பூமியை வெல்ல ஆயுதம் எதற்கு?

மண்ணின் மீது மனிதனுக்கு ஆசை
மனிதன் மீது மண்ணுக்கு ஆசை
மண்தான் கடைசியில் ஜெயிக்கிறது
இதை மனம்தான் உணர மறுக்கிறது

............கவிஞர் வைரமுத்து.

ஆமாம் மனிதன் உணர மறுக்கிறான், ஏனென்றால் இந்த யுத்தம் மனிதனாக இருக்கும் போது ஆரம்பித்தது அல்ல. ஒரு செல் உயிரிகளாக பூமியில் பரிணமித்த நாளில் ஆரம்பித்தது இந்த ஆக்கிரமிப்பு யுத்தம்.

இது முதலில் சாகா வரத்திற்கான போராட்டமாக ஆரம்பித்து, அதை அடைந்தும் திருப்தி இல்லாததால் பின்னர் பூமிபரப்பின் மீதும், பரப்பின் மீதுள்ள அனைத்து நகரும், நகராப் பொருட்களின் மீதான சர்வ அதிகாரத்திற்கான யுத்தமாக மாறிவிட்டது.

இது தனி மனித போராட்டம் அல்ல. மேலும் கவிஞர் கூறியது போல் மண், ஜெயிப்பதற்கு இது ஒன்றும் கடைசி யுத்தமும் அல்ல. மண்ணின் மீதான யுத்தத்தில் என்றாவது ஒரு நாள் தனது வாரிசுகளால் வென்று விடலாம் என்று மனிதன் தொடர்கிறான்.


ஒரு செல் உயிரியாக இருந்தது முதல், மனிதனாக வளர்ந்த பின்னும் போராடிக் கொண்டிருக்கிறான். இதற்கிடையில் போட்டியில் உடன் வளர்ந்த உயிரினங்களுடன், வெற்றிக்காக தான் எடுத்த, விட்டு வைத்த, அவதாரங்களின் மிச்சங்களும், எச்சங்களும் இப்போராட்டத்தில் நன்பனாகவும், எதிரியாகவும் களத்தில் உள்ளன.

இந்த யுத்தத்தின் போக்கு மனிதனுக்கு சாதகமாக போய்க் கொண்டிருப்பதை உணர மறுத்துவிட்டு அத்தனை உயிரிகளும் தாவரங்களும் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்திக் கொண்டு இருக்கின்றன. இருந்த போதிலும் மனிதன், போராட்டத்திற்கு இடையிலும் தோற்றுப் போன எதிரிகளையும் நன்பர்களையும் வரலாற்று மிச்சங்களாகவும் சான்றுகளாகவும் பாதுகாக்கக் கற்றுக் கொண்டான்.


வரும் தலைமுறைக்கு காட்டுவதற்கு
உலகில் தோன்றியது முதலில் காற்றோட்டம், பின் நீரோட்டம் அதற்கு அடுத்துதான் உயிரோட்டம். அந்த உயிரோட்டத்தின் நிகழ்கால அத்தியாயத்தின் கதாநாயகன் மனிதன் தான். அந்த மனிதனின் பிறப்பிலுள்ள,  இதுவரை யாரும் சொல்லாத ஒரு ரகசியத்தை உங்களுக்குச் சொல்லப் போகிறேன். ஆனால் அதற்கு முன் சிறிது பெளதிகம், வேதியல், உயிரியல், ஆகியவற்றை மேலோட்டமாக தெரிந்து கொண்டால் எனது கருத்துக்களை ஏற்றுக் கொள்வீர்கள். ஆகையால்தான் நான் பயணித்த அதே பாதையில் உங்களையும் அழைத்து செல்ல விழைகிறேன்.


காற்றோட்டம் மட்டும் உள்ளது.
நீரோட்டம் உருவாகிவிட்டது.
ஆண்டவன் ஆற்றலையும் சில விசைகளையும், சில விதிகளையும் ஒரு புள்ளியில் இருந்து வெடிக்கச் செய்து எந்தக் கட்டத்திலும் தலையிடாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறான்.

பிக்பாங்
இதனால்தான் "கடமையைச் செய் பலனை எதிர் பார்க்காதே" என்றான் போலும். ஏனென்றால் "பலன்" என்ற பெயரில் தான் தலையிட வேண்டிய திருக்குமே என்றுதான் அப்படிக் கூறினான் போலும். அவ்வெடிப்புதான் (BIG BANG) எனும் பெரு வெடிப்பாகும். இது எப்படி இருக்கு!. அப்பழுக்கில்லா கடவுள் கொள்கை வந்துவிட்டது. படைப்பு விஷயத்தில் தான் எல்லா மதங்களும் கோட்டை விடுகின்றன. இதில் (தமிழ்நாட்டு) பகுத்தறிவு வாதிகளின் அடுத்த கேள்வி இதுவாகத்தான் இருக்கும்.

ஆண்டவன் இருக்கிறரா? எங்கு இருக்கிறார்? எப்படி இருக்கிறார்? இதற்கு பதிலே ஒரு கேள்வியாகத்தான் அமையும். உங்கள் கற்பனையில் உள்ள ஆண்டவனா? அல்லது என்னுடைய அனுமானத்தில் உள்ள ஆண்டவனா? என்ற வகையில் கேள்வி அமையும்.

ஏனெனில் அவரவர் அறிவுக்கும், கற்பனாசக்திக்கும், தகுதிக்கும் தக்கவாறுதான் கடவுளை நினைத்துக் கொண்டு சமயத்தில் அசட்டுத் தனமாகக் கேள்விகள் கேட்பார்கள். சிலருடைய ஆண்டவன் ரொம்ப எளிமையாக இருப்பார். ஆதலால் மற்றவர்களின் கேள்விகளுக்கு தாக்கு பிடிக்கமாட்டார். ஆனால் என்னுடைய ஆண்டவனின் வரையறை இதுதான் ”ஆதியும் அந்தமும் இல்லாதவர். நீக்கமற நிறைந்திருப்பார். மொத்தத்தில் எந்த வரையறைக்கும் உட்படாதவர்.” இதில் உங்களுடைய கேள்விகள் அனைத்திற்கும் பதில் இருக்கும். உங்களது அடுத்த கேள்வி இதுவாக இருக்கும்.

சரி அவரால் உங்களுக்கு என்ன நன்மை?
அவரை நான் உணர்ந்தது கொண்டதுதான் எனக்கு நன்மை.

உங்களுக்கு நன்மை ஏதும் செய்கிறாரா?
எனக்கு நன்மை செய்ய வேண்டிய அவசியம் அவருக்கு இருக்கலாம் அல்லது இல்லாமல் போகலாம், உத்தரவாதம் ஏது?.

அவரை ஏன் வணங்க வேண்டும்?
யார் சொன்னது வணங்க வேண்டுமென்று.?

எங்கள் கிராமத்தில் ஒருவர் நாய் வளர்த்தார். அவர் வீட்டின் வெளியில்தான் படுப்பார். கிராமங்களில் ஆண்பிள்ளைகளும் வயதானவர்களும் வீட்டிற்கு வெளியே திறந்த வெளி திண்ணையில்தான் படுப்பார்கள். அந்த வகையில் அவர் அருகில் அவர் வளர்க்கும் நாயும் படுத்திருக்கும். ஒருநாள் காலையில் அவர் எழுந்து பார்த்த போது, அவர் அருகில் அவரது நாயும் ஒரு பெரிய நாகப் பாம்பும் இறந்து கிடந்தது. அவைகள் கிடந்த விதத்திலிருந்து அந்த பாம்பும் நாயும் கடுமையான போராட்டத்திற்கு பின்னர் இரண்டும் இறந்திருக்க வேண்டுமென்று தெளிவாக யூகிக்க முடிந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு வெகுநாட்கள் கழித்து நான் கிராமத்திற்கு சென்ற போது அவரது வீட்டின் முன் நாயின் சிலை ஒன்றை வைத்து அவர் வணங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்தேன் அவரைப் பார்த்து ”ஐயா, நாய் உங்களை கும்பிடச் சொல்லியதா?” என்று கேட்க வில்லை. ஏனென்றால் எனக்குத் தெரியும், ஒவ்வொரு மனிதனும் நாய்க்கோ, மனிதனுக்கோ, கடவுளுக்கோ,  நன்றியறிதலை,  தனக்குத் தெரிந்த வகையில் எப்படியாவது கான்பிக்கிறான். அதில் வணக்கமும் ஒரு முறைதான். கருணாநிதியும் வீரமணியும் அடுத்தவர்களிடம் என்னதான் பகுத்தறிவு வாதம் பேசினாலும் கற்சிலைக்கு மாலையிடும் போது பகுத்தறிவை அடகு வைத்து விட்டு அதைத்தான் செய்கிறார்கள்.

சமீபத்தில் நீயா நானா நிகழ்ச்சியில் சில ஐ.டி இளைஞர்கள் ரொம்பத் இறுமாப்புடன் பேசிக் கொண்டிருந்தார்கள். நாங்கள் தாய் தகப்பனுக்கோ மற்ற யாருக்கும் கீழ்படிதலுடன் கூடிய மரியாதை செலுத்த வேண்டிய அவசியமில்லை என்று கூறினார்கள். ஆனால் கடைசியில் கோபிநாத் “அப்படி மரியாதை செலுத்த வேண்டிய சூழ்நிலை வந்தால் யாருக்கு செய்வீர்கள்” என்று கேட்டதற்கு தங்களுக்கு தாங்கள் செய்து கொண்டிருக்கும் அந்த வேலை கிடைக்க காரணமாயிருந்த நபர்களுக்கு மட்டும் மரியாதை செய்வார்களாம். நன்றியறிதலைக் காட்டுவதில். அரசியல் வாதிகளை விட கேவலமாக இருப்பதை ஒத்துக் கொள்கிறார்கள்

எனது புரியாத கேள்விகளுக்கு அவன் தீர்வாக இருக்கிறான். கணக்கில் தெரியாத மதிப்பிற்கு X எனக் கொள்வதில்லையா அது போல் எனக்கு X ஆக இருந்து தீர்வுகளைத் தருகிறான். ஆகவே தற்போது அவனை X ஆக கொள்(கிறேன்)வோம். எடுத்துக் கொண்ட விஷயத்தை விட்டு விலகிச் சொல்வது போல் தெரிவதால் மீண்டும் விஷயத்திற்கு வருவோம்.

உயிருக்கும், அண்டத்திற்கும் தோற்றம் உண்டு என்பது அறிவியலின் உறுதிப்பாடு. அண்டத்தின் தோற்றம் பற்றி விளக்குவது பெருவெடிப்பு (BigBang) கொள்கை.

                          BigBang
உயிரின் தோற்றம் பற்றி விளக்குவது டார்வினின் பரிணாமக் (Evolution) கொள்கை.

பெரு வெடிப்பு கொள்கை ஒத்துக் கொள்ளப்பட்டதா? ஆம் ஐன்ஸ்டீன், டீசிட்டர், எட்வின் கப்பிள், ஜார்ஜ் லாமாய்ட்ர் போன்ற அறிவியல் அறிஞர்களால் விரியும் அண்டமா? அல்லது நிலையான அண்டமா? என்ற இருபது வருட வாதப் போராட்டத்திற்கு பின் விரியும் அண்டம் தான் என நிரூபிக்கபட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது. அண்டத்திலுள்ள காலக்ஸிகள், நெபுலாக்கள், சூப்பர் நோவாக்கள், கருந்துளைகள், (Black Holes) நட்சத்திரங்கள், நட்சத்திர மண்டலங்கள், (சூரியமண்டலம்) ஆகியவை அனைத்தும் பொதுவான ஒரு மையத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட வேகத்தில் விலகிச் செல்வது பலவகைகளில் நிரூபிக்கப் பட்டுள்ளது.

ஒரு பலூனை ஊதும் போது அது எவ்வாறு மையத்தை விட்டு விலகிச் சென்று விரிவடைந்து கொண்டிருக்கிறதோ அது போன்று அண்டம் விரிவதை (3D) முப்பரிமானத்தில் யோசித்துக் கொள்ளுங்கள். தூரத்திலுள்ளவை அதி வேகமாகவும் அருகிலுள்ளவை குறைவான வேகத்திலும் விலகிச் செல்கின்றன.

ஆகவே வெடிப்பு ஒரு மையத்தில் தான் ஏற்பட்டது என்பது வெளிப்படையான உன்மை. சரி வெடிப்பு எப்பொழுது ஏற்பட்டது? அதையும் எளிதாக சிறிய கணக்கீட்டின் மூலம் கண்டுபிடித்து விடலாம். எப்படி என்றால் அவை விலகிச் செல்லும் வேகத்தை இன்றைய வானியல் கருவிகளின் மூலம் எளிதாக கண்டுபிடிக்கலாம். வேகத்தின் மூலம் தூரத்தை அளவிடலாம் என்பது பாலபாடம் நாம் இன்று மையத்திலிருந்து எவ்வளவு தூரம் விலகி வந்துள்ளோம் என்பதையும் கண்டுபிடிக்கலாம். இவற்றை வைத்து பெருவெடிப்பு ஏற்பட்டதிலிருந்து என்ன நடந்தது என்பதை தோராயமாக கூறி விட்டனர். ஆனாலும் முதல் மூன்று வினாடிகள் என்ன நடந்தது எனச் சொல்லுவதற்கு விஞ்ஞானம் தினறுகிறது. அதைக் கண்டு பிடித்து விட்டால் இப்பிரபஞ்சத்தின் சூட்சும முடிச்சு அவிழ்ந்துவிடும்.

இது எப்படி இருக்குது என்றால் துப்பாக்கியிலிருந்து வெடிச் சத்தத்துடன் குண்டு வெளி வருவது தெரிகிறது, ஆனால் அதற்கு முன் துப்பாக்கியின் சேம்பரில் என்ன நடந்தது என்பது தெரியாது. துப்பாக்கியின் சேம்பரில் ட்ரிக்கர் பட்டவுடன் வெடிமருந்து பற்றிக் கொண்டு வெடித்து குண்டை வேகத்துடன் வெளியேற்றுகிறது. அது போல் இந்த பெருவெடிப்பில் எது ட்ரிக்கர்? யார் அழுத்தியது? எவ்வாறு பற்றியது? என்ற சமாச்சாரங்கள் தான் இன்றைய இயற்பியலரின் தலையாய பிரச்னை.

துப்பாக்கியில் இருந்து குண்டு வெளியேறுகிறது.

அதற்காகத்தான் Large Hadron Collidor என்னும் அதிவேகத் துகள் முடுக்கியும் அதற்கான பரிசோதனைச் சாலையும் சுவிட்ஜர்லாந்தில் உள்ள செர்ன் என்னுமிடத்தில் துவக்கப் பட்டுள்ளது. அது ஆரம்பித்த உடனே தகராறு செய்துவிட்டது. அது ஒரு தனிக்கதை. தற்போதைய அவர்களது முடிவுகள், (Neutrino,Muon,Kuon,Tau) நியூட்ரினோ, முயுவான், குயான் போன்ற சில துகள்கள் பற்றிய சில கொள்கைகளை உறுதி படுத்தியுள்ளது. இன்னும் அந்த அதிவேகத் துகள் முடுக்கியின் வேகம் முடுக்கப் பட வேண்டியதிருக்கிறது. அதன் பின்தான் மிகவும் எதிர்பார்த்த பல கேள்விகளுக்குப் பதில் கிடைக்கும்.

