உயிரும் உயிரின் பிரிவும் (பாகம் 17) அல்லது
”சந்துருவின் பால் விதி” (Chandru's rule of Gender determination)
இதில் ஒரு அமைப்பு என்பதை ,குடும்பமாகவோ, குழுவாகவோ, நகரமாகவோ, நாடாகவோ கருதிக் கொள்ளலாம். இதில் எல்லாவற்றிலும் அக்கறையோடு, ஈடுபாட்டோடு, அறிவோடு பங்கேற்பவன், மேற்க்கூறிய வரிசைப் படி முதலிடம் கொடுத்து தனக்கு பிறக்கப் போகும் குழந்தையின் பாலினத்தை சரியாகத் தீர்மானிக்கிறான்.
நான் சொல்லும் கூற்றின் உண்மையை, உங்களைச் சுற்றியுள்ள சூழ்நிலையில் பரிசோதித்துப் பாருங்கள் உண்மை விளங்கும்.
ஆண்மைக்கு அடையாளமான சீருடை அணிந்த காவலர்கள், ராணுவவீரர்கள், முறுக்கு மீசைக் காரர்கள், திருமணத்திற்கு முன்பே பிரபலமானவர்கள், தலைவர்கள் ஆகியோருக்கு முதலில் பிறக்கும் குழந்தை பெண் குழந்தைதான்.
பிரபலங்களின் குடும்பத்தை ஆராயும் போதும் இதனுடைய நம்பகத் தன்மையை அறிந்து கொள்ளலாம். காதல் இளவரசன் கமல்ஹாசனுக்கு இரண்டும் பெண்தான்,
காதல் மன்னனுக்கும் அதே, சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு இரண்டும் பெண்தான்,
நேருவுக்கு ஒன்றாக இருந்தாலும் பெண்ணாகிவிட்டது., இந்திராகாந்திக்கு இரண்டும் ஆண் தான் (இப்பொழுது புரிந்திருக்குமே) அஜீத்துக்கு பெண்தான்,
விஜய்க்கு ஆண்தான்,
காரணம் நீங்க்ளே சொல்லுங்கள். நடிகர் திலகம் சிவாஜிக்கும் அதே!.
உதாரணமாக ஒரு புதிதாக திருமணமான தம்பதியரில் மணமகன் ஆண்மையில் குறைவு அல்லது ஊனமாகவோ ,அவலட்சணமாகவோ இருந்து, மணப்பெண் அழகாக, திறமையாக அமைந்து விட்டால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் அத்தனையும் ஆண் தான் என உறுதியாகக் கூறலாம். அல்லது முதலில் பிறக்கும் ஐந்து குழந்தைகள் ஆண் தான். இது ஒரு உதாரணம்தான் இதில் பலவகையான வாய்ப்புக்களை யோசித்துக் கொள்ளூங்கள். இதில் எண்ணிக்கை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.
மாறாக ஆண் தைரியமாக, கம்பீரமாக, அழகாக, சிவப்பாக, முறுக்கு மீசையுடன், ஏதோ ஒருவகையில் தலைமைப் பதவியில் இருந்து, பெண் சுமாராக இருந்தால் அனைத்தும் பெண் குழந்தைதான்.
பெண்மை என்றால் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்று மாறுபட்ட (Negative Qualities) தன்மைகளை வைத்து சமப் (Nullify) படுத்துவதில்லை. ஆண்மையின் வலிமையை பெண்மையின் வலிமையால் சமப் படுத்துவதுதான் சமநிலை. பெண்களுக்கு, ஆண்கள் பார்த்து கொடுக்கும் அந்த 33% தான். ஆனால், இது குடும்பத்தில் அவர்களாகவே எடுத்துக் கொள்ளும் 50% உரிமையாகிவிட்டது. சில உதாரணங்களைத் தருகிறேன் மற்றவற்றை நீங்களே கணித்துக் கொள்ளலாம். அணத்துமே குழந்தை பெறுவதற்கு முன்பு உள்ள சூழ்நிலையை வைத்து கணிக்கப் பட வேண்டும்.
