Showing posts with label தமிழ். Show all posts
Showing posts with label தமிழ். Show all posts
சமஸ்கிருதம்   எப்படி உருவானது ?.

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.

என்கிறார் வள்ளுவர். இக்குறளின் பொருள் மிகவும் வெளிப்படை. "பரிபூர்ண நிலையடைந்த மொழியை உருவாக்கிய, முன்னோரின்  பெருமையானது, அவர்கள் வாழுமிடத்து வழங்கப்படும் மறைமொழி கொண்டு அறியப்படும்" என்கிறார். மறைமொழி என்பதில் குழப்பம் ஏதுமில்லை. அது மறைத்து வைக்கப்பட்ட மொழி அல்லது ஒரு சங்கேத மொழி. மறை என்ற வேர்ச் சொல்லின் அர்த்தம் "ஒளித்து வை" என்பதாகும்.  குறளுக்கு விளக்கம் சொன்ன அனைவரும் மறைமொழி என்பதற்கு மந்திரம் என்கின்றனர். மந்திரம்’ என்ற சொல் தொல்காப்பியத்திலும் பயன்படுத்தப் படுகிறது.
“நிறை மொழி மாந்தர் ஆணையிற் கிளக்கும்
மறைமொழிதானே மந்திரம் என்ப” (பொரு- 480)
இதன் பொருள் :”நிறைந்த மொழியையுடைய மாந்தர்,
தமதாணையால் சொல்லப்பட்ட மறைந்த சொல் மந்திரமாகும்”.

மந்திரம் என்றாலே, மறைவாகவும், மூடி மறைத்தும் இருப்பது.
அதன் பொருள் வெளிப்படையாகத் தெரியாது. சிலர் மறை என்பதற்கு ஒழுக்கம் பற்றி கூறுவர் ஆனால் ஒழுக்கத்திற்கு அடைமொழியாக "மொழி" வராது மறைநூல் என்று வந்தால் கூட ஒழுக்கம் சம்பந்தப் பட்டதாக ஏற்றுக் கொள்ளலாம்.  "நீத்தார் பெருமை"யில் கூறுவதால் முன்னோர்கள் பற்றியும் அவர்களுக்கு இருந்திருக்க வேண்டிய மொழிப் பாதுகாப்பும், மொழியுணர்வும் பற்றி வள்ளுவர் கூறுகிறார். வள்ளுவர் தன்னுடைய தமிழ்மொழியைத்தான்  நிறைமொழிக்கு உதாரணமாகக் கொண்டு விளக்கம் சொல்லி இருப்பார். அப்படி என்றால் தமிழ்நிலத்துக்குப் பெருமையாக  ஒரு மறைமொழி இருக்க வேண்டுமல்லவா. அது வேறென்ன  சமஸ்கிருதம் தான்.

சமஸ்கிருதத்தின் சுவடு பாரதத்தை தவிர வேறெங்கும்  காணப்படவில்லை என்பதாலும், (அப்படியே இருந்தாலும் அது பாரதத்தில் இருந்துதான் சென்றிருக்க வேண்டும் என்பதை மரபணு ஆராய்ச்சிகள் தெரிவிக்கிறது.) தமிழின் சமகால மொழியாக இருப்பதாலும், தமிழும் சமஸ்கிருதமும் இரட்டைமொழி போல் இருப்பதாலும் , மேலும் ஒரு தீபகற்பத்தில் இவ்வளவு சிறப்பாக இரண்டு மொழிகள் என்பது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாக இருப்பதாலும், சமஸ்கிருதத்தை தாய்மொழியாகக் கொண்ட இனமோ குழுவோ இந்தியாவில் அறியப் படவில்லை என்பதாலும், பன்னெடுங்காலத்திற்கு (ஐயாயிரம் ஆண்டுகளுக்கு) முன்பே இரண்டு மொழிகளும் பொதுவான வார்த்தைகளை அதிகம் கொண்டிருப்பதாலும், அதில் தமிழ் மட்டும் இயற்கை மொழியாக இருப்பதாலும், மற்றொன்று செயற்கையாக இருப்பதாலும் அம்மொழி ரகசியத்திற்காகவும், புனிதத்திற்காகவும் தமிழனால் உருவாக்கப் பட்டிருக்க வேண்டும். இராமாயண காலத்திலேயே தமிழுடன் சமஸ்கிருதம் இருந்தாக அறியப் படுகிறது, தமிழில் மட்டுமே உள்ள மொழி மற்றும் மண் சார்ந்த பழமொழிகள் சமஸ்கிருதத்தில் இருப்பதால் சமஸ்கிருதத்தையும் தமிழையும் படைத்தவன்  ஒரே இனமாகத்தான் இருக்கமுடியும். தமிழில் இருந்து சமைக்கப் பட்ட மொழி என்பதால் சமஸ்கிருதம் எனப்பட்டது.



உலகளவில் தமிழ் பரவி இருக்கும் போது சமஸ்கிருதம் ஏன் தமிழோடு பரவில்லை என்பதன் காரணம் தற்பொழுது விளங்கியிருக்கும் என நினைக்கிறேன். தமிழன் உலகம் முழுவதும் பரவும் பொழுது சமஸ்கிருதம் படைக்கப் படவில்லை. அது தமிழகத்தில் நிலைகொண்ட தமிழனால் பிற்காலத்தில் அதாவது முதற்ச் சங்ககாலத்திற்கு பின்  படைக்கப் பட்டதால் அது இந்தியாவை தாண்ட முடியவில்லை இந்திய தீபகற்பத்தில்,  இந்திய தொல்பொருள் துறையினால் கண்டு பிடிக்கப்பட்ட மிகவும்  பழமையான கல்வெட்டுகளில் ஐம்பத்தைந்து சதவீதத்திற்கு மேல் தமிழில்தான் உள்ளது. ஏனெனில் சமஸ்கிருதத்திற்கு எழுத்துரு கிடையாது. மேலும் அது பேச்சு வழக்கிலும் இல்லை. இந்த ஒரு சான்றினால் தமிழ் ஒன்றுதான் இந்தியா முழுமையும் கோலோச்சியது என்பது மட்டுமில்லாமல் மிகவும் பழமையானது என்கிற உண்மையை தெரிந்து கொள்ளலாம். 

