இராகு கேது (பாகம் 4)

நாம் இந்த தொடரின் கடைசிப் பகுதிக்கு வந்து விட்டோம்.



சந்திரனின் ஒரு வருட சுழற்சியில் அதன் பாதை எப்படி இருக்கும் என்று மேற்கண்ட சித்திரத்தில் காட்டப் பட்டுள்ளது. பூமியே கதிரவனின் கைதிகளில் ஒருத்தி. (ஆங்கில வழக்கப் படி மட்டுமல்ல, நாமும் பூமித்தாய் என்றுதான் கூறுகிறோம்) . இந்தக் கைதிக்கும், அதிலும் ஒரு பெண்ணுக்கு அடிமை சிக்கினால் அவன் பாடு எப்படி இருக்கும் என்பதைத்தான் இந்தப் படம் விளக்குகிறது. அல்லக்கைகள் படும் பாட்டைதெளிவாக விளக்குகிறது. இதில் காட்டப் பட்டுள்ளது ஒரு சுமாரான நிலைமைதான், உன்மை நிலை இன்னும் மோசமானது. ஆனால் சோதிடத்தில் அத்தனை விஷயங்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப் பட்டது என்பதுதான் ஆச்சரியமூட்டக் கூடியது.


ராகுவும், கேதுவும் எல்லாக் கிரகங்களுக்கும் எதிர்த் திசையில் பூமியை சுற்றி வருவதையும் அவ்வாறு சுற்றி வருவதற்கு 18.5 வருடங்கள் எடுத்துக் கொள்கிறது என்பதையும் விளக்குவதற்கான அனிமேஷன் சித்திரத்தையும் கொடுத்துள்ளேன். இதில் ராகுவும் கேதுவும் சந்திரனின் வட்டப் பாதையில் இருப்பதால் ஒவ்வொரு சுற்றின் போதும் சந்திரன் ராகுவையும்( ஏற்றப் புள்ளி, Ascending node) கேதுவையும் (இறங்குபுள்ளி Descending node) ஒருமுறை சந்தித்து விட்டுத்தான் வருகிறது. இந்த சந்திப்புகள் எல்லாம் ”விழுங்குதல்” கணக்கில் எடுத்துக் கொள்ளப் படுவதில்லை. ஆனால் எப்பொழுது, சூரியன், பூமி,சந்திரன், ராகு கேது இவை ஐந்தும் நேர்கோட்டில் வருகிறதோ அப்பொழுதுதான் ”விழுங்குதல்” என்ற் கிரகணம் ஏற்படும்.

ராகு கேதுவைப் பற்றி பெரிய பெரிய ஜோதிடர்கள் கூட சரியாகப் புரிந்து கொள்ளாமல் உளறுகிறார்கள் என்பதால்தான் இந்தக் கட்டுரையை விரிவாக எழுதியுள்ளேன். ஆகவே இதன் வலைத் தொடர்பு முகவரியை உங்கள் ஜோதிட நன்பர்களுக்கு அனுப்பி வைத்து பயன் பெறச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.





