இறவாமை ( IMMORTALITY). பாகம் 4


இறவாமை ( IMMORTALITY). பாகம் 1
இறவாமை ( IMMORTALITY). பாகம் 2
இறவாமை ( IMMORTALITY). பாகம் 3
 
இறவாமை ( IMMORTALITY). பாகம் 4
அல்லது
பெரியாருக்கும் டரிட்டாப்ஸிஸ் நியுட்ரிகுலாவிற்கும் என்ன சம்பந்தம் ?

பிரம்மச்சாரிகளின் ஆயுள் எப்படி?
பிரம்மச்சாரிகளுக்கு அதிர்ச்சியூட்டும் விஷயம் சொல்லப் போகிறேன். பொதுவாக பிரம்மச்சாரிகளின் ஆயுள், சம்சாரிகளின் அதாவது கல்யாணமானவர்களின் ஆயுளை விட 15% குறைவுதான் என ஆராய்ச்சியும் தகவல்களும் சொல்லுகின்றன. இதற்கு மாறாக நீங்கள் யாரையாவது குறிப்பிட்டால் அதற்குன்டான காரணத்தை இக்கட்டுரை முடிவதற்குள் தெரிந்து கொள்வீர்கள்.

லாகிரி வஸ்துக்கள்.

நூற்றுவர்களில் 90% பேர் லாகிரி வஸ்துக்களான, பீடி, சிகரெட், உபயோகிப்பவர்கள்தான். அதனால் அளவான உபயோகம் தவறில்லையோ எனத் தோன்றுகிறது. அல்லது அவர்களெல்லாம் தேர்ந்தெடுக்கப் பட்ட வித்துக்களாக இருப்பதால் எல்லாவற்றையும் தாங்கிக் கொள்ள முடிகிறது போலும்.

மது

குடியைப் பற்றி பேசினால் அது 35 வயதினருக்கு மேல் உள்ளவர்களது சமாச்சாரமாக கருத வேண்டும்.
அளவுக்கு மிஞ்சினால அந்த காயகல்ப மருந்தான அமிழ்தமே நஞ்சாகும் போது, பற்றி எரியும் ஆல்ஹகால், அளவுக்கு மிஞ்சினால் கேட்கவும் வேண்டுமா?. குடிப்பவர்களை

1) தீவிர குடிகாரர்கள்,
2) குடிகாரர்கள்,
3)மிதமான குடிகாரர்கள்

என மூன்று வகையாகப் பிரிக்கலாம். மது அருந்துவதில் நல்லதும் கெட்டதும் உண்டு. கெட்டதை முதலில் சொல்லிவிடுகிறேன். முதல் வகை தீவிர குடிகாரர்கள், மற்றும் இரண்டாவது வகை குடிகாரர்களின் ஆயுள், மது அருந்தாதவர்களின் ஆயுளை விட பாதிதானாம்.

இதில் நல்ல விஷயம் என்னவென்றால் மிதமான குடிகாரர்கள் மது அருந்தாதவர்களை விட 15% நீண்ட ஆயுளுடன் இருப்பதாக 25 வருட ஆராய்ச்சியின் முடிவாகும்

இங்கு இந்த 104 வயது இளைஞரின் கைகளில் உள்ளவற்றைப் பாருங்கள்.இவர் மிதமான குடிகாரராகத் தான் இருக்கமுடியும்ஆக நீண்ட ஆயுள் விஷயத்தில் இது வரை எழுதியதில் உள்ள முக்கிய குறிப்புக்களை பார்ப்போம்.உலகம் முழுவதும் எடுக்கப் பட்ட தகவல்களின் படியும், மனிதனது நீண்ட ஆயுள் என்பது 120 வயது என்பது எனத் தெரிய வருகிறது.

தாவரங்களின் நீண்ட வயதுக்கு காரணம்?.

தாவரங்களின் வாழ்வாதாரம் என்ன?.
மரங்களின் செல்கள் தொடர்ந்து புதுப்பிக்கப் படுவதாலும், மாறாத சூழலில் கிடைக்கும் ஆக்ஸிஸனும் தான் காரணிகள்.