வெடிப்புக்கு பின் தான் அண்டத்தில் வெளியும், காலமும் (Space, Matter & Time) உருவானது, உடனே காலம் இயங்கத் தொடங்கி விட்டது.

என்னது வெளி (Space) உருவானதா? வெளி எதற்குள் உருவானது?,

ஆமாம் வெளி உருவானது அதற்கு முன் திசையற்ற ஒருமைப் (Singularity) புள்ளிதான் இருந்தது.

ஒருமைப் புள்ளி என்றால் என்ன? அது எதனுள் இருந்தது?

ஒருமைப் புள்ளி மட்டும்தான் இருந்தது, ஆளை விடுங்க.

சரி காலம் இயங்கத் தொடங்கியதா? அப்படி என்றால் அது வரை காலம் உறங்கியதா?

காலம் உறங்கவில்லை, காலமே அப்பொழுதான் உருவானதாம்.

எடுத்தவுடனே இத்தனை குழப்பமா?, ஆமாம் இவைகளுக்கு எல்லாம் எடுத்துக் காட்டு சொல்ல முடியாத ஒற்றை நிகழ்வுகளாக இருப்பதால் விளக்கிச் சொல்ல முடியவில்லை. இவைகளெல்லாம் கணக்கீடுகளின் படிதான் விளக்க முடியும். ஏனெனில் கணக்கீட்டின்படி எல்லாம் ஒத்துப் போகிறது. ஆனாலும் இவையெல்லாம் நமது அன்றாட அறிவின் கற்பனைத் திறனுக்கு அப்பாற்பட்டதுதான்.

எப்பொழுதும் காலத்திற்கு உள்ளேதான் வரலாறு இருக்கும். இப்பொழுது காலத்திற்கே வரலாறா? முரண்பாடாகத் தெரிந்தாலும் இப்பொழுது ஏற்றுக் கொள்ளுங்கள் வேறு வழியில்லை. பிற்காலத்தில் இன்னும் புரியுமாறு விளக்கங்கள் வரலாம்.

காலத்தைப் பற்றி ஸ்டீபன் ஹாக்கின்ஸ் ”காலத்தின் சுருக்கமான வரலாறு” (Brief History of Time) எனும் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். உலகில் அதிக எண்ணிக்கையில் விற்கப்பட்ட அறிவியல் புத்தகங்களில் அதுவும் ஒன்று. நானும் படித்தேன், படிக்கும் பொழுது கணக்கின்படி புரிகிறது ஆனால் விளக்கிச் சொல்லும் அளவுக்கு புரியவில்லை. முடிந்தால் அதைப் படித்து புரிந்து கொள்ளுங்கள். புரிந்து கொண்டவர்கள் தமிழில் (பிளாக்) எழுதி தமிழுக்குப் பெருமை சேருங்கள்.

ஆற்றல், விதிகள், விசைகள், இவைகளின் கலப்பினால் பெருவெடிப்புக்கு பின் நிகழ்வுகள் ஒன்றுக்குகொன்று சம்பந்தபட்டு தொடர் வினையாக (Chain reaction) நிகழ்ந்து கொண்டு இருப்பதால் ஒவ்வொன்றுக்கும் அணு அளவேணும் தொடர்பிருக்க வேண்டும் (Chaos theory). இதில் சில முக்கியமான நிகழ்வுகள் மட்டும் ஏதோ ஒரு விதத்தில் நமக்கு தெரியும் வகையில் பதிவு செய்யப்படுகிறது. அல்லது அந்த பதிவுகளின் சூட்சுமம் மட்டும் நமக்குப் புரிகிறது. இங்கு கமலின் தசாவதாரம் நினைவுக்கு வந்தால் நீங்களும் இது விஷயம் பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறீர்கள் என அர்த்தம்.

இடைவிடாத இந்த வினையின் வேகம் ஒரே சீராக இல்லாமல் தாறுமாறாக இருக்கிறது. இதிலுள்ள சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டால் அண்டத்தின் நிகழ்வுகள் அத்தனைக்கும் அதுவே காரணமாகிவிடும். அதை நான் கண்டு பிடிக்காமல் விட மாட்டேன் என்று இருபத்திரண்டு வயதில் மரணத்தை சந்திக்க வேண்டியவர் கடந்த 37 வருடங்களாக மரணத்தை தள்ளி போட்டுக் கொண்டே வருகிறார். அவரது உதவிக்கு, உலகின் கம்ப்யூட்டர் ஜாம்பவான்களாகிய மைக்ரோசாப்ட்டும், இண்டெல்லும் இணைந்து அவருடைய மெளனமான சைகளை மொழியாக மாற்றி, அவர் கூறும் கருத்துகளை உலகுக்கு அளிக்கத் தேவையான கருவிகளை செய்து கொடுத்துள்ளனர். வாய் பேச முடியாமல், எழுதமுடியாமல், நடமாட முடியாமல் அதி நவீன கண்டு பிடிப்புகளின் உதவியால் கருத்துக்களை மட்டும் பரிமாறிக் கொண்டிருக்கும் ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் என்னும் முதன்மை அறிவியலார் ”காலத்தோடு” அறிவாலும், உடம்பாலும், பலவழிகளில் இன்னும் போராடிக் கொண்டிருக்கிறார். என்னுடைய முயற்சியும் அந்த சூட்சுமத்தை கண்டு பிடிப்பதுதான். படித்து முடித்த பின் நீங்களும் முயற்சி செய்யுங்கள்.ஒரு வேளை எல்லாவற்றிற்கும் முற்றிலும் மாறான ஒரு கருத்தை நீங்கள் வைக்கலாம். பொறிதட்டினால் நீங்களும் ஐன்ஸ்டீன் தான்.

இவர் மட்டும் சராசரி மனிதராக இருந்திருந்தால்?
ஒரு வேளை இயற்கை தனது ரகசியங்களை கூற முற்படுவோரை கண்மூடித்தனமாக தாக்குகிறதோ என்று கூடத் தோன்றுகிறது. அதுவும் தியரி ஆப் ரிலேட்டிவிட்டியை கையில் எடுத்துக் கொண்டதோ என சந்தேகமாக இருக்கிறது. இங்கே வயதும் ஞானமும் ஒன்றை ஒன்று சார்ந்துள்ளதோ என்பது போல் ஒன்று கூடினால் மற்றொன்று குறையும் என்பது போல் தோன்றுகிறது. தொலைபேசிக்கு வித்திட்ட கிரகாம் பெல்லின் வாரிசுகள் செவிடர்களாம். அறிவு ஜீவிகள் சிறிய வயதிலேயே காலமாகி விடுகின்றனர் என்பதற்கு ராமானுஜம், பாரதியார், விவேகானந்தர், ஏசுகிறிஸ்து ஆகியோரை உதாரணமாக கொள்ளலாம். இவர்களெல்லாம் ஏதோ ஒரு ரகசியத்தை சொல்லுவதற்கு முன்பே இயற்கை சதி செய்து விட்டது போலும். ஐன்ஸ்டீன் பற்றி நீங்கள் கேட்பது தெரிகிறது, அவர் என்ன சொல்ல வந்தார் என்று இயற்கைக்கே புரியவில்லை போலும்! அதனால் தான் அவரை பழிவாங்காமல் விட்டு விட்டது. ஐன்ஸ்டீன் சொன்னதை ஸ்டீபன் ஹாக்கின்ஸ் ஏற்றுக் கொண்டார். எளிய நடையில் எல்லோருக்கும் (இயற்கைக்கும்) புரியும்படி விளக்கியது தான் அவரது தவறோ ?.  ஒருவேளை ஹாக்கின்ஸ் ஒரு சராசரி மனிதராக இருந்திருந்தால் இன்றுள்ள பல குழப்பங்களுக்கு தீர்வு கிடைத்திருக்குமோ?.

வெடிப்பினால், தோன்றிய முதல் முழுப் பொருளாக ஹைட்ரஜன் என்னும் வாயு தான் எங்கும் இருந்தது. பின்னர் வெப்பத்தினாலும் சேர்க்கையினாலும் ஹைட்ரஜன் மூலம் ஏற்பட்ட பொருட்கள் பல வகைப்பட்டன. பின்னர் சேர்க்கையினாலும், பல வகை விசைகளினாலும் காலக்ஸிகள், நெபுலாக்கள், சூப்பர் நோவாக்கள், கருந்துளைகள்,(Black Holes) நட்சத்திரங்கள், கிரகங்கள், தனிமங்கள், கூட்டுப் பொருட்கள் உருவாயின.

நடுவில் புரோட்டான், வட்டப் பாதையில் எலக்ட்ரான் உள்ள ஹைட்ரஜன் அணு

மனிதன் பொருட்களை மூலப்பொருட்கள் (தனிமங்கள்), கூட்டுப் பொருட்கள் என்று எப்பொழுது பிரித்து அறிந்தானோ அப்பொழுதே பொருட்களைப் பற்றிய அறிவு வேகமெடுக்கத் தொடங்கியது.
கூட்டுப் பொருட்கள், தனிமங்கள், என்றால் என்ன? இங்கு கூறப்போகும் உதாரனம் விஷயத்தை புரிந்து கொள்வதற்கானது. இது சாதாரண கண்களைப் பொறுத்த வரைதான் சரியாக இருக்கும். உதாரணமாக பென்சில் என்பது கூட்டுப்பொருள், அதைப் பிரித்து ஆராய்ந்தால் அதில் இரண்டு பொருட்கள் உள்ளன. ஒன்று கரித்தண்டு, மற்றது மர உருளை. மரத்தை மேலும் பிரிக்க முடியாது பிரித்தால் மரம் தான் மிஞ்சும். கரியை பிரித்தாலும் அதே நிலைதான். ஆகவே பிரித்தால் வேற்றுமை இல்லாமலும் தன்மை மாறாமலும் இருப்பது தான் மூலப்பொருளாகிய தனிமம். ஆக பென்சிலுக்கு மூலப்பொருளாக இருப்பவை கரியும், மரமும் தான். (ஆனால் மர உருளையை வேதியல் முறைப்படி ஆராய்ந்தால் அது ஐந்துக்கும் மேற்ப்பட்ட தனிமங்களால் ஆனது. அது போன்று கரித்தண்டில் கரி மற்றும் பசைப் பொருட்கள் உள்ளது).

நீர் ஒரே பொருளால் ஆனது போல் தோன்றினாலும் வேதியல் முறையில் பார்த்தால் அது ஹைட்ரஜன், ஆக்ஸிசன் எனும் இரண்டு தனிமங்களால் ஆனது.

சமையல் உப்பை நீங்கள் சாதாரண முறையில் எவ்வளவுதான் பிரித்தாலும் கடைசி துகள் வரை உப்பாகத்தான் இருக்கும், ஆனால் வேதியல் முறையில் பிரித்தால் சோடியம், குளோரின் என்னும் இரு தனிமங்களால் ஆனது எனத் தெரிய வரும். ஆகவே நீர், சமையல் உப்பு இவை இரண்டும் (Compounds) கூட்டுப் பொருட்கள். ஹைட்ரஜன், ஆக்ஸிசன், சோடியம், குளோரின் ஆகியவை அவைகளின் மூலப் பொருட்கள்.

உப்பு நீரில் கரைந்திருக்கும் போது
சமையல் உப்பின் படிக அமைப்பு.
பொருட்களை ஆராய்ந்த வேதியல் அறிவியலார்கள் அண்டத்திலுள்ள பொருட்கள் அனைத்தும் 92 (மூலப் பொருட்களால்) தனிமங்களால் தான் உருவாகியது என்று அறுதியிட்டுக் கூறிவிட்டனர். அதிலும் சில முக்கியமான ஒன்பது தனிமங்களின் கலப்பினால் தான் பூமியிலுள்ள 99 சதவீதப் பொருட்கள் உருவாகியுள்ளன. அந்த ஒன்பது தனிமங்களும், அவை பூமியில் உள்ள விகிதாச்சாரமும் இவைதான்,

இரும்பு 35.0%
ஆக்ஸிசன் 28.0%
மக்னீசியம் 17.0%
ஸிலிக்கான் 13.0%
நிக்கல் 2.7%
சல்பர் 2.7%
அலுமினியம் 0.6%
கால்சியம் 0.4%
மற்றவை 0.6%

மற்றவை என்றால், மீதமுள்ள கார்பன், ஹைட்ரஜன், நைட்ரஜன், சோடியம், பொட்டாசியம், குளோரின் மற்றும் எஞ்சியுள்ளவை அனைத்தும் சேர்ந்து 1% க்கும் குறைவுதான்


மேலும் படிக்க...!
சாப்பிட்டவுடன் ஏன் தூங்க வேண்டும் அல்லது ஓய்வு எடுக்க வேண்டும்?

சாப்பிட்டவுடன் சிறிது நேரம் தூங்க வேண்டும் அல்லது ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். 40 வய்துக்கு மேலானவர்கள் கண்டிப்பாக ஓய்வு எடுக்க வேண்டும். ஏனென்றால் சாப்பிட்டவுடன் இரைப்பை மற்றும் குடல் முழுவீச்சில் செயல் படுகிறது. அது அவ்வாறு வேலை செய்வதற்கு இதயமும் முழுவீச்சில் செயல் படவேண்டும். இவ்வாறு இதயம்100% இரைப்பைக்காக வேலை செய்வதால் அதற்கு எந்த அதிகப்படியான வேலை எதுவும் கொடுக்கக்கூடாது என்பதால் மூளை தூக்கத்தை வரவழைக்கிறது.

அதையும் மீறி சிலர் அதிக உடல் உழைப்பு செய்வார்கள் எனில் சிலசமயங்களில் மாரடைப்பு ஏற்படும். சாப்பிடுவது, குளிப்பது ஆகியவை இருதயத்திற்கு அதிகப் படியான வேலை கொடுக்க கூடிய விஷயங்கள்.குளிர்ந்த நீரில் குளிக்கும் போது நமது உடம்பின் மேற்பரப்பு முழுவதும் வெப்பநிலையை சரி செய்ய அதிக இரத்த ஓட்டம் தேவைப் படுகிறது.ஆகவே இருதயம் அதிக வேலை செய்கிறது. அதனால்தான் சாப்பிட்டவுடன் குளிக்ககூடாது என்பார்கள். குளித்தவுடன் சாப்பிடலாம் ஆனால் சாப்பிட்டு விட்டு குளிக்ககூடாது இருதயம் பலவீனமானவர்களுக்கு மரணத்தை கூட ஏற்படுத்தி விடும்.

ஆகவே சாப்பாட்டுக்குபின் 2 மணிநேரம் ஓய்வு தேவை.


மேலும் படிக்க...!

இறவாமை ( IMMORTALITY). பாகம் 3

இறவாமை ( IMMORTALITY). பாகம் 1
இறவாமை ( IMMORTALITY). பாகம் 2


சைவமா அசைவமா?