1) பொதுவாக காதலித்து, நன்பர்களால் (தோழிகளால் அல்ல) திருமணம் செய்து வைக்கப்படும் தம்பதியருக்கு முதல் குழந்தை பெண்தான்.
2) குடும்பத்தில் கல்யாணமான புதிதில் இருந்து தனது தம்பிமார்களை கூடவே வைத்திருப்பவனுக்கு அதிர்ஷ்டம்தான், பிறப்பது எல்லாமே பெண் பிள்ளைகள்தான். இந்த இடத்தில் எண்ணிக்கைக்கும், ஆண்மைக்கும் முக்கியத்துவம் (Double impact) தரப்படுகிறது. ஏனென்றால் ”தம்பியுடையான் படைக்கு அஞ்சான்”, அப்புறம் எப்படி மனைவிக்கு பயப்படுவான். ஆனால் மனைவியின் தம்பிகள் என்றால் கூட்டிக் கழித்துதான் சொல்லமுடியும் ஏனென்றால் இது எண்ணிக்கையை கூட்டினாலும் கணவனின் வலிமையை குறைக்கும் விஷயம்.
3) கணவன் சரியான சிடுமூஞ்சி என்று அவனைக் கண்டு பயப்படும் பெண்மணிக்கு அனைத்துமே பெண் குழந்தைகள்தான்
4) மனைவியைக் கண்டு ஏதோ ஒரு வகையில் பயப்படும் கோழைக்கு அத்தனையும் ஆண் பிள்ளைகள்தான்.
5) மனைவியை விட மிகவும் மிடுக்கான கணவனுக்கு பிறப்பதும் பெண் பிள்ளைதான்.
இங்கு குடும்பத்தில் ஆண்மை,பெண்மையை தீர்மானிக்கும் காரணிகளை அவற்றின் முக்கியத்துவம் கருதி வரிசையாக அமைத்துள்ளேன்.
1 குடும்பத்தில் ஆண், பெண் எண்ணிக்கை
2. பாலியல் ஈடுபாடு அல்லது அதில் திறன்
3. தைரியம்,
4. அழகு
5. செல்வம்,
6. ஆளுமை,
7. பாரம்பரியம்
8., வீரம்,
9., கோபம்,
10. புகழ்,
11. நடை,உடை,பாவனை,
12. அறிவு,
பிறக்கப் போகும் குழந்தை ஆணா பெண்ணா என்பதை தீர்மானிக்க ஒரு தம்பதியர் இருவரும் கரு உற்பத்தியாகும் முன்னரே என்னுடைய சில கேள்விகளுக்கு உண்மையாக பதில் கூறினால் எளிதாக கண்டுபிடித்து விடலாம்.
இதை அறியாமல் மனிதன் பிறக்கப் போகும் குழந்தையின் பாலினத்தை தீர்மானிக்க எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்ற வகையில் காரணம் தெரியாமல் போராடுகிறான் செலவழிக்கிறான். இதற்கான காரணம் தெரியாமல் மருந்துகளின் விற்பனை கோடிக் கணக்கில் நடை பெறுகிறது. ஜோதிடர்கள் பரிகாரங்களில் வாழ்கிறார்கள். இண்டர்நெட்டில் கோடிக் கணக்கில் பணம் புரள்கிறது. பெண்கள் துன்புறத்தப் படுகிறார்கள். ஆண்கள் அற்பமாக சந்தோஷமடைகிறார்கள்.
மேலும் இதில் தப்பான கருதுகோளில் சில ஆண்கள் பெருமிதம் வேறு கொள்கிறார்கள். ”ஆம்பளை சிங்கம் நான், எனக்கு ஒரு சிங்கக் குட்டிதான் (அதாவது ஆண் பிள்ளை) பிறக்கும்” என்று சந்துருவின் பாலின் விதி அறியாமல் வீரம் பேசுவார்கள்.