இந்த பாம்புக் கதை இண்டர்னெட் வந்தடைவதற்கு இயற்றியவன் செய்த ஏற்பாட்டை எண்ணி ஒரு பத்து நிமிடங்கள் அவனது காலச் சூழலுக்குச் சென்று செலவு செய்யுங்கள். பேனா பேப்பர் இல்லாத காலம், எழுதப் படிக்கத் தெரிந்தவன் ஆயிரத்தில் ஒருவன், மனிதனது சராசரி ஆயுளோ 20 க்கும் கீழ், வாய் மொழிதான் வழக்கு, இப்படிப்பட்ட காலத்திலிருந்து தான் பாம்புக்கதை வந்து இண்டர்னெட்டில் அரங்கேறியது. இதற்காக அவன் என்ன செய்தான்?.
சொல்ல வந்த விஷயத்தை கவிதையாய், கதையாய், காமமாய், பக்தியாய், வரலாறாய், தகவலாய், அறிவியலாய், என்று பலதரப்பட்ட பார்மேட்களிலும், மீடியாக்களிலும், ஏற்றி பல தலைமுறைகள் தாண்டி மொழிகள் தாண்டி தப்பாமல் செல்ல வேண்டிய இலக்கு நோக்கி செலுத்திய அவனது திறமையை யோசித்துப் பாருங்கள். நீங்கள் உங்களை மஞ்சள் பத்திரிக்கைக்காரன் என்றோ, கறுப்புச் சட்டைக்காரன் என்றோ, காவிச் சட்டைக்காரன் என்றோ, உங்களை அடையாளப் படுத்துவது உங்களது ஒரே மாதிரியான குறுகிய பார்வைதான். ஆகவே பார்வையின் அகலத்தை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள். கோணத்தை மாற்றிப்பாருங்கள். நீங்கள் உலகுக்கு சொல்லவேண்டிய நல்ல தகவல் ஒன்றை உருவாக்குங்கள், அதனை குறைந்தபட்சம் ஒரு தலைமுறை தாண்டி நிற்குமாறு நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.

ஆகவே காமத்தைப் பார்த்து அசிங்கம் என்று கருதி அழிக்காமல் ஏதேனும் அறிவியல் இருந்தால் ஆராய்ச்சியை வளர்த்துக் கொள்ளுங்கள். உத்ராயணம், தெட்சிணாயணம் என்னும் இந்த ஒன்றுமில்லாத விஷயம் ”பகுத்தறிவாளர்” எத்தனை பேருக்கு இன்றைக்கு புரிந்து இருக்கும் என்று எனக்குத் தெரியாது. ஆனால் இந்த விஷயம் கடந்த 2000 வருடங்களுக்கும் மேலாக தமிழனிடமும் உள்ளது. சிறிது ஆழமாக ஆராய்ந்திருந்தால் கெப்ளருக்கும், கோப்பர் நிக்கஸூக்கும் கிடைத்த பேரும் புகழும் ஒரு தமிழனுக்கும் கூட கிடைத்திருக்கும். அப்படி கிடைக்காமல் போனதற்கு காரணம் இந்த கடவுள் மறுப்பாளர்களும், அவர்களது புராண, இதிகாசத் தாக்குதலும் தான் என்பது தெளிவாகத் தெரிகிறது.

ஒவ்வொரு கால கட்டத்திலும் ”பகுத்தறிவுப் பகலவன்”கள் என்ற பெயரில் அரை வேக்காட்டு ”அறிஞர்கள்” தோன்றி, மாத்தி யோசிக்க கற்றுக் கொடுக்காமல், குருட்டுத்தனமாக யோசிக்க கற்றுக் கொடுத்து அறிவியல் ஆர்வத்தை முடக்கி விடுகிறார்கள். இக்கதைகளை போற்றி பாதுகாப்பவன் தான் புத்திசாலியாகி விடுகிறான் என்பதை காணக் கிடைக்கும் தகவல்களை படித்து ஆராய்ந்து ஏற்றுக் கொள்ளுங்கள்.

முதலில் பாம்பாம், விழுங்குவதாம் என்று கேலி பேசிய விஞ்ஞானிகளும் மௌனமாக ஒத்துக் கொண்டு அதன் இருப்பிடத்தை டிகிரி சுத்தமாக அளந்து சொல்லி தங்களுக்கும் அறிவு இருக்கிறது என்று காட்டிக் கொள்கிறார்கள்.

"சைன்ஸ் டு டே" என்றொரு அறிவியல் மாதாந்திரப் பத்திரிக்கையில், சுமார் 30 வருடங்களுக்கு முன் சோதிடத்தை கிண்டலடித்து ராகு, கேது என்று இல்லாத கிரகங்களுக்கு பெயரிட்டு அதை அறிவியல் என்று முட்டாள்தனமாக உளறுகிறார்கள் என்று ஒரு பேராசிரியரின் கட்டுரையை வெளியிட்டு மகிழ்ந்தது.