நீண்ட ஆயுளுக்கும் உணவுப் பழக்கத்திற்கும் சம்பந்தம் உண்டுதான் என்றாலும் அசைவ உயிரினங்கள்தான் நீண்ட ஆயுளுடன் திரிகின்றன என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.உதாரணம் ஆமை, சுறா, திமிங்கலம், மனிதன்.



உயிரா? உயிர்களா?

மனிதன் உடம்பிலிருந்து உயிர் பிரிந்துவிட்டதாக நாம் ஒருமையில் சொல்கிறோம். உன்மையில் உயிர் ஒருமையா பன்மையா? ஒருமை போல் தோன்றினாலும் உன்மையில் பல கோடி செல்களின் கூட்டமைப்பு (colony) வாழ்க்கை முறைதான் மனிதன்.

அமெரிக்காவுக்கு வயது 400 வருடங்களென்று சொன்னால் பூகோள அமைப்பிற்கா? அல்லது மக்களுக்கா? அமெரிக்கா என்றால் அதன் வரையறுக்கப் பட்ட நிலப் பரப்பும் மக்களும் சேர்ந்துதான். அங்கு வாழும் மக்கள் யாரும் 120 வயதுக்கு மேல் வாழ்ந்தவர் இல்லை ஆனாலும் அமெரிக்காவின் வய்து 400 என்கிறோம். மக்கள் மட்டும்தான் புதுப்பிக்கப் படுகிறார்கள்.ஒவ்வொரு தனி நபரும், ஊர் மக்களும் சில அமைப்புகளும் சேர்ந்ததுதான் நாடு. பொருளாதார மையம், ராணுவ மையம், அதிகார மையம்,இருப்பது போல் மூளை, இருதயம், நுரையீரல் உள்ளது. நாட்டுக்கு வயது 400 என்றால், மக்கள் அதிகபட்சமாக 16 தலை முறையாக (புதுப்பிக்கப் பட்டிருக்கிறார்கள்) வாழ்கிறார்கள்.

தேசத்தில் மக்கள் புதுப்பிக்கப் படுவது போல் தேகத்தில் செல்கள் புதுபிக்கப்பட்டு தேகத்திற்கு ஆயுள் நீட்டிக்கப்படுகிறது. நமது உடம்பிலுள்ள செல்களின் ஆயுளோ மிக மிக அற்பம். எலும்பு, நகம், தோல், முடி, தசை, பல், மூளை, நரம்பு, இரத்தம், குடல் ஆகிய அனைத்து செல்களும் புதுப்பிக்கப் படுகிறது. செல்களின் ஆயுள் ஒரு மணித்துளியிலிருந்து இருந்து அதிகபட்சமாக 15 வருடம் வரை இருக்கிறது. இவ்வளவு அற்ப ஆயுள் கொண்ட செல்கள் இறந்த பின்பு புதிய செல்கள் தோன்றி, உயிரை நிலைப் படுத்துகிறது. இதனால் தான் ”நான்” என்ற அகம்பாவம் கொள்ளாதே என்கிறார்கள். ஏனென்றால் இன்றிருக்கும் ”நான்” நாளை இருப்பதில்லை.

மூளையின் சில செல்கள் மட்டும்தான் நமது பிறப்பிலிருந்து உடன் இருப்பவை.கண் பார்வைக்கான மூளை செல்களும் அவ்வாறே. மற்றவை எல்லாம் 'புதுசு கண்ணா புதுசு'.


சிறுமூளை ”உங்களை” விட இளமையானது.

தசைச்செல்களுக்கு பதினைந்து வயதுதான் ஆகிறது.

குடல் மேற்பரப்பு செல்கள் 5 நாட்கள் தான் ஆகிறது.

குடல் செல்கள் 15 வயதானவை

தோலின் வயது 14 நாட்கள்தான்.

இரத்தச்சிவப்பு அணுக்கள் 120 நாட்களுக்குட்பட்டவை தான்

எலும்பு செல்கள் 10 வயதானவை.

ஒரு மனிதன் தன் வாழ்நாளில் சராசரியாக 20 கிலோ தோல் செல்களை மாற்றுகிறானாம். தனது குடலில் தினசரி 20 கிராம் உள்ள குடல் செல்களை தானே ஜீரணிக்கிறானாம். பசியோடு (விரதம்) இருந்தால் இன்னும் அதிகமாகும். ஆகவே சுத்தமான சைவர் என யாரும் இருக்க முடியாது. புதிய இரத்த செல்கள் உற்பத்தியாக வில்லை என்றால் மூன்று மாதங்களில் மரணம் நிச்சயம்.

இப்பொழுதான் அந்த மில்லியன் டாலர் கேள்வி எழும்புகிறது.

புதுப்பித்தல் என்று ஆன பின்பு தொடர்ந்து புதுபிக்க வேண்டியது தானே? அதற்கு ஏன் காலக்கெடு?. ஏன் குறிப்பிட்ட வயதுக்கு மேல் புதுப்பிக்க மறுக்கிறது?.

சேர்ந்து விட்ட குப்பைகள்.

இதற்கு பலவிதமான பதில்கள் வைக்கப் படுகிறது. நமது வாழ்நாளில் நாம் அன்றாடம் உபயோகப்படுத்தும் காற்று, நீர், உணவு இவற்றில் உள்ள ஆர்செனிக், ஆண்டிமனி, ஈயம், பாதரசம், ஆகியவை நமது உடம்பில் சென்று குப்பையாக சேர்ந்து நச்சுப் பொருளாக மாறி அதன் அளவு கூடும் போது அவை குறிப்பிட்ட செல்களின் புதுப்பிக்கும் தன்மையை மாற்றுகின்றன. அல்லது குறிப்பிட்ட உறுப்புகளை சேதப் படுத்துகின்றன என்பது ஒரு பதிலாக இருக்கிறது என ஏற்கனவே பார்த்தோம்.

மற்றொன்று ஜெனிட்டிக்ஸ் கடிகாரங்கள் (Timers).

ஒவ்வொரு உறுப்பும் புரோக்கிராம் செய்யப் பட்ட கடிகாரங்களுடன்தான் நமது உடம்பில் அமைக்கப் பட்டுள்ளன. பிறந்தவுடன் நாம் எப்பொழுது தவழ வேண்டும், எப்பொழுது நடக்க வேண்டும், பற்கள் முளைப்பது, விழுவது, மீசை வளர்வது, முடி வளர்வது, உதிர்வது, உறுப்புக்கள் (மார்பு, பால் உறுப்புகள்) வளர்வது, வயதுக்கு வருவது எவ்வெப்போது என தீர்மானிப்பது நமது உடலில் உள்ள கடிகாரங்கள் தான். அவைகள்தான் செல்களின் புதுப்பித்தலையும் தீர்மானிக்கின்றது. அவைகள்தான் நமது வயதையும் தீர்மானிக்கின்றது. அந்த கடிகாரங்களை திருப்பி வைக்க முடிந்தால், அல்லது அந்த கடிகாரங்களின் புரோக்கிராம்களின் கட்டளை வரிகளை திருத்த முடிந்தால் அதுதான் இறவாமையின் திறவு கோல் ஆகிவிடும்.

ஜெனிட்டிக்ஸ்

ஜெனிட்டிக்ஸ் ஆராய்ச்சியின்படி ஜீன்களின் சில குறிப்பிட்ட பகுதிகள் திருத்தி அமைக்கப் பட்டதால் ஈஸ்ட், மற்றும் எலிகளின் ஆயுள் நீட்டிப்பது கண்டறியப் பட்டுள்ளது. ஆனாலும் 30 % ஆயுள் மட்டும்தான் ஒரு சில ஜீன்களால் கூட்டவோ, குறைக்கவோ முடியும் எனத் தெரிகிறது.. அந்த ஜீன்கள் முறையே

1)Longevity Genes, ஆயுளை அதிகரிக்கும் ஜீன்கள்,

2)Cell Senescence, செல்களின் தேய்மானம்,

3)Telomeres, டி.என்.ஏ அமைப்பில் உள்ள ஒருவித செல்களாகிய டெலிமியர்ஸ் புதுப்பித்தலின் போது குறைபாடு அடைதல்.

4)Stem Cells: ஸ்டெம் செல்கள் இவைகள் தான் ஆதாரமான செல்கள் இவைகள் தேவைப் படும் பொழுது தேவைப் படும் உறுப்புக்களின் செல்களாக மாறி, சரி செய்யும் இயல்பு கொண்டவை.

மேற்கண்ட ஜீன்களில் தேவைக்கேற்ற மாற்றம் செய்யப் பட்டால் 30% ஆயுளை அதிகரிக்கலாம்.

ஆராய்ச்சியாளர்கள் என்ன சொல்கிறார்கள்?.

டெலமியர் கொள்கை

டெலமியர் என்பது குரோமோசம் செல்களின் கடைப் பகுதியில் உள்ள ஒரு பகுதி. அந்தப் பகுதி அடுத்தடுத்து ஏற்படும் செல் பகுப்பின் போது குறைவு ஏற்பட்டுவிடுகிறது என நிரூபிக்கப் பட்டுள்ளது. இப்படி குறைவு பட்ட டெலமியர்கள் செல் புதுபித்தலை  நாளடைவில்  தடைசெய்கின்றன என்றும் அறியப் பட்டது.



அவ்வாறு எந்த வித சேதாரமின்றி டெலமியர் பகுபடும் போது   இறவாமைக்கு உத்தரவாதம் என்கிறார்கள்.அதற்கான கானொளி இத்தளத்தில் உள்ளது. http://www.smithsonianchannel.com/sc/web/show/137613/decoding-immortality

இனவிருத்திக்கான ஹார்மோன்களின் சுரப்புத்தான், செல் புதுப்பித்தலை கட்டுப் படுத்துகிறது.அங்குதான் இருக்கிறது சூட்சுமம்.இதைப் பற்றி பின்னர் பார்ப்போம்.
நமது உடம்பின் நோய் எதிர்ப்பு தன்மை மிகவும் நுட்பமானது. நமது உடம்பில் அன்னிய செல்களை எளிதில் அடையாளம் கண்டு உடனடியாக அவற்றை அழிப்பதற்கு களத்தில் இறங்கி விடும். இந்தத் தன்மைதான் உறுப்பு மாற்றத்தின் போது மாற்று உறுப்பை ஏற்க மறுக்கிறது. ஆகவே அதை தற்காலிகமாக செயலிழக்கச் செய்ய ஒரு மருந்து உள்ளது. அந்த மருந்தாகிய ரேபமைசின் எலிகளின் ஆயுளை 38% அதிகரிப்பது தற்செயலாக கண்டுபிடிக்கப் பட்டது. இம் மருந்தை தேவாமிர்தத்திற்கு இணையானதாக கருதுகிறார்கள். அநேகமாக இதன் தன்மையையும் செயல்படும் விதத்தையும் பார்த்தால் இது வயதானவர்களுக்கு மட்டும் தான் சரிவரும். அது எப்படி என்று பார்ப் போம்.

ஆர்த்திரிட்டீஸ் பற்றி கேள்விப் பட்டிருப்பீர்கள்.
இரத்தம் உடலெங்கும் பாயும் போது எலும்பு மூட்டுக்களின் மேலுள்ள ஜவ்வுகளின் வழியாகவும் செல்கிறது. அவ்வாறு செல்லும் போது வயதானவர்களின் தேய்வுற்ற எலும்புத்துகள்கள் இரத்தத்தில் கலந்து செல்கிறது. இந்த தேய்மானம் அதிகமாகி எலும்புத்துகள் இரத்தத்தில் அதிகமாகிச் செல்லும் போது நமது உடம்பிலுள்ள செக் போஸ்ட்களில் அதாவது பாதுகாப்பு மையங்களில் (immune centres) இந்த செல்களின் I.D proof கேட்கப்படும் பொழுது இந்த செல்களின் அதீதமான எண்ணிக்கையினால் ஏதோ ஒரு வகையில் இந்த துகள்கள் எதிரியாக முத்திரை குத்தப் படுகிறார்கள்.(autoimmune disorder)




உடனே எதிரிகளை அழிப்பதற்கான முயற்சியில் இறங்கி அதிரடிப் படையான ராணுவத்தை ( Antigen) இரத்தத்தில் கலந்து, எலும்புத்துகள்களின் அடையாளத்தைக் கொடுத்து, அழிக்குமாறு மூளையினால் கட்டளை இடப்படுகிறது. ஆண்டிஜன் இரத்தத்தில் கலந்து துகள்களை அழிப்பதோடல்லாமல் அவை உற்பத்தியாகும் இடமாகிய மூட்டுக்களில் உள்ள அதே அடையாளம் கொண்ட, அப்பொழுதான் உருவாகிய நல்ல செல்களையும் எதிரியாக கருதி அழிக்கத் தொடங்கும் போதுதான் நமக்கு மூட்டுகளில் வீக்கமும் வலியும் ஏற்படுகிறது.



ராணுவம் தன் நாட்டு மக்களையே தாக்குவது போலாகும் இந்தச் செயல். (இதற்குத்தான் பெரியவர்கள் இரவு நேரங்களில் பிள்ளைகளை வெளியே சுற்றதீர்கள் என்கிறார்கள் ஏனென்றால் உண்மையான I.D proof கொடுத்து வந்துவிட்டாலும் அதிலுள்ள அட்ரஸினால் குடும்பத்துக்கு ஆபத்து). இதற்கு ஒரே வழி ராணுவத்தையே செயலிழக்கச் செய்வதுதான். அலர்ஜியும் கிட்டதட்ட இந்த வகைதான். இந்த நேரத்தில் தான் நமது உடம்பிலுள்ள நோய் எதிர்ப்புத் தன்மையை ஒடுக்க மருந்துகள் கொடுக்கப் படுகின்றன. வயதான காலத்தில் நமது உடம்பில் இந்தமாதிரியான I.D proof பிரச்சினை அதிகம் ஏற்படும் போல் இருக்கிறது. அதனால்தான் ரேப்மைசின் வயதானவர்களுக்கு மட்டும் சரிவரும் என்கிறேன். எப்படியோ இந்த மருந்து எதிர் மறையாய் செயல்பட்டாலும் வயதானவர்களுக்கு மட்டும் பத்திரமாக இருக்கும் வரை நல்ல பலனைக் கொடுக்கிறது.

குழந்தைப் பருவத்தில் இருந்து இனவிருத்திக்கான வயதை எட்டும் வரை உடலில் விரைவான மாற்றத்தையும் அபாரமான வளர்ச்சியையும் ஏற்படுத்திய ஹார்மோன்கள் அதன் பின்னர் உடலின் வளர்ச்சியில் அக்கறை காட்டாமல் இன விருத்திக்கு தேவையான தகுதிகளை மட்டும் தக்க வைத்துக் கொள்கிறது. இதனால்தான் நமது மூளை, செல் தேய்மானம் பற்றியோ, உடல் வளர்ச்சி பற்றியோ ஓரளவுக்குத்தான் கவலைப்படுகிறது போலும்.

ஆராயப்பட்ட பொருட்கள் மற்றும் மருந்துகள்

ஒரு வகை சிவப்பு திராட்சையில் காணப் படும் ரெஸ்வரட்ரால் என்னும் பொருள், புழுக்கள், ஈக்கள், ஈஸ்ட் ஆகியவற்றின் ஆயுளை முறையே 30 லிருந்து 60% அதிகப் படுத்தியதை அறிந்துள்ளார்கள். ஆகவே அளவாக ஒயின் சாப்பிடுங்கள். இதுவும் வயதானவர்களுக்கு சிறப்பாக செயல் படுகிறதாம்.