விதி என்ன சொல்கிறது?

சோதிடம் நீண்ட ஆயுள் எனச் சொல்வது சாதாரணமாக 95 வயது வரைதான் ஆனால் அதிகபட்சமாக 120 வயது வரைக்குமான கணக்கீட்டிற்கு வழி வகுத்து உள்ளது..குழந்தை மரணம், கான்சர், விபத்து, முக்கிய உறுப்புக்களில் திடீரென ஏற்படும் சேதாரம் ஆகியவைக்கு எதிராக ஒன்றும் செய்ய முடியாது.அதைத்தான் விதி என்பதா?

உணவு

நமது உடம்பில் ஃப்ரீ ரேடிகல்ஸ் (Free Radicals)அதிகரிப்பதால் செல்கள் நோய் எதிர்ப்புத்தன்மை இழக்கிறது. இதற்கு ஆண்டி ஆக்ஸிடண்ட் (Anti Oxidant) பொருட்கள் உணவில் அதிகமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். மாதுளம் பழம், டீ, வால்நட் இவைகளை தினந்தோறும் சாப்பிட வேண்டும். அவ்வப்பொழுது மருந்தாக, சுக்கு, மிளகு, திப்பிலி, அமுக்ரா, ஜின்செங், ஆவாரை, வெள்ளைப் பூண்டு, நெல்லிக்காய், மீன் எண்னெய், இவற்றை ஏதாவது ஒரு வகையில் சேர்க்க வேண்டும். தற்பொழுது ஆராய்ச்சியாளர்கள் . ”உறுப்புக் கறி” (Organ meat) சாப்பிட சிபாரிசு செய்கிறார்கள். அதாவது இரத்தப் பொறியல், மூளை வறுவல், கால் சூப், குடல் குழம்பு, தலைக்கறி சாப்ஸ், இத்யாதி என எல்லாவற்றையும் சாப்பிடச் சொல்கிறார்கள்.

மக்களின் உணவுப் பழக்கங்கள் எதுவும் அதிமுக்கிய காரணிகளாக இல்லை. ஆனால் ”டீ”மட்டும் நீண்ட ஆயுள் கொண்ட எல்லாராலும் சாப்பிடப் பட்டிருக்கிறது.

உடற்பயிற்சி

உடற்பயிற்சியைப் பொறுத்தவரை, நடப்பது ஒன்றுதான் முக்கியமானதும், எளிமையானதும் எனத் தெரிய வருகிறது.

மூச்சுப் பயிற்சி.(வாசி யோகம்)

மூச்சடக்கி வாழ்ந்தால் முன்னூறு வருஷம் வாழலாம் என்பது ஆமை, முதலை இவைகளை வைத்து தெரிந்து கொள்ளலாம்.இரண்டுக்கும் பொதுவான குணம் மூச்சடக்கி சுமார் 2 மணி நேரம் கூட தண்ணீருக்குள் இருக்கும் திறமை உள்ளவை. உடலுக்கு கெட்டியான தோல் அமைப்பு உள்ளது.

120 வயதுக்கு மேல் வாழ்ந்த ஹ்பீப் மியானின் தொழில் இசைக் கருவி, கிளாரினெட் (துளைக்கருவி) வாசிப்பது ஆகும். (3)அவரது உணவுப் பழக்கங்களில் ஏதும் தனிச் சிறப்பு இல்லை. ஆனால் சராசரியாக ஒரு நாளைக்கு 15 டீ குடிப்பாராம்.(4)ஒரு வேளை துளைக் கருவிகள் வாசிப்பவர்களுக்கு நீண்ட ஆயுள் இருக்கலாம். ஏனெனில் நுரையீரல் சம்பந்தப் பட்ட விஷயமாக இருப்பதால் தானோ? அதனால்தான் சித்தர்களும் யோகிகளும் பிரணாயாமத்திற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் போலும்.

வேறு காரணங்கள்.