ஒரு குடும்பத்தில் ஆண்மை, பெண்மை இவற்றின் சமநிலையை நிலை நிறுத்தும் வகையில்தான் அடுத்து பிறக்கப் போகும் குழந்தையின் பாலினம் தீர்மானிக்கப் படுகிறது என்பதுதான் ”சந்துருவின் பால் விதி”. Chandru's rule of gender determination..)
இதன் கிளைத் தேற்றங்கள் பலவாறாக உள்ளது அவற்றில் ஒன்றுதான்
பெண் பிள்ளைகள் பெற்றவன் தான் உண்மையிலே ஆண்மை மிக்கவன்.
இது போல் கிளைத் தேற்றங்கள் நிறையச் சொல்லலாம்.
ஆகவே ஒரு பெண் பிள்ளையைப் பெற்று வளர்த்து உங்களை ஒரு ஆண்மகன் என நிரூபித்துக் கொள்ளுங்கள்.
சூழ்நிலையில் ஏற்படும் மாற்றங்களை கவனித்து தொடர்ந்து உயிர் வாழ்வதற்கு ஏற்றவாறு தேவைப்படும் மாற்றங்கள், ஜீனில் பதியப்படுகிறது என்பதுதான் பரிணாமத்தின் விளக்கம்.
உதாரணமாக அடுத்த தலைமுறையிலிருந்து ஆண்கள்தான் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதை இந்த தலைமுறையினர் தீர்மானிக்க முடியாது. ஆனால் தேவைபடும் பொழுது பல தலைமுறை இடைவெளியில் மாற்றிக்கொள்ள முடியும். ஆண்களே கோபப்படாதீர்கள், இந்த மாற்றம் நீங்களும் மனது வைத்தால் தான் நடக்கும். அல்லது பெண்கள் தற்பொழுதுள்ள நிலைமையை தீவிரமாக எதிர்த்தால் மாற்று வழி பிறக்கும்.
ஆண்களே இன்னும் உங்களுக்கு சாதகமான விஷயம் ஒன்றும் உள்ளது. நான் தனிப்பட்ட விதத்தில் சேகரித்த தகவல் இது தான். பெரும்பாலான பெண்கள் அடுத்த பிறவி என்று ஒன்று இருந்தால் அதிலும் பெண்ணாகத் தான் பிறக்க ஆசைப் படுகிறார்கள். அதிலும் என் மனைவிக்கோ நான்தான் கணவனாக வேண்டுமாம். (இன்றைய நிலவரப்படி. இந்த டீல் எனக்கும் பிடிச்சிருக்கு)
ஆண்களின் கர்ப்பம் மூலம் தான் இனிமேல் மனித இனம் பூமியில் நிலைத்திருக்க முடியும் என்ற அழுத்தமான தேவையும், ஆழ்மண உணர்வோடு இருபாலரும் குறைந்தபட்சம் 5000 தலைமுறை வாழ்ந்தால், சூழ்நிலையும் அந்தமாதிரி அமைந்து விட்டால் ஆண்களுக்கு கர்ப்பம் அல்லது மாற்று வழி உறுதிதான்.
இது ஒவ்வொரு தலைமுறையும் சம்பந்தபட்ட விஷயம். தகவலின் முக்கியத்துவம், தன்மை ஆகியவை குறையாமல் அடுத்த தலைமுறைக்கு மரபணு மூலம் எடுத்து செல்லும் விதத்திலும், சூழ்நிலைக்கு தகுந்தவாறும் தான் மாற்றம் அமையும். ஏனென்றால் ஒவ்வொரு தலைமுறையிலும், 1) மரபணுவில் தகவலும், 2) செய்யப்பட்ட மாற்றமும், 3) தகவல் குறித்து செய்யப்பட வேண்டிய மாற்றமும் மிகமிகச் சிறிய அளவில் தான் பதியப்பட்டு, மேம்படுத்தப் படுகிறது. சூழ்நிலையில் அக்கறை மற்றும் தேவைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தலைமுறைக்குத்தான் மாற்றத்திற்கான அதிக பங்களிப்பு இருக்கிறது.