2002ல் அது போல் அசிட்டைல்-எல்-கார்னிட்டைன் மற்றும் ஆல்பா-லிப்போயிக் ஆசிட் ஆகியவற்றின் கலவை வயதான எலிகளுக்கு கொடுக்கப் பட்ட பொழுது அவைகளின் இளமை ஆட்டமாகிய ”மாக்ரீனோ”வை தாங்க முடியவில்லையாம். இந்த மருந்துகள் மனிதனுக்கு கொடுக்ககூடியவை என்ற அந்தஸ்து பெற்றவை. ஆகவே அதைக் கண்டுபிடித்த புரூஸ் ஆம்ஸ் அந்த மருந்தை தயாரிக்க காப்புரிமை பெற்று ஜுவனன் என்ற கம்பெனியையும் ஆரம்பித்துள்ளார்.

2007ல் சால்க் இன்ஸ்டியுட்டில் ஒரு குழுவினர் , நாம் உண்ணும் உணவின் அளவை கட்டுப் படுத்தும் ஜீனை அடையாளம் கண்டுகொண்டனர்.

அதன் மூலம் குறைந்த கலோரி உணவு ஆயுளை நீட்டிப்பது உறுதி செய்யப் பட்டது.
30% கலோரி குறைத்து உண்பதால் ஆயுளும் ஆரோக்கியமும் 40% கூடுகிறது என எலி, குரங்கு, மற்றும் சில விலங்குகளை வைத்து செய்த ஆராய்ச்சியில் தெரிய வருகிறது. மனிதர்களுக்கும் இது ஒத்து வருமா? சாதாரண அளவிலிருந்தா அல்லது அதிகமாக சாப்பிடுவதிலிருந்தா? எந்த வயதிலிருந்து என்பதும் முக்கியம்.

2008ல் ஸ்பானிஷ் நேஷனல் ரிசர்ச் செண்டரில் ஒரு குழுவின் ஆராய்ச்சியால் ஜீன் மாற்றத்தால் எலிகளின் டெலிமியரேசின் அளவு சாதாரண எலிகளில் இருப்பதை விட 10 மடங்கு அதிகரிக்கப் பட்டது. இதனால் எலிகளின் ஆயுள் 26% அதிகரித்து.

இதே வருடம் யுனிவர்சிட்டி ஆப் வெர்ஜீனியாவில் புரபஸர் மைக்கலொ தோர்னர் குழு மேற்கொண்ட ஆராய்ச்சியின் மூலம் MK-677 என்னும் மருந்தால் 60 வயதிலிருந்து 80 வயதுக்குட் பட்டவர்களுக்கு வயதாவதால் ஏற்படும் தசை இழப்பில் 20% தடுக்கப் பட்டது மேலும் இதனால் வளர்ச்சிக்கு காரணமான ஹார்மோன் மற்றும் இன்சுலின் சுரப்பும் அளவும் இள வயதினருக்கு உள்ளது போல் காணப் பட்டது.

வைட்டமின் ஏ, வைட்டமின் இ இவை இரண்டும் நீண்ட ஆயுளுக்கு உத்தரவாதமானவை.

சரி, தமிழில் நமது முன்னோர்கள் இந்த வகை மருந்துகள் வைத்திருந்தனரா? அவை எவை என்று பார்ப் போம்.
நீண்ட் ஆயுளை அளிக்கும் கரு நெல்லிக் கனியை ஔவைக்கு அதியமான் கொடுத்ததாக வரலாறு சொல்கிறது.அக்கனியை யாராவது பார்த்திருக்கிறீர்களா?

அமுக்ரா கிழங்கு என்று ஒன்று உள்ளது அது எல்லா வகை தமிழ் மருந்துகளிலும் சேர்க்கப் படுகிறது.சர்வரோக சஞ்சீவினி.அதிலும் ”ஆண்மை” வைத்தியர்களின் மருந்துகளின் முக்கிய் அம்சம். அதன் மகத்துவம் சித்த வைத்தியர்களுக்கு தெரியும்.

நமது அமுக்ராவுக்கு சீனாவின் மாற்று ”ஜின்சென்”கிழங்கு.(Ginseng root) இதுவும் காயகல்ப சிகிச்சைக்கானது.சர்வ ரோக நிவாரணி.5000 வருடங்களாக சீனர்கள் பயன் படுத்துகிறார்களாம். ஆனாலும் சீனர்கள் ஆயுள் லிஸ்ட்டில் முதலிடம் பெறவில்லையே. இக்கிழங்கின் வடிவத்தைப் பார்த்தால் ஆச்ரியமாகவும் வினோதமாகவும் இருக்கும் ஆகவே சிலபடங்களை தருகிறேன். இக்கிழங்கிலிருந்து பெறப்படும் மருந்து கேன்சரையே என்னவென்று கேட்குமாம். இதற்கு சரியான டிமாண்ட்.

செக்ஸியாக தெரிகிறதோ மூஞ்சிதான் இஞ்சி தின்ற குரங்கு போல் உள்ளது.



ஓஹோ இதற்குத்தான் ”கிழங்கு” மாதிரி என்றார்களோ




கூடி நின்று கும்மி அடிக்கிறார்களோ



வேண்டாம்....சண்டைக்கு வருவீர்கள்.




அடுத்து தமிழில் ”திரிகடுகம்”,இந்தத் தலைப்பில் தமிழில் அறிவுரைப் பாடல்கள் உள்ளது. சுக்கு, மிளகு, திப்பிலி, இவை மூன்றும் தான் Three kadugam வாரத்திற்கு ஒருநாள் மூன்றும் கலந்த பொடியை சாப்பிட்டால் நல்லது.

”ஏலாதி”
இந்தத் தலைப்பிலும் பாடல்கள் உள்ளது.
ஏலம், லவங்கப்பட்டை,நாககேசரம்,சுக்கு, மிளகு, திப்பிலி இவை அணைத்தும் கலந்த சூர்ணம். இதுவும் காய கல்ப மருந்து வகைதான்.

ஆவாரை
”ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டா” என்றொரு பழமொழி உண்டு. பூத்திருந்தாலே போதுமாம். அதன் காற்று பட்டாலே ஆயுள் அதிகமாம். ஆக அந்தப் பூவை அப்படியே திங்கலாம்.





வெள்ளைப் பூண்டு, வெங்காயம்.
இரண்டும் அருமையான உணவான மருந்து.உலகில் கிட்ட தட்ட எல்லா மக்களும் மருந்தாக சாப்பிடும் உணவு வகை வெள்ளைப் பூண்டு.கொழுப்பைக் குறைக்கும் அரு மருந்து.

அடுத்து கடல் மீன் மற்றும் மீன் எண்ணெய். இதிலுள்ள ஒமேகா 3 என்னும் பொருள் கொழுப்பைக் கரைப்பதில் கில்லாடியாம். மற்றும் நமது உடம்பிற்கு தேவையான ஆபத்தில்லா கொழுப்பை கொண்டதாம்.வளரும் குழந்தைகளுக்கு அவசியமான ஒன்று.

இவை எல்லாம் ஆரோக்கியத்திற்கான உணவு மற்றும் மருந்து வகைகள்.நீண்ட ஆயுளுக்கு ஆரோக்கியமான உடல் மட்டும் காரணமல்ல நல்ல மனதும் குணமும் காரணமாம்.

தாமஸ்( Thomas T. Perls, M.D., M.P.H., the director of the New England Centenarian Study at Boston University) கூறுகிறார், ஆணோ, பெண்ணோ 100 வயதிற்கு மேல் இருப்பவர்களிடம் கீழ் கண்ட ஒரு பொதுத் தன்மை குணத்தின் அளவில் இருக்க வேண்டும். அதாவது அதிக நன்பர்கள், உறவினர்களிடம் அதிகமான பற்றுதல், அளவான சுய கௌவரம் ஆகியவைதான்.

ஆக்ஸிஸனின் அயனி நிலை (Free radicals) செல்களை பாதிக்கிறது. அதிகமான சர்க்கரை, செல்களில் ஏற்படுத்தும் மாற்றம், ஹார்மோன்கள், ஆகியவைகளும் முக்கிய காரணிகள்.
வயதாவதை எவ்வாறு தடுக்கலாம்.ஏற்படும் குறைபாடுகள் எவை? தீர்க்கும் வழி யாது.?.

1).இருதயம் வயதாகும் போது இருதயத் தசைகள் முறுக்குகேறுவதால் வேலைசெய்ய சிரமப் படுகிறது.
தீர்வு, இருதயத்திற்கு பயிற்சிதான். நடத்தல்தான் எளிய பயிற்சி ஒரு நாளைக்கு 5 கிலோ மீட்டர் நடக்க வேண்டும்.

2) வயதாவதால் T-cells நோய் எதிர்ப்புத் தன்மை இழக்கிறது-
ஃப்ரீ ரேடிகல்ஸ் அதிகரிப்பதால் செல்கள் நோய் எதிர்ப்புத்தன்மை இழக்கிறது. இதற்கு ஆண்டி ஆக்ஸிடண்ட் பொருட்கள் உணவில் அதிகமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். மாதுளம் பழம், டீ, வால் நட் இவைகளை தினந்தோறும் சாப்பிட வேண்டும்.

ஒரு நாளைக்கு ஏழு வால்நட்ஸ் (walnuts) சாப்பிட்டால் 10 வயது கூடுமாம் ( In 2009 the British Journal of Nutrition reported a study at Tufts University in Boston which showed that brain function and motor skills in aged rats could be improved by adding walnuts to their diet. The human equivalent would be to eat seven to nine walnuts per day.)

Walnuts.




3)இரத்தக்குழாய் வயதாவதால் கெட்டிப் படுகிறது- இதனால் இரத்த ஓட்டம் தடைபடுகிறது.
உண்ணும் உணவிலும் ஓடும் இரத்ததிலும் கொழுப்பை குறைக்க வேண்டும்.
நடைதான்.

4) 70 வயதில் நுரையீரல் 40% கொள்ளவு குறைந்து விடுகிறது-
பிரணாயாமம் செய்தால் நுரையீரலுக்கு பயிற்சி. இதனால் கொள்ளளவு அதிகரிக்கும்.

5)மூளைத் திறன் சிலருக்கு குறைந்து விடுகிறது.
அதற்கும் பயிற்சிதான். புதிர் விடுவிக்கப் பயிற்சி. சுடோகு, வார்த்தை விளையாட்டு, செஸ் ஆகியவற்றை தினமும். மண்டை சூடேறும் வரை விளையாடலாம்.

6)சிறு நீரகம்செயற்றிறன் குறைந்து விடுகிறது-
உணவு முறை. உணவில் உப்பைக் குறைக்க வேண்டும், அதிகமாக ”சரக்கு” அடிக்கக் கூடாது. மருந்து மாத்திரைகளை தேவைப் பட்டால் மட்டும் சாப்பிட வேண்டும்.

7)இரைப்பை
கொழுப்பைக் குறைக்க வேண்டும். வயதுக்கு தகுந்த உணவு உண்ண வேண்டும். உணவுமுறையும் பயிற்சியும் கண்கானிக்க வேண்டும்.

8)70 வயதில் தசை 20% வேலைசெய்ய மறுக்கிறது.
பயிற்சிதான். நடப்பது தான் எளிய பயிற்சி.

9)எலும்பு பலம் குறைகிறது-
நடப்பது தான் எளிய பயிற்சி.

10)கண்பார்வை சாலேஸ்வரம்- கண்ணுக்கான பயிற்சி.

11)காது கேளாமை- கருவி பயன் படுத்த வேண்டும்,

12)நல்ல செய்தி என்னவென்றால் நல்ல நடத்தையும் உயர்ந்த எண்ணமும் ஆயுளை நீட்டிப்பதாக அறியப் பட்டுள்ளது
நன்னடத்தை பலவகையான மனநோய்களையும் உடல் குறைபாடுகளையும் குணப் படுத்தும்.ஆகவே நேர்மையான எண்ணம் கொண்டு செயல் படுங்கள் (Positive thinking)

நூற்றுவர்கள் (அதாவது நூறு வயதை கடந்தவர்கள்) எண்ணிக்கை 10 வருடங்களில் இரட்டிப்பு ஆவது நமக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.

நூற்றுவர்களிடம் உள்ள பொதுவான 5 விஷயங்கள்,
1) பாரம்பரியம்,
2) ஆரோக்கியம்(எடை, உணவு, உடற்பயிற்சி,),
3) கல்வி,
4) ஆளுமை,
5) வாழ்க்கை முறை.

ஜப்பானின் ஒகினவாவில்தான் உலகிலயே அதிகமான நூற்றுவர்கள் அதாவது (35/100,000) என்ற விகிதத்தில் வாழ்கிறார்கள் என்பது ஆராயப்பட வேண்டிய விஷயம். ஒகினோவில் அதிக அளவில் இருக்கும் நூற்றுவர்களிடம் உள்ள பொதுவான 5 விஷயங்கள் என கீழ்க்கண்டவைகள் அறியப் பட்டுள்ளன.

1) உணவு முறை. தாணியங்கள், மீன், தாவர வகை, முட்டை பால், மற்றும் சிறிது இறைச்சி.

2) குறைந்த மனவழுத்தம் கொண்ட வாழ்க்கை முறை.

3)அதிக அக்கறை கொண்ட, வயதானவர்களுக்கு மரியாதை கொடுக்கும் சமூகமாக வாழும் முறை.

4) பொது விஷயங்களில் ஈடுபாடும் அக்கறையும், தினசரி நடையும், தாவரம், மிருகங்கள் ஆகியவற்றை பேணுதலும்.

5) தெய்வீக நம்பிக்கையும், பிரார்த்தனையும்.

ஒகினாவின் நிரூபிக்கப் பட்ட உன்மைகள் இவைதான்.

தொடரும்,.இறவாமை ( IMMORTALITY). பாகம் 4......................


அடுத்ததாக எப்பொழுதும் காதுக்குள் ஓதும் நித்திய பரமானந்தத்தின் செய்தியின் அர்த்தம் என்ன?...................................

மேலும் படிக்க...!

இராகு கேது (பாகம் 3)

1)இராகுவும் கேதுவும் பூமியை சுற்றிவர 18 வருடங்கள் எடுத்துக்கொள்வார்கள்
2)ஜோதிட இயல் படி இராகுவும் கேதுவும் சூரிய சந்திரர்களுக்கு எதிரிகள்
3)இராகுவும் கேதுவும் உருவமில்லாத நிழல் கிரகங்கள்
4)இராகுவும் கேதுவும் ஜாதகக் கட்டத்தில் சொந்த வீடற்றவர்கள் (வீடு பற்றி பின்னர் பார்ப்போம்)
5)சூரிய சந்திரர்களை விட பலமானவர்கள்.