அதே பத்திரிக்கை அடுத்த இருபது வருடங்களில் கோள்களின் இன்றைய நிலை என்று போட்டு ராகு, கேதுவின் நிலைகளை வெளியிட்டு ”அன்றைய அறிவியலை”க் காட்டிக் கொண்டு கட்டுரை எழுதிய பேராசிரியரை முட்டாளாக்கி விட்டது.

ஒன்றுக்குள் ஒன்றாக சம்பந்தப்பட்ட இருபுள்ளிகள். இதை சரியான முறையில் உருவகப் படுத்தி ஒரு பாத்திரத்தை உருவாக்கியுள்ள விதம் ஆச்சிரியப் படவைக்கிறது. ஒரு அறிவியல் நிகழ்ச்சியை ஒட்டி இவ்வளவு அற்புதமாக கதை பன்ன முடியுதே அதுதான் விஷயம். நீங்கள் முயற்சி செய்யுங்கள் அப்பொழுதான் இந்தக் கதையை புனைந்தவன், கொண்டுவந்து சேர்த்தவர்களின் அருமை புரியும். இன்றைய காலத்தில் ஊடகங்கள் என்று இண்ட்ர்னெட், டி.வி. ரேடியோ, செய்திதாள், போன் என பலதரப்பட்டவை உள்ளன. அனால் ஒரு 500 வருடங்களுக்கு முன்பெல்லாம் வாய்மொழிப் பாட்டும் கதையும் தான் ஊடகங்கள். ஆக கதை பன்னும் விதமும் கதையிலுள்ள ஈர்ப்பும்தான் அதனுடைய அமரத்துவத்திற்கு உத்திரவாதம்.

கிரகங்களையோ சூரியனையோ வைத்து அவைகளின் நிலையை சோதிடன் கணக்கிடவில்லை.பல ஒளிவருடங்கள் தொலைவிலுள்ள நட்சத்திரங்களை வைத்து, அருகிலுள்ள சூரிய மண்டலத்திலுள்ள கிரகங்களை கணக்கிட்டால் எல்லாவகையான சித்தாந்தங்களும் தானாக வந்து மாட்டிக் கொள்ளும் அல்லது காட்டிக் கொள்ளும்.

அவனைப் பொறுத்த வரை அக்காலத்தில் வானியல் என்பது சோதிடத்திற்கான படிக்கட்டுதான். வானியல் அவனுக்கு அத்துப்படி என்பதற்கு ராகு கேதுவின் உருவாக்கமே சான்று. இந்த வானியல் அறிவை பாமரனுக்கு ஏதாவது ஒரு வகையில் பயன் படுத்தும் ஆராய்ச்சி தான் சோதிடம். சோதிடம்தான் அவனது இலக்கு. உலகெங்கும் கி.பி 1500 களில் இந்தியாவின் சோதிடம்தான் நவீன அறிவியலுக்கான படிக்கட்டாக மட்டுமல்ல, நுழைவுச் சீட்டாகவும் இருந்தது என்பது நமது உள்ளுர் பகுத்தறிவுப் பகலவன்களது புத்தியில் ஏறவே ஏறாது.

உங்களுக்கு ஒரு தந்தி வந்தால், அதிலுள்ள தகவல் தான் முக்கியம். தகவலின் தன்மையை ஒட்டி, கொண்டு வந்த போஸ்ட்மேனை அடிக்கிற முட்டாளாகி விடக்கூடாது. மகிழ்ச்சியை மட்டும் அவனுடன் பங்கிடும் ”உயர்ந்த” மனிதனாக இருக்க வேண்டும். ஆகவே இதிகாசங்களும், புராணங்களுமாகிய போஸ்ட் மேனைப் போற்றுங்கள்.

