சமஸ்கிருதம்   எப்படி உருவானது ?.

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.

என்கிறார் வள்ளுவர். இக்குறளின் பொருள் மிகவும் வெளிப்படை. "பரிபூர்ண நிலையடைந்த மொழியை உருவாக்கிய, முன்னோரின்  பெருமையானது, அவர்கள் வாழுமிடத்து வழங்கப்படும் மறைமொழி கொண்டு அறியப்படும்" என்கிறார். மறைமொழி என்பதில் குழப்பம் ஏதுமில்லை. அது மறைத்து வைக்கப்பட்ட மொழி அல்லது ஒரு சங்கேத மொழி. மறை என்ற வேர்ச் சொல்லின் அர்த்தம் "ஒளித்து வை" என்பதாகும்.  குறளுக்கு விளக்கம் சொன்ன அனைவரும் மறைமொழி என்பதற்கு மந்திரம் என்கின்றனர். மந்திரம்’ என்ற சொல் தொல்காப்பியத்திலும் பயன்படுத்தப் படுகிறது.
“நிறை மொழி மாந்தர் ஆணையிற் கிளக்கும்
மறைமொழிதானே மந்திரம் என்ப” (பொரு- 480)
இதன் பொருள் :”நிறைந்த மொழியையுடைய மாந்தர்,
தமதாணையால் சொல்லப்பட்ட மறைந்த சொல் மந்திரமாகும்”.

மந்திரம் என்றாலே, மறைவாகவும், மூடி மறைத்தும் இருப்பது.
அதன் பொருள் வெளிப்படையாகத் தெரியாது. சிலர் மறை என்பதற்கு ஒழுக்கம் பற்றி கூறுவர் ஆனால் ஒழுக்கத்திற்கு அடைமொழியாக "மொழி" வராது மறைநூல் என்று வந்தால் கூட ஒழுக்கம் சம்பந்தப் பட்டதாக ஏற்றுக் கொள்ளலாம்.  "நீத்தார் பெருமை"யில் கூறுவதால் முன்னோர்கள் பற்றியும் அவர்களுக்கு இருந்திருக்க வேண்டிய மொழிப் பாதுகாப்பும், மொழியுணர்வும் பற்றி வள்ளுவர் கூறுகிறார். வள்ளுவர் தன்னுடைய தமிழ்மொழியைத்தான்  நிறைமொழிக்கு உதாரணமாகக் கொண்டு விளக்கம் சொல்லி இருப்பார். அப்படி என்றால் தமிழ்நிலத்துக்குப் பெருமையாக  ஒரு மறைமொழி இருக்க வேண்டுமல்லவா. அது வேறென்ன  சமஸ்கிருதம் தான்.