”இனவிருத்திக்கான ஹார்மோன்களின் சுரப்புத்தான், செல் புதுப்பித்தலை கட்டுப் படுத்துகிறது.அங்குதான் இருக்கிறது சூட்சுமம்.இதைப் பற்றி பின்னர் பார்ப்போம்.” என்று முந்தைய பகுதியில் சொல்லியிருந்தேன்.

டரிட்டாப்ஸிஸ் நியுட்ரிகுலா (Turritopsis nutricula) என்னும் ஜெல்லி ஃபிஷ் வளர்ந்து பருவம் அடைந்து இனப் பெருக்கம் செய்த பின் மீண்டும் பருவம் எய்த தயாரான நிலைக்கு (கன்னித்தன்மைக்கு) வந்துவிடும். இவ்வாறு மீண்டும் மீண்டும் சுழற்சி முறையில் பருவங்களில் இருப்பதால் இதுதான் உலகிலேயே உயிரியல்படி சாகா வரம் பெற்ற உயிரினமாக கருதப் படுகிறது என்றும் சொல்லியிருந்தேன் .இதில் உள்ள சூட்சுமம் எப்படி என்று ஆராயுங்கள் உங்களுக்கு நோபல் பரிசுதான்.

இதைத்தான் நன்பர் நிலவன் பாகம் 1ன் பதிவின் பின்னூட்டத்தில் விளக்கமாக சொல்லும்படி கேட்டிருந்தார். இனவிருத்திக்கான ஆர்வமும் அதற்கான ஹார்மோன்களின் சுரப்பும்தான் சாகா வரத்திற்கான கன்னித்தன்மைக்கு காரணிகளாகும். இங்கும் ”காதுக்குள் ஓதும் நித்திய பரமானந்தத்தின்” கைவரிசை உள்ளது அதையும் பின்னர் பார்ப்போம்.

தாயாருக்கு தலைமகனையும் தந்தைக்கு கடைசி மகனையும் பிடிக்கும் என்பார்கள். தாயுக்கு தான் மலடியல்ல என்பதை நிரூபிக்க பிறந்தவன் முதல் மகன். தகப்பனுக்கோ தனது “ஆண்மையை” நிரூபிக்க பிறந்தவன் கடை மகன் . ஆக இருவருக்கும் இனவிருத்தியின் மீதுள்ள ஆர்வம்தான் பாசத்திற்கான காரணம்.

இதனுடைய தத்துவத்தைத்தான் மனிதன் தெரிந்தோ தெரியாமலோ பின் பற்றுகிறான். சாகக் கிடக்கும் கிழடுகளுக்கு இளம் கன்னிப் பெண்களை திருமணம் செய்துவித்தால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம். காரணமில்லாமல் காரியமில்லை. அந்த திருமணம் கணவன் என்ற அந்தஸ்தை வழங்க வேண்டும். (தொடுப்பு எல்லாம் கணக்கில் வராது என நினைக்கிறேன்.) இது நமது புராணங்களிலும் காணப் படுகிறது. மன்னர்களும் வயதான காலத்தில் திருமணம் செய்வதும் இதற்குத்தான்.

இதை ஒட்டிய பழமொழி ஒன்றும் உள்ளது. ”கிழவன் பிள்ளை கிழங்கு போல” என்று.இது பற்றி நீங்களே ஆராய்ந்து கொள்ளுங்கள்.அல்லது உங்களுக்கு தோன்றியதை அல்லது தெரிந்ததை எனக்கு எழுதுங்கள்.

அந்த முறையில்தான் பெரியார் தள்ளாத வயதிலும் யாரோ தீட்சிதர் சொன்னார் என்று பதிவுத் திருமணம் செய்து கொண்டார். அதனால் அவர் ஆயுள் கூடியது. வயோதிகத் திருமணத்தை மிக மிகக் கடுமையாக எதிர்த்தவர், ஒருகட்டத்தில் உயிர் பயத்தினால் தான் செய்த வயோதிக திருமணத்தின் காரணத்தை தன் தொண்டர்களுக்கு அவரால் சொல்ல முடியவில்லை. பாவம் அவரது தொண்டர்கள் இது தெரியாமல் அவருக்காக பலவிதமான சப்பைக் கட்டு கட்டினார்கள், கட்டுகிறார்கள்.