இவை அனைத்திற்கும் காரணமான எலக்ட்ரானின் எட்டை எட்டிவிட்டால் கிட்டிடும் சமநிலை நோக்கிய பயணத்தின் இடையே வேதியலில் சமநிலை (Equalibrium in chemical Equations) இயற்பியலில் சமநிலை (Rest state) நீரோட்டத்தின் சமநிலைக்கான ஆறுகளின் ஓட்டம், குடும்பத்தில் ஆண்,பெண் சமநிலை, Gender Equality in a system of Family), என்று எங்கும் சமநிலையை விரும்பும் எலக்ட்ரான்கள் அத்தனைக்கும் என்றுதான் முக்தி கிட்டுமோ?.
டிஸ்கி
1) இந்தக் கட்டுரை யாரையும் புண்படுத்தினால் அதற்கு அறிவியல்(உண்மை)தான் காரணமாக இருக்கமுடியும்.
2) ”சந்துருவின் பால்விதி” பற்றி,
ஆனாலும் தற்பெருமையில் இது கொஞ்சம் டூமச் என்று பொறாமையுடன் படிப்பவர்களுக்கு அதற்கான விளக்கத்தைச் சொல்லிவிடுகிறேன். வலைத்தளத்தில் தேடிப் பார்த்த வகையில் இந்தக் கருத்தை முதன் முதலாக நான்தான்!!!! சொல்வதால் என்னுடைய கருத்தைப் பற்றி யாரிடமாவது விவாதிக்கும் போது, விலாவாரியாக விவரித்து சொல்வதை விட ”சந்துருவின் பால்விதி” என்று சுருக்கமாக சொல்லிவிடலாம் அல்லவா?. அதற்காகத்தான் ஒரு பெயர்.
இன்னும் உங்களுக்கு சமாதானம் ஆகவில்லையா? பாஸ், விடுங்க அப்படியாவது, மாஞ்சு மாஞ்சு எழுதினதுக்கு பலனாக நம்ம பேர் விளங்கட்டுமே!.
3) இதனால் தம்பிகள் வீட்டை விட்டு விரட்டப் பட்டால் அவர்களுக்கு எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அதற்கும் அறிவியல்தான் காரணம்.
4) ஆண் பிள்ளைதான் பெற்றுக் கொள்வேன் என்று, தம்பிகளை விரட்டி விட்டு மச்சினிகளை வைத்துக் கொள்ளாதீர்கள் பிரச்னையாகிவிடும். அதற்கு பதிலாக உங்கள் பாட்டிமார்களை வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.
5) மேலே நான் குறிப்பிட்டுள்ள சில தளங்களுக்கு சென்று, படித்து விட்டு வாந்தி எடுத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.
6) இந்த தகவல்களால் ஆண் பிள்ளைகள் மட்டும் வைத்திருப்பவர்கள், தங்களுக்கு ஒரு வேளை ஆண்மைக் குறைவு என்று நம்பி விட வேண்டாம். நான் குறிப்பிட்டுள்ள 12 விஷயங்களில் ஏதாவது ஒன்றாக இருக்கலாம்.
7) இக் கருத்துக்களை கடந்த 30 வருடங்களாக சொல்வதற்கு ஏற்ற ஒரு இடம் தேடிக் கொண்டிருதேன். ஏனென்றால்
கல்லாதான் ஒட்பம் கழிய நன்றாயினும்
கொள்ளார் அறிவுடையார்.
