உலகில் மக்கள் புத்தாண்டை, ஜனவரியை ஒட்டித்தான் கொண்டாடுகிறார்கள். தமிழன் சித்திரையில் கொண்டாடுகிறான். ஜனவரியை ஒட்டி நிகழும் வானியல் நிகழ்வு என்று பார்க்கும் போது அதுவும் சூரியன் சம்பந்தப்பட்ட தாகத்தான் இருக்கிறது.

அயணம் என்பதுதான் தமிழில் பயணம் என்று மாறிவிட்டது. இராம அயணம்=இராமாயணம் -இராமனின் பயணம்.

சூரியனின் உத்ராயணம்- வடக்கு நோக்கிய பயணம், தெட்சினாயணம் தெற்கு நோக்கிய பயணம்.

உத்ராயணம், தெட்சினாயணம், சித்திரைமாதம். மேஷராசி, 0 டிகிரி

சூரியன் தெட்சிணாயண பயணத்தை முடித்துவிட்டு தை மாதத்தில் உத்ராயணத்தை தொடங்கும் விழாவைத்தான் மகர சங்கராந்தி என்று கூறுகிறார்கள். அதாவது சூரியன் மகரராசியில் நுழைவதைத்தான் சங்கராந்தி எனக் கூறப்படுகிறது. தெட்சிணாயணத்தை முடிக்க ஆறு மாதங்களாகும். உத்ர, தெட்சிண என்றால் முறையே வடக்கு, தெற்கு என நமக்கு தெரியும்.சூரியன் கடகராசிக்கும் மகர ராசிக்கும் இடையே ஊசலாடினாலும் அதன் நிலையான இடம் பூமத்திய ரேகைதானே?. அதனால்தால் பூமத்திய ரேகையில் மேஷராசியில் நுழைவதைத்தான்  வருடப் பிறப்பாக கருதலாமே?.

இங்கு சூரியனது பயணத்தை மேற்கூறியவாறு கூறினால் இதுவும் பார்ப்பண அசிங்கக் கதை என்று தமிழக பகுத்தறிவுவாதிகள் உளற ஆரம்பித்து விடுவார்கள்.

பூமி தன்னைத்தானே சுழலும் சுழற்சியின் அச்சும், பூமி சூரியனை சுற்றும் பாதையின் தளமும் ஒன்றுக்கொன்று செங்கோணமாக இல்லாமல் சுற்றும் பாதையின் தளத்திற்கு 23.44 பாகை சாய்வாக உள்ளதால் பருவகாலம் ஏற்படுகிறது.

பூமத்திய ரேகையிலிருந்து வடக்கே 23.44 பாகையில் அமைந்த ரேகையை கடகரேகை என்றும் பூமத்திய ரேகையிலிருந்து தெற்கே 23.44 பாகையில் அமைந்த ரேகையை மகரரேகை என்றும் கூறுவார்கள்.

ஜாதகக் கட்டங்களில் கடக, மகர ராசி எனக் குறிப்பிடப்படுவதும் அதையொட்டித்தான். ஒரு வருட சுழற்சியின் போது பூமி, கடகரேகைக்கும் மகரரேகைக்கும் இடையே உள்ள பகுதிகளை சூரியனுக்கு நேர்குத்தாக அமைத்து கொள்வதைத்தான் சூரியனது பயணம் என்கிறோம்.

படத்தை கிளிக் செய்து பார்க்கவும்.


படத்தில் Tropic of Cancer என்பது கடகரேகை, என்பது Tropic of Capricorn மகரரேகை. Equator  என்பது பூமத்திய ரேகை.

 ஒரு வருடத்தில் இந்த பயணத்தில் சூரியன் பூமத்திய ரேகையை இருமுறை (Equinox மார்ச் 20, செப்டம்பர் 22) ஆகிய சம பகலிரவு நாட்களில் கடக்கிறது.

மகர, கடக ரேகையை ஒருமுறையும் (Soltice டிசம்பர் 21, ஜூன் 21) கடக்கிறது.

