முதலில் மின்வெட்டு பற்றிய சில தகவல்களை அறிவோம். பின்னர் யுபிஎஸ்(UPS) பற்றி ஆராய்வோம்.

தமிழக மின் வாரியம் தாக்கல் செய்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தின் தற்போதைய தேவை 11500 மெ.வாட், ஆனால் உற்பத்தியோ 7500 மெ.வாட் ஆகவே 4,000 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறை உள்ளது. 


அடுத்த ஐந்தாண்டுகளில், தற்போதுள்ள, 11,500 மெகாவாட்டிலிருந்து, 18 ,311 மெகாவாட் வரை மின்சாரத் தேவை உயரும். ஐந்தாண்டுகளில், தமிழகத்தில் மின்சார உற்பத்தியின் அளவு, 20,152 மெ.வாட் ஆக உயரும் என, தமிழக மின்வாரியம் கணக்கிட்டுள்ளதாம். என்னைக்கு அத்தைக்கு மீசை முளைச்சு சித்தப்பான்னு கூப்பிடறது.   இது வரை 53,000 கோடி கடன் ஏற்பட்டுள்ள நிலைமையிலும் கூட தமிழகத்தில் வீடுகள், கடைகள் மற்றும் அலுவலகங்களுக்கு வழங்கப்படும் மின்சாரத்திற்கு சமமாக, இலவச மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது. கடந்த நிதியாண்டில் மட்டும், 6,500 கோடி ரூபாய் மதிப்பிலான இலவச மின்சாரம் வழங்கப் பட்டுள்ளதாக, தமிழக மின்துறை தெரிவித்துள்ளது. (விளங்குமா தமிழ்நாடு)

தமிழகத்தில் 2.24 கோடி மின் நுகர்வோர் உள்ளனர். இதில், 19.72 லட்சம் விவசாய இணைப்புகளும், 14.45 லட்சம் குடிசை இணைப்புகளும் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. இதில், ஆண்டுக்கு, விவசாய இணைப்பு ஒன்றிற்கு, 250 ரூபாயும், குடிசை இணைப்பிற்கு, 120 ரூபாயும், தமிழக அரசின் மானியமாகக் கிடைக்கிறது. இந்த இணைப்புகளுக்கு, மீட்டரும் கிடையாது; மின் கட்டணமும் கிடையாது.  அடப் பரதேசிகளா, ஆற்றில் போட்டாலும் அளந்து போடவேண்டாமா?

மின் பகிர்மான இழப்பில், 1,349.8 கோடி யூனிட் மின்சாரம் வீணாகியுள்ளது, இதனால் 7,167 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதை, அரசின் மனு வெளிப்படுத்தியுள்ளது. ( அடக்கண்றாவி! கழுதை பெறது கால்பணம் சுமைகூலி முக்காப் பணமா)

மின் கட்டணம் செலுத்தும் வீடுகளுக்கு, 1,634 கோடி யூனிட் மின்சாரம் வினியோகிக்கப்பட்டுள்ளது. இதன்படி பார்த்தால், கடந்த ஆண்டில் வீடுகளுக்கு, 8,678 கோடி ரூபாய்க்கு வினியோகிக்கப்பட்டு, கட்டணம் வசூலிக்கப் பட்டுள்ளது. யூனிட்டுக்கு, 5.31 ரூபாய் செலவழிப்பதாக, தமிழக மின்துறை நிதி நிலை அறிக்கையில் கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால், கடந்த ஆண்டில்,6,478 கோடி ரூபாய்க்கு 1,220 கோடி யூனிட் மின்சாரம் விவசாயத்திற்கு,  இலவசமாக தரப்பட்டுள்ளது. அதாவது, பணம் கட்டும் நுகர்வோருக்கு வழங்கும் மின்சாரத்திற்கு இணையாக, இலவச மின்சாரம் தரப்படுகிறது. இதற்கு, அரசின் சார்பில், 219 கோடி ரூபாய் மட்டுமே மானியத் தொகையாகக் கிடைத்துள்ளதால், இலவச விவசாய மின்சாரம் மூலம், தமிழக மின் வாரியத்திற்கு, 6,259 கோடி ரூபாய் செலவு.

 மேலும் தகவல்களுக்கு http://www.dinamalar.com/News_Detail.asp?Id=346355

குடிசைகள் பயன்படுத்தும் மின்சாரம் எவ்வளவு என்பது, மின் வாரியத்திற்கே இன்னும் தெரியாது. அங்கு மீட்டர்கள் இல்லாததால், கணக்கிட முடிய வில்லை. எண்ணிச் செய்கிறவன் கெட்டி எண்ணாம செய்கிறவன் மட்டின்ன கதையா இவ்வளவு இன்சீனியர்களும் மட்டியா?. எழுதுனவன் ஏட்டைக் கெடுத்தான் படிச்சவன் பாட்டைக் கெடுத்தான்.  விவசாய மின்சாரம் மட்டும் உயரழுத்த டிரான்ஸ்பார்மர்கள் மூலம் கணக்கிடப்பட்டுள்ளது என, மின் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆக, 53 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் தத்தளிக்கும் மின் வாரியம், இவ்வளவு தொகைக்கு இலவச மின்சாரம் வழங்கினால், வரும் காலங்களில் இலவச மின்சார நஷ்டத்தை சரி செய்ய முடியாத நிலை ஏற்படும். மின் வாரியத்தில் பணம் கட்டி மின்சாரம் பெறும் நுகர்வோர் மீது, கூடுதல் நிதிச்சுமை ஏற்படும்.என்னத்த சொல்லி என்ன பண்றது.உரலில் அகப்பட்டது உலக்கைக்குத் தப்புமா? போடு வரியை. ஊர் உண்டு பிச்சைக்கு, குளம் உண்டு தண்ணிக்குன்ன கதையா இருக்கவே இருக்கானுக கேணைத் தமிழகமக்கள்.

 தனியாரின் கொள்ளை:

இந்த 53,000 கோடியில், தனியார் கொள்ளை 15,000 கோடியாவது தேறும்.

6500  கோடிஇலவச மின்சாரம் X 6வருடம்= 39000 கோடி + தனியார் கொள்ளை 15000 கோடி =54000 கோடி கடன்.

 எடுத்துக் காட்டாக நாகை மாவட்டம் சீர்காழி அருகிலுள்ள பிள்ளைப் பெருமாள் நல்லூரில் ஆந்திராவின் டாக்டர் சி.பிரதாப்ரெட்டி குழுமத்திற்கு மின் உற்பத்தி நிலையம் அமைத்துக் கொள்ள இசைவு வழங்கப்பட்டது. பிள்ளைப் பெருமாள் நல்லூர் மின் உற்பத்திக் குழுமம் என்ற பெயராலேயே பிரதாப் ரெட்டி குழுமத்தினர் அந்நிலையத்தை நிறுவினர். ரெட்டி லேப்ஸ், அப்பல்லோ மருத்துவமனை ஆகியவற்றின் முதலாளிதான் இந்த பிரதாப்ரெட்டி.

இந்த பிபிஎன் நிறுவனத் திடமிருந்து ஒரு யூனிட் 17 ரூபாய் 80 காசுக்கு மின்சாரம் வாங்குகிறது தமிழக அரசு. மின்சார வாரியத்தின் சொந்த உற்பத்தி நிலையங்களில் 1 யூனிட் உற்பத்தி விலை 2 ரூபாய் 15 காசு என்பதை இத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால் இந்தக் கொள்ளையின் அளவு புரியும். கடந்த ஆண்டு முழுவதும் இந்நிறுவனம் மின்சார வாரியத் திற்கு விற்றது 24.4 கோடி யூனிட் மின்சாரம். ஒப்பந்தபடி இந்த மின்சாரம் 35 நாள்கள் உற்பத்திக்குச் சமமானது. எஞ்சிய 330 நாள்களுக்கு இந்த நிலையம் உற்பத்தியே செய்ய வில்லை என்றாகிறது. ஆயினும் சும்மா இருந்த நாள்களுக்கு நிலைக் கட்டணமாக 330.04 கோடி ரூபாயைத் தட்டிச் சென்றது. இது போல் ஐந்து தனியார் மின் உற்பத்தி நிலையங்களுக்கு மட்டும் ஆண்டுக்கு 1006 கோடி ரூபாயை உற்பத்தி இல்லாத காலங்களுக்கு நிலைக் கட்டணமாக மின்சார வாரியம் வழங்கி யுள்ளது. (எரியிற வீட்டில் பிடுங்கிறது ஆதாயமாம்).

 அடுத்த ஐந்தாண்டுகளின் பற்றாக்குறையை சமாளிக்க, தினமும் 4000 மெகாவாட் மின்சாரம், தனியாரிடம் கொள்முதல் செய்ய, டெண்டர் விடப்பட்டுள்ளதாம். (இன்னைக்கு இலை அறுக்கிறவன் நாளைக்கு குலை அறுக்கத்தான் செய்வான். கிழிந்தது தமிழகத்தின் பொருளாதாரம்).

 ஐந்து தனியார் மின் உற்பத்தி நிலையங்களுக்கும், முடைக் காலத்தில் வெவ்வேறு மின் உற்பத்தி நிலையங்களிடம் அவ்வப்போது வாங்கிக் கொண் டதற்கும் மட்டும் கடந்த ஆண்டு 8884.4 கோடி ரூபாய் மின்வாரியம் வழங்கியிருக்கிறது. கடந்த ஆண்டு மட்டும் சுமார் 10,000 கோடி ரூபாய் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு இழப்பு ஏற்பட்டது. மேற்கண்ட ஐந்து நிறுவனங்களின் கட்டணக் கொள்ளையை கட்டுப் படுத்தியிருந்தாலே இந்த இழப்பில் ஏறத்தாழ 8 ஆயிரம் கோடி ரூபாயைக் குறைத்திருக்க முடியும்.

மின்சார ஒழுங்குமுறை ஆணையமும் , மின்சார தீர்ப்பாயமும் எவ்வாறு தனியார் நிறுவனங்களின் கொள்ளைக்குத் துணைபோய் மின்வாரியத்தை கடன் சேற்றில் சிக்க வைக்கின்றன என்பதற்கு ஓர் எடுத்துக் காட்டைப் பார்க்கலாம். (அவன்தம்பி அங்கதனுக்கு பங்கில்லாமலா போயிரும்) . கள்ளனும், தோட்டக்காரனும் ஒன்று கூடினால் விடியும் மட்டும் திருடலாம் அல்லவா.

 மின்சார ஒழுங்குமுறை ஆணையம் 2010 ஆம் ஆண்டு மின் கட்டணத்தை உயர்த்திய போது பன்னாட்டு, வடநாட்டுத் தகவல் தொழில் நுட்ப நிறு வனங்களுக்கு யூனிட்டுக்கு ரூ.1.80 முதல் ரூ.2.50 வரை கட்டணச் சலுகை வழங்கி அறிவித்தது. பிச்சை எடுத்துச்சாம் பெருமாளு ,அதை பிடுங்கித் திண்ணுச்சாம் அநுமாருன்னு கதையா கார்ப்பரேட் நிறுவனங்கள் இச்சலுகைகளால் கொழிக்கிறது.

இவ்வாறு கட்டணச்சலுகை வழங்குமாறு தமிழக அரசும் கோரவில்லை; அந்த நிறுவனங்களும் கோரவில்லை. மக்கள் கருத்தும் கோரப்படவில்லை. ஆற்றின் போக்கே அரசன் போக்கு என தானடித்த மூப்பாக தகவல் தொழில் நுட்பக் குழுமங்களுக்கு இக் கட்டணச் சலுகையை வாரி வழங்கியது ஆணையம். (தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரன்தான்). 

ஒழுங்குமுறை ஆணையம் தான் இவ்வாறு என்றால் மின்சாரக் கட்டணம் தொடர்பான மேல் முறையீடுகளை விசாரிக்கும் உச்ச அமைப்பான மின்சாரத் தீர்ப்பாயமும் அதற்கு மேல் இருக்கிறது. பிரதாப் ரெட்டியின் பிபிஎன் நிறுவனம் தனக்கு மின்சார வாரியத்திலிருந்து 189 கோடி ரூபாய் பணம் நிலுவையுள்ளது என வழக்குத் தொடர்ந்தது.அவ் வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், பிபிஎன் குழுமம் கேட்டதை விடப் பல மடங்கு அதிகமாக இழப்பீட்டை கணக்கிட்டு ரூ 1050 கோடி வழங்குமாறு மின்சார வாரியத்திற்கு ஆணையிட்டது. (ஆறு போவதே போக்கு, அரசன் சொல்வதே தீர்ப்பு.) குதிரை தள்ளி விட்டதுமில்லாமல் குழியும் பறிச்சுச்சாம்.

இது என்ன கொடுமை இதுக்கு மேல இருக்கு. வீடியோகான் நிறுவனத்துடன் தமிழக மின்சார வாரியம் ஒரு ஒப்பந்தம் போட்டு, ஏதோ காரணத்தால் ரத்து செய்து விட்டது. நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறேன் நீ அழுவுற மாதிரி அழு.து கேஸ்ஸ போடுன்னு பேசிக்கிட்டாய்ங்க போல. அவனும் இங்கேயெல்லாம் கேஸ்ஸப் போடாம சிங்கப்பூரில் சர்வதேச நீதி மன்றத்தில் நம்ம சிதம்பரம் மூலம் கேஸ்ஸப் போட்டு 3000 கோடி நஷ்ட ஈடு கேட்டானுக. அதுதான் அவனுக செய்த தப்பு பேசாம நம்ம ரெட்டி மாதிரி தீர்ப்பாயத்தில் போட்டிருந்தா ஒரு 6000 கோடியாவது கிடைச்சிருக்கும் .அங்க வெறும் 125 கோடிதான் கொடுக்கச் சொன்னாங்களாம். அதனால ரெட்டிவழியைப் பின் பற்றி வீடியோகானும் மீண்டும் சுப்ரீம் கோர்ட்டுக்கே வந்துட்டானுக. இவனுக தீர்ப்பாயத்திற்கு போனா 6000 கோடி கிடைக்கும் ஆனா ஏன் போகலைன்னு தெரியலை. எந்தப் புற்றுக்குள் எந்தப் பாம்போ போங்க.

சிதம்பரம் ஒரு தமிழனாம். அன்னம் இட்ட வீட்டிலே கண்ணம் இடுறவனுக, உண்ட வீட்டிற்கு இரண்டகம் பண்ணுறவனுக வம்சம் விளங்குமா? இவனைத் தலையில் வைத்து ஆடுறானுக தமிழனுக.(இருக்கிறவன் ஒழுங்கா இருந்தா தானே சிரைக்கிறவன் செம்மையா சிரைப்பான்.)

இப்போதும் பிபிஎன் உள் ளிட்ட நான்கு தனியார் நிறு வனங்கள் மின்சாரம் வழங்கு வதை நிறுத்தி வைத்திருப்பதால் மின்வெட்டு இன்னும் கூடுதல் ஆகிறது. இரவல் சீலையை நம்பி இடுப்புக் கந்தையை எறிஞ்ச கதையாவில்ல இருக்கு.

 மேலும் தகவல்களுக்கு

தொடரும்.....................
இரா. சந்திரசேகர்.
 பழனி. 

மேலும் படிக்க...!
பாகம் 8

வினோத்குமாரின் கேள்வி:
 சூரியனுடன் இனைந்து இயங்கினாலும்,சனி புதன் சேர்ந்து சாதகரின் 7ம் வீட்டில் இருந்தா சாதகருக்கு அலி தன்மையை கொடுக்கும்னு படிச்சு இருக்கேன், இயல்பில் புதன் அலி கிரகம் தானே. அப்படி பார்த்தால் அலி தன்மை திருமண பொருத்தத்தில் தவிர்க்க முடியாத இடம் பெறும் அல்லவா?.