செய்யுங்காரி தனக்கதிகம் செவ்வாய், வலிது செவ்வாயில்
வெய்ய புதனும் வலிவதனை விடவே அரசன் மிக வலியன்
துய்ய அரசன் தனில் வெள்ளி வலியன் அவனில் சோமன் மிகும்
பைய சசிக்கு கதிர் வலிது பானுவில் பாம்பே வலிதே

தமிழில் யாப்பிலக்கண முறைப்படி இயற்றப் பட்ட பாடல்.


காரி- சனி
அரசன் - வியாழன்
சோமன் - சந்திரன்
சசி - சந்திரன்
கதிர் - சூரியன்
பானு - சூரியன்
பாம்பு - ராகு ,கேது

பாடலின் பொருள்

சனியை விட செவ்வாய் பலமுள்ளவன்
செவ்வாயை விட புதன் வலியவன்
புதனைவிட வியாழன் வலியவன்
வியாழனை விட வெள்ளி வலியவன்
வெள்ளியை விட சந்திரன் வலியவன்
சந்திரனை விட சூரியன் வலியவன்
சூரியனை விட பாம்பு வலியது.


6)மற்ற எல்லா கிரகங்களூக்கும் தலா இரண்டு சொந்த வீடுகள் உள்ளன. ஆனால் சூரிய சந்திரர்களுக்கு தலா ஒரு வீடு தான் உள்ளது. இராகு கேதுவுக்கு அதுவும் இல்லை.

7) ராகுவைப் போல் கொடுப்பாரும் இல்லை அவனைப் போல் கெடுப்பாருமில்லை.பொதுவில் கெட்டவன். கேது ஞானகாரகன், மோட்ச காரகன்.ஆனாலும் பொதுவில் கெட்டவன்

இக்கதையின் விவரப்படி அல்லது ஜோதிட விவரப்படி (நன்றாக கவனிக்கவும், இன்றைய அறிவியல்படி அல்ல )இவர்களின் இருப்பிடத்தை தீர்மானிப்போம். யாராவது ஒருவரின் இருப்பிடத்தை அறிந்தால் போதும் மற்றவரின் இருப்பிடத்தை எளிதாகக் கண்டுபிடித்து விடலாம்.

இடையில் ஒரு புதிர்

முன்பெல்லாம் கடைகளில் உண்மை விலை விவரம் பொருட்களின் மேல் சங்கேத எழுத்துக்களில் எழுதியிருப்பார்கள். விற்கும் விலை ஆளைப் பொறுத்து மாறுபடும் என்பதால் லாபத்தை எவ்வளவு வைக்கலாம் என்பது அந்த விலைப் பார்த்து உரிமையாளர்கள் தெரிந்து கொள்வாரகள். அந்த சங்கேதத்திற்கு ”புள்ளி” என்பார்கள். அந்த மாதிரியான ஒரு காலகட்டத்தில் ஒரு ரெடி மேட் கடையின் உரிமையாளர் வெளியூருக்கு செல்ல வேண்டிய சூழ்நிலையில் அப்பொழுதான் படிப்பை முடித்துவிட்டு வந்த தன் மகனிட்ம் பொறுப்பை விட்டுச் செல்கிறார். திரும்பி வருவதற்கு பத்து நாட்களாகும் ஆகவே கடையை பார்த்துக் கொள், என்று சொல்லி விட்டுச் சென்றார். அவனுக்கு சங்கேத குறியீடு பற்றி தெரியாது. ஆனாலும் கிளம்பும் அவசரத்தில் மகன் அந்த குறியீடு பற்றி கேட்கும் பொழுது, தன்னை விட பெரிய படிப்பு படித்த தனது மகன் புரிந்து கொள்வான் என்று எண்ணி, போர்ன்விட்டாவை வைத்துப் போட்டுப் பார் சரியாக வரும் என்று சொல்லிவிட்டு சென்றார். மகனும் போர்ன்விட்டாவை கலக்கி குடித்துவிட்டு அந்த சங்கேத குறீயீடுகளை வைத்து கணக்குப் போட்டுப் பார்த்தான் ஒன்றும் வரவில்லை. போர்ன்விட்டா பாக்கெட்டுகள் காலியானதுதான் மிச்சம், அப்பொழுது ஒரு பெரியார் வந்தார். அவர் பெரிய அறிவாளி என்று ஊருக்குள் பெயர் பெற்றவர். என்னப்பா விஷயம் என்றார். இவன் தகவலைச் சொன்னான். அதைக் கேட்டுவிட்டு அந்த பெரியார் ”உங்க அப்பன் ஒரு காட்டு மிராண்டி நீயும் ஒரு காட்டு மிராண்டி, போர்ன்விட்டாவை குடித்து விட்டு கணக்குப் போட்டால் கணக்கு வராது உனக்கு கொழுப்புதான் வரும் போங்கடா முட்டாள்களா உங்களை எல்லாம் திருத்தவே முடியாது” என்று ஏசி விட்டுச் சென்றார். அவன் பாவம் இரண்டு நாள் கஷ்டப் பட்டு , நஷ்டப் பட்டு இருக்கும் பொழுது நான் சென்று தகவல் கேட்டு அறிந்து, அவன் கலக்கி குடுத்த போர்ன்விட்டாவை குடித்துவிட்டு, குறீயீட்டுச் சங்கதியை எடுத்துக் கூறினேன். அப்பொழுதான் அவனுக்கு யார் காட்டு மிராண்டி என்று தெரிந்தது. உங்களுக்கு புரிந்தால் நீங்கள் எனக்கு எழுதுங்கள். புரியாவிட்டாலும் கேட்டு எழுதுங்கள்.

chandrustudio@gmail.com.


சரி நாம் ”ராகு கேது”வில் விட்ட இடத்தை பிடிப்போம்.முதலில் இந்த பதிவில் உள்ள சில பதங்களுக்கு முழுமையான, சரியான அர்த்தத்தைப் புரிந்து கொள்ளுவோம்

தளம்

தளம் என்றால் கற்பனையான ஒரு சமதளமான தகடு போன்ற பரப்பாகும். உண்மையில் வான வெளியில் தளம் என்று ஏதுமில்லை. நமது வசதிக்காகவும் எளிதாக புரிந்து கொள்ள உதவுவதற்குமான முற்றிலும் ஒரு கற்பனைத் தளத்தைத்தான் இங்கு தளம் என்று குறிப்பிடுகிறேன்.

சுற்று வட்டப் பாதை:

இதுவும் மேற் கூறியது போன்றே கற்பனையானதுதான். வான்வெளியில் கிரகங்கள் செல்லும் பாதையை கற்பனையாக நாம் பேப்பரில் வரைந்து கொள்கிறோம். மற்றபடி பாதை என்பது எதுவும் கிடையாது, கண்ணுக்கும் தெரியாது.

உண்மையில் இப்படி இருப்பதை



இப்படி யோசித்து,இப்படி வரையலாம்.





இராகுவையும் கேதுவையும் கதைப்படி காட்டிக் கொடுத்தவர்களாகிய சூரிய சந்திரர்கள் தான் இப்பொழுதும், எப்பொழுதும் காட்டிக் கொடுக்ககிறார்கள். இவர்களை வைத்துத் தான் இராகு கேதுவின் இருப்பிடம் அடையாளம் காணமுடிகிறது.

இராகு கேது பூமியை சுற்றிவருவதாலும், சூரியன் சந்திரன் சம்பந்தப் பட்டிருப்பதாலும். சூரியன், சந்திரன், பூமி இவை மூன்றின் சுற்று வட்டப் பாதைக்குள் தான் எங்காவது இருக்க வேண்டும். மேலும் சூரிய, சந்திர கிரகணங்களை வைத்தும் அவர்களது இடத்தை நமக்கு தெரிந்த வகையில் துல்லியமாக மதிப்பிடலாம். அவ்வாறு பார்க்கும் போது சந்திரன் பூமியை சுற்றும் பாதையின் தளமும், பூமி சூரியனை சுற்றும் பாதையின் தளமும் சந்திக்கும் இடத்தில் தான் அவைகள் இருக்கமுடியும்.

முதலில் சூரிய-பூமி தளத்தைப் பார்ப்போம். இதற்கு விளக்கம் தேவையில்லை எனக் கருதுகிறேன். இங்கு இரண்டு படங்கள் உள்ளது ஒன்று கற்பனையான தளம் என்ற அமைப்புடனும் மற்றொன்று கற்பனையான வட்டபாதையுடனும் உள்ளது.
படம் (1)








இப்பொழுது பூமி -சந்திர தளத்தைப் பார்ப்போம்.






இப்பொழுது இரண்டு தளங்களையும் இணைப்போம். இணைப்புகள் பலவகைகளில் இருக்கும். முதலில் இரண்டு (Two extreme positions)அதீத நிலைகளைப் பார்ப்போம்


1) தளங்கள் ஒன்றுக்கு ஒன்று செங்குத்து கோணமாக இருக்கலாமா?






இப்படி இருப்பதற்கு வாய்ப்பே இல்லை . ஏனெனில் சந்திரனும் சூரியனைப் போல் கிழக்கே தோன்றி மேற்கே மறைவதால் சூரியனின் பாதையில்தான் அவனும் இருக்க வேண்டும், இருக்கிறான், .மற்றும் செங்குத்து கோணமில்லை என்பதை விவரிக்க சோதிடமே சான்றாகும். செங்குத்து கோணமாக இருக்கும் சூழ்நிலையில் சந்திரன் வடக்கே தோன்றி தெற்கே மறைவான் அல்லது vice versa, மேலும் அதன் தோற்றங்கள் முற்றிலும் மாறுபட்டவையாக இருக்கும் . அது விவரிப்பதற்கு கொஞ்சம் சிக்கலானது. உங்களுக்கு கற்பனை வளம் இருந்தால் படுத்து கொண்டு அந்த செங்குத்து கோணம் அமையும் 360 பாகைகளையும் ( இதில் கவணிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் வானவியலில் கற்பனை எப்பொழுதும் 360X360 டிகிரியாக அதாவது 3D யில் இருக்க வேண்டும்.) கற்பனையில் யோசித்துப் பாருங்கள். அந்த நிலைமையில் ஒரு வேளை எப்பொழுதுமே அரைச் சந்திரனாகக் கூடத் தெரியலாம். ஆகவே செங்குத்து (Perpendicular) கோணம் என்பதையும் மறந்து விடுவோம்.
படம் (3)

2) தளங்கள் ஒன்றுக்கு ஒன்று இணையாக இருக்கலாமா?




தளத்தோடு தளமாக இரண்டும் இணையாக (Parellel) இணைப்போம் (sandwitched). படத்தில் காட்டியுள்ளவாறு. இரண்டு சுற்று வட்டப் பாதைகளும் (தளங்களும்) ஒரே தளத்தில் இருந்தால் எல்லாப் பௌர்னமியும் முழு சந்திரகிரகணமாக இருக்க வேண்டும் என்பதும், எல்லா அமாவாசைகளும் முழு சூரிய கிரகணமாக இருக்க வேண்டும் என்பதும் முடிவாகிறது. இதைத் தெளிவு படுத்த நாசா விஞ்ஞானிகளை கூப்பிட்டுக் கேட்க வேண்டிய அவசியமில்லை. அன்றாட அறிவியல் சிறிது தெரிந்தால் போதும்.இங்கு ராகு கேதுவுக்கு வேலை இல்லை.

ஆனால் உன்மையில் அவ்வாறு நிகழாமல் இருப்பதாலும், ஆனால் வருடத்திற்கு ஒருமுறையாவது ஏதோ ஒரு கிரகணம் தன்னிச்சையாக (Random ) நடப்பது போல் தோன்றுவதாலும், எப்பொழுதும் சூரியன், மற்றும் மற்ற கிரகங்கள் பயணிக்கும் திசையிலேயே சந்திரன் பயனிப்பதாலும் ஒரே தளத்தில் ஒரு சிறிய கோணத்தில் வெட்டிக் கொண்டு சாய்வாகத்தான் இருக்க வேண்டும் என்பதை உறுதிப் படுத்த நாம் யாரையும் கேட்க வேண்டிய தேவையில்லை. சிறிது ”பொதுப் புத்தி”(common sense) யை பயன் படுத்தினால் புரிந்து கொள்ளலாம்.






ஒரு 5 டிகிரி சாய்வாக உள்ளதால்தான் ராகுவும் கேதுவும் தேவைப் பட்டார்கள்.இங்கு படத்தில் ராகு கேதுவுக்கு முறையே சிவப்பும் பச்சை நிறமும் கொடுத்து ஒரு சிறிய உருவமும் கொடுத்துள்ளேன் அவை எல்லாம் எளிதில் புரிந்து கொள்வதற்குதான் என்பதை மறந்து விடாதீர்கள். உண்மையி அப்படி ஏதும் நிறமோ வடிவமோ கிடையாது முற்றிலும் கற்பிதமானதுதான் (Imaginary)


சரி கிரகணத்தைக் கணக்கிட சூரிய சந்திரர்களின் கோண அளவும், அவற்றின் வேகமும் தெரிந்தால் போதுமே. அதில்தான் இவர்கள் கில்லாடி என்கிறீர்களே அதை வைத்துச் சொல்ல முடியாதா? சூரிய சந்திரர்களின் பாதையும், பயணமும் மாறாது இருக்கும் பொழுது எதற்கு இந்த கற்பனைப் புள்ளிகளும், பாம்புகளும்.? இவைகளின் அவசியம்தான் என்ன?. என்று பலவிதமான கேள்விகளை கேடபார்கள் இந்த வாலுப்பசங்க.

நமக்கு உள்ளதோ மூன்று இஞ்ச் இடைவெளி உள்ள இரண்டு கண்கள்தான். இவைகளால் அதிக பட்சமாக முப்பது மீட்டர் தொலைவிற்கு சாதாரண பொருட்களின் முப்பரிமான காட்சியைதான் வழங்க முடியும். அனால் இங்கு நாம் பேசிக்கொண்டிருப்பதோ லட்சக் கணக்கான மைல்கள் தூரத்தைப் பற்றி அதற்கு 300 மீட்டர் இடை வெளி உள்ள கண்கள் கூட பத்தாது. .

ஆதிகால இந்திய சோதிடன் இருபரிமான கணக்குகள் போட்டு, சூரிய சந்திர பாதைகளை வைத்து கணக்கிட்டு கிரகணத்தை எதிர்பார்த்து விட்டு ஏமாந்து போனதால் காரணத்தை ஆராய்ந்து, முப்பரிமானத்தில் கணக்கை போட்டு திருத்தினான்.

பேப்பர், போட்டோ, திரைப் படம், கம்ப்யூட்டர் என வளர்ந்துவிட்ட இக்காலத்திலும் முப்பரிமானம் என்றால் என்ன என்று படித்தவர்களுக்கே தெளிவாகத் தெரியுமா என்பது கேள்விக் குறியாக உள்ளது. 3000 வருடங்களுக்கு முன் நிலைமையை யோசியுங்கள். நான் ஏற்கனவே கூறிய்து போல் வானியல் காட்சிகளை 3D யில் மனதில்தான் யோசிக்க வேண்டும், யோசிக்க முடியும். ஆகவேதான் முப்பரிமான விளக்கத்திற்கு போகாமல் எளிதாக கணக்குப் போட்டு, கண்டுபிடிக்க ஏற்பட்டதுதான் இராகுவும் கேதுவும். இதிலுள்ள கணிதம் புரியாவிட்டாலும் தகவலை(Data) தலை முறை தாண்டி சரியாக எடுத்துச் செல்ல ஏற்பட்டதுதான் ’திருநீல கண்டருக்கும் சூரியகிரஹனத்திற்கும் என்ன சம்பந்தம்?’ என்ற பாம்புக்கதை.