தமிழ் என்பது இயல்பாக,  இயற்கையாக தோன்றியது.  மொழிகளுக்கெல்லாம் மூலமாகிய ஆதி மொழியாக விளங்கியது என்பதில் ஐயம் ஏதுமில்லை. எதியோப்பியாவில், ஹங்கேரியில், கொரியாவில், ஜப்பானில் தென் அமெரிக்காவில் என்று உலகின் எட்டுதிக்குகளிலும் காணப்படும் தமிழின் கலப்பு, உணர்த்தும் செய்தி என்னவென்றால் உலகமொழிகளின் தாய், தமிழ்தான் என்பதாகும். ஆகவே தமிழன் "சமைத்த" மொழிதான் சமஸ்கிருதமும்.

அதையேதான் விக்கி சொல்கிறது.
The Sanskrit verbal adjective sáṃskṛta- may be translated as "put together, constructed, well or completely formed; refined, adorned, highly elaborated". It is derived from the root saṃ-skar- "to put together, compose, arrange, prepare",[6] where saṃ- "together" (as English same) and (s)kar- "group" (transitive verb). (cf. Norwegian 'sammen skjær', Afrikaans 'saamskaar')


The term in the generic meaning of "made ready, prepared, completed, finished" is found in the Rigveda. Also in Vedic Sanskrit, as nominalised neuter saṃskṛtám, it means "preparation, prepared place" and thus "ritual enclosure, place for a sacrifice".

As a term for "refined or elaborated speech" the adjective appears only in Epic and Classical Sanskrit, in the Manusmriti and in the Mahabharata. The language referred to as saṃskṛta "the cultured language" has by definition always been a "sacred" and "sophisticated" language, used for religious and learned discourse in ancient India, and contrasted with the languages spoken by the people, prākṛta- "natural, artless, normal, ordinary".



 சமஸ்கிருத பேரறிஞர் ஹெச். ஹெச்.இங்கல்ஸ், "சமஸ்கிருதம் ஒரு உருவாக்கப்பட்ட, செயற்கையான மொழிதான்" என்று ஆதாரத்தோடு நிரூபிக்கிறார்.
The eminent sanskritist, Daniel H.H. Ingalls describes some peculiar characteristics of the Sanskrit language. He refers to the enormous vocabulary of Sanskrit, and also of the presence of a larger choice of synonyms in Sanskrit than any other language he knew of.Ingalls  argues  that Sanskrit is not a natural language, but an 'artificial' language. By 'artificial', he explains he means it was learned after some other Indian language had been learned by simple conditioning. Ingalls writes: 'Every Indian, one may suppose, grew up learning in a natural way the language of his mother and his playmates.


 http://en.wikipedia.org/wiki/Sanskrit

The oldest dated Tamil inscription written in the Tamil-Brahmi script has been found in Palani in Southern India, scientifically dated to 540 BCE - the oldest known Brahmi inscriptions on the Indian sub-continent.[29] More than 55% of the epigraphical inscriptions (about 55,000) found by the Archaeological Survey of India are in the Tamil language.[30] Tamil language inscriptions written c. 1st century BC and 2nd century AD have been discovered in Egypt, Sri Lanka and Thailand.[31] The two earliest manuscripts from India,[32][33] to be acknowledged and registered by UNESCO Memory of the World register in 1997 and 2005 were in Tamil.[34] Tamil is used as a sacred language of Ayyavazhi and in Tamil Hindu traditions of Shaivism and Vaishnavism. According to a 2001 survey, there were 1,863 newspapers published in Tamil, of which 353 were dailies.

http://en.wikipedia.org/wiki/Tamil_language



இராமாயணத்தில் அனுமன் சீதையிடம், தான் ராவணனின் மாயை அல்ல உண்மையான ராமனின் தூதுவன் தான் என்பதை வழக்கமான, சீதைக்கும் அனுமனுக்கும் தெரிந்த தேவ பாஷையில் பேசாமல், மனித பாஷையில் அதாவது தமிழில் பேசி உணர வைத்ததாக வால்மீகி கூறுகிறார். ஒரு வேளை ராவணன் சீதையிடம் தமிழில் பேசமாட்டானோ?. ஆகவே தேவபாஷை என்பது முக்கியமானவர்கள் கற்றுத்தேற வேண்டிய மொழி என்பதும் மக்கள் 
வழக்கில் இருந்த மொழி தமிழ் என்பதும் தெரிகிறது.

http://thamizhan-thiravidana.blogspot.in/2011/09/69.html.

அறிவு ஜீவிகள் எல்லோருக்கும் ஒரு கட்டத்தில் ரகசிய மொழியின் அவசியம் ஏற்பட்டு விடுகிறது. அது சமூக நன்மைக்காகவும் இருக்கலாம், சுயலாபத்திற்காகவும் இருக்கலாம். இன்றும் கூட நண்பர்களுக்குள் நான்கு பேர் கூடி விட்டால் அதில் இரண்டு பேர் கோஷ்டி சேர்ந்து கொண்டு ரகசியமாகப் பேசி மற்ற இருவரை  குழப்புவார்கள் அல்லது கலாய்ப்பார்கள். புரியாதவர்கள் மொக்கையாய், முட்டாளாய் உணருவார்கள்.  அதுமட்டுமில்லாமல் பெரியவர்கள் கூடி சில விஷயங்களில் முடிவெடுக்கும் போது சிறுவர்கள் மற்றும் தகுதி இல்லாதவர்களின் தலையீடு இல்லாமல் இருக்கவும் ரகசிய பாஷை தேவைப் படுகிறது.


