தமிழக மின்வெட்டும், யுபிஎஸ்ஸூம்.4
அல்லது
இண்டக்சன் ஸ்டவ்
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=473365
மேலும் விவரங்களுக்கு
http://imajeenyus.com/electronics/20060908_induction_cooker/index.shtml
http://en.wikipedia.org/wiki/Induction_stove
http://www.ameritherm.com/
....................தொடரும்.
நிபா: ஆமா பட்டர் பிளைக்கு ஏதும் காசு வாங்கினாயா? அடுத்து யுபிஎஸ் பற்றித் தானே?
நான்: உனக்குத் தெரியாமலா? படுத்தாதய்யா அடுத்து யுபிஎஸ் தான்.ஆனால்..
தமிழக மின்வெட்டும், யுபிஎஸ்ஸூம்.1
தமிழக மின்வெட்டும், யுபிஎஸ்ஸூம்.2
தமிழக மின்வெட்டும், யுபிஎஸ்ஸூம்.3
இரா. சந்திரசேகர்.
பழனி.
அல்லது
இண்டக்சன் ஸ்டவ்
செவ்வாய் கிரகத்திற்கு மனிதன் சென்றால், அவனுக்கு தேவைப் படும் ஆக்ஸிசனை, மின்சக்தியினால் தயாரிக்க உருவாக்கப் பட்ட தொழில் நுட்பத்தை நாசா ஓரங்கட்டி விட்டது. அதை நமது நண்பர் ஸ்ரீதர் மாற்றி யோசித்து, ஆக்ஸிஸனை கொடுத்து அதிலிருந்து மின்சக்தியை தயாரிக்க பயன்படுத்தி விட்டார். உலகம் போற்றும் உன்னத கண்டு பிடிப்பாகி விட்டது. சந்தேகமில்லாமல் இந்த நூற்றாண்டின் இணையற்ற கண்டு பிடிப்பு என்றே கூறலாம். இந்த விடியோவில் ஸ்ரீதர் கையில் வைத்திருக்கும் புளூம்பாக்ஸ் ஒரு அமெரிக்க வீடு அல்லது இரண்டு ஐரோப்பிய வீடு அல்லது , நான்கு இந்திய வீட்டிற்கு மின்சக்தி அளிக்கக் கூடியதாம். ஆயிரக்கணக்கான சோலார் பேனல் வைத்து தயாரிக்க கூடிய மின்சக்தியை ஐந்தே ஐந்து புளூம் பாக்ஸ் மூலம் தயாரிப்பதையும் பாருங்கள். நல்ல விஷயம் நாலு பேரைச் சென்றடைவதற்கு நாற்பது முறை கூறினாலும் தப்பில்லை என்பதால், சென்ற பதிவிலும் இணத்திருந்தேன். அதில் பார்க்காதவர்களுக்காக இங்கும் பதிவிட்டுள்ளேன்.
Breaking News
புதிய மின்தடம் அமைப்பதில், தனியார் மின் நிலையத்திற்கு ஆதரவான ஒழுங்குமுறை ஆணைய உத்தரவை, மின்சார தீர்ப்பாயம் அதிரடியாக ரத்து செய்துள்ளது. விவரங்களுக்கு கீழே சுட்டி கொடுத்துள்ளேன் தட்டிப் பார்க்கவும். இது போல் பெட்ரோல் விலை ஏற்றத்திற்கும் ஒரு குட்டு வைத்தால் நன்றாக இருக்கும். அங்கும் இதே பிரச்னைதான்.
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=473365
Breaking voice
"என்னய்யா இது கதையா இருக்கு, தமிழக மின்வெட்டும், யுபிஎஸ்ஸூம் என்று ஆரம்பித்து மின்வெட்டை முடித்து விட்டு யுபிஎஸ்க்கு வருவீங்கன்னு பார்த்தா மிக்ஸி, ட்யூப் லைட், அடுப்பு, கிரைண்டர் ன்னு போய்க்கிட்டே இருக்கீங்க. விட்டா ஜீரோ வாட்ஸ் பல்புன்னு ஆரம்பிச்சுருவீங்க போல இருக்கு. எப்ப யுபிஎஸ்ஸூக்கு வரப் போறீங்க அதுக்கு முன் மின்வெட்டும் தீர்ந்து யுபிஎஸ்க்கு வேலை இல்லாம போயிரும்."