வயோதிகர்கள் திருமணம் செய்து கொண்டதால் இனவிருத்திக்கான ஹார்மோன்கள் அவர்களுக்குத் தெரியாமலே சுரக்க ஆரம்பிக்கும் போது செல்களின் புதுபித்தல் தொடர்கிறது.அதனால் ஆயுள் கூடுகிறது. ஆகவே பேராசைப் படும் இளம் பெண்களே கிழடுகளை கட்டிக் கொண்டால் விரைவில் சொத்துக்கு உரிமை கொண்டாடலாம் என தப்புக் கணக்கு போட்டு ஏமாந்து விடாதீர்கள்.

ஜப்பானின் ஒகினோ மக்களின் பழக்க வழக்கங்களை பின் பற்றுங்கள். இது தனி மனிதனுக்கானவை அல்ல. நீண்ட ஆயுள் கொண்ட மக்கள் உள்ள ஒரு சமூகத்திற்கான வழிமுறைகள்.

1) உணவு முறை. தாணியங்கள், மீன், தாவர வகை, முட்டை பால், மற்றும் சிறிது இறைச்சி.
2) குறைந்த மனவழுத்தம் கொண்ட வாழ்க்கை முறை.
3)வயதானவர்களிடம் அதிக அக்கறையும், மரியாதையும் கொடுக்கும் சமூகமாக வாழும் முறை.
4) பொது விஷயங்களில் ஈடுபாடும் அக்கறையும், தினசரி நடையும், தாவரம், மிருகங்கள் ஆகியவற்றை பேணுதலும்.
5) தெய்வீக நம்பிக்கையும், பிரார்த்தனையும்.

சரி இப்பொழுது அந்த, காதுக்குள் ஓதும் ”நித்திய பரமானந்தரை”ப் பற்றிப் பார்ப்போம், முதலில் அவருக்கு பெயர் சரியில்லாததால் அவர் பெயரை மாற்றி விடுவோம்.. இனிமேல் சுருக்கமாக ”நிபா” என்று அழைப்போம்.அவரைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ள ஒரு விளக்கம் தேவைப் படுகிறது.

வேக்ஸின் அல்லது தடுப்பூசி என்றால் என்னவென்று எல்லாருக்கும் தெரியும் ஆனாலும் அது பற்றிய செய்தியை புதுப்பித்துக் கொள்வோம். சில தொற்று நோய்க் கிருமிகள் மனித உடம்பில் தொற்றியவுடன் அபாரமாக பரவி விடும். உடம்பிலுள்ள செக் போஸ்ட்கள் (immune centers) எனப்படும் இம்யூன் செண்டர்கள் அவைகளை ஆராய்ந்து ,அடையாளம் கண்டு, அவைகளுக்கேற்ற ஆயுதம் தயார் செய்யவும், அதை கொண்ட அதிரடிப் படையை உருவாக்கும் முன்பே , பல்கிப் பெருகி அதிரடி படையை முழுங்கி ஏப்பம் விட்டுவிடும். அது போன்ற தொற்று நோய் கிருமிகளுக்கு சரியான மாற்று மருந்து கண்டு பிடிக்க முடியாததால் அவற்றிற்கு வந்தபின் காப்போம் என்ற வித்தை செல்லுபடியாகாது. ஆகவே வருமுன் காப்போம் என்பதுதான் சரியான தீர்வு. முள்ளை முள்ளால் எடுக்கும் நுட்பம்தான் வேக்ஸின்.