 பதில்:
உண்மையில் சனிக்கிரகமும் அலிக் கிரகம்தான். இதில் புதன் உப்புக்கு சப்பாணிதான். இதில் ஒரு விஷயம் ஏற்கனவே கூறியுள்ளேன் புதன் எந்த கிரகத்தோடு சேருகிறதோ அதன் குணங்களைதான் இதுவும் கொடுக்கும். ஒரு வேளை ஆதலால்தான் இந்த டபுள் இம்பாக்ட் ஆக இருக்கலாம். ஆனாலும் அலித்தன்மையை இந்த ஒரு கட்டத்தின் நிலைமைக் கொண்டு மட்டும் தீர்மானிக்கமுடியாது


வினோத்குமாரின் கேள்வி:
ஆட்டத்தில் மிக முக்கியமான காய்கள் சிப்பாய்கள் .. நான் சிப்பாய்கள் தான் சனியா என கேட்டதற்கு காரணம், மெதுவாக ஆனால் வலுவாக நகரும்.எட்டாம் வீட்டை அடைந்தால் மிக வலுவான மந்திரியாக உருவெடுத்து , எதிராளிக்கு மரணம் தரும் . என்றெல்லம் இருப்பதால்தான். நீங்கள் சனியை யானையாக உருவகப படுத்தியது தவறுதானே?.

 பதில்:
 ஜோதிடத்தைப் பொறுத்த வரை கோச்சாரத்திலும், இலக்கினத்திலும் முக்கிய பங்காற்றுவது சனிதான். கோச்சாரத்தில் ஏழரைச்சனி என்று பெயர் பெற்றவனை, ஆயுளுக்கு காரணமானவனை, சனியன் என்று அன்றாட வாழ்வில் பெயர் எடுத்தவனை, சதுரங்கத்தில் முக்கியமான ஆளாகக் கருதிச் சேர்க்கவில்லை என்றால் சதுரங்கம் முழுமை அடையாது. ஆகவேதான் சனி சிப்பாய் அல்ல என்றேன். நீங்கள் கூறுவது போல் செஸ்ஸில் சிப்பாய்க்கு அவ்வளவு மதிப்பு கிடையாது. ஆட்டத்தின் ஆரம்பத்தில் பொதுவாக சிப்பாய்கள்தான் எளிதாகப் பலி கொடுக்கப் படுகிறார்கள்.

அதுமில்லாமல் சிப்பாய்க்கு எண்மதிப்பு ஒன்றுதான். ஆனால் யானைக்கோ மதிப்பு ஐந்து. தளபதிக்கு(9) அடுத்த மதிப்பு யானைக்குத்தான்(5). ஆகவேதான் ஆயுள்காரகனாகிய சனீஸ்வரனுக்கு யானையின் சிறப்பிடம் வழங்கப் பட்டுள்ளது.. சிப்பாய்க்கு தகுந்த ஆட்கள் இருக்கிறார்கள் பின்னர் விளக்கம் தருகிறேன்.


வினோத்குமாரின் கேள்வி: 
சூரியன் ஆண்டுக்கு ஒரு சுற்று என்பதால் ராஜா ஒரு முவ் என்றால் . ராஜா, சிப்பாய், குதிரை தவிர மற்றதெல்லாம் அளவில்லாத முவ் தானே இது எப்படி ?.
பதில்:
சனியின் சுழற்சி காலம் 30 வருடங்கள். இவையெல்லாம் எட்டு கட்டங்களுக்கும் அதிகமாக இருப்பதால் எல்லை வரை செல்கின்றன. செவ்வாய் 4 வருடங்கள் என்பதால் அதன் இயக்கம் நான்கு கட்டங்களுக்குள் அமைந்து விடுகிறது. சுக்கிரனின் சுழற்சிக்காலம் ஒரு வருடமாக இருந்தாலும் அதனுடைய இயக்கம் பிற்காலத்தில் மாற்றப் பட்டிருக்கும்.

கேள்வி: 
உங்கள் கூற்றுப் படி ஜோதிடத்தில் திருமணத்திற்கு காரகன் எது? அது சதுரங்கத்தில் எவ்வாறு பயன்படுத்தப் பட்டுள்ளது.?.

பதில்:
 திருமண பொறுப்பாளன் அல்லது களஸ்திர காரகனான சுக்கிரனை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் எப்படி திருமணப் பொருத்தம் பார்க்க முடியும். பையன்கள் யாராவது அழகான பெண்களுடன் பழகுவதைப் பார்த்துவிட்டால் போதும், உனக்கென்னடா சுக்கிரன் உச்சத்தில் இருக்கிறான் என்பார்கள். பெண்கள் சம்பந்தப் பட்ட விஷயம் என்றால் சுக்கிரனுக்குப் பங்குண்டு. சுக்கிரன் தனது ஆட்சி வீடுகளில் ராஜாவுக்கும், மந்திரிக்கும் இடத்திலும், வலத்திலும் (ரிஷபமும், துலாமும்) மதகுருவாக உட்கார்ந்து சண்டையில் உதவியாக இருக்கிறார். சூரிய சந்திரர்களுக்கு அடுத்த இடம் கொடுக்கப் பட்டதில் இருந்து அவரின் முக்கியத்துவம் தெரிந்து கொள்ளலாம். (புராணங்களில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடைபெறும் யுத்தத்தில் சுக்கிராச்சாரியார் என்பவர் அசுர குருவாக இருந்து அசுரர்களுக்கு துணையாக இருப்பார்..)

கேள்வி: 
அது சரி மற்ற காய்களுக்கும் கிரகங்களுக்கும் எப்படி ஒப்பிடுவீர்கள்?.
பதில்:
புதன் கணக்கில் எடுத்துக் கொள்ளப் படவில்லை. ஏனெனில் அது சூரியனுக்கு அருகில் இருப்பதாலும், அதனுடைய சுழற்சிக் காலமாகிய 88 நாட்களும், அதனுடைய உருவ அமைப்பும் காரணமாகும் அடிக்கடி அஸ்தங்கத்தில் மாட்டிக் கொள்வதாலும், வக்கிரத்தில் சஞ்சரிப்பதாலும், சமயத்தில் மறைவிடத்தில் (12ஆம் இடம்) வருவதாலும் திருமணப் பொருத்தம் பார்க்கும் போது புதன் அவ்வளவு முக்கியத்துவம் பெறுவதில்லை. இனி யுத்தத்திற்கு தேவையானவர்கள் எல்லாம் சண்டைக்காரர்களாகத் தான் இருக்க வேண்டும். அதிலும் ஈவு இரக்கமற்ற கொடியவர்கள்தான் சண்டையில் ஜெயிக்க முடியும். ஜாதகத்தில் அந்த மாதிரி பாபர்கள் லிஸ்ட்டில் உள்ளவர்கள் தான் செவ்வாயும், சனியும்.

செவ்வாய்: 
திருமணப் பொருத்தத்தில் செவ்வாய்தான் மிக முக்கியமாகப் பார்க்கப் படுகிறது. பெண் ஜாதகத்தில் 2,4,7,8,12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் அது செவ்வாய் தோஷம் எனப்படும். அதுமட்டுமில்லாமல் பெண் ஜாதகத்தில் சூரியனோடு செவ்வாய் ,சனி ஆகியவை எந்தக் கட்டத்திலும் சேர்ந்து இருந்தால், அதற்கு தகுந்த கணவனை தேட வேண்டுமாம். அதாவது அந்த செஸ் போர்டில் ராஜா, குதிரை, யானை இருந்தால் விளையாடும் போது கவனம் தேவை, இல்லாவிட்டால் எளிதில் தோற்று விடுவீர்கள். செவ்வாயின் நிறம் சிவப்பு அதனால் குதிரையாக கற்பிதம் செய்தது நூற்றுக்கு நூறு சரி. அதிலும் அதன் தோஷ இடங்கள் ஆகிய 2,4,7,8,12 என்னும் ஐந்து இடங்கள் குதிரையின் இயக்கத்திற்கு ஒத்து வருகிறது. ஆகவே செவ்வாய் அதன் ஆட்சி வீடுகளில் (மேஷ, விருச்சிக) ராஜா, மந்திரி, குரு ஆகியோருக்கு இடமும் வலமும் நின்று யுத்தத்தில் கலந்து கொள்கிறது. அதன் சுழற்சி வருடங்கள் நான்கு, அது போல் அது செல்லும் கட்டங்களும் நான்கு.

வியாழன்: 
வியாழன் திருமண பொருத்தங்களில் அவ்வளவாக கணக்கில் கொள்ளப் படுவதில்லை. ஏனெனில் அவர் ஒருவகையில் சகலத்துக்கும் பொறுப்பானவராகுகிறார். ஆதலால் திருமணத்தில் அவரது பார்வை மட்டுமே கணக்கிடப் படுகிறது. அதைத்தான் ”வியாழ நோக்கம்” என்கிறார்கள். மேலும் திருமணத்திற்கு பின் ஏற்படும் குழந்தை பாக்கியத்திற்கு அவர் காரகனாக இருக்கலாம் ஆனால் திருமணம் ஆகிய பொருத்தத்தில் (யுத்தத்தில்) அவருக்கு வேலை இல்லை. அதிலும் இவர் ”ரொம்ப நல்லவர்” ஆதலால் இவர் ”அதுக்கு சரிப்பட மாட்டார்” ஆதலால் மீனமும், தணுசும் கணக்கில் வரவில்லை. பார்வையோடு சரி.


சனி: 
திருமண பொருத்தம் பார்ப்பதெல்லாம் அப்புறம், முதலில் ஜாதகத்தை கையில் எடுத்தவுடன் பார்க்க வேண்டிய விஷயம் ஆயுள்.
ஜோதிடர்களே! முதலில் ஜாதகத்தை எடுத்தவுடன் ஆயுள் ஸ்தானத்தையும், ஆயுள் காரகன் (சனி), ஆயுள் ஸ்தானாதிபதி, லக்னாதிபதி ஆகியோரைப் பார்த்து அதன் பலம் பலவீனத்தை கணித்து மனதில் வைத்து அதன்படி சொல்லுங்கள். அதைப் பார்க்காமல் தான் சிலபேர், ஒரு திரைப்படத்தில் சார்லி பலன் சொல்லி அடி வாங்கியதைப் போல் வாங்குகிறார்கள்.

ஆயுளுக்கு காரகன் (பொறுப்பேற்பவன்) சனிதான். சுபாவத்தில் கெட்டவன். சண்டைக்கு உகந்தவன், பாபி. இவருக்கு மந்தன், காரி, ஈஸ்வரன் என்றெல்லாம் பேருண்டு. வான வெளியில் பெரிய கிரகமாகவும் கடைசி கிரகமாகவும் உள்ளவர். (செஸ் போர்டிலும் கடைசியாக உள்ளது) கரிய நிறத்தவன், உருவத்தில் பெரியவன். இந்த இரண்டு குணாதிசயங்கள் உள்ள ஒரே ஒரு மிருகம் யானைதான். அதனால்தான் சனிக்கு யானையை உருவகப் படுத்தி ஆட்டத்தில் நிற்க வைத்து விட்டனர். இதை யாராலும் மறுக்க முடியாது. இவர் சூரிய சந்திரர்களுக்கு இடமும் வலமும் கடைசியில், தனது ஆட்சி (கும்பம், மகரம்) வீடுகளில் அமர்ந்து யுத்தத்தில் கலந்து கொள்கிறார்ர்ர். (அவன், இவன் என்று சொல்லி அனாவசியமாக கோபத்தை கிளறக் கூடாது பாருங்கள்). அதனுடைய இயக்கமும் யானையைப் போல் மெதுவாக, ஸ்டெடியாக இருக்கிறது. இரு ஜோதிடக் கட்டங்களை  கும்பம், மகரம் ஆகிய இரு ராசிகளுக்கும் இடையில் பிரித்து ஒரு நேர் கோட்டில் அமைத்து அப்படியே எதிரெதிர்த் திசையில் நேராக அடுக்கினால் செஸ் போர்டுதான்.


                         


கேள்வி: 
 சூரிய,சந்திரர்களையும் கிரகங்களையும் அதன் ஆட்சி வீடுகளையும் செஸ்ஸில் ராஜா, மந்திரி(க்யூன்), குரு(பிஷப்) நைட்(குதிரை), ரூக் (யானை) ஆகியோருக்கும் அவரது இருப்பிடங்களுக்கும் ஏறத்தாழ சரியாக ஒப்பிட்டு சொல்லிவிட்டீர்கள். இந்த சிப்பாய்களுக்கு எங்கிருந்து, யாரை அழைத்து வந்து ஒப்பிடப் போகிறீர்கள்?.

 பதில்:
அவர்களும் ஜோதிடத்தில் தான் உள்ளார்கள். ஒவ்வொரு கிரகத்திற்கும் உபகிரகம் (பான்) என்கிற அமைப்பு உண்டு. அதனுடைய உண்மையான அர்த்தம் என்ன வென்று தெரியவில்லை. ஒரு வேளை வால் நட்சத்திரங்களாக இருக்கலாம். ”உபகிரகம்” என்கிற வெறும் வார்த்தை பிரயோகத்தை வைத்துக் கொண்டு விவாதத்திற்கு வராதீர்கள், ஏனென்றால் "உபகிரகம்" என்பது இவர்கள் வசதிக்கு ஏற்படுத்திய வார்த்தை.

சூரியனுக்கு காலன்,
 சந்திரனுக்கு பரிவேடன்,
புதனுக்கு அர்த்தப்பிரகரணன்
சுக்கிரனுக்கு இந்திரதணுசு,
செவ்வாய்க்கு தூமன்,
குருவுக்கு எமகண்டன்
சனிக்கு குளிகன்

ஆகியோர்தான் சிப்பாய்கள். அவர்களுக்கு அதிக வலிமை இல்லைதான், ஆனால் அவர்கள் ஜாதகத்தில் லக்கினத்திற்கு எட்டாம் இடத்திற்கு சென்றால்தான் வில்லங்கம். மரணத்தையோ மரணத்திற்கு ஒப்பான கண்டத்தையோ கொடுப்பார்கள் என்பது ஜோதிடத்தின் பாலபாடம். இந்த சிப்பாய்கள் எதிரியின் கோட்டைக்குள் நுழைந்துவிட்டால் அதாவது (எட்டாம் இடத்திற்கு வந்துவிட்டால்) அவர்களுக்கு பதவி உயர்வு (Promotion) உண்டு. அது போல் செஸ்ஸில் பான் எட்டாம் இடத்திற்கு சென்றுவிட்டால் மந்திரியின் அதிகாரம் தரப்படும். ஜாதகத்தில் எட்டாம் இடத்தில் மாந்தி எனப்படும் குளிகன் அமர்ந்தால் அதுவும் தோஷமாக கருதப்படும்.ஆகவே சிப்பாய்களின் இருப்பிடம் நியாயப் படுத்தப் பட்டது.

கேள்வி: 
விளையாட்டின் முடிவிற்கும், திருமணப் பொருத்தத்திற்கும் எப்படி முடிச்சுப் போடுவீர்கள்?.

பதில்:
வெள்ளைக்காய் ஆணாகவும், கறுப்புக்காய் பெண்ணாகவும் உருவகப் படுத்திக் கொண்டு விளையாடும் போது, முதல் நகர்த்தலில் வெள்ளைக்காய்க்கு முன்னுரிமை கொடுத்து விளையாட்டு டிராவில் முடிந்தாலும், வெள்ளைக்காய் ஜெயித்தாலும் இரு ஜாதங்களும் சேரும் என்பதுதான் முடிவு. வெள்ளைக்காய் தோற்றால் அது பொருந்தாது. அதாவது மனை என்னும் குடும்பத்தில் பெண்ணின் கை ஓங்கியிருந்தால் அது சரியான குடும்ப அமைப்பாக இருக்காது என்பது ஜாதகம் கண்டு பிடித்த காலத்தில் ஏற்பட்ட மரபு. அந்தக் கால சமூக சூழ்நிலையை கருத்தில் கொண்டால் இதில் ஆணாதிக்கமோ என்ற கேள்விக்கே இடமில்லை.