ஒன்னுமில்லைங்க இது ஃபோர் கிரவுண்ட் வாய்ஸ்தாங்க. நேருக்கு நேர் பார்த்து நம்ம நிபா .கேட்டுட்டார்.
நல்ல வேளை ஞாபகப் படுத்தினார், ஜீரோவாட்ஸ் பல்பை பற்றி, அதையும் விடப் போறதில்லை. ஆனா அதுக்குன்னு ஒரு பதிவு தனியா போடறது ரொம்ப டூமச் ஆயிரும். இந்த ஜீரோ வாட் பல்புன்னு வெட்கமில்லாம சொல்லியே விக்கிறார்கள் நாமும் வெட்கமில்லாமல் அந்தப் பெயரைச் சொல்லித்தான் வாங்க வேண்டியதிருக்கு. உண்மையிலே ஜீரோ வாட் பல்பு 15 லிருந்து 20 வாட்ஸ் எடுத்துக் கொள்ளக் கூடியது. அதைத் தவறுதலாக ஜீரோ வாட் என்று உபயோகத்தில் பயன் படுத்துகிறோம்.
கடையில் போய் "கம்ப்யூட்டர் சாம்பிராணி "என்று சொல்லிக் கேட்டு, வாங்க கேவலமாத்தான் இருக்கு என்ன பன்றது, அதை பெயராக்கி விட்டார்கள். ஆனாலும் நான் இப்பொழுதெல்லாம் "சாம்பிராணி வில்லை "என்றுதான் சொல்லுகிறேன்.
நிபா : பொய்,பொய் போனவாரம் வெள்ளிக்கிழமை கூட நீ கடையில் கம்ப்யூட்டர் சாம்பிராணி என்று சொல்லித்தானே வாங்கினாய்?
நான்: யோவ் நான் முதலில் வில்லை என்றுதான் சொன்னேன் கடைக்காரருக்கு விளங்கவில்லை, அதனால்தான் அப்படி சொல்ல வேண்டியதாயிற்று
மின் வெட்டை பற்றி சொல்லிவிட்டால் மட்டும் போதாது. அதிலுள்ள மின் சிக்கனம், மின் சேமிப்பு ஆகியவற்றைப் பற்றிப் பேசும் போது கண்டிப்பாக மின் சாதனங்களைப் பற்றி எழுதித்தான் ஆக வேண்டும். மேட்டரை விட்டு விலகிப் போவது போல் தோன்றினால் கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள்.
வினோத் குமாரின் கேள்வி : இண்டக்சன் ஸ்டவூ நல்ல கண்டுபிடிப்பாக இருக்கலாம். ஆனால் நடைமுறையில்... அது காந்தத்தை பயன்படுத்துது.. காந்தத்தால் செறிவூட்டப்பட்ட உணவு உடல் நலத்துக்கு கேடுன்னு கேள்விப்பட்டேன்... ?
நான்: அதெல்லாம் கிடையாது. நமது மூளை கூட எலக்ட்ரான் நியூரான் சமாச்சாரம்தான் அதற்காக நம்மை முழுமையாக காந்தத்தால் இயக்க முடியாதல்லாவா?. நாம் சமைக்கும் உணவு ஃபெரோ மெட்டாலிக் (Ferro metallic) கலவை அல்லது சம்பந்தம் இருந்தால் தான் காந்தத்தால் செறிவூட்டமுடியும். அதுமட்டுமில்லாமல் ஃபெரோ மெட்டாலிக் ஆக இருந்தால் சட்டியிலிருக்கும் போதே கருகிவிடும். அது ஒரு மாதிரியான மின்னோட்டம்தான் அதற்கும் காந்த சக்திக்கும் தொடர்பு இல்லை. அதையும் மீறி ஏதாவது இருந்தால் அது கணக்கில் கொள்ளத் தக்கதல்ல (Negligible) என்பது என் அபிப்பிராயம்.
![]() |
இண்டக்சன் ஸ்டவ் |
என்னைக் கவர்ந்த மின்சாதனங்களில் இண்டக்சன் ஸ்டவ் உம் ஒன்று. மிகவும் அற்புதமான கண்டுபிடிப்பு.ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்கவேண்டிய சாதனம். இதனுடைய சிறப்பையும், பெருமையையும் சொல்லி முடியாது. இதை உபயோகித்த பெண்களுக்குத் தான் தெரியும்.