மகாபாரதத்தில் ஒரு கட்டத்தில், அரக்குமாளிகையின்  நோக்கத்தை புரிந்து கொண்ட பீஷ்மர், பாண்டவர்களை காப்பாற்றுவதற்காக விதுரனிடம் அத்தகவலை சொல்லி, தருமனிடம் போய் சொல்லச் சொல்கிறார். விதுரனும் தருமனிடம் வந்து  தனிமையில் சொல்ல நினைக்கும் போது சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. அப்பொழுது அவர்கள் இருவர் மட்டும் அறிந்த ரகசிய பாஷையில் தகவலைச் சொல்வதாக கேள்விப் பட்டிருக்கிறேன்.  ரகசிய மொழியின்  அவசியம் ஏழாயிரம் வருடங்களுக்கு முன்பே தேவைப் பட்டிருக்கிறது.

இப்பொழுதும் தமிழ் நாட்டில் ஐம்பது வயதிற்கு மேற்ப் பட்டவர்களுக்கு "கதகமிகழ்" பாஷை கண்டிப்பாக தெரிந்திருக்கும். ஆனால் இந்தமாதிரி பாஷைகளுக்கு எழுத்துருவம் தேவையில்லை என்பதுதான் முக்கியமான ஒற்றுமை. இவ்வளவு ஏன்? எங்கள் வீட்டில் கூட ஒரு ரகசிய பாஷை உள்ளது. எங்கள் குடும்பத்தினர் மட்டும் பேசிக் கொள்வோம். எனது மகளும் மகனும் பேசினால் சமயத்தில் எங்களுக்கே புரியாது. (டிகோடிங் லேட்டாகும்)



நானும் எனது நண்பனும் (வனராஜ்)  அப்பொழுதான் "ஹாம்" லைசென்ஸ் (1972)வாங்கியிருந்தோம். ஏற்கனவே ஹாம்களுக்கென்று சில குறியீடுகள் இருக்கும். அதனால் அதை ஒட்டி ஒரு பாஷையை உருவாக்கிக் கொண்டோம். நானும் நண்பனும் (சந்தேகமில்லாமல் அறிவு ஜீவிகள்தான்) அக்காலத்தில் அதாவது எழுபதுகளில், எங்களிருவருக்கான  பாஷையில் பெண்களைப் பற்றிய கமெண்ட்களை மிக சகஜமாக பஸ்ஸின் நெருக்கத்தில் கூட அவர்கள் அறியாதவாறு பேசிக் கொள்வோம்.    அதில் சில முக்கியமான வார்த்தைகளைக் கூறுகிறேன் பின் பற்ற முடிகிறதா என்று பாருங்கள். டிஎக்ஸ், ஒய்யெல், பிஎஸ், கேங்க், புஷ்புல், பைடேங்க், ஆரெஸ்டி புரிகிறதா?. இன்னும் ஒரு படி மேலே போய் ஒரு எழுத்துருவையும் உருவாக்கி கடிதமெல்லாம் எழுதிக் கொண்டோம். அது பழைய கதை. தற்கால சினிமாவிலும் அந்த நுட்பம் பயன்படுத்தப் பட்டிருப்பதை காணலாம்.  ஃப்ரெண்ட்ஸ் படத்தில் விஜய் "ழ்மித ஷைபா" பேசுவார். "ல்தகா யய்செ  யாசைஆ  குக்ருஇ" என்பார்.

நண்பர்கள் குழுமியிருக்கும் போது ஒரு நண்பர் இன்னொருவருக்கு திடீரென்று "குட்மானிங்" சொல்வார்கள் அதற்கு அர்த்தம் "ஜிப்பை மூடுடா இடியட் " என்று அர்த்தம். இது போன்ற சில ரகசிய குறியீடுகள் ஒவ்வொரு நட்பு வட்டத்திலும் இருக்கும். மாட்டுச்சந்தையில் மாட்டு வியாபாரிகள் மாட்டின் விலையை தங்கள் விரல்களால் பேசிக் கொள்வார்கள். இதனால் விற்பவனுக்கும் வாங்குபவனுக்கும் நஷ்டத்தை ஏற்படுத்தும்  "விலை வைக்கும் " போக்கு தவிர்க்கப் படுகிறது. வியாபாரிகளும் ஒரு வித குறியீடுகளை தங்களது வியாபாரத்தில் பின் பற்றுகின்றனர். ஒரு பொருளின் அசல்விலையை குறியீடுகளால் குறித்திருப்பார்கள். வாடிக்கையாளரைப் பொறுத்து குறியீட்டைப் பார்த்து  லாபத்தை வைத்துக் கொள்வார்கள். இப்பொழுதெல்லாம் நிலையான லாபம் போதும் என்பதால் பார்கோட், மற்றும் க்யூ கோட்  போன்ற மெஷின்கள் மட்டும் பேசிக் கொள்ளும் மொழி முறைகளும் கையாளப் படுகின்றது.

ஆக அறிவாளிகளுக்கு, நடைமுறையில் உள்ள ஒரு மொழி தவிர்த்து தன்னைப் போன்றவர்கள் வட்டத்தில் மற்றவர்களுக்கு புரியாமல் புதிராகப் பேசி மகிழ, சன்டையிட, ரகசியங்களை பரிமாறிக் கொள்ள, தொழிலை பாதுகாக்க ஒரு மொழி மிகமிக அவசியமாகத் தேவைப் படுகிறது. தமிழ்ப் புலவர்கள் சாமானியனுக்கு புரியாமல் தங்களுக்குள் அடிக்கடி பாடியே சன்டையிட்டுக் கொண்டவர்கள் அல்லவா?  இன்றும் தமிழில் உள்ள பாடலுக்கு  பொருளுரை இல்லாமல் அர்த்தம் கொள்வது இயலாத காரியமாகத்தானே இருக்கிறது. 





மேலும் படிக்க...!

ஐரோப்பாவில் இருந்து வந்தவன்தான் ஆரியனாகிய  பார்ப்பனன் என்ற பொய்யான வரலாற்றை கடந்த 100 வருடங்களாக நம்பி, படித்து, தனக்கு தமிழன் என்றொரு பெயர் இருப்பதை மறந்து விட்டு திராவிடன் திராவிடன் என்று எவனோ கூறியதை மனதில் ஏற்றுக் கொண்டு இன்னும் தெளிவுக்கு வராமல், ஆரிய சித்தாந்தத்தில் முழ்கியிருக்கும்  அரை வேக்காடுகளுக்கு சமர்ப்பனம்  இந்தக் கட்டுரை.

