப்பிடத்தை துல்லியமாக (3Dயில்) கணக்கிட உதவுவதாலும் மற்ற கிரகங்களை விட (ஏன் சூரிய சந்திரர்களை விடவும்) சக்தி உள்ளவர்களாக கருதப் படுகிறார்கள்.

ஸ்க்ரூ கேஜ், வெர்னியர் காலிபர் என்ற நீட்டல் அளவைக் கருவிகள் உள்ளது.
அதன் தத்துவம் உங்களுக்கு புரியுமென்று நினைக்கிறேன் ஸ்க்ரூ கேஜ்ஜில் ஒரு மெயின் ஸ்கேலுடன் ஒரு சிறிய ஸ்கேல் ஒன்றும் இணைந்திருக்கும். அந்த சிறிய ஸ்கேலின் (Units) அளவை எந்தமுறையில் உள்ளது என்று யாராலும் கூற முடியாது. ஏனென்றால் அதில் ஒரு சிறிய கற்பிதம் அவரவர் தேவைக்கு ஏற்றவாறு உள்ளது. அதன் உதவியால்தான் நீட்டலளவை நூறு மடங்கு துல்லியமாக அளக்கமுடிகிறது அது போன்றுதான் வான்வெளியில் சூரிய சந்திரர்களின் நடமாட்டத்தை துல்லியமாக கணிப்பதற்கு ராகு, கேது என்பவர்கள் ஒரு சிறிய ஸ்கேலாக இருந்து பயன்படுகிறார்கள். ஸ்க்ரூ கேஜ், வெர்னியர் காலிபர் பற்றி அறிய விரும்பவர்கள் எனக்கு எழுதலாம்

சோதிடத்தில் கூறப்படுபவை.

ராகுவைப் போல் கொடுப்பாரும் இல்லை அவனைப் போல் கெடுப்பாருமில்லை. பொதுவில் கெட்டவன். இவை அணைத்தும் சூரியனுக்கும் பொருந்தி வரும். அது போல் கேது ஞானகாரகன், மோட்ச காரகன். சுபாவத்தில் கெட்டவன் தான். இவை அணைத்தும் சந்திரனுக்கும் கிட்ட தட்ட பொருந்தி வரும் . ஆகவேதான் இவைகளை நிழல் கிரகங்கள் என்று குறிப்பிட்டுள்ளான். இப்பூவுலகில் மனிதனின் மீது சூரியனின் பாதிப்பை அளப்பதற்கு ஒரு அட்டாச்மெண்ட் ராகு. சந்திரனின் சோதிட பாதிப்பை அளப்பதற்ககான ஒரு அட்டாச்மெண்ட் கேது

சோதிடத்தை உருவாக்கியவனுக்குத் தெரியும் சந்திரன் எத்தனை பாகை, சூரியப் பாதையிலிருந்து விலகிச் செல்கிறான் என்று .இதற்கு நாம் ஒரு கலீலியோவாகவோ, கெப்ளராகவோ இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்பதற்கு 5000 வருடங்களுக்கு முன் எழுதிவைத்த இந்தியன் தான் சான்று.

வானியல் எந்த விதத்திலும் பாமரனுக்குப் பயன் பட்டதில்லை பயன்படப் போவதில்லை.பாமரன் வானியல் தெரிந்து வைத்திருப்பதும் சோதிடத்தால் தான் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.ஆகவேதான் வானியல் என்பது சோதிடம் சம்பந்தப்பட்ட விஷயமாகவே வளர்ந்துவிட்டது.

இந்த இடத்தில், வால் முளைத்த பையன்களோ அல்லது ”சுபவீ“க்களோ புத்திசாலித்தனமாக கேட்பதாக நினைத்துக் கொண்டு ஒரு கேள்வி கேட்பார்கள். (அவர்களுக்கு அந்த அளவிற்கு வானியல் தெரிதிருந்தால் சந்தோஷப் படக் கூடிய முதல் ஆள் நானாகத்தான் இருக்கமுடியும். அது வேறு விஷயம்)

”நீங்கள் இதுவரை எழுதியது எல்லாம் ஆங்கிலேயேர்களின் சூரிய மையக் கருத்தை வைத்து எழுதியுள்ளீர்கள். ஆனால் சோதிடம் என்பது பூமி மையக் கருத்தை அடிப்படையாகக் கொண்டது தானே, நீங்கள் கொள்கை திருட்டினால் இடைச் செருகல் செய்து சோதிட வானியலை நியாயப் படுத்தாதீர்கள்.” என்பாரகள். அவர்கள் அனைவருக்கும் சொல்லிக் கொள்கிறேன்.

பூமி மையக் கருத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தால் சோதிடத்தில் பூமியை சூரியனின் சுற்றும் காலம் ஒருநாள் என்றுதான் கணக்கிட்டு இருப்பார்கள். ஆனால் உண்மையில் சூரியனின் சுழற்சிக் காலத்தை ஒரு வருடம் என்று கணக்கிட்டு இருப்பது எதனால்?.
கிரகங்களையோ சூரியனையோ வைத்து அவைகளின் நிலையை சோதிடன் கணக்கிடவில்லை நட்சத்திரங்களை வைத்துத் தான் கணக்கிட்டான். ஆகவே அவனது கணக்கீட்டில் சூரிய மைய சித்தாந்தம் தானாக வந்து மாட்டிக் கொள்ளும் அல்லது காட்டிக் கொள்ளும்.

அக்கால வானியல் என்பது சோதிடத்தை அடிப்படையாக கொண்டதால் பூமிக்கும், பூமியில் வாழும் மனிதனுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப் பட்டதால், பூமி மைய சித்தாந்தம் போல் உணரப் பட்டது.

வானியல் என்பது கம்ப சூத்திர (கம்பு சுழற்றும்)வித்தையல்ல. நாமும் சிறிது அக்கறையுடன் தினசரி பகலிலும் இரவிலும் வானத்தில் சூரிய,சந்திரர்களின் பாதையைப் பார்த்தால் ஒரு வருட முடிவில் சந்திரன் எத்தனை பாகை விலகியுள்ளது என எளிதாகக் கூறிவிடலாம். விவரமானவர்களாக இருந்தால் ஒவ்வொரு பௌர்னமியன்று மட்டும் பார்த்து கூட கணக்கிட்டுவிடலாம்.

அடுத்து ராகு கேதுவும் பூமியை சுற்றிவர எப்படி 18 வருடங்கள் எடுத்துக் கொள்கிறது என்பதற்கான விளக்கப் படத்துடன்............
.................................தொடரும்.

மேலும் படிக்க...!
top