ஈன்றெடுத்த கன்று இறந்து விட்டால் மாடு பால் சுரப்பதை நிறுத்திவிட்டு அடுத்த கன்றைப் பெறுவதற்கான கலவிக்கு விரைவில் தயாராகிவிடும் ஆனால் அதனிடமிருந்து பாலை கறப்பதற்கு மனிதன் இறந்த கன்றை பாடம் செய்து வைக்கோல் கன்றாக மாற்றி, மாட்டிடம் கான்பித்து அதை ஏமாற்றி பாலை கறந்து விடுகிறான். வேக்ஸினும் கிட்டதட்ட இது மாதிரிதான்.

அபாயகரமான தொற்று நோய்க் கிருமிகளை பாதுகாப்பான சூழ்நிலையில் வளர்த்து, அவற்றின் உயிரைமட்டும் எடுத்துவிட்டு அதாவது வைக்கோல் திணிக்கப் பட்ட கன்றுகள் போல் ஆக்கி, அவற்றை மனித உடலுக்குள் செலுத்திவிடுவார்கள். அதாவது சாதரணமாக நோய் தொற்றுவதற்கு 20 கிருமிகள் போதுமென்றால் இவர்கள் பில்லியன், டிரில்லியன் கணக்கில் செலுத்துவார்கள். இப்பொழுது நம் உடம்பிலுள்ள செக் போஸ்ட்டுகளில் இந்தக் (வைக்கோல் கன்றுகள்) கிருமிகள் தடுத்து நிறுத்தப் பட்டு, நிர்வாணமாக்கப் பட்டு, போட்டோ எடுக்கப் ப்ட்டு, ஸ்கேன் செய்யப் பட்டு, எதிரிகள் என்ற முத்திரை குத்தப் படுகிறது. இவர்களது எண்ணிக்கை மற்றும் போட்டோவுடன் கூடிய ஸ்கேன் ரிப்போர்ட் தலைமைச் செயலகத்துக்கு அதாவது மூளைக்கு அனுப்பப் படுகிறது. அங்கு ஒரு பெரிய் (Research and Development) ஆராய்ச்சி சாலையில் அவைகள் ஆராயப் பட்டு எந்தமாதிரி வெட்டி, எத்தனை துண்டுகள் போட்டால் ஆபத்தில்லாத எதிரியாகவும், அபாயமில்லாத கழிவுகளாகவும் மாற்றி வெளியேற்ற முடியும் என ஆராய்ந்து அதற்கான மருந்தை தயார் செய்து அனுப்பிவிட்டு பதிலுக்காக காத்திருப்பார் செயலக அதிகாரியும், மருத்துவக் குழுத்தலைவரும் ஆனவர். பத்து கிருமிகளுக்கான மருந்தென்றால் இரண்டு நாட்களில் தயாராகிவிடும். பல்லாயிரம் கோடி கிருமிகளுக்கு தனியாக ஒரு தொழிற்சாலையே நிறுவப் பட்டு பல வாரங்கள் இயங்கிக் கொண்டே இருக்கும். கோடிக்கணக்கான உயிரற்ற கிருமிகளுடன் யுத்தம் தீவிரமாக நடந்து கொண்டிருக்கும். இந்த சந்தடியில் உள்ளே நுழையும் உயிருள்ள சில கிருமிகளின் நிலைமையை யோசித்துப் பாருங்கள். நார்நாராக் கிழித்து எறியப்படும். இவ்வாறுதான் நோய் தடுக்கப் படுகிறது. நிறுவப் பட்ட தொழிற்சாலையும் தயாரித்து அனுப்ப பட்ட மருந்தும் பல வருடங்களுக்கு பாதுகாப்பளிக்கிறது. இந்த மருந்தை மனிதனால் இதுவரை தயார் செய்ய முடியவில்லை.