கேள்வி: 
சதுரங்கத்தில் உள்ள கேஸ்லிங்க் (castling) என்பதற்கு ஜோதிட விளக்கம் என்ன?
பதில்:
தர்ம கர்மாதி யோகம் என்பதைப் பற்றி 1665 இல் இயற்றப் பட்ட "ஜாதக அலங்காரம்" கூறுவதைப் பார்ப்போம்.

மாதேகே டன்மயோக வகைகன்ம மன்னனோடு
தாதையுங்கூடி எந்தத் தலத்தினிருந்த போதும்
ஓதிய ஒருவர் வீட்டில் ஒருவர் மாறாயிருந்த
போது மாறாத செல்வம் பொருந்திடும் ராஜயோகம்.

அதாவது 9ஆம் 10 ஆம் அதிபதிகள் இணைந்து எங்கிருந்தாலும் அல்லது ஒருவர் வீட்டில் ஒருவர் மாறியிருந்தாலும், அச்சாதகன் குறைவிலாத நல்லவழியில் ஈட்டிய செல்வத்தைப் பெற்று இராஜ யோகத்தோடு வாழ்வான். இதைத்தான் பரிவர்த்தனை யோகம் எனவும் சொல்வர். பரிவர்த்தனை என்றால் (இடத்தை) கொடுத்து வாங்குதல் எனப்படும்.

மேலும்  இரு கிரகங்கள் தங்கள் வீடுகளை மாற்றிக் கொள்வதை பரிவர்த்தனை யோகம் என்பார்கள்.அதாவது 1,2,9,10,11 க்குடையவர்கள் தங்கள் இராசி வீடுகளை பரிவர்த்தனை செய்து கொள்வதாகும். உதாரணமாக சூரியனின் ஆட்சி வீட்டில் சனியும், சனியினது ஆட்சி வீட்டில் சூரியனும் இருந்தால் அது பரிவர்த்தனை யோகம் எனப் படும். இதனால் அதிகப் பலம் பெறுவார்கள். யோக ஜாதகம் என்பர். செஸ்ஸில் யோகம் என்பது வெற்றிக்கான வாய்ப்புகளென்றுதான் அர்த்தம். அந்த வகையிலான ஒரு நகர்த்தலாக இருக்கும்.

மேற்க் கூறிய விளக்கங்களால் இந்தியாவின் சதுரங்கம்தான் இன்று உலகெங்கும் விளையாடப் படுகிறது என்பது தெளிவாக விளங்குகிறது. மேலும் சதுரங்கத்தின் தோற்றுவாய் ஜோதிடம்தான் என்பதும், அந்த ஜோதிடத்தை உலகிற்கே அளித்தது இந்தியாதான் என்பதும் உறுதி செய்யப் படுகிறது.

தொடர் முற்றும்.

நன்றி.

இரா. சந்திரசேகர்,
பழனி.

மேலும் படிக்க...!
Previous
ஆராய்ந்து பார்த்தால் சீட்டுக் கட்டும் ஜோதிடத்தை அடிப்படையாகக் கொண்டதாகத் தான் இருக்கும். ஒரு வருடத்தின் நாட்களாகிய 364 ஐ சந்திரனின் சுழற்சிக் காலமாகிய 28 நாட்களால் வகுத்தால் (13 மாதம் ) வருகிறது. சீட்டுக்கட்டில் ஒவ்வொரு வகையிலும் 13 சிட்டுக்கள் உள்ளது. வருடத்தின் மொத்த வாரங்களை கணக்கிட்டால் 52, இது மொத்த சீட்டுக்களின் எண்ணிக்கையை குறிப்பதாகும். ஒரு மாதத்திற்கு நான்கு வாரங்கள் இருப்பது போல், சீட்டின் வகைகள் நான்கு. மற்றபடி ராஜா-சூரியன், ராணி-சந்திரன், ஜாக்-சுக்கிரன், ஜோக்கர்-சனி. இதனுடைய தோற்ற காலத்தின் வரலாற்றை நோக்குங்கால் இதுவும் ஜோதிடத்தையும், சதுரங்கத்தையும் பின்புலமாகக் கொண்டு உருவான விளையாட்டுதான் எனத் தெரியவரும்

வினோத்குமாரின் கேள்வி:
சூரியன் ராசா
சந்திரன் மந்திரி
சுக்கிரன் தளபதி
 சனி சிப்பாய்
செவ்வாய் குதிரை
ராகு கேது இல்லை
புதன் இல்லை.
யானை .. யார் குருவாக தான் இருக்க வேண்டும்...என நினைக்கேரன்.. என் புரிதல் சரியா?.

இன்னொரு கேள்வி .. சூரியன் சந்திரன் தவிர மற்ற கிரகங்கள் ஏன் இரண்டாக உள்ளது..? 2 யானை , 2 தலைபத் i 2 குதிரை . ஏன்? ..

 பதில்: உங்களின் வரிசையில் சிறிய திருத்தம்.
 சூரியன்-ராசா
சந்திரன்-தளபதி
சுக்கிரன்-மந்திரி(மதகுரு)
செவ்வாய்-குதிரை
சனி-யானை

புதனுக்கும் குருவுக்கும் திருமணப் பொருத்தத்தில் இடமில்லை. புதனுக்கான விளக்கம் ஏற்கனவே கொடுத்தாகிவிட்டது.
 http://chandroosblog.blogspot.in/2012/04/6.html 

குருவுக்கான விளக்கம் பின்னர் தருகிறேன். ஜோதிடத்தில் ராசியை, வீடு என்றும் குறிப்பிடுவதுண்டு. ஒவ்வொரு கிரகங்கள் இருக்கும் இடத்தைப் பொறுத்து உச்ச ,நீச, ஆட்சி வீடு எனக் கூறப்படும்.



கிரகங்கள் எல்லாமே நீள் வட்டப் பாதையில் சுற்றுவதை அறிவோம். அதிலும் பூமி வரிசைக் கிரமத்தில் மூன்றாவதாக உள்ளதாலும், மற்ற கிரகங்கள் எல்லாமே பூமியைப் பொறுத்து, ஒரு சமயம் மிக அருகிலும் (உச்சம்) அதற்கு நேர் எதிரான நிலையில் தூரத்தில் (நீசம்) அமைவதும் இயல்புதான்.

செவ்வாய் கிரகம் நமக்கு(பூமிக்கு) அருகில் இருக்கும் பொழுது சுமார் 4 கோடி மைல் தொலைவிலும் அதிக பட்ச தூரம் என்று வரும் பொழுது சுமார் 22 கோடி மைல் தொலைவிலும் இருக்கிறது. நீச (Aphelion) நிலையில் இருக்கும் பொழுது உச்ச (Perihelion) நிலையைப் போல் சுமார் 5 மடங்கு தூரத்தில் இருக்கிறது.


ஆனால் சந்திரன் பூமியையும், பூமி சூரியனையும் ஏறத்தாழ (low eccentricity) வட்டப்பாதையில் சுற்றுவதால், இவைகளின் உச்ச, நீச தூரத்திற்கிடையே வித்தியாசம் மிகமிகக் குறைவாக இருக்கும். சுமார் 1/8 (அரைக்கால்) பங்குதான். அதாவது பூமிக்கும் -செவ்வாய்க்கும் இருக்கும் வித்தியாசத்தில் 40ல் ஒரு பங்குதான்.

ஜோதிடப் படி பூமியை மையமாக வைத்துப் பார்க்கும் போது சூரியன் அனேகமாக ஒரு வட்டப்பாதையில் சுற்றுவது போல்தான் தெரியும். ஆதலால் சூரியனையும் சந்திரனையும் தவிர்த்து மற்ற எல்லா கிரகங்களும் ஒரு நேரத்தில் பூமிக்கு மிக அருகிலும் மற்றொரு சமயத்தில் மிக தூரத்திலும் இருக்கும்.

சூரியனும் சந்திரனும் பூமியை ஒரு சுமாரான (low eccentricity) நீள்வட்டப் பாதையில் சுற்றுவதால்தான் ஆட்சியாக ஒரே ஒரு வீடு கொடுக்கப் பட்டுள்ளது. ஆனால் மற்ற கிரகங்களை கணக்கிடும் போது அவைகளுக்கு அதி பயங்கர நீள்வட்டத் தன்மை உள்ளது.
கீழே உள்ள படத்தில் சந்திரன்,சூரியனின் பாதைகள் வட்டமாகத் தெரியும், ஆனால் பூமியை மையமாகக் கொண்டு எல்லாவற்றையும் சுழல்வதாகக் கற்பனை செய்து பாருங்கள்,அப்பொழுதுதான் உச்சம், நீசம் பற்றி புரியும்.


அவ்வாறு ஆட்சிவீடு அளிக்கும் போது சூரியனுக்கு சிம்ம ராசியையும் சந்திரனுக்கு கடக ராசியையும் வீடாக கொடுத்துள்ளனர். ஆனால் அதற்கு அடுத்து புதனுக்கு இரண்டு வீடும் சுக்கிரனுக்கு இரண்டு வீடும் அது போல் செவ்வாய், வியாழன், சனி ஆகியோருக்கும் தலா இரண்டு வீடு கொடுக்கப் பட்டுள்ளதை கீழே உள்ள படத்தைப் பார்த்து புரிந்து கொள்ளலாம்.

ஆட்சி வீடு படம்
அதாவது 12 வீடுகளை, ஐந்து கிரகங்களுக்கு தலா 2 வீடும் சூரிய சந்திரர்களுக்கு தலா ஒரு வீடும் ஆக கொடுக்கப் பட்டுள்ளது. இதிலிருந்தே தெரிவது என்னவென்றால், சூரியனையும் (நட்சத்திரம்) சந்திரனையும் (உபகோள்) மற்ற கிரகங்களில் இருந்து ஏதோ ஒருவகையில் வேறுபடுத்தி வைத்துள்ளனர். இதனால் சந்திரனையும் "கிரக" லிஸ்ட்டில் இருந்து விலக்கி விடலாம் என்பதை பகுத்தறிவு வாதிகள் புரிந்து கொள்ளட்டும்.

செஸ்ஸில் ராஜா, மந்திரி ஆகியோர் ஒவ்வொருவர்தான் உள்ளனர். ஆனால் மதகுரு,(சுக்கிரன்) குதிரை,(செவ்வாய்) யானை(சனி) ஆகியோர் இரண்டு பேர் உள்ளனர். இதில் பிரதானமாக சூரியன் ராஜாவாகவும் சந்திரன் மந்திரியாகவும் கற்பிக்கப் பட்டதில் யாருக்கும்மாற்று கருத்து இருக்க முடியாது. மாற்றுக் கருத்து இருந்தால் கீழே உள்ள விளக்கத்தினால் மாற்றிக் கொள்ளவும்.

ஜாதகத்தில் லக்னத்துக்குத் தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப் படுகிறது. லக்னம் என்பது முற்றிலும் சூரியனைச் சார்ந்துள்ளது. சூரியன், லக்னம், ஆகிய இரண்டும் பூமியில் ஜாதகரின் பிறந்த இடத்தைப் பொறுத்து சூரியனின் நிலையை நேரடியாகவும், ராகு, கேது மறைமுகமாகவும், துல்லியமாகவும் குறிப்பிடுகின்றது. சூரியனின் துல்லியமான நிலையை கணக்கிடத்தான் ( அது ஒரு *ஹைடெக் சமாச்சாரம் ) லக்னம், ராகு, கேது ஆகிய மூன்றும் பயன்படுத்தப் படுகிறது என்பது ஜோதிடத்தில் தெளிவுள்ளவர்களுக்குப் புரியும். வாழ்க்கையின் முழு பலனும் லக்னத்தை வைத்துத் தான் சொல்லப் படுகிறது. அதாவது உயிர், உடல் ஆகியற்றை லக்னம் குறிப்பிடுகிறது.

 *http://chandroosblog.blogspot.in/2010/06/blog-post.html.

இது போன்ற துல்லிய கணக்கீடுகள் சூரியன், சந்திரனைத் தவிர மற்ற கிரகங்களுக்கு கிடையாது. ஆகவே சூரியன்தான் ராஜா, சந்திரன்தான் மந்திரி. ஜாதகத்தில் சூரிய, சந்திரர்களுக்கு ஆட்சி வீடாக தலா ஒரு வீடுதான் (கடகம் ,சிம்மம்) கொடுக்கப் பட்டுள்ளது. ஆகவேதான் செஸ்ஸில் ராஜா, தனது சிம்மம் ஆகிய ஒற்றை வீட்டில் இருந்து ஆட்சி செய்கிறார் அல்லது யுத்தம் செய்கிறார். சூரியனின் சுழற்சி ஒருவருடம் என்பதால் அது ஒரு கட்டம்தான் நகர்த்த முடிகிறது.

சூரியனுக்கு அடுத்ததாக சந்திரனுக்குத்தான் ஜாதகத்தில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப் படுகிறது. அறிவையும் ஆரோக்கியத்தையும் குறிப்பிடுவது இராசிதான். இராசி என்பது முற்றிலும் சந்திரனைச் சார்ந்துள்ளது. அதனால்தான் சந்திரனை ”மதி” என்றும் கூறுகிறார்கள். சந்திரன், ராசி, ஆகிய இரண்டும் பூமியைப் பொறுத்து சந்திரனின் நிலையை நேரடியாகவும், ராகு, கேது, மறை முகமாகவும் சந்திரனின் நிலையைத்தான் குறிப்பிடுகின்றது . சந்திரனின் துல்லியமான நிலையை கணக்கிடத்தான் இராசி, ராகு கேது ஆகிய மூன்றும் பயன்படுத்தப் படுகிறது. ஆகவே சந்திரன்தான் மந்திரி. சந்திரன் தனது ஒற்றை வீடாகிய கடகத்தில் நின்று ஆட்சி செய்கிறார் அல்லது யுத்தம் செய்கிறார். ஒருவருடத்தில் 13 முறை சுற்றி விடுகிறார்.
தொடரும்............
இரா.சந்திரசேகர்,
பழனி.

மேலும் படிக்க...!
குஜால் மற்றும் வினோத்குமாரின் மறு மொழிகளுக்கான பதில்.

இந்தியாவின் காலண்டர்தான் உலகிலேயே மிகவும் பழமையானது. இந்தியரின் வானியல் திறமைக்கு இந்தக் காலண்டரும் ஒரு சாட்சிதான். நாம்தான், எல்லாரையும் விட வானியலில் 3000 வருடங்கள் முன்னேறியவர்கள் என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம். அதிலும் நாம் எடுத்துக் கொண்டதோ கலியுகத்தை மட்டுமே.

மேலும் விவரங்களுக்கு

அக்காலத்தில் பாமரனுக்கும் பாராளுபவனுக்கும் வானியல் விளக்கங்களைக் கூறி அன்றைய நாள் எப்படிப் பட்டது, என்ன வருடம், என்ன மாதம், என்ன தேதி, என்ன கிழமை, என்று கூறுவதற்கு ஒரு ஆள் தேவைப் பட்டான். அதற்காகவே ஒரு குழுவினர் இருந்தனர். அவனும் தனது முன்னோர்களின் வாய்மொழியில் பின் பற்றப்பட்ட காலண்டரை தினசரி அப்டேட் செய்து கண்கானித்து அவனே ஒரு நாட்காட்டியாகவும், (Event Manager) ஈவண்ட் மேனேஜராகவும் செயல்பட்டான். 