 காட்சிப் பிழை:

முதலில் அடிப்படையான சில விஷயங்களை தெளிவு படுத்திக் கொள்வோம். 35எம்.எம் திரைப்படச் சுருளில் ஒரு செகண்ட் ஓடுவதற்கு 24 நிலைச் சட்டங்கள் (ஸ்டில் ஃப்ரேம்கள்) இருந்தால்தான் நிகழ்வின் செயல், வித்தியாசமில்லாமல் தெரியும். உதாரணமாக ஒருவர் ஆடையை மாட்டுவது போல் எடுத்தால் முழுச் சுருளையும் முன்னேற்ற திசையில் (பார்வர்ட் டைரக்சனில்,24fps) பார்த்தால்தான் உண்மை தெரியும். அதை விடுத்து பின்னேற்ற திசையில் (ரிவர்ஸ் டைரக்சனில்) பார்த்தால் ஆடையை கழட்டுவது போல் தெரியும். அவ்வாறு எடுக்கப் பட்டவைகளின் கலவைதான் கீழுள்ள தளத்தில் கொடுக்கப் பட்டுள்ளது.


அது மட்டுமல்லாமல் அதிலுள்ள ஒரு குறிப்பிட்ட  ஃப்ரேமை வைத்து அவர் ஆடையை கழட்டுகிறாரா அல்லது மாட்டுகிறாரா எனச் சொல்லவே முடியாது. அது போல் வரலாற்றின் குறிப்பிட்ட நிலைத் தகவலை வைத்து இப்படித்தான் தப்பாக கற்பிதம் செய்து, ஒவ்வொரு கால கட்டத்திலும்  யாராவது ஒருவர், மக்களை அறிந்தோ அறியாமலோ முட்டாளாக்கினார்கள். அந்த வகையில் அறியாமல் செய்த  அரை வேக்காடுகளில் முதண்மையானவர் பெரியார். 

ஆனால் அறிந்தே செய்வதற்கு,  மெக்காலேவால் இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டவர்  மாக்ஸ்முல்லர். இந்தியாவிலிருந்து ஐரோப்பா சென்றவனை எதிர்த்திசையில் ஆராய்ந்து பார்த்தால் அங்கிருந்து வந்தவ (ஆரிய) னாகத்தான் தெரிவான். அதுவே அவனது மதத்தை பரப்புவதற்கு  சாதகமாக இருந்ததால் வரலாறாக மாற்றி விட்டான்.  ஆனால் ஒன்றை மறந்து விட்டான். மனிதனின் உடம்பிலுள்ள டிஎன்ஏ எனப்படும் சிறு துகள்களின் மூலம் தனி மனித வரலாறு மட்டுமின்றி, ஒட்டு மொத்த மனிதகுலத்தின் வரலாற்றையே அறிய முடியும் என்பதை. அதே மாக்ஸ்முல்லர் தன் வாழ்நாளின் கடைசிக் காலங்களில் உலகத்தில் கடவுளால் முழுமையாக படைக்கப் பட்ட  நாடு இந்தியா என்றும். மதங்களுக்கெல்லாம் தாய்  மதம் இந்துமதம் என்றும், தத்துவ பேரறிஞர்கள் நிறைந்த நாடு இந்தியா என்றும், தலை சிறந்த காவியம் மகாபாரதம் என்றும் ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்தார்.

"If I were to look over the whole world to find out the country most richly endowed with all the wealth, power, and beauty that nature can bestow – in some parts a very paradise on earth – I should point to India............................................................."  


இந்தியாவிற்கு வந்தவுடன் இந்துமத தொண்மையில் ஆச்சரியமும், இந்துமதத்தின் அறிவியலில் வியப்பும் அடைந்த  சில ஆங்கில கவர்னர்களும், ஐரோப்பிய அறிவியலாரும் தங்களுடன் எப்பொழுதும் சில மொழி பெயர்ப்பாளர்களையும் ஓவியர்களையும் ஐரோப்பாவில் இருந்தே அழைத்து வந்து இங்குள்ள அறிவியல் பொக்கிஷங்களை நகல் எடுத்தனர். சிலரோ தமிழையும் சமஸ்கிருதத்தையும் கற்றுத் தேர்ந்து மூலத்தையே அள்ளிச் சென்றனர். உ.ம்-வீரமாமுனிவர்(1710), யுவான் சுவாங்(660). தங்களால்  மொழி பெயர்க்க முடிந்தவற்றை எல்லாம் அக்காலத்தில் கிரேக்க மொழியிலும் ஆங்கிலத்திலும், சீன மொழியிலும் மொழி பெயர்த்து நூற்களாக்கி தங்கள் நாட்டின் நூலகத்தில் அடுக்கி வைத்துக் கொண்டனர். ஆங்கிலேயர்களே தமிழின் ஓலைச்சுவடிகளைத் தேடி அலைந்தனர்.

 ''According to Xuanzang's biography he returned  with, "over six hundred Mahayana and Hinayana texts, seven statues of the Buddha and more than a hundred sarira relics''.(விக்கி)

''Max Müller wrote both scholarly and popular works on the subject of Indology and the Sacred Books of the East, a 50-volume set of English translations, was prepared under his direction.''

ஐரோப்பியர்கள் இங்கு வந்து பொருட் கொள்ளை மட்டுமின்றி அறிவுக் கொள்ளையும் நடத்திவிட்டு இங்கிருப்பவனை முட்டாளாக்கி விட்டார்கள். யோசித்துப் பாருங்கள், மேற்கத்திய அறிவியலின் வயது கடந்த ஆயிரம் வருடங்களுக்கு முந்தியதுதான். அப்பொழுதுதான் அவர்களின் இந்திய பிரவேசம் நிகழ்ந்தது என்பது வரலாற்றுச் சான்றாகும். கிழக்கிந்திய கம்பெனியின் வியாபாரத்தினுடன் கொசுறாக இலக்கிய, அறிவியற் கொள்ளையும் நடந்தது. அது மட்டு மில்லாமல் நமது மதத்தின் தொண்மையை அழித்து, வரலாற்றை மாற்றி அமைத்தனர். இருபதாயிர வருட பழமை கொண்ட இந்து மதத்தின் வரலாற்றை நான்காயிர வருடங்களுக்குள் முடக்கினர். 