உதாரணத்திற்கு ஜனவரி மாதம் 26ந் தேதி முழு கங்கண சூரிய கிரகணம் ஏற்பட்டது என வைத்துக் கொள்வோம். இது போன்ற முழு கங்கண சூரிய கிரகணம் ஜனவரி மாதம் 26 ந்தேதி அடுத்து எந்த வருடம் ஏற்படும் என்பது கணக்கில் வராதது என்பதை விட அதைக் கணக்கிடுவது என்பது மிகவும் சிக்கலானது. சந்திரனின் சாய்வான சுழற்சி தளத்தினாலும் பூமியோடு சேர்ந்து கொண்டு சூரியனைச் சுற்றுவதோடு அல்லாமல் பூமியையும் சுற்றுவதாலும் அதன் பாதை மிகவும் சிக்கலாகிவிடுகிறது. அதில் ஒரு ஒழுங்குமுறையை காண ஒரு மனிதனுக்கு மட்டுமல்ல அவனது தலைமுறைகளுக்கும் வயது பத்தாது ஆகவேதான் ஒழுங்கற்றவைகளிலிருந்து ஒரு ஒழுங்கை கொண்டு வர ஏற்பட்ட ஒரு அற்புதமான கணித வடிவமைப்புதான் ராகுவும் கேதுவும். இதில் ராகு என்பது சூரியனின் நிழலாகவும், கேது என்பது சந்திரனின் நிழலாகவும் கருதப் படுகிறது. இவர்கள் இருவரும் சூரிய் சந்திரர்களை விட எப்பொழுதும் பூமிக்கு அருகில் இருப்பதாலும் சூரிய சந்திரர்களின் பிர்திநிதியாக இருந்து அவர்களின் இருப்பிடத்தை துல்லியமாக (3Dயில்) கணக்கிட உதவுவதாலும் மற்ற கிரகங்களை விட (ஏன் சூரிய சந்திரர்களை விடவும்) சக்தி உள்ளவர்களாக கருதப் படுகிறார்கள்.

ஸ்க்ரூ கேஜ், வெர்னியர் காலிபர் என்ற நீட்டல் அளவைக் கருவிகள் உள்ளது.








அதன் தத்துவம் உங்களுக்கு புரியுமென்று நினைக்கிறேன் ஸ்க்ரூ கேஜ்ஜில் ஒரு மெயின் ஸ்கேலுடன் ஒரு சிறிய ஸ்கேல் ஒன்றும் இணைந்திருக்கும். அந்த சிறிய ஸ்கேலின் (Units) அளவை எந்தமுறையில் உள்ளது என்று யாராலும் கூற முடியாது. ஏனென்றால் அதில் ஒரு சிறிய கற்பிதம் அவரவர் தேவைக்கு ஏற்றவாறு உள்ளது. அதன் உதவியால்தான் நீட்டலளவை நூறு மடங்கு துல்லியமாக அளக்கமுடிகிறது அது போன்றுதான் வான்வெளியில் சூரிய சந்திரர்களின் நடமாட்டத்தை துல்லியமாக கணிப்பதற்கு ராகு, கேது என்பவர்கள் ஒரு சிறிய ஸ்கேலாக இருந்து பயன்படுகிறார்கள். ஸ்க்ரூ கேஜ், வெர்னியர் காலிபர் பற்றி அறிய விரும்பவர்கள் எனக்கு எழுதலாம்

சோதிடத்தில் கூறப்படுபவை.

ராகுவைப் போல் கொடுப்பாரும் இல்லை அவனைப் போல் கெடுப்பாருமில்லை. பொதுவில் கெட்டவன். இவை அணைத்தும் சூரியனுக்கும் பொருந்தி வரும். அது போல் கேது ஞானகாரகன், மோட்ச காரகன். சுபாவத்தில் கெட்டவன் தான். இவை அணைத்தும் சந்திரனுக்கும் கிட்ட தட்ட பொருந்தி வரும் . ஆகவேதான் இவைகளை நிழல் கிரகங்கள் என்று குறிப்பிட்டுள்ளான். இப்பூவுலகில் மனிதனின் மீது சூரியனின் பாதிப்பை அளப்பதற்கு ஒரு அட்டாச்மெண்ட் ராகு. சந்திரனின் சோதிட பாதிப்பை அளப்பதற்ககான ஒரு அட்டாச்மெண்ட் கேது

சோதிடத்தை உருவாக்கியவனுக்குத் தெரியும் சந்திரன் எத்தனை பாகை, சூரியப் பாதையிலிருந்து விலகிச் செல்கிறான் என்று .இதற்கு நாம் ஒரு கலீலியோவாகவோ, கெப்ளராகவோ இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்பதற்கு 5000 வருடங்களுக்கு முன் எழுதிவைத்த இந்தியன் தான் சான்று.

வானியல் எந்த விதத்திலும் பாமரனுக்குப் பயன் பட்டதில்லை பயன்படப் போவதில்லை.பாமரன் வானியல் தெரிந்து வைத்திருப்பதும் சோதிடத்தால் தான் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.ஆகவேதான் வானியல் என்பது சோதிடம் சம்பந்தப்பட்ட விஷயமாகவே வளர்ந்துவிட்டது.

இந்த இடத்தில், வால் முளைத்த பையன்களோ அல்லது ”சுபவீ“க்களோ புத்திசாலித்தனமாக கேட்பதாக நினைத்துக் கொண்டு ஒரு கேள்வி கேட்பார்கள். (அவர்களுக்கு அந்த அளவிற்கு வானியல் தெரிதிருந்தால் சந்தோஷப் படக் கூடிய முதல் ஆள் நானாகத்தான் இருக்கமுடியும். அது வேறு விஷயம்)

”நீங்கள் இதுவரை எழுதியது எல்லாம் ஆங்கிலேயேர்களின் சூரிய மையக் கருத்தை வைத்து எழுதியுள்ளீர்கள். ஆனால் சோதிடம் என்பது பூமி மையக் கருத்தை அடிப்படையாகக் கொண்டது தானே, நீங்கள் கொள்கை திருட்டினால் இடைச் செருகல் செய்து சோதிட வானியலை நியாயப் படுத்தாதீர்கள்.” என்பாரகள். அவர்கள் அனைவருக்கும் சொல்லிக் கொள்கிறேன்.

பூமி மையக் கருத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தால் சோதிடத்தில் பூமியை சூரியனின் சுற்றும் காலம் ஒருநாள் என்றுதான் கணக்கிட்டு இருப்பார்கள். ஆனால் உண்மையில் சூரியனின் சுழற்சிக் காலத்தை ஒரு வருடம் என்று கணக்கிட்டு இருப்பது எதனால்?.
கிரகங்களையோ சூரியனையோ வைத்து அவைகளின் நிலையை சோதிடன் கணக்கிடவில்லை நட்சத்திரங்களை வைத்துத் தான் கணக்கிட்டான். ஆகவே அவனது கணக்கீட்டில் சூரிய மைய சித்தாந்தம் தானாக வந்து மாட்டிக் கொள்ளும் அல்லது காட்டிக் கொள்ளும்.

அக்கால வானியல் என்பது சோதிடத்தை அடிப்படையாக கொண்டதால் பூமிக்கும், பூமியில் வாழும் மனிதனுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப் பட்டதால், பூமி மைய சித்தாந்தம் போல் உணரப் பட்டது.

வானியல் என்பது கம்ப சூத்திர (கம்பு சுழற்றும்)வித்தையல்ல. நாமும் சிறிது அக்கறையுடன் தினசரி பகலிலும் இரவிலும் வானத்தில் சூரிய,சந்திரர்களின் பாதையைப் பார்த்தால் ஒரு வருட முடிவில் சந்திரன் எத்தனை பாகை விலகியுள்ளது என எளிதாகக் கூறிவிடலாம். விவரமானவர்களாக இருந்தால் ஒவ்வொரு பௌர்னமியன்று மட்டும் பார்த்து கூட கணக்கிட்டுவிடலாம்.

அடுத்து ராகு கேதுவும் பூமியை சுற்றிவர எப்படி 18 வருடங்கள் எடுத்துக் கொள்கிறது என்பதற்கான விளக்கப் படத்துடன்............
.................................தொடரும்.

மேலும் படிக்க...!
இக்கதையின் இரண்டாவது பாகம் என்பது கதையைப் பற்றிய ஆராய்ச்சிதான். இக்கதை பற்றி கருத்துக்கள் கேட்டிருந்தேன். ஏனோ தமிழக நாத்திக வாதிகளின் போக்கில் மாற்றம் ஏற்பட்டுள்ளது போல் தோன்றுகிறது. இங்கு பதிவிட்ட சிதம்பரநாதன் கூட மழுப்பலாக பதிந்துள்ளார். வலைப் பூவுலக போக்கிரியாக கருதப்படும் ”வால்ப்பையனும்” படித்து விட்டு அடக்கி வாசித்தமையினால், ஒருவரும் மாற்றுக்கருத்து பதியவில்லை என்று கருதி, அனுமானத்தின் பேரிலும், ஏற்கனவே இது பற்றிய அவர்களது கருத்துக்களைக் கொண்டும் எனது தொடரை தொடர்கிறேன்.

தமிழக பகுத்தறிவு வாதியின் பார்வையில்.

இந்தப் பார்ப்பனர்கள் தமிழர்களாகிய திராவிடர்களை அசுரர்களாக சித்தரித்து அவர்களை கொடூரமாக கொலை செய்வது போன்று கதை எழுதுவார்கள். சூரியனும் சந்திரனும் விழுங்கக் கூடிய பொருள் அல்ல என்பது இந்த குடுமிகளுக்குத் தெரியாது. இதையும் விட அசிங்கமாக எழுதுவார்கள். பெரியார் மட்டும் வரவில்லை என்றால் இந்தக் கதை பாடப் புத்தகங்களில் வந்திருக்கும். இதைவிட அபத்தமான விஷயம் எங்கும் இருக்காது. சூரியனை பாம்பு விழுங்குவதாம். இந்தமாதிரி அறிவியலுக்கு சற்றும் பொருந்தாத விஷயங்களைச் சொல்லி முட்டாளாக்கி வயிறு வளர்ப்பான். இவனுக குப்பைகளோடு இவனுகளையும் ஒழித்தால்தான் நாடு உருப்படும்.

பெரியாரின் பகுத்தறிவுப் பார்வையில்
http://thamizhoviya.blogspot.com/2009/02/blog-post_5416.html

பகுத்தறிவுப் பகலவனாகத் தோன்றிய பெரியார் பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்து இலக்கியங்களில் கூறப் படினும் அதனைக் கண்டிக்கத் தயங்காததில் வியப்பில்லை. சூரிய கிரகணம் ஞாயிற்றைக் கேது பற்றுவதால் ஏற்படுகிறது என்ற பகுத்தறிவுச் செய்தி, "பாஅய்ப் பகல் செய்வான் பாம்பின் வாய்ப்பட்டான்".  என்று சங்க இலக்கியத்துள் வருவதை எவ்வாறு பெரியார் ஒப்புக் கொள்வார்? "அகல் இரு விசும்பின் அரவும் குறைபடுத்த பசங்கதில் மதியத்து அகல் நிலாப் போல" எனவரும் சந்திரகிரகணச் செய்தியைப் பகுத்தறிவாளர்களால் ஏற்கமுடியுமோ?

நாண்மீன்கள் இருபத்தேழும் மகளிர் என்றும், இவர்களைச் சந்திரன் மணம் செய்து கொண்டான் என்றும், சந்திரன் ரோகினியிடத்து மட்டும் அன்பு செலுத்தினான் என்றும், அதனால் சாபம் பெற்றான் என்றும், சிவபெருமானின் அருள் பெற்றுத் தேய்வதும் வளர்வதுமாக உள்ளான் என்றும் ஆரியர் கூறும் கதை கூறப்பட்டிருப்பதை ஆய்ந்தால், ஆரியப் பார்ப்பனர்கள் எவ்வண்ண மெல்லாம் திட்டமிட்டு, புலவர் பெருமக்களிடையேயும் தங்களின் புராணக் கதை
களைத் திணித்து விட்டனர் என்பதை அறியலாம். இதைப் பெரியார் கண்டிக்காமல் இருப்பாரா?

ஆன்மீக வாதியின் பார்வையில்

பகவானின் கருணையே கருணை !. அசுரானாக இருந்தாலும் சரணயடையும் பொழுது தனது தன்மையான தெய்வீக அம்சத்தையே வழங்கி சரணாகதி தத்துவத்தை நிலை பெறச் செய்துள்ளார். மேலும் அந்த அசுரர்களுக்கும் வழிபடும் தலங்களும் உள்ளன என்பதுதான் அதிலும் சிறப்பு.

ஒரு கதாசிரியரின் பார்வையில்

எல்லாம் தெரிந்த கடவுளுக்கு அசுரன் தேவ வடிவத்தில் உள்ளான் என்பது சூரிய சந்திரர் காட்டிக் கொடுத்துத்தான் தெரிய வேண்டுமா?. மற்ற அசுரர்கள் அமுதம் உண்டனரா என்பது தெரியவில்லை. நீலகண்டர் விஷயத்தில் கதையின் போக்கு திசை மாறுவது போல் தோன்றினாலும் பின்னர் இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டது. மற்ற படி கதை பரவாயில்லை. திருநீலகண்டரின் கதை பிற்சேர்க்கை போல் தோன்றுகிறது. ஆனாலும் அந்த ஆலகால விஷத்திற்கு தீர்வு நீலகண்டரின் கதையில்தான் இருக்கிறது. மொத்ததில் பரவாயில்லை.

ஒரு சராசரி முதியவரின் பார்வையில்

எனது பேரக் குழந்தைகள் கதை கேட்டு தொந்தரவு பன்னுவார்கள். இந்த மாதிரி புராணக் கதைகள் அதிகம் தேவைப் படுகிறது. இதுவும் ஒரு மாதிரி நீதி கற்பிக்கும் கதைதான். நாம் எதை நீதின்னு விளக்கிச் சொல்லிக் கொடுக்கனும் .நிச்சயமாக கேட்டு சந்தோஷப் படுவார்கள்.

அறிவியல் எழுத்தாளரின் பார்வையில்

ஒன்றுக்கு ஒன்றாக சம்பந்தப்பட்ட இருபுள்ளிகள். இதை சரியான முறையில் உருவகப் படுத்தி ஒரு பாத்திரத்தை உருவாக்கியுள்ள விதம் ஆச்சிரியப் படவைக்கிறது.ஒரு அறிவியல் நிகழ்ச்சியை ஒட்டி இவ்வளவு அற்புதமாக கதை பன்ன முடியுதே அதுதான் விஷயம். நீங்கள் முயற்சி செய்யுங்கள் அப்பொழுதான் இந்தக் கதையை புனைந்தவன், கொண்டுவந்து சேர்த்தவர்களின் அருமை புரியும். இன்றைய காலத்தில் ஊடகங்கள் என்று இண்ட்ர்னெட், டி.வி. ரேடியோ, செய்திதாள், போன் என பலதரப்பட்டவை உள்ளன. அனால் ஒரு 500 வருடங்களுக்கு முன்பெல்லாம் வாய்மொழிப் பாட்டும் கதையும் தான் ஊடகங்கள். ஆக கதை பன்னும் விதமும் கதையிலுள்ள ஈர்ப்பும்தான் அதனுடைய அமரத்துவத்திற்கு உத்திரவாதம்.