உதாரணமாக, ஒருவர் கணபதி பூஜை செய்து இந்தப் பதிவை இடுகிறார் என்றால், அந்த செயலின் முதல் பூஜையாக ஸங்கல்பம் என்பது அமையும். ஸங்கல்பம் என்பது இறைவனிடம் இந்த கணபதி பூஜையின் வாயிலாக பலனை அடையக் கேட்கப்படும் மந்திரமாக அமைகின்றது. அடுத்தமுறை விஷேசங்களில் கலந்து கொள்ளும் போது கவனியுங்கள்.

அந்த மந்திரம், விக்னங்கள் எனும் வினைகளை நீக்கும் விநாயகரை வழிபடும் ஸ்லோகமாகிய "ஓம் சுக்லாம் பரதம் ..... சாந்தயே" என்ற மந்திரத்தோடு ஆரம்பிப்பார்கள் .

அடுத்து வருடம்,மாதம் ,கிழமை, திதி, நட்சத்திரத்தையும் (மொத்தத்தில் காலத்தையும்) அடுத்து பூகோள ரீதியாக இடத்தையும் குறிப்பிடுவார்கள், உதாரணத்திற்கு இன்றைய நாளுக்கான மந்திரமும் விளக்கமும்.

"சுபாப்யாம் சுபேசோபனே முஹூர்த்தே ஆத்ய ப்ரஹ்மண:த்வீதிய பரார்த்தே
இந்த இனிய நல்ல வேளை ,பிரம்மனின் இரண்டாவது பரார்த்தத்தில்
ஸ்வேத வராஹ கல்பே
முப்பத்தாறு கல்பங்களில் முதல் கல்பமாகிய ஸ்வேத வராஹ கல்பத்தில்
வைவஸ்வத மன்வந்த்ரே
பதினான்கு மன்வந்திரங்களில் ஏழாவது மன்வந்திரமாகிய வைவஸ்வத மன்வந்திரத்தில் .
அஷ்டாசாவிகும்சதி தமே
71 சதுர்யுகங்களில் 28வது சதுர்யுகத்தில்
கலி யுகே 5113
நான்காவது யுகமாகிய கலியுகத்தில் 5113வது வருடத்தில் . (2012)
ப்ரதமே பாதே
பிரபஞ்சத்தின் முக்கியமான பகுதியில்
ஜம்புத்வீபே
ஏழு தீபகற்பங்களில் முதல் தீபகற்பமாகிய ஜம்பூ த்வீபத்தில் (நீரால் சூழப்பட்டுள்ள,  நாம் வசிக்கும் இந்திய தீப கற்பத்தில்),
பாரத வருஷே
ஒன்பது வர்ஷத்தில் முதல் வர்ஷமாகிய பாரத வர்ஷம், (இதுவும் இடம் பற்றியதே)
பரத கண்டே
ஒன்பது கண்டங்களில் முதல் கண்டமாகிய.பரத கண்டத்தில்,
மேரோர்: தக்ஷ’ணே பார்ச்வே
மேரு எனும் இமயமலையின் தெற்கு புறத்தில்.
சகாப்தே அஸ்மின் வர்த்தமானே வ்யவகாரிகே பிரபவாதீனாம் சஷ்டியா: ஸம்வத்ஸராணாம் மத்யே
மேற்கண்ட பிரம்ம காலம் தொடங்கி, பரத கண்டத்தின் தெற்கு புறத்தில், பூஜை செய்யும் கர்த்தாவானவர் 60 வருடங்கள் கொண்ட சுழற்சியில், தற்காலமாகிய
நந்தன.. நாம ஸம்வத்ஸரே
26 வது வருடமாகிய ..நந்தன.. எனும் பெயர் கொண்ட வருடத்தின் பனிரண்டு மாதங்கள் கொண்ட ஸம்வத்ஸரத்தில்,
(உத்தர/தக்ஷ¢ண) உத்தராயனே
உத்த்ராயண காலத்தில்
(வஸந்த/ க்ரீஷ்ம/ வருஷ/ சரத்/ ஹேமந்த/ சிசிர்) வஸந்த ருதௌ
வஸந்த ருது எனப்படும் வஸந்தகால பருவத்தில்
சித்திரை மாஸே
சித்திரை மாதத்தில்
(சுக்ல/ கிருஷ்ண) கிருஷ்ணபட்க்ஷ திரயோதசி
தேய்பிறையில் திரயோதசி திதியில்
சுபதிதௌ வாஸர:
(பானு/ இந்து/பௌம/ ஸெளம்ய / குரு/ ப்ருகு/ ஸ்திர) குரு வாஸர யுக்தாயாம்
சுபயோக சுபதினமான வியாழக்கிழமையில் (19-04-2012)
.உத்திரட்டாதி...... நக்ஷத்ர ஸம்யுக்தாயாம்
உத்திரட்டாதி நட்சத்திரத்தில்
சுப நக்ஷத்ர சுபயோக சுபகரண ஏவங்குண விசேஷெண வசிஷ்டாயாம் அஸ்யாம்"
இந்தப் பதிவு இடப்பட்டது. என்று முடித்து, யார் இந்த கணபதி ஹோமத்தைச் செய்கின்றார்களோ அவர்களின் பெயர் நக்ஷத்திரங்கள் சொல்லப்பட்டு, அந்த ஹோமத்தினால் கிடைக்கும் பலன்களை வேண்டுவதாக முடியும்.
மேலும் விளக்கமறிய

இவ்வாறு பரம்பரை பரம்பரையாக சில குடும்பத்தினர் அப்டேட் செய்து பஞ்சாங்கம் வெளியிடுகிறார்கள். மேலும் நீங்களே பஞ்சாங்கம் தயாரித்துக் கொள்வதற்கான அட்டவணைகளும் தற்பொழுது வந்துவிட்டன. 

திண்டுக்கல்லைச் சேர்ந்த இரா.அருள்வேல் என்பவர் கூட மூன்று புத்தகங்கள் வெளியிட்டு உள்ளார்.


காலத்தை இவ்வளவு தெளிவாக கணிதம் செய்து இருப்பவன், இவர்கள் கூறும் அயனாம்சத்தையும் தெளிவாக கண்டு அதற்கான கணக்கீடுகளையும் அப்டேட் செய்துள்ள விதமறிய பஞ்சாங்கம் வாங்கிப் படித்துப்பாருங்கள் . இவர்களது கணிதம் துல்லியமானது என்பதை அறிய கிரஹணங்கள் பற்றிய குறிப்புகள் ஒன்றே போதும், நிகழும் நேரம் மற்றும் எடுத்துக் கொள்ளும் காலம் (Duration) ஆகியவற்றை வீட்டின் ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டு ஒரு (பல) வருடத்திற்கு முன்பே கணித்துக் கூறும் திறமை ஒன்றே போதும் பஞ்சாங்கத்தின் நம்பகத்தன்மை பற்றி தெரிந்து கொள்ள. 

காலண்டரைப் பற்றி அறியாத மூடன்தான் தனது இஷ்டத்திற்கு தகுந்தாற் போல் வருடப் பிறப்பை மாற்றுவான். இப்பொழுது "தை " மாதம் என்பார்கள். பின்பு சங்ககாலத்தில் "தயா "என்று இருந்ததை ஒரு குள்ள நரிக் கூட்டம் "தை" என்று மாற்றி விட்டது என்பார்கள்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள பிளாக்கில் பூமியின் அச்சுக்கு ஏற்படும் பம்பர சுழற்சியைப் பற்றியும் அது 25783 வருடங்களுக்கு ஒருமுறை நிகழ்கிறது என்றும் அதனால் காலம் சிறிது சிறிதாக முன் செல்கிறது எனவும் கூறப் படுகிறது.

 
அதனால்தான் 2200 வருடங்களுக்கு முன்பு தையாக இருந்தது இன்று சித்திரையாகிவிட்டது என கூறப்படுகிறது. அப்படியானால் இன்னும் கொஞ்சம் முன்னால் போய் 25783 வருடங்களுக்கு முன் இதே மாதம் சித்திரையாகத் தானே இருந்திருக்க வேண்டும்.

ஆகவே குஜ்ஜாலின் objection if any,overruled.


எது எக்கேடு கெட்டாலும் பூமத்திய ரேகை இடம் மாறுவதற்கான வாய்ப்பு கிடையாது. ஆகவே காலக் கணிதத்தில் தவறு ஏற்படுவதற்கான வாய்ப்பும் இல்லை.
http://en.wikipedia.org/wiki/Axial_precession   சொல்லுகிறது
A 12th century text by Bhāskara II[9] says: "sampāt revolves negatively 30000 times in a Kalpa of 4320 million years according to Suryasiddhanta, while Munjāla and others say ayana moves forward 199669 in a Kalpa, and one should combine the two, before ascertaining declension, ascensional difference, etc."[10] Lancelot Wilkinson translated the last of these three verses in a too concise manner to convey the full meaning, and skipped the portion combine the two which the modern Hindi commentary has brought to the fore. According to the Hindi commentary, the final value of period of precession should be obtained by combining +199669 revolutions of ayana with −30000 revolutions of sampaat to get +169669 per Kalpa, i.e. one revolution in 25461 years, which is near the modern value of 25771 years.

துருவ நட்சத்திரம் என்று ஒன்று இருப்பதால் அதை வைத்து இந்த பம்பர சுழற்சியையும் ஜோதிடர்கள் 5000 வருடங்களுக்கு முன்பே தங்கள் கணக்கீட்டில் வைத்துள்ளனர். அயாணாம்சம் என வைத்து அதற்கான திருத்தத்தையும் வைத்துள்ளனர். தங்கள் கணிதத்தில் இவர்கள் கூறும் பம்பர சுழற்சியினால் சுமார் 12,000 வருடங்களுக்கு ஒரு முறை தென் துருவத்தில் நிகழும் வெட்பதட்ப நிலை வட துருவத்திலும், வடதுருவத்தில் நிகழும் வெட்ப தட்ப நிலை தென்துருவத்திலும் மாறி மாறி நிகழும். சிலர் இதைத் தவறாக புரிந்து கொண்டு தென் துருவம் வடதுருவமாக மாறிவிடும் என்பார்கள். அப்படியெல்லாம் பூமி தலைகீழாக மாறுவதில்லை. ஆகவே பஞ்சாங்கம் தவறென்பதற்கும் வழி இல்லை.

ஆகவே வினோத்குமாரின் objection overruled.

இரா.சந்திரசேகர்,

மேலும் படிக்க...!

உலகில் மக்கள் புத்தாண்டை, ஜனவரியை ஒட்டித்தான் கொண்டாடுகிறார்கள். தமிழன் சித்திரையில் கொண்டாடுகிறான். ஜனவரியை ஒட்டி நிகழும் வானியல் நிகழ்வு என்று பார்க்கும் போது அதுவும் சூரியன் சம்பந்தப்பட்ட தாகத்தான் இருக்கிறது.

அயணம் என்பதுதான் தமிழில் பயணம் என்று மாறிவிட்டது. இராம அயணம்=இராமாயணம் -இராமனின் பயணம்.

சூரியனின் உத்ராயணம்- வடக்கு நோக்கிய பயணம், தெட்சினாயணம் தெற்கு நோக்கிய பயணம்.

உத்ராயணம், தெட்சினாயணம், சித்திரைமாதம். மேஷராசி, 0 டிகிரி

சூரியன் தெட்சிணாயண பயணத்தை முடித்துவிட்டு தை மாதத்தில் உத்ராயணத்தை தொடங்கும் விழாவைத்தான் மகர சங்கராந்தி என்று கூறுகிறார்கள். அதாவது சூரியன் மகரராசியில் நுழைவதைத்தான் சங்கராந்தி எனக் கூறப்படுகிறது. தெட்சிணாயணத்தை முடிக்க ஆறு மாதங்களாகும். உத்ர, தெட்சிண என்றால் முறையே வடக்கு, தெற்கு என நமக்கு தெரியும்.சூரியன் கடகராசிக்கும் மகர ராசிக்கும் இடையே ஊசலாடினாலும் அதன் நிலையான இடம் பூமத்திய ரேகைதானே?. அதனால்தால் பூமத்திய ரேகையில் மேஷராசியில் நுழைவதைத்தான்  வருடப் பிறப்பாக கருதலாமே?.

இங்கு சூரியனது பயணத்தை மேற்கூறியவாறு கூறினால் இதுவும் பார்ப்பண அசிங்கக் கதை என்று தமிழக பகுத்தறிவுவாதிகள் உளற ஆரம்பித்து விடுவார்கள்.

பூமி தன்னைத்தானே சுழலும் சுழற்சியின் அச்சும், பூமி சூரியனை சுற்றும் பாதையின் தளமும் ஒன்றுக்கொன்று செங்கோணமாக இல்லாமல் சுற்றும் பாதையின் தளத்திற்கு 23.44 பாகை சாய்வாக உள்ளதால் பருவகாலம் ஏற்படுகிறது.

பூமத்திய ரேகையிலிருந்து வடக்கே 23.44 பாகையில் அமைந்த ரேகையை கடகரேகை என்றும் பூமத்திய ரேகையிலிருந்து தெற்கே 23.44 பாகையில் அமைந்த ரேகையை மகரரேகை என்றும் கூறுவார்கள்.

ஜாதகக் கட்டங்களில் கடக, மகர ராசி எனக் குறிப்பிடப்படுவதும் அதையொட்டித்தான். ஒரு வருட சுழற்சியின் போது பூமி, கடகரேகைக்கும் மகரரேகைக்கும் இடையே உள்ள பகுதிகளை சூரியனுக்கு நேர்குத்தாக அமைத்து கொள்வதைத்தான் சூரியனது பயணம் என்கிறோம்.

படத்தை கிளிக் செய்து பார்க்கவும்.


படத்தில் Tropic of Cancer என்பது கடகரேகை, என்பது Tropic of Capricorn மகரரேகை. Equator  என்பது பூமத்திய ரேகை.

 ஒரு வருடத்தில் இந்த பயணத்தில் சூரியன் பூமத்திய ரேகையை இருமுறை (Equinox மார்ச் 20, செப்டம்பர் 22) ஆகிய சம பகலிரவு நாட்களில் கடக்கிறது.

மகர, கடக ரேகையை ஒருமுறையும் (Soltice டிசம்பர் 21, ஜூன் 21) கடக்கிறது.

ஆங்கிலேயர்கள் மகர Soltice ஒட்டி தங்களது புத்தாண்டை வைத்துக் கொண்டனர்.
தமிழர்கள் நட்சத்திரத்தை வைத்து கணக்கிடப்படும் (Sidereal vernal equinox April 14). ஐ ஒட்டி , அதாவது பூமத்திய ரேகையிலிருந்து, அதாவது 0 டிகிரியிலிருந்து சூரியன் பயணத்தை ஆரம்பிக்கும் போது தங்களது புத்தாண்டை வைத்துக் கொண்டனர். ஆகவே சித்திரை மாதத்தில் (Sidereal vernal equinox April 14). புத்தாண்டை வைத்துக் கொள்வதில் ஒரு நியாயம் உள்ளது. (starting from 0 position).

 நட்சத்திரத்தை வைத்து கணக்கிடுதல் என்பது ஒரு ஹைடெக் சமாச்சாரம் அதாவது சூரிய மண்டலத்தை வெளியிலிருந்து பார்வையிட்டு கணக்கிடு வதற்கு ஒப்பானது.

http://en.wikipedia.org/wiki/Sidereal_astrology

நமது பகுத்தறிவுவாதிகளுக்கு இதையெல்லாம் எடுத்துச் சொல்ல ஆளும் இல்லை சொன்னாலும் புரியாது. கடகம் , மகரம் என்றால் அலர்ஜி. அதிலும் சங்கராந்தி என்றால் பேயே பிடித்துவிடும்.