சில சமயங்களில் ஆபத்தான அந்த எதிரியின் ( கிருமியின்) ஆபத்தில்லாத உடன் பிறப்புகளை அனுப்பினாலும் மருந்து ரெடியாகிவிடும் அல்லது அந்த எதிரியின் ”பாடி” கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை அவன்(ள்) போட்டிருக்கும் சட்டையை அனுப்பினால் கூட மருந்தை தயாரித்து அனுப்பக் கூடியவர் நமது மருத்துவ அதிகாரி. சட்டையை வைத்தே ஆளை அளவெடுத்துக் கொள்ளும் திறமை படைத்தவர். இது வரை வாழ்ந்து, இறந்த நமது முன்னோர்களின் அனைத்து அனுபவ அறிவையும் கொண்டவர். அவர் ஒரு சிறந்த தத்துவ ஞானி. சிறந்த நிர்வாகி. சர்வகலா வல்லவர். அவர்தான் நான் ஏற்கனவே குறிப்பிட்ட நித்திய பரமானந்தர் என்ற ”நிபா”. அவர் நம்மில் ஒவ்வொருவரிடமும் இருக்கிறார்.

நீங்கள் சொல்வதைப் பார்த்தால் மிகச் சிறந்த அறிவுஜீவி, புத்திமான் எனக் கூறுகிறீர்கள். ஆனால் உயிரற்ற கிருமிக்கும் உயிருள்ள கிருமிக்கும் வித்தியாசம் தெரியாமல் மருந்தை தயார் செய்கிறாரே ஏன்? வைக்கோல் கன்றைப் பார்த்து பால் சுரக்கும் மாட்டைப் போல் ஏமாற்றப் பட்டாரா?

இல்லை இல்லை அவரைப் பொறுத்தவரை, நமது உடலின் பாதுகாப்பை பொறுத்தவரை ”தலையில்லாத எதிரிதான் தொந்திரவு இல்லாத எதிரி” அதற்காகத்தான் விழிப்புடன் இருக்கிறார்.

சரி இப்பொழுதாவது சொல்லுங்கள் அவர் காதுக்குள் ஓதும் செய்திதான் என்ன?

அடுத்த பாகத்தில் பார்ப்போம்........................................

8 comments:

brightvision said...

good article and more infomation

நிகழ்காலத்தில்... said...

பொறுமையாக ஆனால் தொடர்ச்சியான விளக்கங்கள்..

தொடருங்க நண்பரே

ஃபாலோயர் ஆகிவிட்டேன்:)

நாட்டாமை said...

ஆராய்ச்சி சாலையில் அவைகள் ஆராயப் பட்டு எந்தமாதிரி வெட்டி, எத்தனை துண்டுகள் போட்டால் ஆபத்தில்லாத எதிரியாகவும், அபாயமில்லாத கழிவுகளாகவும் மாற்றி வெளியேற்ற முடியும் என ஆராய்ந்து........

அற்புதமான எளிய தமிழ் நடை

Chandru said...

bright vision

நிகழ்காலத்தில்

நாட்டாமை

அனைவரது வருகைக்கும் பதிவுக்கும் பாராட்டுக்கும்
நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

புகழன் said...

இந்தத் தொடரையும் படித்து விட்டேன். இன்னும் படிக்க ஆவலாக உள்ளது. தொடர்ந்து எழுதுங்கள்.

Chandru said...

புகழன், வருகைக்கும் பதிவிற்கும் நன்றி. நேரமும், ஆர்வமும் இருந்தால் இராகு கேது தொடரையும் படித்து விட்டு கருத்துக் கூறுங்கள்

அரவிந்த் குமார்.பா said...

// கோடிக்கணக்கான உயிரற்ற கிருமிகளுடன் யுத்தம் தீவிரமாக நடந்து கொண்டிருக்கும். இந்த சந்தடியில் உள்ளே நுழையும் உயிருள்ள சில கிருமிகளின் நிலைமையை யோசித்துப் பாருங்கள். நார்நாராக் கிழித்து எறியப்படும். // இதை விட எளிமையாக 'நோய் தடுப்பு' முறையை எந்த மருத்துவராலும் எம் போன்ற பாமரர்க்கும் புரியும் வகையில் விளக்கமுடியாது..

Uma said...

உங்களுக்கான பிரத்யேக நடையில் அருமையான விளக்கங்கள்!வாழ்த்துக்கள் நண்பரே!

top