என்னுடைய பார்வையில்

இந்தக் கதையை எழுதி முடித்தவுடன், கதையின் பாத்திரங்களைப் பற்றிய தகவல்களை ஒருங்கிணைத்தேன். முதலில். தமிழர்களுக்கு இந்த பாம்புக் கதை எப்பொழுதிருந்து அறியப் பட்டுள்ளது எனத் தெரிந்து கொள்வோம். இந்த பாம்புக் கதை சங்ககாலத்திலேயே தமிழர்களால் அறியப் பட்டுள்ளது எனத் தெரிகிறது. அதாவது 2000 வருடங்களுக்கு முன்பாக தமிழன் கிரகணம் பற்றி மட்டும் அறிந்து கொள்ள வில்லை, ராகு கேது பற்றியும் அறிந்துள்ளான் என்ற செய்திதான் என்பதுதான் நமக்கு மிக முக்கியம்

நற்றிணைப் பாடல் ஒன்றில் குறிப்பிடப் பட்ட செய்தி உள்ளது.

”அகல் இரு விசும்பின் அரவும் குறைபடுத்த
பசங்கதில் மதியத்து அகல் நிலாப் போல ”

என்று நற்றிணைப் பாடல். இந்தப் பாடலிலும் ராகு கேதுவைப் பற்றித்தான் குறிப்பிடப் பட்டுள்ளது. பரிபாடலிலும் தெளிவாக கிரகணத்திற்கு காரணமான பாம்பு என்று குறிப்பிடப் பட்டுள்ளதால் தமிழனுக்கும் இதுதான் புராணம். ஆகவே தமிழப் புராணங்களில் குறிப்பிடப் பட்டுள்ளதாகவே கருதலாம்

கன்னிப்பெண்கள் தைந்நீராடுமாறு வையையாற்றில் வெள்ளம் வந்ததைப் பாடுகின்ற ஆசிரியர் நல்லந்துவனாரின் பரிபாடல், அவ்வெள்ளத்திற்குக் காரணமாய்ப் பெய்த மழைக்குக் காரணமான வானியல் நிலையை மிக நுட்பமாக வர்ணித்துக் கூறுகின்றது. (பரி. 11:1-5). அசுவினி முதலான இருபத்தேழு நாள் மீன்களுள் ஒவ்வோர் இரண்டே கால் நாட்களையும் உள்ளடக்கிய மேடராசி முதலிய வீடுகள் பன்னிரண்டுள் நந்நான்கு வீடுகளாகப் பிரிந்து, ஒன்பதொன்பது நாள்மீன்கள் அடங்கிய மூவகை வீதிகளையுடைய
இராசி மண்டிலத்தில், வெள்ளியாகிய சுக்கிரன் இடபத்திலும் செவ்வாய் மேடத்திலும்புதன் மிதுனத்திலும் ஆதித்தன் சிம்மத்திலும் வியாழனாகிய குரு மீனத்திலும்திங்களும் சனியும் இராகுவும் மகரத்திலும் கேது கடகத்திலும் செல்லக் கூடிய ஆவணித் திங்கள் அவிட்டநாளில், திங்களை இராகு தீண்டுகின்ற சந்திர கிரகணம் நேருமாயின் மழை பெய்யுமென்ற வானியல் விதிப்படி, கோள்கள் கூடினமையால் மேற்குத் தொடர்ச்சி மலையில் மழை பெய்து வையையில் வெள்ளம் புரண்டதென்பது அப்பரிபாடல் அடிகளின் கருத்தாகும். அவற்றுள், கோள் நிலைகளைக் கூறி வருகின்ற போது, ஆதித்தன் சிம்மத்தில் செல்லும் நிலையைப் புலவர் நேரடியாகக் கூறாமல், 'புலர்விடியல் அங்கி உயர் நிற்ப' என்று விடியற்காலத்தில் கார்த்திகை மீன் உச்சம் பெற்ற நிலையைக் கூறும் முறையிலேயே உணர்த்துகின்ற நுட்பமும், அவ்வாறே ஆவணிமாதத்து மதிநிறை நாளான அவிட்டமென்ற குறிப்பினையும் அதன்படி திங்களும் இராகுவும் மகத்தில் செல்வதையும் இராகு செல்லும் மகத்திற்கு ஏழாமிடமான கடகத்தில் கேது செல்வதையும், 'பாம்பு மதியம் மறைய ஒல்லை வருநாள்' என்ற சிறுதொடரால் உணர்த்துகின்ற ஒட்பமும், உளங்கொளத்தறுவனவாம்.

பாம்பு

இங்கு பாம்புக்கு என்ன வேலை. பாம்பினால் தான் விழுங்கிய பொருட்களை தேவையில்லை யென்றால் வெளியே கக்கிவிடமுடியும். உதாரணமாக பாம்பு முட்டையை முழுங்கிய பின் வயிற்றுக்குள்ளயே தனது வயிற்று தசைகளினால் முட்டை ஒட்டை உடைத்து அதிலுள்ள திரவப் பொருட்களை செமித்து விட்டு வெறும் முட்டை யோட்டை மட்டும் திருப்பி கக்கிவிடும். இவ்வாறு தான் பாம்பு போற போக்கில் முட்டை வடிவக் கற்களையும் விழுங்கிவிடும். ஆனால் அதை ஒன்றும் செய்ய முடியாது என்பதை அறிந்து சிறிது நேரங்கழித்து அதை கக்கிவிடும் ஆகவேதான் இக்கதையில் பாம்பு உருவகப் படுத்தப்பட்டுள்ளது.

திருமாலின் பிரச்சினைகள்

1)சக்ராயுதத்திற்கு மரியாதை வேண்டும்.வெட்டினால் துண்டு இரண்டு தான் அதற்கு மாற்று கிடையாது.
2)சரணம் என்று வந்தவனுக்கு கதி அழித்து சரணாகதி தத்துவத்தை பேணவேண்டும்
3)தப்பு செய்தவனுக்கு தண்டனையும் கொடுக்க வேண்டும்
4)பாற்கடலில் எடுத்த அமிழ்தத்திற்கும் உரிய மரியாதை வழங்கப் படவேண்டும்.

சோதிடவியல் என்ன சொல்கிறது.

இதில் ராகுவும் கேதுவும் பற்றிய ஜோதிடத் தகவல்கள் தான் நிறைய இருக்கின்றன. இராகுவும் கேதுவும் எப்பொழுதும் நேர் எதிரில் இருப்பார்கள். எதிரும் புதிருமாக உட்கார்ந்திருப்பவர்களை கூட இராகுவும் கேதுவும் போல் உட்கார்ந்திருக்கார்கள் என்று கூறுவதுண்டு.அது போன்றுதான் ஜாதகக் கட்டங்களில் இராகுவும் கேதுவும் 180 டிகிரியில் இருப்பதைக் காணலாம்

கிரகணத்தன்று பிறந்தவர்களது ஜாதகத்தில் சந்திரன் உடனோ அல்லது சூரியன் உடனோ இராகு அல்லது கேது இருப்பார்கள். ஆனால் இதன் உல்டா(vice versa) எப்பொழுதாவதுதான் உண்மையாக இருக்கும்

1)இராகுவும் கேதுவும் பூமியை சுற்றிவர 18 வருடங்கள் எடுத்துக்கொள்வார்கள்.
2)ஜோதிட இயல் படி இராகுவும் கேதுவும் சூரிய சந்திரர்களுக்கு எதிரிகள்
3)இராகுவும் கேதுவும் உருவமில்லாத நிழல் கிரகங்கள்
4)மற்ற எல்லா கிரகங்களூக்கும் தலா இரண்டு சொந்த வீடுகள் உள்ளன. ஆனால் சூரிய சந்திரர்களுக்கு தலா ஒரு வீடு தான் உள்ளது. இராகு கேதுவுக்கு அதுவும் இல்லை.
இராகுவும் கேதுவும் ஜாதகக் கட்டத்தில் சொந்த வீடற்றவர்கள் (வீடு பற்றி பின்னர் பார்ப்போம்.ஆனாலும் சோதிடர்களைக் கேட்டுப் பாருங்கள், இவர்களுக்கு வீடில்லை என்பார்கள் )
5)சூரிய சந்திரர்களை விட பலமானவர்கள்.

இக்கதையின் விவரப்படி அல்லது ஜோதிட விவரப்படி இவர்களின் இருப்பிடத்தை தீர்மானிப்போம். யாராவது ஒருவரின் இருப்பிடம் தெரிந்தால் போதும் மற்றவரின் இருப்பிடம் எளிதாகக் கண்டுபிடித்து விடலாம்.

இராகுவையும் கேதுவையும் கதைப்படி காட்டிக் கொடுத்தவர்களாகிய சூரிய சந்திரர்கள் தான் இப்பொழுதும், எப்பொழுதும் "காட்டி"க் கொடுக்ககிறார்கள். இவர்களை வைத்துத் தான் இராகு கேதுவின் இருப்பிடம் அடையாளம் காணமுடிகிறது.

இவை இரண்டும் பூமியை சுற்றிவருவதாலும், சூரியன் சந்திரன் சம்பந்தப் பட்டிருப்பதாலும். சூரியன், சந்திரன், பூமி இவை மூன்றின் சுற்று வட்டப் பாதைக்குள் தான் எங்காவது இருக்க வேண்டும்.மேலும் சூரிய சந்திர கிரகணங்களை வைத்தும் அவர்களது இடத்தை நமக்கு தெரிந்த வகையில் துல்லியமாக மதிப்பிடலாம்.அவ்வாறு பார்க்கும் போது சந்திரன் பூமியை சுற்றும் பாதையின் தளமும், பூமி சூரியனை சுற்றும் பாதையின் தளமும் சந்திக்கும் இடத்தில் தான் அவைகள் இருக்கமுடியும்.

மற்றும் இரண்டு சுற்று வட்டப் பாதைகளும் ஒரே தளத்தில் இருந்தால் எல்லாப் பௌர்னமியும் முழு சந்திரகிரகணமாக இருக்க வேண்டும் என்பதும், எல்லா அமாவாசைகளும் முழு சூரிய கிரகணமாக இருக்க வேண்டும் என்பதும் முடிவாகிறது. ஆனால் உன்மையில் அவ்வாறு நிகழாமல் இருப்பதால் ஒன்றை ஒன்று ஒரு சிறிய கோணத்தில் வெட்டிக் கொண்டு சாய்வாகத்தான் இருக்கவேண்டும். இவைகள் இரண்டும் உருவமற்றவை என்பதும் தெரிகிறது. பூமி-சந்திரனின் சுற்றுப்பாதையின் தளம் சூரிய-பூமியின் சுற்றுப்பாதையின் தளத்தை வெட்டும் கற்பனைப் புள்ளிகள் தான் இராகுவும் கேதுவும் என்பது இதன் மூலம் தெரிகிறது.

எனக்குத்தெரிந்த் 3d Max ஐ வைத்து வரைந்துள்ள படங்களையும் விளக்கத்தையும் அடுத்து தருகிறேன்.


............................................தொடரும்


மேலும் படிக்க...!

இறவாமை ( IMMORTALITY). பாகம் 2

இறவாமை ( IMMORTALITY). பாகம் 1

யாராவது நீண்ட ஆயுளைப் பற்றி பேச ஆரம்பித்தால் நமக்கு நமட்டுச் சிரிப்புடன் பல கேள்விகள் எழும், இவருக்கு வயது என்ன நூறா என்று கேட்பார்கள். பஸ்ஸை தவற விட்டவர்கள் அடுத்த பஸ் வரும் வரை ஏன் அந்த பஸ்ஸை தவற விட்டோம் என அலசலாம் அல்லவா. அது போன்ற அலசல்தான் இது.

நிகழ்காலத்தில் 138 வருடங்கள் வாழ்ந்தாக கூறப் படுபவர் ஹபீப் மியான் என்ற ரஹீம்கான் என்பவராவர். இவரது ஆதாரங்களின் படி இவரது பிறந்த தேதி 20 மே மாதம் 1878 ஆம் வருடம் என அறியப் படுகிறது.



இவர் ஆங்கிலேயே ஆட்சியின், இந்திய இசைக் குழுவில் பணியாற்றி, இவரது ஆயுள் முழுமைக்கும் ஓய்வூதியம் பெற்று வந்தது குறிப்பிடத் தக்கது. இவர் கடந்த 2ந் தேதி ஆகஸ்ட் 2006ஆம் வருடம் இறந்ததாகப் பதிவு செய்யப் பட்டுள்ளது. அவர் தனது கடைசி 50 வருடங்களை கண்பார்வை இன்றி கழித்தார். அவரது தொழில் இசைக் கருவி கிளாரினெட் (துளைக்கருவி) வாசிப்பது ஆகும். (3)அவரது உணவுப் பழக்கங்களில் ஏதும் தனிச் சிறப்பு இல்லை. ஆனால் சராசரியாக ஒரு நாளைக்கு 15 டீ குடிப்பாராம்.(4)
அவருக்கு ஜெய்ப்பூர் மக்கள் 137 வது வயதிலே ஒரு வாழ்த்துப் பத்திரம் வாசித்து அளித்தார்கள்.

137 வது வயதிலே ஒரு வாழ்த்துப் பத்திரம்

அடுத்ததாக உலகிலேயே ஜீன் கால்மெண்ட் என்ற பெண் ஒருவர்தான் நீண்ட ஆயுளுடன் 122 வருடங்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் உள்ளது.ஒரு ஐம்பது பேர்கள் 114 வயது வரை வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் உள்ளது.( அதில் 90% பேர்கள் பெண்கள்)

ஜீன் கால்மெண்ட்


பஸ்டர் மார்டின். பிரான்சில் 1906. பிறந்தவர் வயது 104. இவர் ஒரு ஓட்டப் பந்தய வீரர். இன்றும்ஒரு குழாய் ரிப்பேர் கடையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். இவருக்கு 17 மக்கள். 97வது வயதில் வி ஆர் எஸ்ஸில் வந்துவிட்டு வாழ்க்கை போரடிக்கவே மீண்டும் வேலைக்கு சேர்ந்துவிட்டார்.


பஸ்டர் மார்டின்

இவருடைய நீண்ட ஆயுளின் ரகசியம் என்ன?

இவர்தான் உலகத்திலேயே வயதான மராத்தான் சாம்பியன். முதியோருக்கான 5 கிலோமீட்டர் , 10 கிலோமீட்டர், அரை மராத்தான் போட்டிகளில் இவருடைய சாதனைகள் இன்றுவரை முறியடிக்கப் படவில்லை. இன்றும் முதியோருக்கான போட்டிகளில் கலந்து கொண்டு ஓடுகிறார். லண்டன் மராத்தானுக்கு பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார் என்பது பழைய செய்தி. ஆயுளின் ரகசியம் ஏதுமில்லை என்கிறார். இவருடைய ஆரோக்கியத்தை சோதனை செய்த மருத்துவர்கள் இன்னும் 20 வருடத்திற்கு உத்தரவாதம் அளித்துள்ளனர்.