அதிலும் ஆயிரமாயிரம் வருடங்கள் பின்பற்றும் ஒரு வழிமுறையை நமக்கு நன்மைகள் ஏற்படும் போது மாற்றிக் கொள்ளலாம். ஆனால் இப்படி மாற்றிவைப்பதால் குழப்பம்தான் மிஞ்சும் பைசா பிரயோசனமில்லாத வேலை. இமாலயத் தவறென்றால் கூட திருத்திக் கொள்ளலாம். இதில் தவறென்று ஏதுமில்லை.

தவற்றை யெல்லாம் திருத்தலாம் என்றால் முதலில் 1,70,000 கோடியை அரசாங்க கஜானாவில் கட்டி விட்டு தவறுக்கு மண்ணிப்பு கேட்க வைப்போம். இப்பொழுது அதுதானே மிகவும் முக்கியம்.அப்புறம் தைக்கு மாற்றிவிடலாம்.என்ன தமிழர்களே தவறுகளை களை எடுக்கலாமா? அதுவரை (இப் போதைக்கு) (இப்போதைக்கு) இப்போ "தை"க்கு இருக்கட்டுமே சித்திரை. இன்னும் காலண்டர் பற்றிய தெளிவுக்கு இங்கே கிளிக் செய்யவும்
இரா.சந்திரசேகர்,
பழனி.

மேலும் படிக்க...!
Previous
பாகம் 6
சென்ற பதிவில்
வினோத் குமார் என்பவரின் கேள்வி:
ஜோதிடத்தில் உள்ள உச்சம், நீசம், வக்கிரம் போன்றவை சதுரங்கத்தில் இருக்கிறதா ?

பதில்:
விளையாட்டு, ஆட்சி நிலையில் ஆரம்பிக்கப் படுகிறது. உச்சத்தில் (அதிகபட்ச இட மதிப்பு) வெற்றியும், நீசத்தில் (மிகக் குறைந்த பட்ச இடமதிப்பு) தோல்வியும், வக்கிரத்தில் தற்காப்பு ஆட்டமும் எனக் கொள்ள வேண்டும். பொதுவாக சதுரங்க ஆட்டத்தின் பிரச்னைகள் பாதி மூவைக் கொண்டு ஆராயப் படும் விதம் அறிவோம். அது போன்றுதான் ஜாதகப் பொருத்தமும். சதுரங்கத்தில் ஆரம்பம், இடை, முடிவு என்று ஆட்டங்கள் பலவிதமாக அலசப்படுகிறது. (Opening Game, Middle Game, End Game,)

http://en.wikipedia.org/wiki/User:Sentriclecub/Gothic_Chess_openings_middlegame_and_endgame

பொதுவாக ஜாதகம் என்பது பாதி விளையாடிய விளையாட்டின் நிலைமை எனக் கொள்ள வேண்டும். இந்த கேம்மில் யார் ஜெயிப்பார்கள் என்று அலசுவதே ஜாதகப் பொருத்தம் பார்ப்பதுதான். பொதுவாக நீங்கள் பார்த்திருக்கலாம், செஸ் பற்றிய புத்தகங்கள் எல்லாம் செஸ்ஸை எப்படி விளையாடுவது என்பதைப் பற்றி இருக்காது. ஏனென்றால் அதன் விதிகள் மிகவும் எளிமையானவை அதை இரண்டு பக்கங்களில் முடித்துவிடலாம்.

ஆனால் செஸ் புத்தகங்கள் முற்றிலும், 99 சதவீதம், பாதி விளையாடிய, பலவிதமான விளையாட்டின், திருப்பு முனைகளால் ஏற்படும் மாற்றங்கள், மற்றும் தீர்வுகள் (Chess problems and solutions) பற்றியவையாகத்தான் இருக்கும்.

கேள்வி:
உங்கள் கருத்தின் தேவைக்கு தகுந்த மாதிரி அறிவியலை மாற்றிக் கொள்வீர்களா? ஒரு நேரம் சூரிய மைய சித்தாந்தம் தான் ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது என்கிறீர்கள் மற்றொரு நேரத்தில் பூமி மையச் சித்தாந்தத்தை கலந்து சொல்கிறீர்கள் எதை எடுத்துக் கொள்வது.?

பதில்:
இதில் என்னுடைய திணிப்பு, மறைப்பு என்று எதுவுமில்லை. உங்களுக்கு ஜாதகம் தெரியும் என்றால் இந்த விஷயம் எவ்வளவு உண்மை என்பது சொல்லப்பட்ட விஷயத்தில் தெளிவாகி இருக்க வேண்டும். ஜோதிட அறிவியலைத்தான் உள்ளது உள்ளபடி எடுத்தாண்டுள்ளேன். மேலும் அவற்றிலுள்ள அறிவியலை எடுத்து விளக்கியுள்ளேன்.

நாம் ஒன்றும் இந்த சூரிய மண்டலத்தின் மேலே இருந்து பார்வையிடும் பார்வையாளர்கள் அல்லவே? நாம் இந்த சூரிய மண்டலத்தின் உள்ளே, அதுவும் பூமியின் மேற்பரப்பில் தானே இருக்கிறோம். அதிலும் ஜோதிடம் என்பது அக்காலத்தின் தேவையை ஒட்டி, மனிதனை மையப் படுத்தி உருவாக்கப் பட்ட அறிவியல், ஆகவே நாம் கணக்கிட வேண்டியது மனிதனை மையமாக கொண்ட, பூமி மையச் சித்தாந்தம் தான். மனிதனுக்கு, மனிதன் சொல்லி எளிதில் விளங்கிக் கொள்வதற்காகத் தான் பூமி மையச் சித்தாந்தம்.

"சூரியமண்டல பார்வையாளர்" களுக்கு கிழக்கு, மேற்கு என்று நாம் திசை சொல்லிக் கொள்வது படு கேலிக் கூத்தாகத் தெரியும். ஆனால் நமது அன்றாட வாழ்வில் கிழக்கு, மேற்கில் எந்த சிக்கலும் இல்லையே அது போன்றுதான் பூமி மையச் சித்தாந்தத்தினால் எந்தச் சிக்கலும் இல்லயே. எல்லாமே ஏதோ கற்பனையில் தோன்றியதை எழுதி வைத்தவை அல்ல. ஒவ்வொன்றும் பலநூறு வருடங்கள் தினசரி கவணிக்கப் பட்டு ஆவணப்படுத்தப் பட்டவைதானே. தவறு இல்லாத வரை எந்தச் சித்தாந்தமாக இருந்தால் என்ன? அது மட்டுமில்லாமல் நமது முன்னோர்கள் இரண்டு விதமான சித்தாந்தங்களையும் தெரிந்து வைத்திருந்தனர் என்பதற்கும் ஆதாரங்கள் உள்ளது. அதை தேவைப்பட்டால் இன்னொரு சந்தர்ப்பத்தில் விவாதிக்கலாம்.

கேள்வி: அது சரி, புதன் அஸ்தங்கத்தில் சிக்கிவிடும் என்றால் என்ன?.

அஸ்தி என்றால் சாம்பல். அஸ்தமனம் என்றால் எரிந்து மறைவது. ஆகவே அஸ்தங்கம் என்றால் எரிதல் எனப் பொருள் கொள்ளலாம். எந்த கிரகமாவது சூரியனின் திசையில் சூரியனுக்கு முன்பாகவோ பின்புறமாகவோ குறிப்பிட்ட டிகிரிவரை நின்றால் அவர்கள் அல்லது அவர்களது சக்தி சூரியனால் எரிக்கப்பட்டு விடும். அதாவது சூரியனின் சக்திக்கு முன் அவர்கள் சக்தி எடுபடாது. இதைத்தான் சூரியனின் நட்சத்திர அந்தஸ்து என்பேன். இதில் முக்கியமான விஷயமே இந்த எரிக்கும் குணாதிசயம்தான். இது வேறு எந்த கிரகத்துக்கும் கிடையாது. "கிரகம்" என்பது ஜோதிடத்தைப் பொறுத்தவரை "வானியல் சார்ந்த பொருள்" என்பதுதான் சரியான விளக்கம். இது புரியாத அரை வேக்காட்டுப் பகுத்தறிவு வாதிகள் சூரியனை கிரகமாக வைத்திருக்கிறார்களே என்று முட்டாள்தனமாக, கழுதையாய் கத்துகிறார்கள். இவர்களுக்கு யார் எடுத்துக் சொல்லி புரிய வைப்பது எனத் தெரியவில்லை.

அது மட்டுமல்ல ஜோதிடத்தை கண்டுபிடித்தவன், ஒவ்வொரு கிரகத்தின் அளவுக்குத் தகுந்தவாறு குறிப்பிட்ட டிகிரி வரை தான் சூரியனின் சக்தி மறைக்கும் என்பதையும் அளந்து சொல்லியுள்ளான். எத்தனை டிகிரி என்பது கிரகத்தின் அளவு, மற்றும் தூரம் ஆகியவற்றைப் பொறுத்து கணக்கிட்டு கூறியுள்ள பாங்கை நோக்கும் போது இது தெய்வீக வாய் மொழியோ எனக் கூட எண்ணத் தோன்றுகிறது.

செவ்வாய் 17 டிகிரி,
புதன் 13 டிகிரி,
குரு 11 டிகிரி,
சுக்கிரன் 8 டிகிரி,
சனி 15 டிகிரி,
சந்திரன் 12 டிகிரி,

புதனுக்கு அஸ்தங்கம் மட்டுமல்ல அடிக்கடி வக்கிரத்திலும் சஞ்சரிப்பதால் அதை விளையாட்டில் எடுத்துக் கொள்ளவில்லை போலும்.

கேள்வி:
யுத்தகளத்திற்கு ராஜா சரி, ஆனால் இங்கு எப்படி ராணி வந்தார்.? சூரிய, சந்திரர்கள் ஆண்கள்தானே?.

பதில்:
ஆதியில் இந்தியரின் செஸ் விளையாட்டுப்படி அது ராணியாக இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்பதை ஒரு சிறிய ஆராய்ச்சியின் மூலம் அறிந்து கொள்ளலாம். இந்தியாவில் எந்த அரசனாவது யுத்தகளத்திற்கு ராணியை அழைத்துச் செல்வானா? அல்லது ராணி யுத்தத்தில் பங்கு பெறுவார்களா? அரசன் போர்க்களத்தில் தோற்று விட்டான் என்று தெரிந்தாலே அரன்மனையில் தீக்குளிக்கும் வழக்கமுடையோர், இந்நாட்டவர், அவர்களை போர்க்களத்தில் போராடுவது போல் சித்தரிப்பது விளையாட்டை தத்து எடுத்தவன், இட்டுக் கட்டிய கதை என்பது தெளிவாகப் புரியவில்லையா?. "யுத்தக்களத்தில் பெண்கள்" என்பது பண்டைய மரபுக்கு ஒத்து வராத ஒன்று. (தவிர்க்க முடியாத விதி விலக்குகளை உதாரணம் காட்டி மொக்கையா விவாதத்திற்கு இழுக்காதீர்கள்). அதிலும் ராஜாவை விட ராணிக்கு அதிகாரம் அதிகம் தரப்படுவது இந்திய மரபுக்கு முரணானது. ஆகவே அது ராணி அல்ல உண்மையில் அது தளபதி அல்லது மந்திரியாகத்தான் இருக்கமுடியும். அவருக்குத்தான் யுத்தகளத்தில் ராஜாவை விட அதிக அதிகாரம் உள்ளது. ராஜா ஒருவர்தான் இருக்கமுடியும் அது போல் மந்திரியும் ஒருவர்தான் இருக்கமுடியும்.


வெளி நாட்டினர் தங்களது சீட்டுக் கட்டில் ராணியை வைத்து இருப்பதால் செஸ் ஆட்டத்திலும் மந்திரிக்கு பதிலாக ராணி என மாற்றி விட்டனர் போலும். நல்லவேளை ஜோக்கர் என்று யாருக்கும் பெயர் மாற்றவில்லை. மதகுரு என்பவருக்கு எல்லா மனித இனங்களிலும் முக்கியத்துவம் அளிக்கப் படுவதால் இங்கும் அவர் பிஷப் என பெயர் மாற்றம் பெற்றார். அது மட்டுமில்லாமல் ராஜாவின் தலையில் சிலுவையும் வைத்து விட்டனர். உண்மையில் ராஜாவின் தலையில் சூரியனும் மந்திரியின் தலையில் பிறைநிலவும் இருக்க வேண்டும்.

ஆராய்ந்து பார்த்தால் சீட்டுக் கட்டும் ஜோதிடத்தை அடிப்படையாக கொண்டதாக இருக்கலாம். ஒரு வருடத்தின் நாட்களாகிய 364 ஐ சந்திரனின் சுழற்சிக் காலமாகிய 28 நாட்களால் வகுத்தால் (13 மாதம் ) வருகிறது. 13 என்பது சீட்டுக்களின் எண்ணிக்கை. ஒருவருடத்தின் மொத்த வாரங்களை கணக்கிட்டால் 52, இது மொத்த சீட்டுக்களின் எண்ணிக்கையை குறிப்பதாகும். மற்றபடி ராஜா-சூரியன்,ராணி-சந்திரன், ஜாக்-சுக்கிரன்,ஜோக்கர்-சனி. இதனுடைய தோற்ற காலத்தின் வரலாற்றை நோக்குங்கால் இதுவும் சதுரங்கத்தை ஒட்டி வருகிறது.
தொடரும்........................................

இரா.சந்திரசேகர்,
பழனி. 
அடுத்த பாகம் 7


மேலும் படிக்க...!

கமலஹாசனும் அந்தாதியும்

அந்தாதி என்பது யாப்பியலில் ஒரு தொடை வகையையும், ஒரு பிரபந்த வகையையும் குறிக்கும். அந்தாதி என்னும் சொல், முடிவு என்னும் பொருள்படும் அந்தம், தொடக்கம் என்னும் பொருள்படும் ஆதி, ஆகிய இரு சமஸ்கிருதச் சொற்களின் சேர்க்கையால் உருவானது. அந்தாதியிலும் அந்தாதி இருப்பதைப் பார்க்கலாம். அதாவது அந்தம் ஆரம்பத்திலும் ஆதி முடிவிலும் இருக்கிறது. இதற்கேற்ப, ஒரு பாடல் முடிவில் உள்ள எழுத்து, அசை, சீர், சொல், சொல் அல்லது அடி, அடுத்து வரும் பாடலின் தொடக்கமாக அமையும் பாடல்களால் ஆனது அந்தாதிச் செய்யுள் ஆகும். அடுத்தடுத்து வரும் அடிகள் அந்தாதியாக அமையும் போது அது அந்தாதித் தொடை எனப்படும். அந்தாதி அமைப்பு, பாடல்களை வரிசையாக மனப்பாடம் செய்வதற்கும், தொடர்பு மாறாமல் பாடுவதற்கும் வசதியாக உள்ளது. ஒரு பாடலின் ஈற்றடியின் கடைச்சொல் (அந்தம்), வரும் பாடலின் துவக்கச் சொல்லாக‌ (ஆதி) அமையும் இலக்கண முறை அந்தாதி ஆகும்




சில வகை அந்தாதிகள்

ஒலியந்தாதி
பதிற்றந்தாதி
நூற்றந்தாதி
கலியந்தாதி
கலித்துறை அந்தாதி
வெண்பா அந்தாதி
யமக அந்தாதி
சிலேடை அந்தாதி
திரிபு அந்தாதி
நீரோட்ட யமக அந்தாதி

அந்தாதித் தொடைக்கு எடுத்துக்காட்டாக, இளம்பூரணர் பின்வரும் பாடலைக் கொடுத்துள்ளார்.