என்று வள்ளுவன் சொன்னதால், சொல்வதற்கு தகுந்த இடம் தேட வேண்டியதாயிற்று. ஏனென்றால் இங்கு நான் சொல்லிய கழிய நன்றாகிய ஒட்பத்தை, சொல்லி முடித்த பின்புதான் மறுக்க முடியும். கூகுளின் பிளாக் தந்த வசதியினால் எனது கருத்துகளை என்னுடைய வாசகர்களாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்ள முடிந்ததால் கூகுளுக்கும், உங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
8)ஒரே ஒரு வருத்தம் அதைச் சொல்லியே ஆக வேண்டும். படிக்கும் நூறு பேரில் ஒரே ஒருவர்தான் பாராட்டோ கருத்தோ சொல்கிறார்கள்.
9) இக்கருத்தை எடுத்தாளுபவர்கள் எனது பெயரையோ எனது வலைப்பூத்தளத்தின் முகவரியையோ குறிப்பிட வேண்டுகிறேன்.
இன்னும் ஒரு முக்கியமான விஷயம் உள்ளது. தொடரும்………………..
முந்தைய பதிவு
28 comments:
First Me.
Good ..
Nalla Araichi..
good but
@வடிவேல்,
வருகைக்கும் பதிவிற்கும் பாராட்டுக்கும் நன்றி
guna
உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.ஆனால்..
அருமையான தகவல், அழகான எழுத்து நடை.
//அதிலும் என் மனைவிக்கோ நான்தான் கணவனாக வேண்டுமாம். (இன்றைய நிலவரப்படி. இந்த டீல் எனக்கும் பிடிச்சிருக்கு)///
அதற்கும் மேலாக கொடுத்து வைத்தவர் நீங்கள் :)
@மதியின் வலையில்
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி
அருமையான தகவல், ஆழ்ந்த ஆராய்ச்சி... ஆனால் இதை ஆண்மை என்பதற்கு பதிலாக பாலின ஆதிக்கம் என்று சொல்லாமே... எது எப்படியோ, மிகச்சிறந்த தகவல்களை பகிர்ந்துகொண்டதிற்காக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
நீங்கள் புகைப்படக் கலை பற்றி எழுதுங்களேன்.
உங்கள் எழுத்தில் நிறைய மாற்றங்கள். மெருகேற்றிக்கொண்டே செல்கிறீர்கள்.
// விஜய்க்கு ஆண்தான்,
காரணம் நீங்க்ளே சொல்லுங்கள்
காரணம் என்னவென்றும் சொல்லி இருக்கலாமே
தருமி
தங்கள் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி.பரிணாமத்தின் கட்டாயத்தில் ”வேறொன்றும் அறிந்து” உள்ளீர்கள் போலிருக்கிறது.
அருண்
வருகைக்கும் பதிவிற்கும் நன்றி
இந்துமதி.சி.பா
வருகைக்கும் பதிவிற்கும் நன்றி.
// விஜய்க்கு ஆண்தான்,
காரணம் நீங்க்ளே சொல்லுங்கள்
காரணம் என்னவென்றும் சொல்லி இருக்கலாமே.
(அஜீத்தின் நிறம், அழகு போன்றவை மகள் பிறந்ததற்கு காரணம்) விஜய்க்கு என்ன இருந்தாலும் அந்த காம்ப்ளக்ஸ் இருக்கத்தானே செய்யும்.
//(அஜீத்தின் நிறம், அழகு போன்றவை மகள் பிறந்ததற்கு காரணம்) விஜய்க்கு என்ன இருந்தாலும் அந்த காம்ப்ளக்ஸ் இருக்கத்தானே செய்யும்.///
அப்படியென்றால் நிறமும் அழகும் தான் ஒருத்தரின் தன்னம்பிக்கைக்கு முக்கிய காரணாமா என்ன?
ஏற்றுக்கொள்ள இயலவில்லை.
இதற்கு பதிலாக.... ஷாலினியின் ஆழுமையை விட சங்கீதாவின் ஆழுமை அதிகம் என்று கூறியிருக்கலாமே??