மற்ற நடைமுறையில் உள்ள மின்கம்பிச் சுருள் அடுப்புகளைவிட மின்காந்த அடுப்பு எனப் படும் இண்டக்சன் ஸ்டவ் (85% ) அதிக சக்தி மாற்றம் (The efficiency of energy transfer ) கொண்டது. அதாவது நாம் கொடுக்கும் மின்சக்தியில் 85 சதவீதத்தை நமக்கு முழுமையாக பயன் படுத்தக் கூடிய வெப்ப சக்தியாக மாற்றிக் கொடுக்கக் கூடியது.
ஆனால் மின்கம்பிச் சுருள் அடுப்புகள் 60 லிருந்து அதிகபட்சமாக 70 சதவீதம் சக்தி மாற்றும் திறமை கொண்டவை. எரிவாயு அடுப்புகளோ அதை விட மிகவும் குறைவு, வெறும் 40% சக்தி மாற்றம் தான் கொடுக்கும். இவை இரண்டுமே முதலில் பாத்திரத்திற்கும் அடுப்புக்கும் இடையில் உள்ள காற்றை சூடேற்றி, அந்தக் காற்றின் வெப்பத்தின் மூலம் முழுப் பாத்திரத்தையும் சூடேற்ற வேண்டும். பின்னர் பாத்திரத்தின் சூடு உணவை வேகவைக்க வேண்டும். ஆனால் இண்டக்சன் ஸ்டவில் நேரடியாக பாத்திரத்தின் அடிப்பாகம் மட்டும் சூடேற்றப் படுகிறது. கொடுக்கும் சக்தி அப்படியே உபயோகப் படுத்தப் படுகிறது.
இண்டக்சன் அடுப்பு ரூபாய் 1300லிருந்து 5000 ரூபாய்வரை கிடைக்கிறது. இன்னும் விலை குறைய வாய்ப்புள்ளது. ஒரே ஒரு காயில் மற்றும் சில எளிய பொருட்கள் உள்ளதால் விலை குறைய வாய்ப்பு உள்ளது. மேலும் இதன் பாகங்களைப் பற்றி அறிந்து கொள்ள கீழே கொடுக்கப் பட்டுள்ள சுட்டியை தட்டிப் பார்க்கலாம் . ஏனென்றால் அடுப்பே 1500 ரூபாய்தான் அது தெரியாமல் சிலர் 2000 ரூபாய் ரிப்பேருக்கு செலவு செய்வார்கள். அட்லீஸ்ட் அதன் பாகங்களை தெரிந்து கொண்டால் கூட போதும்.
மேலும் விவரங்களுக்கு
http://imajeenyus.com/electronics/20060908_induction_cooker/index.shtml
http://en.wikipedia.org/wiki/Induction_stove
மேலும் இந்த தொழில்நுட்பத்தால் என்னென்ன விதமான ஹீட்டிங் முறைகள் உள்ளன என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.ஒரு கம்பிச் சுருளில் மின்சாரம் பாயும் பொழுது அதன் அருகாமையில் ஒரு வித மின்காந்தத் தூண்டல் (Edddy current) ஏற்படுகிறது. அந்தத் தூண்டலுக்கு அருகாமையில் சிக்கும் இரும்பு சம்பந்தப் பட்ட உலோகங்கள், அதற்கு ஒரு வித பயங்கரமான தடையை ஏற்படுத்துவதால் வெப்பமடைகிறது.
http://www.ameritherm.com/
காலம் கலிகாலம் ஆகிவிட்டது. எல்லாம் தலைகீழாக நடக்கிறது. இந்த அடுப்பில் ஒரு எச்சரிக்கை விடப் பட்டுள்ளது. அது என்னவென்றால் " பாத்திரம் அதிக வெப்பமடைந்தால் அதிலிருந்து வெப்பம் அடுப்புக்கு வந்து விடும், ஆகவே அடுப்பு லேசாக சுடலாம்." இப்பொழுது நம்புகிறீர்களா கலி முற்றிற்று என்று. எப்பொழுதும் அடுப்பிலிருந்துதான் வெப்பம் பாத்திரத்துக்குப் போகும் ஆனால் இண்டக்சன் அடுப்பில் மட்டும் பாத்திரத்திலிருந்து வெப்பம் அடுப்புக்கு செல்லுமாம்.