உலகுடன் விளங்கும் ஒளிதிகழ் அவிர்மதி
மதிநலன் அழிக்கும் வளங்கெழு முக்குடை
முக்குடை நீழல் பொற்புடை ஆசனம்
ஆசனத் திருந்த திருந்தொளி அறிவன்
ஆசனத் திருந்த திருந்தொளி அறிவனை
அறிவுசேர் உள்ளமோ டருந்தவம் புரிந்து
துன்னிய மாந்தர் அஃதென்ப
பன்னருஞ் சிறப்பின் விண்மிசை உலகே[2]

மேலேயுள்ள பாடலில் பல வகையான அந்தாதித் தொடைகள் பின்வருமாறு வந்துள்ளன.

முதலாம் இரண்டாம் அடிகள் - அசையந்தாதி
இரண்டாம் மூன்றாம் அடிகள் - சீரந்தாதி
மூன்றாம் நான்காம் அடிகள் - சீரந்தாதி
நான்காம் ஐந்தாம் அடிகள் - அடியந்தாதி
ஐந்தாம் ஆறாம் அடிகள் - சீரந்தாதி
ஆறாம் ஏழாம் அடிகள் - எழுத்தந்தாதி
ஏழாம் எட்டாம் அடிகள் - எழுத்தந்தாதி
எட்டாம் முதலாம் அடிகள் - சீரந்தாதி

பக்திப் பாடல்களில் அபிராமி அந்தாதி பிரபலமானது. அபிராமி பட்டரால் இயற்றப்பட்டது. 

மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள திருக்கடையூரில் அபிராமி அம்மன் அமிர்தகண்டேசுவரர் கோயில் உள்ளது. அங்கு கோவிலில் (சுப்ரமணி அய்யர்) அபிராமியின் பட்டராக இருந்தார். அக்காலத்தில் பஞ்சாங்கம் தெரிந்தவர்தான் பட்டராக இருக்க முடியும். இவருக்கு அபிராமியின் மீது தீராத பக்தி, அப்பக்தியினால் சிலசமயம் பித்தனாகக் காட்சி அளிப்பார். அதைப் பயன்படுத்தி அவரை ஒழித்துக் கட்ட நினைத்தனர் அவரது சக பட்டர்கள். அப்பகுதியை ஆண்ட மராட்டிய மன்னர் சரபோஜி ஒரு நாள் அக்கோவிலுக்கு சிவனை தரிசிக்க வந்தார். மன்னரிடம், இவர் ஒரு திமிர் பிடித்தவர் வேண்டுமென்றால் சோதித்துப் பாருங்கள் என்றனர் சக பட்டர்கள். மன்னரும் அன்று அமாவாசை என்பதை அறிந்திருந்தும், அன்னையை மெய்யுருகி வணங்கிக் கொண்டிருக்கும் பட்டரிடம் இன்று என்ன திதி என்று கேட்க அவர் அன்னையின் முகத்தைப் பார்த்து கொண்டே பௌணர்மி என்று கூறினார். மன்னர் மீண்டும் கேட்டார். மீண்டும் அதே பதில். இதைக் கேட்ட மன்னர் கோபமுற்று இன்று இரவு முழு நிலவு வரவில்லை என்றால் இவரை அக்னிக் குண்டத்தில் இறக்கி விடுங்கள் என்றார். மாலை அக்னிகுண்டம் ரெடியானது அவரைச் சங்கிலியால் கட்டி இறக்கத் தயாரானார்கள் . அப்பொழுதும் அன்னையை நினைத்து அந்தாதி வகையில் பாட ஆரம்பித்தார். அவர் 79 வது பாடல் பாடும் பொழுது அன்னை அபிராமி, தனது வைரக் காதணியை கழற்றி எறிய அது வானில் முழு நிலவு போல் ஜொலித்ததாம். அதன் பின் அபிராமி, பட்டருக்குக் காட்சியளித்து 100 பாடல்களையும் பாடச் சொன்னாராம். அதுதான் பின்னாளில் அபிராமி அந்தாதி எனப் புகழ் பெற்றது. மாதிரிக்கு இங்கு 23,24,25 பாடல்களை கொடுத்துள்ளேன் நீங்கள் கேட்டிருப்பீர்கள்.

கொள்ளேன் மனத்தில் நின் கோலம் அல்லாது அன்பர் கூட்டந்தன்னை
உள்ளேன் பரசமயம் விரும்பேன் வியன் மூவுலகுக்கு
உள்ளே அனைத்தினுக்கும் புறம்பே உள்ளதே விளைந்த
கள்ளே களிக்கும் களியே அளிய என் கண் மணியே. 23

மணியேமணியின் ஒளியே ஒளிரும் மணிபுனைந்த
அணியே அணியும் அணிக்கழகே அனுகாதவர்க்குப்
பிணியே பிணிக்கு மருந்தே அமரர் பெரு விருந்தே
பணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்த பின்னே. 24

பின்னே  திரிந்துன் அடியாரைப் பேணிப் பிறப்பறுக்க
முன்னே தவங்கள் முயன்று கொண்டேன் முதல் மூவருக்கும்
அன்னே உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே
என்னே இனி உன்னை யான் மறவாமல் நின்று ஏத்துவனே. 25

சரி திரைப்படத் துறையில் பயன் படுத்திய விதம் பார்ப்போம்

பாலச்சந்தர் இயக்கிய மூண்று முடிச்சு என்ற படத்தில், கமலஹாசன், ஸ்ரீ தேவி,ரஜினிகாந்த் ஆகியோருக்காக ஒரு பாடல் காட்சி அமைத்திருப்பார். அதில் காட்சி அமைப்பும்,அதனுடன் பாடல் அமைந்த விதமும் என்னை மிகவும் கவர்ந்தது. பாடல் என்னவோ சோகத்தில் முடிந்தாலும், தமிழின் யாப்பிலக்கண விதிகளில் ஒன்றான அந்தாதி வகையில் அந்த பாடல் அமைந்துள்ளதுதான் அந்தப் பாடலின் விசேஷம். மேலும் அதை ஒரு போட்டிப் பாடல் வகையில் கண்ணதாசன் அமைத்திருப்பார். சீரந்தாதியின் விதிப்படி கமலஹாசன் ஆரம்பிக்க அவர் முடிக்கும் வார்த்தையில் ஸ்ரீதேவி ஆரம்பிக்க வேண்டும். அதுபோல் ஸ்ரீதேவி முடிக்கும் வார்த்தையின் ஆரம்பத்தில் மீண்டும் பாடல் ஆரம்பிக்க வேண்டும். இதுதான் போட்டியின் விதி பாலச்சந்தரைத் தவிர யாருக்கும் இந்த மாதிரி சிந்தனை வரவே வராது.

பாடல் நன்றாகத்தான் போய்க் கொண்டிருக்கும். ஸ்ரீதேவி "மணவினைகள்" என்று முடித்துவிட்டு கமலஹாசனை ஊம், அடுத்துப் பாடுங்கள் என்ற பொழுது ஹீரோவுக்கு பாடல் வராது. சிரித்து மழுப்பி வார்த்தைகளை தேடும் பொழுது, தவறி ஆற்றில் விழுந்து விடுகிறார்.


இதை மாத்தி யோசிக்கும் பொழுது வேறுவிதமாகத் தோன்றுகிறது. இதே போன்ற ஒரு காட்சியில் வறுமையின் நிறம் சிவப்பு என்ற படத்தில் ஒருமுறைக்கு இருமுறை ராகத்தைக் கேட்டு பின்னர் சமாளித்து பாட்டைப் பாடி விடுவார்.


ஆனால் இங்கே பாடலை முடிக்க முடியாமல் சமாளித்தும், முடியாததால், "ஆஹா தமிழில் நாம் தவறி விட்டோமோ என்று தற்கொலை செய்து கொண்டாரோ எனக் கூட எண்ணத் தோன்றுகிறது. ஆனால் இத்துடன் கிளைமாக்ஸ் முடிந்து விடவில்லை.

காதலனைக் காப்பாற்றும் படி வில்லனைக் கேட்டால், அவன் எப்படி காப்பாற்றுவான்?. ஆனால் வில்லன் என்றாலும் சாதாரண வில்லனல்ல (யந்திரனை நினைவு படுத்துகிறார்) ஹீரோவால் முடிக்க முடியாத வரிகளை வில்லன் அதே போட்டிப் பாடல் விதியை பின் பற்றி பாடலை முடிப்பதுதான் கிளைமாக்ஸ்.

நீங்கள் பாடலை (MP3 ல்) மட்டும் கேட்டால் வில்லனின் கடைசி வரிகள் இருக்காது என்று நினைக்கிறேன். படத்தோடு பார்த்தால்தான் வில்லனின் புலமையும் தெரியும். பாடலைப் படித்துப் பாருங்கள். இப்பாடல் இசை நயத்திற்காக ஒவ்வொரு வரிகள் இரண்டு தடவை பாடப் படுவதை பார்த்துக் கொள்ளுங்கள்.

ஆண்
வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள்
வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள்
நீரலைகள் மீதினிலே நெஞ்சிரண்டின் நினைவலைகள்
நீரலைகள் மீதினிலே நெஞ்சிரண்டின் நினைவலைகள்
பெண்
நினைவலைகள் தொடர்ந்து வந்தால் நேரமெல்லாம் கனவலைகள்
கனவலைகள் வளர்வதற்கு காமனவன் மலர்கணைகள்
நினைவலைகள் தொடர்ந்து வந்தால் நேரமெல்லாம் கனவலைகள்
கனவலைகள் வளர்வதற்கு காமனவன் மலர்க்கணைகள்
ஆண்
மலர்க்கணைகள் பாய்ந்து விட்டால் மடி இரண்டும் பஞ்சனைகள்
மலர்க்கணைகள் பாய்ந்து விட்டால் மடி இரண்டும் பஞ்சனைகள்
பஞ்சனையில் பள்ளிக் கொண்டால் மனம் இரண்டும் தலையணைகள்
வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள்
நீரலைகள் மீதினிலே நெஞ்சிரண்டின் நினைவலைகள்
பெண்
தலையணையில் முகம் புதைத்து சரசமிடும் புதுக் கலைகள்
தலையணையில் முகம் புதைத்து சரசமிடும் புதுக் கலைகள்
புதுக்கலைகள் பெறுவதற்கு பூமாலை மணவினைகள்
ஊம் ம்ம்ம் ஊம்ம்ம் ...........பூமாலை மணவினைகள்
ஆண் .............................
ஆண் (வில்லன்)
மணவினைகள் யாருடனோ மாயவனின் விதிவகைகள்
மணவினைகள் யாருடனோ மாயவனின் விதிவகைகள்
விதிவகையை முடிவு செய்யும் வசந்த கால நீரலைகள்

அதன் பின்னரும் படத்தைப் பார்த்ததால் சில எண்ணங்கள் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. கதையின் நாயகி அந்த வில்லனை மன்னித்து மகனாக ஏற்றுக் கொள்கிறாள். சிலர் சொல்வார்கள் அவனிடம் இருந்து தப்பிப்பதற்காக அவனின் தந்தையை மணந்து கொண்டாள் என்று. எனக்கென்னவோ அவள் இவ்வாறு நினைத்திருக்கலாம். காமத்தினால் நண்பனின் மரணத்தை வேடிக்கை பார்க்கும் வில்லனாக இருந்தாலும் கவிதையை முடிக்கும் புத்திசாலித் தனம் இருப்பதால் மகனாக ஏற்றுக் கொண்டாளோ எனத் தோன்றுகிறது. ஏனென்றால் கவிதை இருக்கும் இடத்தில் கண்டிப்பாக நல்ல குணங்கள் இருக்க வேண்டும். குறைந்த பட்சம் புத்திசாலித் தனத்துக்கு கேரண்டியாவது இருக்கும்.

ஆகவே மக்களே உங்கள் உணர்ச்சிகளின் பெருக்கை கவிதையாய் செய்யுங்கள். சிலருக்கு கவிதை தானாக வந்து விடும். ஆனால் கவிதை வரவில்லை என்று தெரிந்த பின்பும் எழுதி  மற்றவர் கழுத்தை அறுக்காதீர்கள். கவிதை மோசமானால் உங்களது கெட்ட குணங்களோடு, அறிவீனமும் தெரிந்து விடும்.

முடிந்தால் இதையும் படித்து விடுங்கள்  .
பழனி.



மேலும் படிக்க...!
Previous
கேள்வி:
ஆண்மகனின் ஜாதகத்திற்கும் அதிலுள்ள கிரகங்களுக்கும், செஸ்ஸில் வெள்ளைப்பக்கம் மற்றும் வெள்ளைக்காய்கள் என்றும் கூறியிருந்தீர்கள், ஓரளவிற்கு நம்பும் படியாக இருக்கிறது. ஜோதிடத்தில் ஒன்பது கிரகங்கள் மற்றும் 27 நட்சத்திரங்கள் தானே உள்ளது. ஆனால் செஸ்ஸில் ஒரு பக்கத்திற்கு 16 வெள்ளைக்காய்கள் மட்டும் உள்ளன. இவைகள் கிரகத்தின் எண்ணிக்கைக்கும் அல்லது நட்சத்திரங்களின் எண்ணிக்கைக்கும் எந்த வகையிலும் ஒத்து வரவில்லையே? ஆகவே இதற்கும் அதற்கும் சம்பந்தமில்லாமல் இருப்பது தெரியவில்லையா?
பதில்:
ஆணுக்கு வெள்ளைக்காய்தான் என்று நம்பித்தான் ஆகவேண்டும் ஏனென்றால் எப்பொழுதும் கேம் ஆரம்பிக்கும் போது வெள்ளைக்காய் தான் முதல் மூவ் செய்யவேண்டும். இதிலிருந்து தெரியவில்லையா, இது ஒரு ஆணுக்கு முக்கியத்துவம் தரும் பழங்கால விளையாட்டு என்று.

நீங்கள் ஒன்றை மறந்து விட்டீர்கள். கிரகங்கள் வேறு, நட்சத்திரங்கள் வேறு. கிரகங்களுக்கு இயக்கம் உண்டு, ஆனால், கிரகங்களைப் பொறுத்தவரை நட்சத்திரங்களுக்கு இயக்கம் கிடையாது. ஜோதிடத்தை பொறுத்தவரை நட்சத்திரங்கள் வெறும் திசைக் கற்கள்தான். அல்லது வெறும் திசைகாட்டிகள்தான். அவைகள் திசை சொல்வதற்கு மட்டும்தான் பயன் படுத்தப் படுகிறது. இது தெரியாமல் சில அறிவிலிகள் நட்சத்திரங்கள் எப்படி மனிதன் வாழ்வை பாதிக்கும் என்று நக்கல் நையாண்டியுடன் கேள்வி கேட்கும் போது அந்த அரைவேக்காடுகளின் முட்டாள்தனத்தை எண்ணி சிரிக்கத்தான் வேண்டியதிருக்கிறது.

நாம் பூமியில் திசைகளை எட்டாகப் பிரித்திருக்கிறோம். வானத்தில் சூரியனை ஒரு மாதத்திற்கு ஒரு திசையில் இருப்பதாக கொண்டு 12 திசைகள் வைத்துள்ளனர். அதன் பெயர்தான் ராசி. ராசி என்பது வானத்து திசைகளின்(12) எளிமையான வடிவம். அதை விட சற்று நுட்பமாக திசை அறிய உதவுவது நட்சத்திரம்.(27) அதை விட நுட்பமானது பாதம் (108) எனப்படும்.