இருபதாயிர வருட பழமை கொண்டதா இந்து மதம்?

 ஏன் இருக்க முடியாது?. ஒரு தனி மனிதனின் வரலாறு எப்படி, அவன் பிறந்தது முதல் கணக்கிடப்படுகிறதோ அது போன்றே ஒரு மதத்தின் வரலாறும் அம்மக்கள் தோன்றியதிலிருந்து கணக்கிடப் பட வேண்டியதாகும். மதம் என்றால்  என்னவென்று அறியாதவர்களின் உளறல்தான் வளைத் தளமெங்கும் காணப் பெறுகிறது. மதம் என்பது இயற்கையின் தேர்வு. ஒரு குழுமத்தின் வாழும் முறையாகும். அம்முறைக்கு பின்னர் மக்கள் இட்ட பெயர் மதம். மதம் தோன்றிய காலத்தில் சமூக அமைப்பிற்காகவும். சமூக பாதுகாப்பிற்காகவும் சட்டதிட்டங்கள் இயற்றப் பட்டன. ஜாதி என்பது தொழில். இந்தியாவில் சமூக பாதுகாப்பிற்கு எந்த விதமான அச்சுறுத்தலும் இல்லாததால் பொழுதுபோக்கிலும், கொண்டாட்டங்களிலும் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்தனர்.
அதில் வாழ்பவர்களை விட வாழும் இடத்தின் மண், மரம், காற்று, சூழல், மொழி ஆகியவற்றின் பங்களிப்பு அதிகம், ஏனெனில் அவைதான் நிலைத்து நிற்பவை. ஒருவன் பிறக்கும் போதிலிருந்து இறக்கும் வரை எல்லாச் செயல்களிலும் மதத்தின் தலையீடு இருக்கின்றது. உதாரணமாக இந்து மதத்தில் ஒருவன் பிறக்கும் முன்பிருந்து, அதாவது அவனது தாய் தந்தையரின் சாந்தி முகூர்த்தம்  தொட்டு, வளைகாப்பிலிருந்து, பிறக்கும் நேரம் குறிக்கப்படுதல் என ஆரம்பித்து, சேனைப்பால் ஊற்றுவதிலிருந்து, கடைசியில் பால் ஊற்றுவதுவரை மட்டும் இன்றி  அமாவாசை, திதி என்று இறந்த பின்பும் அவனை அறியாமலே தொடர்கிறது. 

ஆகவே மதம் என்பது மண்ணிற்கு சொந்தமானது. (மண்ணை மாற்றினால் மதத்தை மாற்றலாம்.) அதில் கடவுளின் பங்கு  மிகக் குறைந்த  சதவீதம்தான். அதுமட்டுமில்லால் இந்து மதம் என்பது  மைய அதிகாரம் கொண்ட சர்வாதிகார மதமும் அல்ல. முன்னொரு காலத்தில் எழுதப்பட்ட எழுத்துகளால் ஆளப்படும் மதமும் அல்ல. அவர்களுக்கு யாரும் கட்டளை பிறப்பிக்க முடியாது. முற்றிலும் சுதந்திரமானது. (Open source) அதனால்தான் அது மதங்களுக்கெல்லாம் தாய் மதமாக விளங்குகிறது. புத்தம், ஜைனம், சமணம், கிறிஸ்துவம், இஸ்லாம் ஆகிய மதங்களுக்கெல்லாம் மூலமாக விளங்குகிறது. இதை உணராமல் இன்று கடவுளை மட்டும் முன்னிறுத்தி மதத்தைப் பரப்புவதும், துவேசிப்பதும் நடை பெறுகிறது. மதம் மாறுகிறேன் என்று தனக்கும் இந்த மண்ணிற்கும் துளியும் சம்பந்தமில்லாத சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் பின்பற்றுகிறார்கள். உதாரணமாக ஆங்கில மொழியைப் பின்பற்றுவதால் குளுமையான வரவேற்புக்கு பதிலாக, பைத்தியக்காரத்தனமாக சூடான (Warm welcome) வரவேற்பை அளிக்கிறார்கள். கேட்டால் அவனது பாணியில் பேச வேண்டுமாம்.மொழியை மாற்றும் போதே இவ்வளவு பைத்தியக்காரத் தனம் என்றால் மதம் மாறும் போது கேட்கவே வேண்டாம்.

இன்றைய மனித இனத்தில், ஆப்பிரிக்காவை ( Out of Africa) தவிர்த்து உள்ள 95 சதவீத மனித இனத்தின், மூதாதையர் தமிழர்தான் என நிரூபிக்கப் பட்டுள்ளது. (தமிழனின் முன்னோடியும் ஆப்ரிக்கா தானே என வாதிடலாம். ஆனால் இங்கு  மனித இனம் ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின்தான் தமிழ் மண்ணிலிருந்து வெளியேறிச் சென்றுள்ளது ) மனித இனம் 50,000 வருடங்களுக்கு முன் தமிழகத்தில் இருந்துதான்   கிழக்கு, மத்திய மற்றும் மேற்கு ஆசியா, ஐரோப்பா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு பரவியுள்ளது என்ற உண்மையை பல் வேறுபட்ட நேஷனல் ஜியோகிராபி, டிஸ்கவரி, பிபிசி போன்ற குழுமங்களாலும் ஸ்டீபன் ஓப்பன்கியுமர் என்ற  தனி நபர்களாலும் மேற்க் கொள்ளப் பட்ட ஜெனிட்டிக் ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றதை முதலில் அறிந்து கொண்டு, நமது தமிழ்ப் பகுத்தறிவுகள் புதிய வியூகம் அமைத்துக் கொண்டு வரட்டும்.