ஆணாதிக்க பதில் போல் உள்ளது உங்களுடைய பதில்.
//அப்படியென்றால் நிறமும் அழகும் தான் ஒருத்தரின் தன்னம்பிக்கைக்கு முக்கிய காரணாமா என்ன?
ஏற்றுக்கொள்ள இயலவில்லை.
இதற்கு பதிலாக.... ஷாலினியின் ஆழுமையை விட சங்கீதாவின் ஆழுமை அதிகம் என்று கூறியிருக்கலாமே??
ஆணாதிக்க பதில் போல் உள்ளது உங்களுடைய பதில்.//பிரபலங்களைப் பற்றி அதிலும் குறிப்பாக ஆண்களைப் பற்றி பேசலாம். அவர்களது பெண்களின் அழகு,நிறம்,ஆளுமை, பற்றி இங்கு குறிப்பிடுவதும், ஒப்புமை செய்வதும் அநாகரீகம் என்பதால் தான் நீங்களே புரிந்து கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டேன். இதில் எங்கே ஆணாதிக்கம் பெண்ணாதிக்கம்?
//அப்படியென்றால் நிறமும் அழகும் தான் ஒருத்தரின் தன்னம்பிக்கைக்கு முக்கிய காரணாமா என்ன?//
அதெல்லாம் கிடையாது என்பதற்கு TR ஒரு உதாரணம்.
ஆனால் அவருக்கு முதலில் இரண்டுமே பையன்கள்தான். இது வேறு அது வேறு விவரம் அடுத்த பதிவில்
@இந்துமதி
இதில் ஆணாதிக்கமா, பெணாதிக்கமா என்பதுதானே இங்கு ஆராய்ச்சி செய்து அலசப்பட்டுள்ளது, கண்டிப்பாக ஆணாதிக்கம் அல்லது பெணாதிக்கத்தை மையமாக வைத்துத்தானே பதில் சொல்ல இயலும். ஆளுமைக்கும் ஆதிக்கதிற்கும் மிகப்பெரிய வேறுபாடு இல்லை.
Indeed, very thought provoking.
KP.
@ K.P
Thanks for your comment
இரண்டுவரியில் சொல்ல வேண்டிய விஷயத்தை 17 பாகங்கள் எழுதி முருகதாஸ் மாதிரி சுற்றி வளைத்து சொல்லியுள்ளீர்கள். ஆனாலும் பரவாயில்லை நான் சோதித்த வகையில் உண்மையாகத்தான் இருக்கிறது. இதை முதன்முதலாக நீங்கள் மட்டும் சொல்லியிருந்தால் பாராட்டப்பட வேண்டிய விஷயம்தான்.
உங்களுக்காக தெக்கிக்காட்டானிடம் ஒரு பின்னூட்டம் இட்டுள்ளேன்
சரி ஐஸ்வரியா அபிஷேக் பச்சனுக்கு என்ன குழந்தை பிறக்கும்? சொல்லுங்கள்.
நாட்டாமையின் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி.
//இரண்டுவரியில் சொல்ல வேண்டிய விஷயத்தை 17 பாகங்கள் எழுதி முருகதாஸ் மாதிரி சுற்றி வளைத்து சொல்லியுள்ளீர்கள்.//
அடுத்தடுத்து வெற்றிப் படங்களை கொடுத்ததால்தான். அவர் ஒரு சிறந்த டைரக்டர் எனப் பேசப் படுகிறார்.ஆனாலும் அவர் இந்த 2 வரியைச் சொன்னால் அதற்கென்ன இப்பொழுது என்பார்கள். அதிலும் ” படித்தவர்களோ” இது எங்க ஏரியா எஈ என்ன அதைப் பற்றி சொல்வது என்கிறார்கள். ஆதலால் எனக்கும் விஷயம் தெரியும், தெரிந்த விஷயத்தின் முடிச்சுதான் இது என்பதற்கான முன்னோடிதான் 16 பாகங்கள்.