நட்சத்திரங்களை விட எளிமையான ராசி தான், செஸ்ஸில் கட்டங்களாகப் பயன்படுத்தப் பட்டிருக்கிறது என ஏற்கனவே பார்த்தோம்.

டிகிரி, பாதம், நட்சத்திரம், ராசி, மாதம், சூரிய அயணம், ஆகியவற்றை விளக்கும் ஒரு அற்புதமான படம். கீழே கொடுத்துள்ளேன். போடோஷாப் பயன்படுத்தி வரைந்த சித்திரம். இதை முழுமையாக புரிந்து கொண்டால் ஜோதிடம் எளிமையாகிவிடும். பூமியை மையமாகக் கொண்டு மற்ற கிரகங்களின் திசைகளான டிகிரி, இராசி, நட்சத்திரம் ஆகியவற்றை பூமியிலிருந்து வரையப் படும் ஒரு நேர் கோட்டால் கணக்கிட்டுக் கொள்ளுங்கள். படத்தை அவசியம் கிளிக் செய்து பாருங்கள்.
படம்:1

டிகிரி, பாதம்,  நட்சத்திரம், இராசி, அயணம்

காய்கள் பதினாறாக இருந்தாலும், காய்களின் வகைகள் என்று பார்க்கும் போது ராஜா, ராணி, மதகுரு, குதிரை, யானை, சிப்பாய் என ஆறு வகைகள்தான் உள்ளது. இவற்றை முறையே சூரியன், சந்திரன், சுக்கிரன், செவ்வாய், சனி, உபகிரகங்கள் என இந்த ஆறு வகைகளுடன் ஒப்பிட்டுக் கொள்ளுங்கள்.

கேள்வி:
உங்கள் கருத்துக்கு சௌகரியமாக, உங்கள் வாதத்திற்கு ஆதரவாக புதன், வியாழன், ராகு கேது ஆகியவற்றை விட்டு விட்டீர்களே ஏன்?. அதுவுமில்லாமல் ராஜா, ராணியைத் தவிர மற்ற காய்கள் இரண்டிரண்டாக உள்ளதே அதற்கான விளக்கமும், சிப்பாய்களுக்கான விளக்கமும் முழுமையாக இல்லை. ஜோதிடத்தில் கண்டிப்பாக இதற்கு விளக்கம் இருக்காது.

பதில்:
ராகு கேது என்பவைகள் நிழல் கிரகங்கள் ஆதலால் அவைகளுக்கு உருவமே இல்லை. உருவம் இல்லாதவற்றை எப்படி விளையாட்டில் சேர்க்கலாம். ஆகவே அவற்றை மறந்து விடுவோம்.அவை பற்றி மேலும் விவரம் அறிய இதை சொடுக்கி படியுங்கள்.
சுட்டி
http://chandroosblog.blogspot.in/2010/06/blog-post.html


புதன் கிரகத்தை சேர்க்காமல் இருப்பதற்கு அதன் இருப்பிடம்தான் காரணம். பூமியைப் பொறுத்தவரை (Relative to Earth) சூரியனை சுற்றிக் கொண்டே, சூரியனுடன் சேர்ந்து பூமியைச் (Relatively) சுற்றும் கிரகங்கள்தான் புதனும் சுக்கிரனும். கீழே உள்ள படத்தில் விளக்கம் உள்ளது.
படம்.2


பூமியைப் பொறுத்து ஐந்து வருடசுழற்சியில் சூரியன்,புதன் மற்றும் சுக்கிரனின் பாதை கீழ்க் கண்ட படத்தில் இருப்பது போல்தான் இருக்கும்.நடுவில் பூமியும் மஞ்சள் நிறத்தில் சூரியனும், நீலவண்ணத்தில் புதனும் ரோஸ் நிறத்தில் சுக்கிரனும் காட்டப்பட்டுள்ளது.
படம்.3


புதன் ,சுக்கிரன், சூரியனின் சுழற்சி
இதில் சுக்கிரன் பூமிக்கு மிகவும் அருகில் வரும் நிலை நன்றாகத் தெரிகிறது பாருங்கள். (உடனே அதில் பிள்ளையார் தெரிகிறார் என்றெல்லாம் பூ சுற்றக் கூடாது.) ஆதலால் அதை விட்டு விட முடியாது. மேலும் நிலவை அடுத்து பூமிக்கு அருகில் வரும் மிகப் பெரிய வான் பொருள் சுக்கிரன்தான். ஆகவே சந்திரனுக்கு அடுத்த இடம் சுக்கிரனுக்குத்தான் அதில் மாற்றுக் கருத்து இருக்கவே முடியாது. அசுரர்களின் குருவாகக் கருதப் படும் சுக்கிரச்சாரியார் (மதகுரு) இல்லாத யுத்தமா?.

இந்த முக்கியத்துவம் ஜோதிடத்தில் தெளிவாக உள்ளது. களஸ்திர காரகனான சுக்கிரனை விட்டுவிட்டு ஜாதகமோ பொருத்தமோ பார்க்கமுடியாது என்பது ஜோதிடத்தின் பால பாடம். வியாழனை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. ஏனெனில் "அவன் இதுக்கு சரிப்பட மாட்டான்" என்பதுதான். திருமணத்தைப் பொறுத்தவரை வியாழனின் பார்வைதான் தேவை. அவன் யுத்தத்திற்கு லாயக்கு  படமாட்டான். "கெட்டவர்கள்"  தான் யுத்தத்திற்கு லாயக்கு. "இவர் ரொம்ப நல்லவர்" லிஸ்டில் இருக்கிறார். ஆகவே திருமண பொருத்தமாகிய சதுரங்கத்தில் அவருக்கு வேலை இல்லை.

நடு இரவில் வானத்தில் ஏன் சூரியனை பார்க்கமுடியாதோ அதே காரணம்தான் புதன் மற்றும் சுக்கிரனை எந்தக் காலத்திலும் நடு இரவில் வானத்தில் பார்க்கவே முடியாது.சுக்கிரன் சூரியனுடன் 47 டிகிரி அளவில் இணைந்தே காணப்படும். அவை இரண்டும் சூரியனுடன் இருப்பதால் ஒன்று கீழ்வானத்தில் விடியலிலும், மற்ற சமயங்களில் மேற்கில் அந்தியிலும் தான் காட்சி அளிக்கும். இன்னொரு விஷயம் புதன் அடிக்கடி அஸ்தங்கத்தில் சிக்கி விடுவதால் கணக்கில் எடுத்துக் கொள்ளப் படவில்லை.சூரியனுடன் 27 டிகிரி அருகில் இருப்பதால் அடிக்கடி அஸ்தங்கத்தில் சிக்கி விடுகிறார். அல்லது ஒரு வேளை பிற்காலத்தில் விளையாட்டில் இல்லாமல் போயிருக்கலாம். (12 கட்டங்களை 8 கட்டங்களாக மாற்றியதால்). மேலும் புதன் தான் இருக்கும் இடம் அல்லது சேர்ந்திருக்கும் கிரகத்தின் பலனைத்தான் தரும் என்பார்கள். சுயபுத்தி இல்லாதவர். அதுவும் ஒரு காரணம்தான்.

நான் அடிக்கடி "பூமியைப் பொறுத்து" என்று சொல்வதை சரியாகப் புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன். பூமியைப் பொறுத்து கணக்கிடுவதும் வரைவதும் புரிந்து கொள்ள எளிதாக இருக்கும் என்பதால் தான் அக்காலத்திலிருந்து ஜோதிடர்கள் பூமியைப் மையமாக வைத்து கணக்கிடுகிறார்கள். (நாம் ராக்கெட் விடும் போது வேண்டுமென்றால் சூரியனைப் பொறுத்து கணக்கிட்டுக் கொள்ளலாம்).

பூமியை மையமாக கொண்ட ஒரு படம் தருகிறேன் பாருங்கள் அதில் கடந்த மார்ச் (2012) மாதம் 8ஆம் தேதியன்று கிரகங்கள் உள்ள நிலையை குறிப்பிட்டுள்ளேன். அதில் பூமியில் காலை பத்துமணி ஆகும் இடத்தை அம்புக்குறியால் குறிப்பிட்டுள்ளேன். மாலை 6 மணிக்கான இடத்தில் பூமியில் இருந்து பார்த்தால் 5 கிரகங்கையும் காணமுடியும் என்பது தெரிகிறது. அதில் செவ்வாய், சந்திரன் (பௌர்ணமி) உச்சியிலும் அந்தி வானத்தில் புதன், சுக்கிரன், வியாழன் தெரிவதைக் காணலாம். கீழ் வானத்தில் சனியையும் பார்க்கலாம்.
 படத்தை கிளிக் செய்து பாருங்கள்.
படம் 4



08-03-2012 ல் கிரகங்களின் நிலை

ஜோதிடத்தில் ”ஆட்சி” (Ruling ) என்றொரு சொல் பயன் படுத்தப்படுகிறது. செஸ்ஸிலும் ஆட்சிக்காகத்தான் யுத்தம் நடக்கிறது என்பதும் குறித்துக் கொள்ளத்தக்கது. ஓவ்வொரு கிரகத்திற்கும் ஆட்சி வீடு (ஸ்தானம்) என்று இராசிகள் பிரித்தளிக்கப் படுகிறது. கீழே அதன் விளக்கப் படம் உள்ளது.
படம் 5
 ஜோதிடத்தில் ஆட்சி வீடுகள் வழங்கப் பட்ட விதம்.

இந்தப்படத்தில் பூமியை மையமாக வைத்துதான் வீடு அளிக்கப் படுகிறது. கடக ராசிக்கும் சிம்ம ராசிக்கும் இடையில் பூமி இருப்பதாக அனுமானம் செய்து கொள்ளலாம். கிரகங்கள் அணைத்தும் பொதுவாக நீள்வட்டப் பாதையில் சுற்றும் அதிலும் பூமியும் நீள் வட்டத்தில் சுற்றுவதால் அதனுடைய இருப்பிடத்தை வைத்து பார்க்கும் பொது அதனுடைய நிலைகளுக்கு தக்கவாறு மற்ற கிரகங்களின் நீள்வட்டம் இன்னும் அதிகமாக நீளும். அதனல்தான் இந்த உச்ச, நீச நிலைக்கு முக்கியத்துவம் தரப் படுகிறது. இந்த அதீத நீள் வட்டத்தால் ஒருசமயம் அருகிலும் அதற்கு நேர் எதிரான இடத்தில் தூரத்திலும் செல்வது இயல்பு. இதைத்தான் ஜோதிடத்தில் உச்சம்,(Perihelion), நீசம்(Aphelion) எனச் சொல்கிறார்கள். சூரியன் பூமிக்கு அருகில் அதாவது தமிழ்நாட்டிற்கு மிக அருகில் வரும் மாதமாகிய சித்திரை அதாவது சூரியன் மேஷராசியில் வரும் பொழுதுதான் உச்சமடைகிறது என ஜோதிடம் கூறுகிறது. அந்த அர்த்தத்தில் தான் தமிழிலும் ”உச்சி” வெயில் மண்டையை பிளக்கிறது என்கிறார்கள்.
படம் 6
கிரகங்களின் ஆட்சி  வீடு என்றால் என்ன?


கிரகங்களின் ஆட்சி, உச்சம், நட்பு, பகை என்பது பற்றிய பாடல் ஒன்றை கி.பி.1665 ல் வரகவி கீரனூர் நடராஜன் தனது ”ஜாதக அலங்காரம்” எனும் நூலில் இயற்றி உள்ளார்.  இந்நூல் ஆசிரிய விருத்தம், கலித்துறை, கலிவிருத்தம், வெண்பா முதலிய யாப்பு வகைகளையும், பல இடங்களில் அந்தாதியும் பயன் படுத்தி 1145 பாடல்களால் பாடப் பெற்றுள்ளது. இதை ஒட்டிதான் நாடி ஜோதிடர்களின், நாடி ஜோதிடப் பாடல்கள் பெரும்பாலும் அந்தாதி வகையில் இருப்பதை பார்த்திருப்பீர்கள்.

வெள்ளியும் புதனும் நட்பு
விளங்கிய செவ்வாய் ஆட்சி
ஒள்ளிய கதிரோன் உச்சம்
உயர்சனி நீசம் ஆகும்
தெள்ளிய மதியோன் பொண்ணன்
சீரிய இராகு கேது
உள்உறும் பகையாம் என்று
ஓதினர் மேடத்தோர்க்கே

இப்பாடலின் விளக்கம் எளிதானது.
மேஷத்தில்
 சூரியன் உச்சம்,
சனி நீசம்,
செவ்வாய் ஆட்சி,
வெள்ளி, புதன் நட்பு, என்றும்
சந்திரன், வியாழன், இராகு, கேது ஆகியோர் பகை.என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
படம் 7
டைக்கோனியன் சிஸ்டம்

இதை இங்கு நான் ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் கி.பி 1600 களில்தான் டைக்கோபிரா, கோப்பர்நிக்கஸ், கலிலியோ, கெப்ளர் ஆகியோர் வானியலுக்கே புதியவர்களாக அறிமுகம் ஆகிறார்கள். அந்தக் காலகட்டத்தில் டைக்கோபிராவின் கருது கோளில் உருவானதுதான் மேலே உள்ள படம். டைக்கோனியன் சிஸ்டம் எனப்படுகிறது.

இதைத்தான் நமது முன்னோர்கள் அவர்களை விட தெளிவாக குறித்துக் கொடுத்துள்ளனர். கெப்ளர் நீள் வட்டப்பாதையில் சுற்றுவதாக அந்தக் கால கட்டத்தில்தான் அறிவித்தார். இதற்கு பல்லாயிர வருடங்களுக்கு முன்பே இதையெல்லாம் இந்தியர் அறிந்து இருந்தனர் என்கிற உண்மையை இந்தியாவை அடிமைப் படுத்தியவர்கள், மறைத்துவிட்டனர்.
தொடரும்...............................................
இரா. சந்திரசேகர்,
பழனி.
அடுத்த பதிவுபாகம் 6

மேலும் படிக்க...!
Previous
ஜோதிடம் இந்தியாவிலிருந்துதான் பரவியது என்கிற உண்மையை வரலாறு மறைத்தாலும் அதற்கு இன்றளவும் சாட்சியாக நின்று உலகுக்கு உண்மையை எடுத்துச் சொல்லி இந்தியனுக்கு பெருமை சேர்க்கும் விஷயம்தான் சதுரங்கம்.

செஸ் விளையாடுவதற்கு எவ்வளவு அறிவு தேவையோ அதே அளவுக்கு உண்மையாகவே ஜோதிடம் சொல்வதற்கும் அறிவு தேவை. ஜோதிடத்தில் உள்ள கணிதம் அவ்வளவு சிக்கலானது. அது மட்டும் இல்லாமல் ஒருவருக்குப் பலனைச் சொல்ல கிட்டத்தட்ட ஐம்பது வெவ்வேறு விஷயங்களை,

கணக்குப் போட்டு,

மதிப்பிட்டு,

பிரதியிட்டு

சொல்ல வேண்டும்.

ஆகவே ஜோதிடத்தை கண்டுபிடித்தவன் தான் சதுரங்க விளையாட்டையும் கண்டுபிடித்திருக்க முடியும். அதனால்தான் கணித வல்லுனர்கள் பலர் ஜோதிடத்தில் வித்தகர்களாக இருந்திருக்கிறார்கள். உதாரணம் ராமானுஜன், பாஸ்கரா, ஆரியபட்டா ஆகியோர் ஆவார்கள்.