தமிழ் நாட்டில் 128 வயது வரை ஒரு பெண்மணி வாழ்ந்ததாக செய்தி நாளிதழில் பார்த்திருக்கேன். அது போல் ஆடவர் ஒருவர் 115 வயது வரை வாழ்ந்ததாகவும் பிறந்த வருடத்திற்கான ஆதாரமில்லாத தகவல்கள் மூலம் தெரிய வருகிறது. அவர் ஒரு பேட்டியின் போது அவரது முக்கிய பழக்கங்களில் இரண்டைக் குறிப்பிட்டிருந்தார். அது டீயும், பீடியும் என்பதுதான் விஷேசம் . தற்பொழுது ராமேஸ்வரத்தில் ஒரு மீன்கடையில் மீன் வெட்டும் வேலை செய்பவர் ஒருவருக்கு 102 வயதாகிறதாம். எங்கள் குடும்பத்தில் எனக்கு தெரிந்த வகையில் தாய் வழிப் பாட்டியும், தகப்பன் வழி பாட்டியும் முறையே 100 ,92 வருடங்கள் வாழ்ந்துள்ளனர். அவர்களின் உணவுப் பழக்கங்களில் முக்கியமாக குறிப்பிடும் விஷயம் ஏதுமில்லை, சராசரி உணவுதான்.

எந்த இனம்? எந்த நாடு?

(WHO)உலக சுகாதார அமைப்பின் தகவல்படி ஜப்பானில் வாழ்பவர்கள்தான் மற்ற எந்த நாட்டவரையும் விட ஆரோக்கியத்துடன் நீண்டநாள் வாழ்கிறார்களாம். அவர்களின் (DALE (Disability Adjusted Life Years )அதாவது நோயில் படுத்த காலத்தை தவிர்த்து) கணக்குப்படி உலகிலேயே அதிக சராசரி ஆயுள் கொண்ட நாடு ஜப்பான் ஆகும். அதன் மக்களின் சராசரி ஆயுள் 74.5 வருடங்களாகும். அடுத்து வருவது முறையே ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஸ்வீடன், இத்தாலி, ஸ்பெயின், கிரீஸ், ஸ்விட்சர்லாந்து, மொனாகோ, ஆண்டோரா. இதில் இந்தியா 139 வது இடத்தில் 64.7 வருடங்களுடன் உள்ளது. (எனகென்னவோ இது சற்று மிகைப் படுத்த்ப் பட்டதாக தெரிகிறது. 56 க்கு மேல் இருக்காது.)

ஆனால் எல்லா நாடுகளிலும் பெண்களின் சராசரி ஆண்களை விட 5 லிருந்து 10 வரை அதிகமாக உள்ளது. ரஷ்யாவில் இந்த வித்தியாசம் அதிகமாக 10 வருடங்கள் உள்ளது. இந்தியாவில் இது 5 க்குள்தான் இருக்கிறது.

பொதுவாக ஆண்கள் பெண்களை விட அதிகப் பிரச்சினைகளை (Risk) வாழ்க்கையில் சந்திப்பதால் அவர்களின் ஆயுளில் குறைவு ஏற்படலாம். ஆனாலும் இந்த ரஷ்யப் பெண்கள் விவகாரம் அதை மறுஆய்வு செய்ய வைக்கிறது. இதை வைத்துப் பார்க்கும் பொழுது குடும்ப அமைப்பில் யாருக்கு பாசமும் ஈடுபாடும் அதிகம் இருக்கிறதோ அவர்கள் நீண்ட ஆயுள் உள்ளவராக இருக்கிறார் என்று கூட வைத்துக் கொள்ளலாம்(5). அல்லது தெய்வ நம்பிக்கை 5 வருடங்களைத் தருகிறது எனலாம். அல்லது தொட்டனைத் தூறும் மணற்கேணியோ என்பதற்கிணங்க உயிரைத் தோண்டத் தோண்ட(அதாவது உற்பத்தி செய்ய செய்ய) உயிர் ஊறுகிறதோ?

எந்தநாட்டின் மக்கள் அதிக ஆயுள் உள்ளவராக இருக்கிறார்கள் என்று ஆராய்ந்தால் பூகோள அமைப்பின் முக்கியத்துவம் ஏதும் பங்கு வகிக்கிறதா எனக் கண்டு கொள்ளலாம். அந்த வகையில் பார்த்தால் ஜப்பான் நாட்டினர் நீண்ட ஆயுளுடன் இருப்பது தெரியவருகிறது. தனி நபர் சராசரி ஆயுள் இங்கு அதிகம். 100 வயதுக்கு மேற்ப்பட்டவர்கள் அதிகம் உள்ள நாடும் அதுதான். அதே இனமான மங்கோலியர்களாகிய பர்மியர்கள், கொரியர்கள், சீனர்கள் எல்லோருக்கும் இந்த பண்பு இல்லாததால் இது முற்றிலும் இடம் சார்ந்த விஷயம்தான் என்பது புலனாகுகிறது.

ஆக இடத்தில் என்ன இருக்கிறது.

ஜப்பான் ஒரு தீவுக்கூட்டமாக இருப்பதால், உணவு கடல் சார்ந்த உணவாகத்தான் இருக்கமுடியும். நீச்சல் ஒரு அவசியத் தேவை. எரிமலைகள் அதிகம் உள்ள நாடு என்பதால் புது மண்ணு, புது நாத்து, புது நெல்லு என இது ஒரு காரணமாக இருக்குமோ.(6)

சரி ”வயதாவது” என்றால் என்ன?

ஆராய்ச்சியாளார்கள் இது பற்றி ஆய்ந்து பலவிதமான கொள்கைகள் சொன்னாலும் இரண்டு கொள்கைகள் மட்டுமே ஓரளவுக்கு ஒத்து வருகிறது. நமது ஜீனுக்குள் செல்களில் பதிந்து வைக்கப் பட்டுள்ள பலதரப் பட்ட உயிரியியல் கடிகாரங்களின் மூலம் நமது ஆயுள் முடிவு செய்யப் படுகிறது என்று ஒருபிரிவினரும், நாம்வாழும் காலத்தில் ஏற்படும் செல்களின் இழப்பும் தேய்மானமும், அதனால் சேரும் அசுத்த, நச்சுப் பொருட்களின் அதிகரிப்பும் ஆயுளைக் குறைக்கிறது என்று ஒரு பிரிவினரும் கூறுகின்றனர்.

யார் ஆரோக்கியமானவர்கள்

உலகில் வடகிழக்கு ஆசியர்கள்தான் அதாவது (ஈரான் அதை ஒட்டியுள்ள வடக்குப் பகுதிகள் தான்) வடகிழக்குப் பகுதியும் அதை ஒட்டியுள்ள நாட்டின் மக்கள்தான் அழகாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறார்கள் என்பதாக அறியப் படுகிறது.. “ஆமாம் பெரிய பாக்தாத் பேரழகி” என்பார்களே ஞாபகம் வருகிறதா?. ஆனாலும் அழகு ஆரோக்கியம் இவை இரண்டுக்கும் நீண்ட ஆயுளுக்கும் சம்பந்தம் இருப்பதாகத் தெரியவில்லை. இதில் ஜெர்மானியர்கள் உருவத்தில் பெரியவர்களாக இருக்கிறார்கள், அவர்களின் சராசரி உயரம் ஆறடி . எல்லா மிருகங்களும் கண்டு அஞ்சும், சிங்கம் எவ்வளவுதான் அழகாகவும் கம்பீரமாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தாலும் அதற்கு ஆயுள் என்னமோ அற்பம் தான் அதாவது 25 வயதுக்குள்தான்.

மிகக் குறைந்த ஆயுள் உள்ளவைகளின் பொதுவான தன்மைகள் என்று பார்க்கும் போது அவைகளின் இதயத்துடிப்பில் ஒரு ஒற்றுமை இருக்கிறது. மிக அதிகமாக இதயத்துடிப்பு இருந்தால் அவைகளின் ஆயுள் குறைவாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆயுள் இதயத்துடிப்பிற்கு எதிர் விகிதத்தில் இருக்கிறது.(7)

(நேர் விகிதம் என்றால் ஒன்று கூடினால் மற்றொன்றும் கூடும், எதிர் விகிதம் என்றால் ஒன்று கூடினால் மற்றொன்று குறையும்.)

மெலிந்த உடலா கனத்த உடலா?

இங்கும் உறுதியான முடிவை எட்டமுடியவில்லை. ஒல்லியான தேகம் கொண்ட நாய் 15 வருடங்கள்தான் வாழ்கிறது ஆனால் கனத்த உடலமைப்பு கொண்ட யானை 60 வருடங்கள் வாழ்கினறன. மனிதரில் ஒல்லியானவர்கள் நீண்ட ஆயுளுடன் இருப்பது போல் தோன்றினாலும் சராசரி உடலமைப்பு உள்ளவர்களையும் ஒல்லியானவர் பட்டியலில் சேர்த்துவிடுவதால் கணக்கீட்டில் அந்த தவறு ஏற்படுகிறது. மெலிந்த உடலமைப்பு உள்ள நன்பர் ஒருவர் தினமும் நடைப் பழக்கமும் உள்ளவர் திடீரென்று ஒரு நாள் மாரடைப்பில் இறந்து விட்டார். அவருக்கு வயது 54, எடையோ 56 கிலோ தான். இன்னுமொரு நன்பர் 60 வயதில் 105 கிலோ எடையுடன் நடப்பதற்கே சிரமப் படுகிறவர் நன்றாக ஆரோக்கியமாக இருக்கிறார். ஆனாலும் நீண்ட ஆயுள் என்பது சராசரி உடலமைப்பை விட கூடும் எடைக்கு, எதிர்விகிதத்தில் உள்ளது என்பதையும் கஷ்டப் பட்டு ஒத்துக் கொள்ள வேண்டியதாக இருக்கிறது.(8)

உடற்பயிற்சி நீண்ட ஆயுளுக்கு உதவிடுமா?

உடற்பயிற்சி உதவிடுமா என்றும் கூற முடிய வில்லை.ஏனென்றால் இது உன்மையாக இருக்கும் பட்சத்தில் விளையாட்டு வீரர்களும் உடற் பயிற்சியாளர்களும் தான் நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும். ஹாக்கி விளையாடிக் கொண்டிருக்கும் போது ஒரு ஹாக்கி விளையாட்டு வீரர் மாரடைப்பால் இறந்த தகவல் செய்திதாளில் வந்துள்ளது. விளையாட்டு வீரர் தினசரி சாதாரண மனிதனைக் காட்டிலும் தீவிர பயிற்சி உள்ளவர் அவருக்கே இந்த நிலைமையா?. அதிலும் குறிப்பாக நீச்சல் ஒரு சிறந்த உடற்பயிற்சி, அப்படியானால் நீச்சல் வீரர்கள் நீண்டஆயுளுடன் இருக்கவேண்டும். அனால் அதை உறுதிப் படுத்தும் தகவல்கள் இல்லை. ஆனால் நடப்பதில்(Walking) சில நன்மைகள் இருப்பதை எனது நடைமுறை வாழ்க்கையில் கண்டுள்ளேன். உங்களது ஆயுள், நீங்கள் நடக்கும் தூரத்திற்கு நேர்விகிதத்தில் உள்ளது.(9) ஆகவே முடிந்த பொழுதெல்லாம் நடக்க முயற்சி செய்யுங்கள்.

நொறுங்கத் தின்றால் நூறு வயதா?

ஆமாம் இதில் உன்மை இருக்கிறது. நாய்களைப் பொறுத்தவரை இது 100/100 உன்மைதான். நாய்களுக்கு பற்கள் விழுந்து விட்டால் விரைவில் மரணத்தை தழுவுகின்றன. சரியாக மெல்லாமல் விழுங்கபடும் அதனுடைய கடினமான உணவு அதற்கு ஜீரணக் கோளாறுகளை ஏற்படுத்தி மரணத்துக்கு வழி வகுக்கிறது. முதலைகள் அப்படியே சாப்பிட்டாலும் ஆயுள் என்னவோ கெட்டி. அவற்றை விதி விலக்காக கொள்வோம். அது போல் தான் மனிதனுக்கும் வயதான காலத்தில் சரியாக மெல்லப்படாத உணவால் வயிற்றுப் பிரச்னைகள் ஏற்பட்டு அதுவே எமனாக மாறி ஆயுளைக் குறைக்கிறது. கண்பார்வைக் குறைபாடும் வயிற்றுக் கோளாறுகளை ஏற்படுத்தும். இப்பொழுது பற்கள் கட்டப்படுவதாலும் கண்பார்வை எளிதாக சரி செய்யப் படுவதாலும் தான் மனிதனின் சராசரி வயது கடந்த நூற்றாண்டில் 35 ஆக இருந்தது இப்பொழுது 60 ஆக கூடியுள்ளது.

புராணங்கள் என்ன சொல்கிறது.

புராணங்களில் ஆயுள் ஒவ்வொரு யுகத்திற்கும் ஒருமாதிரி சொல்லப்பட்டாலும் கூட கலியுகத்தை பொறுத்தவரை புராண சம்பந்தப் பட்ட வானியல் கணித முறையில் உள்ள ஜோதிடம் என்ன சொல்கிறது என்பதை நாம் கணக்கீட்டிற்கு தகுந்த ஆதாரமாக எடுத்துக் கொள்ளலாம். ஜோதிடமும் புராணகாலத்தைச் சேர்ந்தது தான் என்றாலும் அறிவியலாக அதை கணக்கில் கொள்வதில் தவறேதும் இல்லை. ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு கிரகமும் திசை நடத்தும் காலம் என்று உள்ளது. எல்லாக் கிரகங்களின் திசைக் காலத்தை கூட்டினால் ஒரு மனிதனது அதிகபட்ச ஆயுள் தெரிந்துவிடும்.

சூரியன்           06 வருடங்கள்
சந்திரன்          10 ,,
செவ்வாய்      07 ,,
இராகு              18 ,,
குரு                  16 ,,
சனி                  19 ,,
புதன்                17 ,,
கேது                 07 ,,
சுக்கிரன்          20 ,,

ஆக மொத்தம் 120 வருடங்கள்.

ஜோதிடமும் மனிதனுக்கு அதிக பட்ச ஆயுளாக 120 வருடங்களைக் குறிக்கிறது. அதுவும் இன்றளவில் சரியாகத்தான் இருக்கிறது. மனிதனது அதிகபட்ச ஆயுளை 2000 வருடங்களுக்கு முன்னதாகவே இந்தியன் வரையறுத்து உள்ள நேர்த்தியை பார்க்கும் போது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. இந்த இடத்தில் அதைச் சொல்லாமல் விட்டால் அது இந்தியனுக்குச் செய்யும் துரோகம் ஆகிவிடும்.

................................தொடரும்., இறவாமை ( IMMORTALITY). பாகம் 3

மேலும் படிக்க...!
top