ஐஸ்-அபி ஜோடியின் குழந்தை பற்றி கேட்டீர்கள் இந்நேரம் பிறந்திருக்கலாம் இன்று 15-11-11 அன்று மாலை4.30 வரை எனக்கு எதுவும் தெரியாது. ஆனாலும் இது பற்றி நீங்கள் என்னை கேட்க வேண்டியதில்லை முழுமையாகப் படித்திருந்தால் நீங்களே சொல்லமுடியும். மேலும் இது அவர்களிடம் விசாரிக்காமல் சொல்வது அவ்வளவு சரியாக வராது. ஏனென்றால் இருவருமே பிரபலங்கள். ஆனாலும் பெண் பிள்ளைக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. கீழே கொடுக்கப் பட்ட தொடர்பில் விஷயங்கள் கூறப் பட்டுள்ளன. படித்துப் பாருங்கள் http://cinema.dinamalar.com/hindi-news/5222/cinema/Bollywood/Twin-Baby-for-Aishwariya-rai...?.htm
ஐஸ் அபி ஜோடிக்கு பெண் குழந்தைதான்.//ஆனாலும் பெண் பிள்ளைக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.// என்ற என்னுடைய பின்னூட்டத்திற்கு 2 நாட்கள் கழித்துதான் பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
நன்பர்களே உங்களது வருகை மட்டுமல்ல பின்னூட்டமும் மதிப்பிற்குரியது. அது ஒரு அரிய(data)தகவல்.ஆகவே குறைந்தபட்சம் ஓட்டுப் பெட்டியில் ஒரு ஓட்டைப் போட்டுவிட்டு செல்லுங்கள். கிளிக்கிடும் தூரம்தான். மறக்காமல் செய்யுங்கள்.
supper
மனிதனின் பரினாம மாற்றம் அவனது எண்ணத்தினால் நடந்தது அல்ல, அவனது வாழ்க்கை முறையால் விழைந்தது. மனிதன் தனது நாகரீகம் வளர வளர மரணத்தை வெறுக்கவே செய்தான் ஆனால் வாழ்க்கை முறை அவனது அயுட்காலத்தை குறைத்தே உள்ளது. பாலினம் அரிய நம்மிடையே உள்ள ஆர்வம் நம்மை பலவிதமாக யோசிக்க தூண்டுகிறது ஆனால் அது புள்ளியியலின் கோட்பாடுகளை பின்பற்றுவதாக நான் நம்புகிறேன்.
///மனிதனின் பரினாம மாற்றம் அவனது எண்ணத்தினால் நடந்தது அல்ல, அவனது வாழ்க்கை முறையால் விழைந்தது. மனிதன் தனது நாகரீகம் வளர வளர மரணத்தை வெறுக்கவே செய்தான் ஆனால் வாழ்க்கை முறை அவனது அயுட்காலத்தை குறைத்தே உள்ளது. பாலினம் அரிய நம்மிடையே உள்ள ஆர்வம் நம்மை பலவிதமாக யோசிக்க தூண்டுகிறது ஆனால் அது புள்ளியியலின் கோட்பாடுகளை பின்பற்றுவதாக நான் நம்புகிறேன்.///
நீங்கள் கூறுவது போல் எடுத்துக் கொண்டாலும் செய்யப்பட வேண்டிய மாற்றம் யாரால் எப்படி தீர்மானித்து எப்படி ஜீன் வழியாக கடத்தப் படுகிறது. வாழ்க்கைத் தேவையின் தாக்கம் எப்படி உயிரிகளுக்கு உணர்த்தப் பட்டு அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லப் படுகிறது?.