முன்பெல்லாம் ஒரு குழந்தை பிறந்தவுடன் ஜாதகம் எழுதச் சொல்லிக் கொடுத்தால் அந்தக் குழந்தை ஐந்து வயதாகும் போதுதான் ஜாதகத்தை கொடுப்பார்கள். ஏனென்றால் அதில் அவ்வளவு கணிதம் இருக்கிறது. இன்று கம்ப்யூட்டர் வந்துவிட்டதால் உடனே அடித்துக் கொடுக்க முடிகிறது.

ஒருவர் பிறக்கும் போது இருக்கும் அவருடைய லக்கனம், இராசி, ஒன்பது கிரகங்கள், பன்னிரண்டு ராசிகள், இருபத்தி ஏழு நட்சத்திரங்கள், இரண்டு பட்சங்கள் (பிறைகள்), 14 திதிகள், பன்னிரண்டு ராசிகளுக்கான (பொறுப்புகள்) காரகங்கள், அதற்கான காரகர்கள், கேந்திர, திரிகோண, உச்ச, நீச, பகை, நட்பு, சம, வக்கிர, அஸ்தங்க, யுத்த, வர்கோத்தம, நீசபங்க, இட (ஸ்தான ), நவாம்ச, தசாம்ச, பரல், பாவ, திசா, புத்தி, அந்தர, யோக, தோஷ, மதிப்பீடுகளையும், மற்றும் இவற்றோடு மேற்கூறிய அத்தனைக்கும் தற்கால கிரக நிலைப்படி அதாவது கோச்சாரப்படி இருக்கும் இடமதிப்பு, சொந்த மதிப்பு, உபகோள்கள், பஞ்சபட்சி, பஞ்ச பட்சியின் நிலைகள் இவற்றையும் பிரதியிட்டு கூட்டிக் கழித்து பிரச்சன்ன, இட, கால, வர்த்தமானம் பார்த்து பலன் சொல்ல வேண்டும்.

ஜோதிடத்தில் இவ்வளவு விஷயங்கள் (Variables) இருக்கும் போது ராசிபலன் பார்த்தேன், பலிக்கவில்லை என்று சொல்வது எவ்வளவு பெரிய அடிமுட்டாள்தனம். உலகத்தில் உள்ள சுமார் 700 கோடி பேருக்கு அவன் வாழ்க்கையில் உள்ள விஷயங்களில் 12 பிரிவுக்குள் பலன் சொல்ல வேண்டும் என்றால் அது எளிமையாகவும் சாதாரணமானதாகவும் மேம்போக்காகத்தான் இருக்கும் என்பது அடிமுட்டாளுக்கு கூட புரியும். ஆனாலும் ஏன் பார்க்கிறான் என்று ”பகுத்தறிவுகள்” கேட்கலாம். அதில் விஷய ஞானம் உள்ளவனுக்குத் தான் அதை எவ்வளவு தூரம், எப்பொழுது, எப்படி நம்ப வேண்டும்  என்று தெரியும் அதனால் அவன் பார்க்கிறான்.

சரி விஷயத்திற்கு வருவோம். ஜோதிடத்தையும் சதுரங்கத்தையும் எவ்வாறு பொருத்தப் போகிறீர்கள் என்று உங்கள் மனதில் கேள்வி எழும். ஆகவே கேள்வியும் பதிலாகவும் இருந்தால் எனக்கும் ஆர்வமாக இருக்கும், ஆனால் இதில் முக்கியமான விஷயம் உங்களுக்கு சதுரங்கமும் ஜோதிடமும் ஓரளவாவது தெரிந்திருக்க வேண்டும். கேள்விகளை நீங்கள் கேட்கிறீர்களா அல்லது நானே கேட்டு கொள்ளட்டுமா?


என்னது? நானே கேக்கனுமா? சரி சரி .....
ஸ்டார்ட் த மியூசிக்...........

கேள்வி:
ஏன் கறுப்பு வெள்ளை காய்கள் மற்றும் கட்டங்கள்?. ஜோதிடத்திற்கும் கறுப்பு வெள்ளைக்கும் என்ன சம்பந்தம்.?




பதில்:
ஜாதகத்தை இப்பொழுதெல்லாம் திருமணத்தின் போதுதான் தூசி தட்டி எடுக்கிறார்கள். திருமணத்திற்கு ஜாதகப் பொருத்தம் பார்ப்பது என்பது ஜோதிடர்களுக்கு சவாலான விஷயம். ஒரு ஜாதகத்தை வைத்துக் கொண்டே ஜோதிடர்கள் லக்கனம், (சூரியஇராசி) இராசி(சந்திரராசி), ஆகிய இவற்றில் எது அவர்களுக்கு சரியாகப் பொருந்துகிறது அன்று அறிந்து அதற்கு தக்கவாறு ஒன்பது கிரகங்கள், பன்னிரண்டு ராசிகள், இருபத்தி ஏழு நட்சத்திரங்கள், இரண்டு பட்சங்கள் (பிறைகள்), 14 திதிகள், பன்னிரண்டு காரகங்கள், அதற்கான பன்னிரண்டு காரகர்கள், கேந்திர, திரிகோண, உச்ச, நீச, பகை, நட்பு, சம, வக்கிர, அஸ்தங்க, யுத்த, வர்கோத்தம, நீசபங்க, இட(ஸ்தான), நவாம்ச, தசாம்ச, பரல், பாவ, திசா, புத்தி அந்தர, யோக, தோஷ, மதிப்பீடுகளையும் மற்றும் இவற்றோடு மேற்கூறிய அத்தனைக்கும் தற்கால கிரக நிலைப்படி அதாவது கோச்சாரப்படி இருக்கும் இடமதிப்பு, சொந்த மதிப்பு போன்றவற்றை கணக்கிட திணறுகிறார்கள்.

இவ்வளவு விஷயங்கள் இருக்கும் போது, இரண்டு ஜாதகத்தை சம்பந்தப் படுத்தி, மேற்கூறிய விஷயங்களையும் அதற்கும் அப்பால், திருமணப் பொருத்தத்திற்கு தேவையான தினம், கணம், மகேந்திரம், ஸ்திரி, யோனி, ராசி, ராசி அதிபதி, வசியம், ரஜ்ஜூ, வேதை, நாடி, விருட்சம், கோத்திரம், பஞ்சபூத பொருத்தம் ஆகிய இவற்றோடு கிரகப் பொருத்தம், திசாசந்தி, மற்றும் செவ்வாய்தோஷம், புத்திரதோஷம், களஸ்திரதோஷம், லக்கினதோஷம், சந்திரதோஷம், சுக்கிரதோஷம், ராகுதோஷம் ஆகியவற்றை பார்ப்பது என்பது திருமன பொருத்த கணிதத்தை உண்மையிலே மிகவும் கடினமான வேலையாக மாற்றி விடுகிறது.

திருமணப் பொருத்தம் பார்ப்பதற்கு ஆண், பெண் ஆகியோரின் ஜாதகக் கட்டங்களை வைத்து ஆராயும் பொழுது ஒரு புத்திசாலி ஜோதிடரின் மூளையில் தோன்றியதுதான் இந்த சதுரங்க விளையாட்டு.

ஆணுக்கும் பெண்ணுக்கும் முறையே வெள்ளை, கறுப்புக் காய்களை வைத்து பக்கம் பிரித்து சமமான மதிப்பீடுகள் கிடைக்கும் பொழுதே இணைக்கிறார்கள். பதினான்கு விதமான பொருத்தங்களில் முக்கியமான சில பொருத்தங்களை வைத்து,அதாவது குறைந்த பட்சம் ஆறு பொருத்தம் வரைக்கும் அவசியம் என்றுணர்ந்து அதன் படி பார்க்கிறார்கள்.

அதுவும் அல்லாமல் இராசிகளை வரிசையாக எடுத்துக் கொண்டால் அடுத்தடுத்து ஆண் இராசி, பெண் இராசி என பிரித்து வைத்துள்ளனர். உதாரணமாக முதலில் வரும் மேஷம் ஆண் ராசியாகவும் அதற்கடுத்த ரிஷபம் பெண் ராசியாகவும் வைத்துள்ளனர். அதனால்தான் முறையே ஆண்ராசிக்கு வெள்ளையும், பெண்ராசிக்கு கறுப்பும் என மாறி மாறி வைக்கப்பட்டுள்ளது. அது போல் ஆணின் ஜாதக்கத்தில் உள்ள கிரகங்கங்களுக்கு ஈடாக வெள்ளைக் காயும் பெண்னின் ஜாதகத்தில் உள்ள கிரகங்களுக்கு ஈடாக கறுப்புக்காயும் என வைக்கப்பட்டுள்ளது.

கேள்வி:
ஏன் எட்டு X எட்டு கட்டங்கள்?
பதில்:
ஒருகாலத்தில் 12 கட்டங்களில் விளையாடி இருக்கலாமோ?. திருமணத்திற்கு இராசிக் கட்டங்களைப் பார்க்கும் பொழுது லக்கனத்தில் இருந்து 2,4,5,6,7,8,9,12 ஆகிய 8 கட்டங்களுக்குத் தான் (ஸ்தானங்களுக்கு) முக்கியத்துவம் கொடுத்து பார்க்கின்றனர். ஜாதகத்தைப் பார்த்து பலன் சொல்வது ஒரு கலை என்றால் அதை சரியாக கட்டங்களின் வரிசைப் படி பலனைக் கேட்டறிவதும் ஒரு கலைதான்.
இப்பொழுது 12 கட்டங்களில் ஒவ்வொன்றுக்கும் உள்ள பொறுப்புகள் (காரகங்கள்) என்னவென்று பார்ப்போம். லக்கனத்தை ஒன்றாக வைத்துக் கொண்டு கடிகாரவலமாக(Clockwise) எண்ணவும்.
1. பொதுவான வாழ்க்கை, உடல், ஆகியவை பற்றியது.
2. வாக்கு,குடும்பம்,சொத்து, தனம்,கண்
3. பின்சகோதரம், அறிவுத்திறன்,
4. தாய், வீடு, வாகனம், சுகம், சயன சுகம்.
5. குழந்தை பாக்கியம்
6. எதிரிகள், நோய்கள்
7. மனைவி,கணவன்,போகம்,மரணம்
8. ஆயுள், துக்கம், மர்ம ஸ்தானம்
9. தந்தை, குரு, பூர்வ ஜென்மம், குழந்தை
10. கர்மம், ஜீவனம், வியாபாரம்.
11. லாபம், வித்தை, முன் சகோதரம்
12. சயனம், சுகபோகம்
மேலே கூறப்பட்டுள்ள இராசிகளின் பொறுப்புகளில் திருமண வாழ்விற்கு சம்பந்தமில்லாமல் இருக்கும் இராசிகளை(1,3,10,11) அல்லது கட்டங்களை தவிர்த்து விட்டால் மீதி இருப்பது எட்டு கட்டங்கள் தான் என்பது புலப்படும். ஆகவே தான் எட்டு கட்டங்களை வைத்துள்ளனரோ என்பது புரியும். உதாரணத்திற்கு சில மாதிரிகளை ஆராய்வோம்.

1) பொதுவாக மேலோட்டமாகப் பார்க்கும் போது பெண் ஜாதகத்தில் முறையே 6, 7, 8 ஆம் இடங்களில் எந்த கிரகங்களும் இல்லாமல், சுத்தமாக இருந்தால் சுத்த ஜாதகம் எனப்படும். அதாவது அந்த பெண் நல்ல பெண்ணாகவும் கணவனுக்கு நீண்ட ஆயுளைத் தருபவளாகவும், சந்தோஷத்தை கொடுப்பவளாகவும் கருதுவார்கள். இந்த மாதிரி அமைப்புள்ள ஜாதகிக்கு பொருத்தமே பார்க்க வேண்டியதில்லை என்பார்கள்.

இதே விஷயத்தை சதுரங்கத்தில் பார்ப்போம்.
கருப்புக்காயின் பக்கம் (அதாவது பெண்ணின் ஜாதகத்தில்) இருந்து பார்க்கும் போது போர்டில் 4,6,7,8 ஆகிய இடங்களில் முக்கியமான கருப்புக்காய்கள் இருந்தால் கருப்பின் ஆட்டம் தாக்குதல் ஆட்டமாக இருக்கும். அந்த ஆட்டத்தில் வெள்ளைக்காயின் (ஆண்) கேம் விரைவில் முடிவுக்கு வந்துவிடும். ஆதலால்தான் அந்த கட்டங்களில் கருப்புக்காய்கள் இருக்ககூடாது என்பது பொதுவான சதுரங்க விதி. அதிலும் கருப்பின் சிப்பாய் (குளிகன்) (Pawn) எட்டாம் இடத்தில் இருந்தாலும் கெடுதல்தான்.

அது சரி பெண் ஜெயித்தால் கெடுதல் என்பது எனது கருத்தாக கொண்டு பெண்ணீய வாதிகள் சண்டைக்கு வராதீர்கள். ஐயாயிர வருடத்திற்கு முந்தைய கருது கோள். குடும்பத்தின் தலைமை ஆணுக்குத்தான் என்ற கால கட்டத்தில் உருவான விதிகள்.இங்கே ஆய்வது சதுரங்கமும் ஜோதிடமும் என்பது பற்றித்தான் என நினைவில் கொள்ளவும்.

முக்கியமாக ஜாதகத்தில் எட்டாம் இடம் ஆயுள் ஸ்தானம் என்பார்கள். அதில் கெட்டவன்(எதிரி) மட்டுமில்லாமல் ஏதாவது ஒரு உபகிரகம் இருந்தாலும், உட்கார்ந்தாலும் ஆட்டம்(ஆயுள்) முடிந்தது. அதற்காகத்தான் எட்டு கட்டங்கள். செஸ் ஆட்டத்தில் எதிரியின் சிப்பாய் (பான்) எட்டாம் கட்டத்திற்கு வந்து விட்டால் அனேகமாக ஆட்டம் முடிந்தது அல்லது எதிரிக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகம் என்பார்கள். ஒவ்வொரு கிரகமும் இந்த எட்டு கட்டங்களில் இருக்கும் இடத்தைப் பொறுத்து பலன்கள் தரும்.

”அகப்பட்டவனுக்கு(checkmate) அட்டமத்தில் குரு” என்பார்கள். அதாவது ஒருவன் ஜாதகத்தில் எட்டாம் இடத்தில் குரு இருந்தால், தப்பு செய்தால் மாட்டிக் கொள்வான் என்பது அர்த்தமாகும்.

”எட்டு நட்டம்” (தோல்வி) என்பார்கள். தோல்விகளை சந்திக்கும் போது ”அட்டமத்தில் சனி” என்பார்கள். மேலும் எட்டைப் பற்றி அறிய சொடுக்குங்கள்.

http://chandroosblog.blogspot.in/2011/01/4.html


கொசுறு: செஸ் போர்டில் எத்தனை சதுரங்கள்? என்ற கேள்விக்கு 64 சதுரங்கள் என்று சொல்லி மாட்டிக் கொள்ளாதீர்கள்.உண்மையிலே கீழ்க் கண்டவாறு தான் உள்ளது.
1, 8x8 square
4, 7x7 squares
9, 6x6 squares
16, 5x5 squares
25, 4x4 squares
36, 3x3 squares
49, 2x2 squares
64, 1x1 squares என்று மொத்தம் 204. சரியா என்று பார்த்துக் கொள்ளுங்கள்.

ஏண்டா நேற்று செஸ்ஸில் தோற்றாய் ?
நான் படிச்சிட்டு போனதோ ”பாபி பிஷரை எப்படி வெல்வது” என்ற புத்தகம் ஆனால் அங்கே வந்தது வேற ஆள்.

மீதிக் கேள்விகளையும், பதில்களையும் அடுத்த பதிவில் கேட்போம், படிப்போம். தொடரும்.....................................
இரா.சந்திர சேகர், பழனி

அடுத்த பாகம்5


மேலும் படிக்க...!
top