![]() |
எச்சரிக்கை |
இண்டெக்சன் அடுப்பு எந்த இடத்திலும் சுடாது.ஆனால் வைக்கும் பொருட்களை சூடேற்றும் திறமை கொண்டது. நெருப்பின் அபாயம் அற்றது. தீச் சுவாலைகள் இல்லாததால் எதிலும் தீப்பற்றாது. மிக விரைவில் சூடேறக் கூடியது. சீரான வெப்பக் கடத்தல் கொண்டது. ஆபத்தில்லாதது. மின் அதிர்ச்சி கொடுக்காது. எளிமையான, அதிநுட்பமான கன்ட்ரோல் கொண்டது.எளிதில் எடுத்துச் செல்லும் அளவிற்கு சிலிம்மானது. எடை குறைவானது. பெண்களூக்கேற்ற அடுப்பு இதுதான். ஸ்டவ் வெடிப்புக்கு இனி வழி இல்லை.
மிகவும் அறிவுள்ளது, சொன்னபடி செய்யக் கூடியது. ஆமாம் பாத்திரத்தை எடுத்து விட்டால் தானாகவே இயக்கத்தை நிறுத்திக் கொள்ளும். குறிப்பிட்ட நேரத்திற்குள் வைத்து விட்டால் மீண்டும் ஆன் செய்து கொள்ளூம். பாத்திரம் கருக்காது. பாத்திரத்திலிருந்து சிதறி விழும் பொருட்கள் சூடேறாமல் இருப்பதால் அடுப்பை சுத்தம் செய்வது எளிது.குறிப்பிட்ட நேரம் வரை சூடேற்றச் சொல்லி விட்டு மற்ற வேலைகளில் கவனம் செலுத்தலாம்.. நேரம் செட் செய்து விட்டால் தானாகவே அந்த செட் செய்த நேரம் வந்தவுடன் ஆப் ஆகிவிடும்.
மைக்ரோ வேவ் ஒவன் கூட 65 சதவீத சக்தி மாற்றுத் திறன் கொண்டதுதான். அதிலும் குறிப்பிட்ட அளவுக்கு மேல் சூடேற்ற முடியாது. ஆகவே திறனை மதிப்பிடும் போதும் இண்டக்சன் ஸ்டவ்தான் சிறந்ததாகவும் சிக்கன மானதாகவும் இருக்கிறது. பொதுவாக 1800 வாட்ஸ் மற்றும் 2000 வாட்ஸ் என இரண்டு விதமான வாட்ஸ்களில் கிடைக்கிறது. இங்கே காட்டப் பட்டுள்ள பட்டர் பிளை (ஸ்டாண்டர்டு) 1800 வாட்ஸ் அடுப்பின் இன்றைய (01-05-20012) விலை ரூபாய் 1700 தான். அதாவது சுமார் ஒரு வாட்ஸ் ஒரு ரூபாய்தான்.
![]() |
பட்டர் பிளை (ஸ்டாண்டர்டு) 1800 வாட்ஸ் |
இதிலுள்ள ஒரே ஒரு பின்னடைவு இதில் இரும்பு சம்பந்தப் பட்ட (எவர்சில்வர்) பாத்திரங்கள்தான் உபயோகிக்க முடியும். அலுமினியம், ஹிந்தாலியம், தாமிரப் பாத்திரங்கள் சூடேறாது. பாத்திரங்களுக்கான தேவை ஏற்படும் போது அவை வியாபாரத்திற்கு வந்துவிடும். உதாரணமாக ஹிந்தாலியம் குக்கரின் அடிப்பாகம் மட்டும், எவர்சில்வர் தகட்டுடன் ஒட்டப் (Sand-witched) பட்டு இப்பொழுது கிடைக்கிறது.
![]() |
எவர்சில்வர் தகடு ஒட்டப்பட்ட ஹிந்தாலியம் குக்கர் |
எவர் சில்வர் பாத்திரம் பயன் படுத்தலாம், அடிப்பாகம் கெட்டியாக இருந்தால் நல்லது. அடுப்பின் செராமிக் பிளேட்டோடு சமமாக பொருந்தும் வட்டமான பாத்திரம் தான் சரியான தேர்வாக இருக்கும் (உங்களுக்கு தேவையில்லாத புள்ளிவிவரம்.செராமிக் பிளேட்டில் இருந்து பாத்திரம் 5 எம்எம் வரை கூட விலகி இருக்கலாம்..)
எச்சரிக்கை:
அடுப்பிற்கும் பாத்திரத்திற்கும் இடையில் எந்த விதமான சிறிதோ, பெரிதோ இரும்பு சம்பந்தப் பட்ட எந்தப் பொருளும் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் அதுதான் முதலில் சூடேறும் பின் அதிலிருந்து தான் பாத்திரத்துக்கு சூடு பரவும் அப்போது சக்தி மாற்றுத் திறன் 85 லிருந்து குறைந்து 5 அல்லது 10 சதவீதமாகி விடும். இடையிலுள்ள இரும்பு பழுத்து விடும். ஆகவே அந்த மாதிரி ஆராய்ச்சியில் இறங்காதீர்கள்.