ஆங்கிலேயர்கள் மகர Soltice ஒட்டி தங்களது புத்தாண்டை வைத்துக் கொண்டனர்.
தமிழர்கள் நட்சத்திரத்தை வைத்து கணக்கிடப்படும் (Sidereal vernal equinox April 14). ஐ ஒட்டி , அதாவது பூமத்திய ரேகையிலிருந்து, அதாவது 0 டிகிரியிலிருந்து சூரியன் பயணத்தை ஆரம்பிக்கும் போது தங்களது புத்தாண்டை வைத்துக் கொண்டனர். ஆகவே சித்திரை மாதத்தில் (Sidereal vernal equinox April 14). புத்தாண்டை வைத்துக் கொள்வதில் ஒரு நியாயம் உள்ளது. (starting from 0 position).

 நட்சத்திரத்தை வைத்து கணக்கிடுதல் என்பது ஒரு ஹைடெக் சமாச்சாரம் அதாவது சூரிய மண்டலத்தை வெளியிலிருந்து பார்வையிட்டு கணக்கிடு வதற்கு ஒப்பானது.

http://en.wikipedia.org/wiki/Sidereal_astrology

நமது பகுத்தறிவுவாதிகளுக்கு இதையெல்லாம் எடுத்துச் சொல்ல ஆளும் இல்லை சொன்னாலும் புரியாது. கடகம் , மகரம் என்றால் அலர்ஜி. அதிலும் சங்கராந்தி என்றால் பேயே பிடித்துவிடும்.

அதிலும் ஆயிரமாயிரம் வருடங்கள் பின்பற்றும் ஒரு வழிமுறையை நமக்கு நன்மைகள் ஏற்படும் போது மாற்றிக் கொள்ளலாம். ஆனால் இப்படி மாற்றிவைப்பதால் குழப்பம்தான் மிஞ்சும் பைசா பிரயோசனமில்லாத வேலை. இமாலயத் தவறென்றால் கூட திருத்திக் கொள்ளலாம். இதில் தவறென்று ஏதுமில்லை.

தவற்றை யெல்லாம் திருத்தலாம் என்றால் முதலில் 1,70,000 கோடியை அரசாங்க கஜானாவில் கட்டி விட்டு தவறுக்கு மண்ணிப்பு கேட்க வைப்போம். இப்பொழுது அதுதானே மிகவும் முக்கியம்.அப்புறம் தைக்கு மாற்றிவிடலாம்.என்ன தமிழர்களே தவறுகளை களை எடுக்கலாமா? அதுவரை (இப் போதைக்கு) (இப்போதைக்கு) இப்போ "தை"க்கு இருக்கட்டுமே சித்திரை. இன்னும் காலண்டர் பற்றிய தெளிவுக்கு இங்கே கிளிக் செய்யவும்
இரா.சந்திரசேகர்,
பழனி.

8 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

விளக்கமான பதிவு ! நன்றி !

Gujaal said...

இதையும் பாருங்களேன்.

http://valavu.blogspot.in/2007/01/blog-post.html

Unknown said...

ஜி.. இந்த பதிவை பாருங்க... பஞ்சாகமே தப்புன்னு சொல்லுறாங்க..
இது சரியா ...http://shanthibabu.blogspot.in/2012/04/blog-post_13.html

Unknown said...

இதுவும் நல்லதொரு ஆய்வே! என்ன, உம்மையும், ஆதரித்துக் கருத்து சொல்வோரையும் தமிழினவிரோதி பட்டம் கொடுத்துவிடுவர்..அவ்வளவுதான்!

Chandru said...

திண்டுக்கல் தனபாலன்,ரமேஷ் வெங்கடபதி ஆகியோரின் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி.

Chandru said...

குஜால்,வினோத்குமார் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி. உங்களுக்கான பதிலை ஒரு பதிவாக போடுகிறேன்.

ம.தி.சுதா said...

ரொம்பவே குழுப்புதுங்க... தலையை பிச்சுக்கலாம் போல இருக்கு...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
இலங்கைப் பதிவரின் முதல் குறும்பட வெளியீடும் தமிழ் இணைய உலகில் வித்தியாசமான வெளியீடும்

சிவகுமாரன் said...

அருமையான விளக்கம். கடசி பஞ்ச் நெத்தியடி

top