 இந்த உண்மையை  தமிழ்ப் பகுத்தறிவுகளால் ஏற்றுக் கொள்ளவே முடியாது. ஏற்றுக் கொண்டால் இத்தனை காலங்களாகக் கட்டிய ஆரிய பகுத்தறிவு மணற் கோட்டைகள் தகர்ந்து விடுமே, வெட்டவெளியில் வரலாற்றின் அகதிகளாக அலைய நேரிடுமே, பாமரன் கூட பார்த்துச் சிரிப்பானே, இல்லாத ஆரியனும் இரவில் வந்து தூக்கத்தைக் கலைப்பானே என்ற எண்ணத்துடன் அத்தனை கொள்கைகளையும் மாற்ற வேண்டியதிருக்கும். பின்னர்  அந்த மூஞ்சியை எப்படி அவர்களால் வெளிக்காட்ட முடியும் எனத் தெரியவில்லை. ஜெனிடிக் அறிவியல் இந்த தமிழ்ப் பகுத்தறிவுவாதிகளின் மூஞ்சியில் காறித் துப்பியுள்ளது. ஏனெனில் தமிழ்ப் பகுத்தறிவுகளின் பள்ளிக்கூடங்களின் முதல் வார்த்தையே ஆரியம் தானே. இனிமேல் எவனாவது ஆரியம் பேசினால் காறித் துப்பாவிட்டாலும் பரவாயில்லை கைகொட்டி சிரியுங்கள், அப்பொழுதான் சக தமிழனின் மானம் காக்கப் படும், அறியாமை நீக்கப் படும்.

நேஷனல் ஜியாகிராபியின் ஜெனிடிக் பரவல் பற்றிய படம்.

"கல் தோன்றா மண் தோன்றா காலத்து  வாளொடு முன் தோன்றிய மூத்த குடி" தமிழன் என்பதில் மிகைப்படுத்தல் ஏதுமில்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி ஆகிவிட்டது. தமிழனைப் பற்றி அறிய தமிழனை, தமிழை, அவனது இலக்கியத்தை வரலாற்றை  முதலில் புரிந்து கொள்ள வேண்டும். விக்கியும், கூகுளும் தமிழைப் பொறுத்தவரை அரைகுறைதான். ஏனெனில் ஏற்றப் பட்ட தகவல்கள்தான் கிடைக்கின்றன். தமிழ்மொழி 2008 ல் 264 மொழிகள் கொண்ட விக்கிபீடியாவில் தமிழ் 15,000 கட்டுரைகளுடன் 67 வது இடத்தில் இருந்தது. தெலுங்கு 39 வது இடத்தில் இருந்தது. இன்றைய நிலையில் முன்னேற்றம் இருந்தாலும் அது போதாது. அத்தளங்களுக்கு தகவல் ஏற்றுவதும் சரியான தமிழனாக இருந்தால்தான் உண்மையான தகவலைப் பெறமுடியும். தகவல் ஏற்றுவதற்கு ஆட்களும் இல்லை அக்கறையும் இல்லை.  உள்ளுரிலே எதிரிகளிருக்கும் போது உண்மையை எவ்வாறு உரைக்கமுடியும்.

அவ்வளவு தூரம் வரலாற்றை ஆய்வு செய்ய அக்கறையும், அறிவும் இல்லை என்றால் குறைந்தது ஒரு முவாயிரம் வருடங்களுக்கு முன்னுள்ள தகவலை வைத்தாவது தர்க்க ரீதியாக யோசித்தாலே தெரியும் தமிழன் இந்துவாகத்தான் இருந்திருக்கிறான். சங்ககால இலக்கியத்தில் இருந்து தெரிவது என்னவென்றால் கடந்த பத்தாயிரம் வருடங்களாக தமிழன் இந்துவாகத்தான் இருந்திருக்கிறான்.

ஜெனிட்டிக் ஆராய்ச்சியின் முடிவுகளோ 75,000 வருடங்களாக இந்திய தென் தீபகற்பத்தில் தமிழன் இருந்திருக்கின்றான் எனத் தெரிவிக்கிறது. ஏனென்றால் 75,000 வருடங்களுக்கு முன் சுமத்ரா தீவில் நிகழ்ந்த டோபா எரிமலை வெடிப்பிற்கும், சங்ககால இலக்கியங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் முப்புரம் எரிப்பிற்கும், (திரிபுரம் எரித்த விரிசடையன்)  அதன் விளைவாக இந்தியா, தென் மேற்கு, மற்றும் தென் கிழக்கு ஆசியா முழுவதும்  படர்ந்த மூன்று மீட்டர் உயர சாம்பலுக்கும், உடலெங்கும் சாம்பலை பூசிய ஈசனுக்கும்  தமிழக ஆன்மீக (விபூதி) சாம்பலுக்கும்   சம்பந்தம் இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது. 

ஏழுதெங்க நாடு, ஏழுமதுரை நாடு, ஏழுமுன்பலைநாடு, ஏழுபின்பலைநாடு, ஏழுகுன்ற நாடு, ஏழுகுனக்கரை நாடு, ஏழுகுரும்பனை நாடு என இங்கு நாற்பத்திஒன்பது நாடுகள் இருந்துள்ளது. (நாற்பத்தொன்பது இல்லை என்றாலும் ஏழு என்றாவது வைத்துக் கொள்ளலாம் அல்லவா?.) மற்றும்  பஃறுளி, குமரி என்ற இரண்டு ஆறுகள் ஓடியுள்ளது. என்றும், குமரிக்கொடு, மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளது என்றும் நமது பழந்தமிழ் நூல்கள் மூலம் அறியமுடிகிறது. எயிதென்மதுரை, கபாடபுரம், முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன. நக்கீரர் "இறையனார் அகப்பொருள்" என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார். தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள "தென் மதுரையில்" கி.மு 4000 இல் 4449புலவர்கள்களுடன் , சிவன், முருகர், அகஸ்தியருடன் 39மன்னர்களும் இணைந்து, "பரிபாடல், முதுநாரை, முதுகுறுகு, கலரியவிரை, பேரதிகாரம்" ஆகிய நூல்களை இயற்றப்பட்டதாக அறிகிறோம். இந்த மாதிரியான ஆராய்ச்சிகளை வட இந்தியர்கள் எதிர்க்கிறார்கள். தமிழக அரசும் அக்கறை கொள்வதில்லை.