மகாபாரதம் என்ற போஸ்ட்மேன் கொண்டுவந்த ஒரு தகவலைத்தான் எனது ’உயிரும் உயிரின் பிரிவும்” என்ற பதிப்பின் மூலம் ஆராயப் போகிறேன். எவ்வளவு பெரிய அறிவியல் தத்துவத்தை, எளிதாக போற போக்கில் சொல்கிறார்கள் என்பதை படித்து பார்த்து புரிந்து கொள்ளுங்கள்.

6 comments:

ராவணன் said...

//இந்த பாம்புக் கதை இண்டர்னெட் வந்தடைவதற்கு இயற்றியவன் செய்த ஏற்பாட்டை எண்ணி ஒரு பத்து நிமிடங்கள் அவனது காலச் சூழலுக்குச் சென்று செலவு செய்யுங்கள். பேனா பேப்பர் இல்லாத காலம், எழுதப் படிக்கத் தெரிந்தவன் ஆயிரத்தில் ஒருவன், மனிதனது சராசரி ஆயுளோ 20 க்கும் கீழ், வாய் மொழிதான் வழக்கு, இப்படிப்பட்ட காலத்திலிருந்து தான் பாம்புக்கதை வந்து இண்டர்னெட்டில் அரங்கேறியது. இதற்காக அவன் என்ன செய்தான்?.//

இதை நான் ஒத்துக்கொள்வதில்லை.
பாம்புக்கதை இயற்றியவன் வேறு...ராகு ,கேது..
மையப்புள்ளிகளைக் கண்டறிந்தவன் வேறு.ஒரு சினிமா எடுப்பவனுக்கும்,அதை விமர்சனம் செய்பவனுக்கும் உள்ள வேறுபாடு.
கதைகளைப் புனைந்தவனுக்கு உண்மை தெரியாது.

அகம்,புறம் என்று அனைத்தையும் கண்டவர் தமிழர்.
இதில் கடவுள் இல்லை.படைப்பாளி இல்லை.

நீங்கள் ஜோதிடம் என்று எழுதாமல் சோதிடம் என்று எழுதியதால் இந்தப் பின்னூட்டம்.

அது சோதிடமல்ல....சோதீடம்,,,
இல்லை சோதீட்டம்.

guna said...

good article differnt thinking please continue. thankyou thankyou thankyou

Chandru said...

ராவணன்
வருகைக்கும் பதிவுக்கும் நன்றி
நீங்கள் உங்களை மஞ்சள் பத்திரிக்கைக்காரன் என்றோ, கறுப்புச் சட்டைக்காரன் என்றோ, காவிச் சட்டைக்காரன் என்றோ, உங்களை அடையாளப் படுத்துவது உங்களது ஒரே மாதிரியான குறுகிய பார்வைதான். ஆகவே பார்வையின் அகலத்தை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள். கோணத்தை மாற்றிப்பாருங்கள்.

Chandru said...

Guna
வருகைக்கும் பதிவிற்கும் நன்றி

இர.கருணாகரன் said...

அன்பு சந்துரு எதிர்பார்த்ததற்கும் மேலாக விளக்கங்கள் தந்து விட்டீர்கள், அருமை.

எதையும் ஏற்போரும் மறுப்போரும் எக்காலமும் உண்டு, உங்கள் ஆக்கம் காலம் கடந்து நிற்கும் என்பதில் வேறு கருத்தில்லை, வாழ்க,வாழ்க,வளர்க.


மீண்டும் ஒரு ஆய்வு கட்டுரையை எதிர் பார்க்கிறேன்.


அன்புடன் கருணாகரன்6.இடைப்பாடி.

Chandru said...

இர.கருணாகரன்,
தங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி.
ஜோதிடம் பற்றிய கட்டுரைகள் நிறைய எழுதலாம் என்று இருக்கிறேன். தொடர்ந்து வருகை தாருங்கள்

top