என்னைக் கேட்டால்:
எரிவாயுவை சிலிண்டரில் அடைத்து அதை விநியோகம் செய்வதை
விட அந்த எரிவாயுவை குழாய் மூலம் விநியோகித்து மாவட்ட அளவிலான
தேவைக்கு, மின்சாரம் தயார் செய்யும் நிலையங்களை நிறுவலாம். இந்த
மின்சாரத்தில் இண்டெக்சன் ஸ்டவ்வை உபயோகிக்கலாம். இதனால் வெடிப்பினால் (
Explosion) ஏற்படும் விபத்து மற்றும் பொருட் சேதம் தவிர்க்கப் படலாம்,
மின் அதிர்ச்சி (Electric shock) கொடுக்கும் மின் அடுப்புகளை தவிர்க்கலாம். தீச்சுவாலையற்றதாக (Flame less) இருப்பதால் விபத்து இல்லை விலை மதிப்பற்ற
உயிர்கள் காப்பாற்றப் படுகிறது. , மின் பகிர்மான இழப்பாகிய (Transmission
Loss ) 8,000 கோடி ரூபாய் வருடத்திற்கு மிச்சமாகும், மற்றும் கூடுதலான
சக்தி மாற்றும் திறமை (Energy transfer efficiency. 85% ) கிடைக்கிறது.
ஆகவே இதைப் பற்றிய பரிசார்த்தமான நடைமுறை அறிக்கை (Feasibility report)
தயார் செய்து ஆராயலாம்.
....................தொடரும்.
நிபா: ஆமா பட்டர் பிளைக்கு ஏதும் காசு வாங்கினாயா? அடுத்து யுபிஎஸ் பற்றித் தானே?
நான்: உனக்குத் தெரியாமலா? படுத்தாதய்யா அடுத்து யுபிஎஸ் தான்.ஆனால்..
தமிழக மின்வெட்டும், யுபிஎஸ்ஸூம்.1
தமிழக மின்வெட்டும், யுபிஎஸ்ஸூம்.2
தமிழக மின்வெட்டும், யுபிஎஸ்ஸூம்.3
இரா. சந்திரசேகர்.
பழனி.
6 comments:
Dear Sir,
What is the difference in heating ordinary gas stove and micro wave oven? Is it harmful to use microwave
Please explain.
Thanks,
Nalina
Thank you Unknown
Now days there are three options 1) Gas stove,
2) Microwave oven,
3) Induction stove
Using gas stove makes lot of carbon dioxide,it gives flame,If you unknowingly and urgently using gas stove in the closed room or house you will later feel suffocation and uneasy due to the absence of oxygen. But where as microwave oven has no such problems,but it needs some experience and knowledge to operate.Pacemaker users should be careful to go near the stove.
But when compared to Induction stove it is a different one.
You can use the induction stove any where due to its portability, provided you should have the mains supply.
But for normal, single stove option, Induction stove is the best one.
Dear Sir,
I am very sorry! I didn't convey my doubt correctly. The thing is whether the micro wave cooking or reheating is harmful to health compare to conventional cooking?
Thank you for your prompt reply
Nalina
Reheating is not harmful unless it is not overheated, But it is not advisable to reheat the food items because the nutritional value is reduced.
But for reheating the microwave oven is the best choice
என்ன ஜி.. பெட்ரொல் .. அடுப்புன்னு மின்சாரம்னு ராகு, செவ்வாய் சப்ஜெக்டிலயே இர்க்கீங்களே...
எதுனா வேண்டுதலா?
செவ்வாய்னா மலை மேல முருகர தரிசனம் பண்ணிட்டு நம்ம சதுரங்கம் .. ஆயுர் பாவம் மேட்டருக்கு வாங்க ஜி
நாளிதள் செய்திகளை பிடிஎப் ஆக்கி அப்புரம் லிங்க் தளத்தில் வைய்யுங்க...
செய்திகளை நாளிதல் எப்ப வேண்டுமாலனும் மாற்றலாம் அழிக்கலாம் ..அப்படி அழித்தால் பின்னால் பார்ப்பவருக்கு பயன் படாமல் போகும்
Post a Comment