 சங்ககால பாடல்களில் தமிழன் குறிப்பிடும்  பஃறுளியாறு உட்பட்ட பெரும் நிலப்பரப்பு  ஆகியவை அழிந்து மிச்சம் உள்ள நிலப்பரப்பே இன்றுள்ள தமிழகம் என அறியும் பொழுது கடற்கோளால் அழிந்தது எவ்வளவு என்பதும், எவ்வளவு காலத்திற்கும் முன்பு என்பதும் அதனால் மனித இனத்திற்கு ஏற்பட்ட மாற்றம் என்ன என்பதும் இது வரை கணக்கிட முடியவில்லை. மக்களையும் அவர்களது இலக்கிய படைப்புகளையும் கடல் விழுங்கி விட்டது. கிடைத்த தகவல்களை வைத்து எழுதப் படும் வரலாறும் தற்காலிக மானதாகத்தான் இருக்கும். ஒரு திரைப் படத்தின் ஏழெட்டு ஸ்டில்களை மட்டும் வைத்துக் கொண்டு இரண்டு மணி நேரம் ஓடக் கூடிய அந்த  திரைப் படத்தின்   முழுக்கதையும் கற்பனையில்  எழுதினால் எப்படி இருக்குமோ அது போல்தான் வரலாறும் இருக்கும்.
கூறு கெட்டவர்கள் இருவர் ஒரு திரைப்படத்திற்குச் சென்றனராம் முதலில் அந்த ஜெமினி இரட்டையர்கள் குழலூதுவதைப் பார்த்துவிட்டு  உறங்கத் தொடங்கியவர்கள் கடைசியில் அதே இரட்டையர்கள் குழலூதி முடிப்பதை பார்த்து, எழுந்தார்களாம். அவர்களிடம்  கதை கேட்டால் இரண்டுமணி நேரமாக இரு சிறுவர்கள் குழலூவதுதான் கதை என்பார்கள். அது போன்றதுதான் அரைகுறையாளர்கள் எழுதும் வரலாறும் இருக்கும்.   கீழுள்ள தளத்தை படிக்கும் முறை அறிந்து படித்தால் உலக மனித இனத்தின் வரலாற்றைப் பற்றிய முழுமையான  விளக்கம் கிடைக்கும்.  


மனித இனத்தின் வரலாறு மேற்கண்ட தளத்தில் விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது. இதில் அந்த ஆராய்ச்சியில் தமிழ்,  சமஸ்கிருத மொழி இலக்கிய ஆராய்ச்சியும்,வரலாற்று ஆராய்ச்சியும் கலந்து இருந்தால் முழுமையான ஆராய்ச்சியாக இருக்கும். அதற்கான முன்னோட்டம்தான் கீழே கொடுக்கப்பட்டுள்ள தளம். கிழக்கு ஆசியா முழுவதும் தமிழனின் ஜீன்தான் என்பது நிரூபணம் ஆகிவிட்டது. ஆனால் இந்த அரைகுறைகள் தைமூரின் படையெடுப்பால் அங்கிருந்து ஜீன் இங்கு கலந்தாக நம்பிக்கொண்டு இருக்கின்றனர். கொரியா, ஜப்பான் மொழிகளில்  தமிழ் வார்த்தைகளின் கலப்பின் மர்ம முடிச்சு அவிழ்ந்து விட்டது.


ஆங்கில மாதங்களின் பெயர்களின் மூலம்  லத்தீன் என்று அவர்கள் சொல்லலாம். ஆனால் அந்த  லத்தீன் பெயர்களின் மூலத்திற்கும் சமஸ்கிருதத்திற்கும் மிகுந்த சம்பந்தம் இருப்பதைக் காணலாம். உதாரணத்திற்கு செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர்  என்பதை முறையே சப்தம், அஷ்டம், நவம், தசம் என்பதிலிருந்து வந்தவைதான் என்று சொல்வதற்கு பெரிய மொழி ஆராய்ச்சி தேவை இல்லை. ஆங்கிலமாதங்களின் வரிசை மாறி இருப்பதற்கு பெரிய வரலாறு உள்ளது அது தனிக்கதை .இந்தியாவின் வானியல் தான் உலகெங்கும் பரவியுள்ளது  என்பதும் பரவியமுறையும் கீழுள்ள தளத்தில் காணலாம்.


ஆப்ரிக்காவின் காமரூனின் மொழியும் கிட்டதட்ட தமிழ்தான். ஹங்கேரி மொழியில் 30 சதவீதம் தமிழ் வார்த்தைகள் இருப்பதின் காரணமும் தெரிந்து விட்டது. இந்தோனேஷியா, பாலி, சுமத்ரா  ஆகிய தீவுகளில் இராமாயணமும் மகாபாரதமும் மிக நுணுக்கமான தகவல்களுடன் பரவி உள்ள விதம், இதிகாசங்களின் மூலமே, தமிழும் தமிழனும்தான் என்பதைக் கூறுகிறது. 