மனிதனின் பரினாம மாற்றம் அவனது வாழ்க்கை முறையால் விழைந்தது. ஆனால் வாழ்க்கை முறை ஒருவரது எண்ணத்தால் அமையும். நம் முன்னோர்கள் ஜீன் வழியாக தகவல்கள் கடத்தப் படுவதை உணர்ந்திருப்பார்கள் என நான் நம்புகிறேன் மேலும் கடத்தப் பட வேண்டிய தகவல்களை பொதுவாக மனிதன் pre decided or pre planned - ஆக சிந்தித்திருக்க மாட்டான். பெரும்பாலன மக்கள் (சில கோடி பேர்) தகவல் கடத்தலுக்காக ஒரே சிந்தனையுடன் வாழ்வதென்பது நடவாத காரியம் அதுவும் பல ஆயிரம் ஆண்டுகள் பல தலைமுறையாக. எனவே இது இயற்கையாக - இயல்பாக நடைபெற்ற ஓர் செயல் ஆகும்
நீங்கள்:மனிதனின் பரினாம மாற்றம் அவனது வாழ்க்கை முறையால் விழைந்தது. ஆனால் வாழ்க்கை முறை ஒருவரது எண்ணத்தால் அமையும்.
நான்:பரிணாமத்தில் ஏற்படும் வாழ்க்கை முறை என்பது சூழலையும், கிடைக்கும் (resources)வாய்ப்புக்களையும்,உடலின் தகவமைப்பையும்,அக்குழுமத்தின் புற உணர்வுகளையும் பொறுத்து அமைகிறது.
நீங்கள்:நம் முன்னோர்கள் ஜீன் வழியாக தகவல்கள் கடத்தப் படுவதை உணர்ந்திருப்பார்கள் என நான் நம்புகிறேன்.
நான்: இருக்கலாம்.
நீங்கள்:மேலும் கடத்தப் பட வேண்டிய தகவல்களை பொதுவாக மனிதன் pre decided or pre planned - ஆக சிந்தித்திருக்க மாட்டான்.
நான்: ஆமாம், சிந்திருக்கமுடியாது. ஆனால் தேவைகளின் அழுத்தம் ஒரு வழியைத் தேடுகிறது. கிடைக்கும் வழியைப் பயன்படுத்துகிறது. சோதிக்கிறது ஏற்றுக் கொள்கிறது.
நீங்கள்:பெரும்பாலன மக்கள் (சில கோடி பேர்) தகவல் கடத்தலுக்காக ஒரே சிந்தனையுடன் வாழ்வதென்பது நடவாத காரியம்.அதுவும் பல ஆயிரம் ஆண்டுகள் பல தலைமுறையாக.
நான்:தகவல் கடத்தல் என்பது வாழ்வின் ஒரு அங்கம்.அல்லது உயிர்த்தலின்(survival) தேவை. அது உள்ளுர 24 மணி நேரமும் நம்மை அறியாமலே யோசித்துக் கொண்டிருக்கிறது.பல ஆயிரம் ஆண்டுகளாக நடப்பதல்தான் அதற்கு பரிணாமம் என அழைக்கின்றனர்.
நீங்கள்: எனவே இது இயற்கையாக - இயல்பாக நடைபெற்ற ஓர் செயல் ஆகும்.
நான்: ஆமாம் நானும் அதைத்தான் சொல்கிறேன். ஏனென்றால் நானும் இயற்கைதான்.பரிணாமத்தின் தேவை இயல்பாக மாறிவிட்டது.
@ Munusamy
வருகைக்கும் பதிவிற்கும் நன்றி.தொடர்ந்து கருத்து பரிமாற்றம் செய்வோம்.இந்த உயிர்த்தலின் (Survival)தேவை என்ன என்பது பற்றி எலக்ட்ரான்களின் எட்டை எட்டி விட துடிக்கும் பண்பு பற்றி எனது பதிவில் குறிப்பிட்டுள்ளேன்.
http://chandroosblog.blogspot.in/2011/01/5.html.இதையும் படித்துவிட்டு கருத்துகூறவும்.
பார்த்தவரை சரியாகத்தான் இருக்கு.பாராட்டுக்கள்......
Post a Comment