இதன் முடிவுகளால் அறியப்படுவது என்னவென்றால் உலகின் எல்லா மதங்களுக்கும்  அடிப்படை இந்துமதம் தான். உடனே இந்து என்ற பெயர்க் காராணத்தை  ஆராயக்கூடாது. பெயர் எதுவாக இருந்தால் என்ன, மதம் என்பது இருந்திருக்கிறது. எவனும் தனக்குதானே பெயர் சூட்டிக் கொள்வதில்லை. என்னதான் பெயர் சூட்டிக் கொண்டாலும் அடுத்தவன் வைக்கும் பெயர்தான் சில சமயம் நிலைக்கும். உதாரணமாக சிவாஜி, எம்ஜிஆர், ரஜினி என்பதெல்லாம் அடுத்தவர் வைத்த பெயர்தான்.  ஏனெனில் பெயரின் தேவையும் அடுத்தவர்களுக்காக ஏற்பட்டதுதான். உதாரணமாக தனித் தீவில் தன்னந்தனியாக சகல அதிகாரங்களோடு திரிபவனுக்கு எதற்கு பெயர்?. இந்திய தீபகற்பத்தில் ஏகபோகமாக பல்லாண்டுகாலம்  இருந்த மதத்திற்கு எதற்கு பெயர்?. அதிலும் மதுரை நகரில் பலருக்கு சொந்தப் பெயரை விட அடுத்தவன் வைத்த பெயர்தான் விளங்குகிறது. ஆக பெயரைப் பற்றிய வரலாற்றை ஆராய்வது எந்த வகையிலும் உதவாது.

இந்து என்றால் ஒருவன் பாரத் என்கிறான், ஒருவன் சிந்து என்கிறான், ஒருவன் இண்டிஸ் என்கிறான், ஒருவன் ஹிந்து என்கிறான் , வக்கிரம்  பிடித்தவனோ இந்து என்றால் திருடன் என்கிறான். அட இவ்வளவு ஏன் தமிழனின் பெயர் தமிழனே அல்ல தமிழ் என்ற பெயரே தமிழில் இல்லை என்பார்கள். 

சங்ககால இலக்கியங்கள் சுமார் 3000 வருடங்களுக்கு முந்தியது என்பதற்கு தரவுகள் தேவை இல்லை. சங்ககால தமிழ் இலக்கியங்களில் மகாபாரதம் மற்றும் இராமாயணக் குறிப்புகள் உள்ளதை  அறியும் பொழுது இதிகாசங்களின் காலம் சங்ககாலத்திற்கும் மிகப் பழமையானது எனத் தெரிய வருகிறது. அதாவது சுமார் 5000 வருடங்களுக்கும் மேலான பழமையானது என வைத்துக் கொள்ளலாம். புறநானூற்றுப் பாடல் ஒன்றிலுள்ள இராமாயண குறிப்பை இங்கே காணலாம். அவசியம் இதைப் படியுங்கள். பாடலுக்கு பரிசளித்த மன்னனின் கொடையையும், அதை  அனுபவிக்கத் தெரியாமல் பரிதவிக்கும் தனது சுற்றத்திற்கு, உவமானமாக ஒரு நுணுக்கமான இராமாயணக் காட்சியை விவரிக்கும் விதம் அருமை.  இந்தக் காலத்தில் உரைநடை பாணியில் உவமானம் சொன்னாலும் புரியாமல் மீண்டும் மீண்டும் கேள்வி கேட்டு உயிரை வாங்கும் " கோவில் புலவர்"களும் இருக்கும் போது  அந்த பரிசளித்த மன்னனை நினைத்தால் புல்லரிக்கிறது.


இந்துமதத்தின் காலத்தை இன்னொரு முறையிலும் கணக்கிடலாம். அதாவது இதிகாசங்களில் உள்ள குறிப்புகளை கொண்டு அதன் காலம் சுமார் 7000 வருடங்களுக்கு முந்தியது என அறிவியல் கூறுகிறது. ஏனெனில் இதிகாசங்களில் இராமர் பிறந்தது, பட்டாபிஷேகம் செய்தது, மற்றும் அனைவரின் பிறந்த நேரமும் (ஜாதகமும்) உள்ளது. அது போல்  மகாபாரத கதை நாயகர்கள் பிறந்தது , போர் நடந்தது போன்ற  ஒவ்வொரு நிகழ்வும் கோள்களின் நிலையைக் கொண்டு குறிப்பிடப் பட்டுள்ளது. கோள்களின் நிலையைக் கொண்டு காலத்தை அறியும் இன்றைய நவீன மென்பொருள் கொண்டு  கணக்கிடும் போது, அவைகளும் சுமார் 7000 வருடங்களுக்கு முந்தியது எனக் காட்டுகிறது.

The planetary positions on 16th October 5561 B.C., the date of commencement of the Mahabharat War, have been calculated and known [Dating of the Mahabharat, by Dr. P.V. Vartak]. Therefore, calculating further backwards for the astral  combination noted above, the date  concludes to be 4th December 7323 B.C. On this date, Saturn was at 205 deg., Jupiter at 94 deg., Mars between 283 and 298 deg., Rahu at 179 deg. and Sun at 2 degrees. 4th Dec. 7323 therefore is the date of birth of Rama, when the aforementioned 4 planets exalted. Venus is always within 47 degrees from the Sun, and might be in Pisces in an exalted state. Thus Rama's date is confirmed. 



ஏழாயிரம் வருடங்களுக்கு முன் கோள்களைப் பற்றிய அறிவுடன் அதிலும் ராகு கேது மற்றும் திதி(ராமநவமி) ஆகியவை பற்றிய தெள்ளிய அறிவுடன்  அவ்வளவு முன்னேறிய சமூகம் அங்கே நிலவி இருக்கும் என்றால் ,  அந்த நிலைக்கு அச்சமூகம் வளர எடுத்துக் கொண்ட காலத்தின் அளவு சுமார் 10000 வருடங்களுக்கு மேலாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. மகாபாரதத்தில் தமிழனைப் பற்றிய குறிப்புகளும் காணப் படுகிறது. கடைச் சங்கம் தோன்றி 3000 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டதென்றால் முதற்சங்கம், இடைச் சங்கம் ஆகியவை சுமாராக 10000 வருடங்களில் தோன்றியவையாக இருக்க முடியும். ஆகவே இந்துமதம் 20,000 வருடங்கள் பழமையானது என்பதில் சந்தேகம் இல்லை.

 சமஸ்கிருதம்  எனும் தேவ பாஷை எப்படி உருவானது ?. 
அடுத்த பதிவில் பார்ப் போம்.(கீழே கிளிக் செய்யவும்)

மேலும் படிக்க...!
top