சமஸ்கிருதத்தின் சுவடு பாரதத்தை தவிர வேறெங்கும்  காணப்படவில்லை என்பதாலும், (அப்படியே இருந்தாலும் அது பாரதத்தில் இருந்துதான் சென்றிருக்க வேண்டும் என்பதை மரபணு ஆராய்ச்சிகள் தெரிவிக்கிறது.) தமிழின் சமகால மொழியாக இருப்பதாலும், தமிழும் சமஸ்கிருதமும் இரட்டைமொழி போல் இருப்பதாலும் , மேலும் ஒரு தீபகற்பத்தில் இவ்வளவு சிறப்பாக இரண்டு மொழிகள் என்பது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாக இருப்பதாலும், சமஸ்கிருதத்தை தாய்மொழியாகக் கொண்ட இனமோ குழுவோ இந்தியாவில் அறியப் படவில்லை என்பதாலும், பன்னெடுங்காலத்திற்கு (ஐயாயிரம் ஆண்டுகளுக்கு) முன்பே இரண்டு மொழிகளும் பொதுவான வார்த்தைகளை அதிகம் கொண்டிருப்பதாலும், அதில் தமிழ் மட்டும் இயற்கை மொழியாக இருப்பதாலும், மற்றொன்று செயற்கையாக இருப்பதாலும் அம்மொழி ரகசியத்திற்காகவும், புனிதத்திற்காகவும் தமிழனால் உருவாக்கப் பட்டிருக்க வேண்டும். இராமாயண காலத்திலேயே தமிழுடன் சமஸ்கிருதம் இருந்தாக அறியப் படுகிறது, தமிழில் மட்டுமே உள்ள மொழி மற்றும் மண் சார்ந்த பழமொழிகள் சமஸ்கிருதத்தில் இருப்பதால் சமஸ்கிருதத்தையும் தமிழையும் படைத்தவன்  ஒரே இனமாகத்தான் இருக்கமுடியும். தமிழில் இருந்து சமைக்கப் பட்ட மொழி என்பதால் சமஸ்கிருதம் எனப்பட்டது.உலகளவில் தமிழ் பரவி இருக்கும் போது சமஸ்கிருதம் ஏன் தமிழோடு பரவில்லை என்பதன் காரணம் தற்பொழுது விளங்கியிருக்கும் என நினைக்கிறேன். தமிழன் உலகம் முழுவதும் பரவும் பொழுது சமஸ்கிருதம் படைக்கப் படவில்லை. அது தமிழகத்தில் நிலைகொண்ட தமிழனால் பிற்காலத்தில் அதாவது முதற்ச் சங்ககாலத்திற்கு பின்  படைக்கப் பட்டதால் அது இந்தியாவை தாண்ட முடியவில்லை இந்திய தீபகற்பத்தில்,  இந்திய தொல்பொருள் துறையினால் கண்டு பிடிக்கப்பட்ட மிகவும்  பழமையான கல்வெட்டுகளில் ஐம்பத்தைந்து சதவீதத்திற்கு மேல் தமிழில்தான் உள்ளது. ஏனெனில் சமஸ்கிருதத்திற்கு எழுத்துரு கிடையாது. மேலும் அது பேச்சு வழக்கிலும் இல்லை. இந்த ஒரு சான்றினால் தமிழ் ஒன்றுதான் இந்தியா முழுமையும் கோலோச்சியது என்பது மட்டுமில்லாமல் மிகவும் பழமையானது என்கிற உண்மையை தெரிந்து கொள்ளலாம். 

தமிழ் என்பது இயல்பாக,  இயற்கையாக தோன்றியது.  மொழிகளுக்கெல்லாம் மூலமாகிய ஆதி மொழியாக விளங்கியது என்பதில் ஐயம் ஏதுமில்லை. எதியோப்பியாவில், ஹங்கேரியில், கொரியாவில், ஜப்பானில் தென் அமெரிக்காவில் என்று உலகின் எட்டுதிக்குகளிலும் காணப்படும் தமிழின் கலப்பு, உணர்த்தும் செய்தி என்னவென்றால் உலகமொழிகளின் தாய், தமிழ்தான் என்பதாகும். ஆகவே தமிழன் "சமைத்த" மொழிதான் சமஸ்கிருதமும்.

அதையேதான் விக்கி சொல்கிறது.
The Sanskrit verbal adjective sáṃskṛta- may be translated as "put together, constructed, well or completely formed; refined, adorned, highly elaborated". It is derived from the root saṃ-skar- "to put together, compose, arrange, prepare",[6] where saṃ- "together" (as English same) and (s)kar- "group" (transitive verb). (cf. Norwegian 'sammen skjær', Afrikaans 'saamskaar')


The term in the generic meaning of "made ready, prepared, completed, finished" is found in the Rigveda. Also in Vedic Sanskrit, as nominalised neuter saṃskṛtám, it means "preparation, prepared place" and thus "ritual enclosure, place for a sacrifice".

As a term for "refined or elaborated speech" the adjective appears only in Epic and Classical Sanskrit, in the Manusmriti and in the Mahabharata. The language referred to as saṃskṛta "the cultured language" has by definition always been a "sacred" and "sophisticated" language, used for religious and learned discourse in ancient India, and contrasted with the languages spoken by the people, prākṛta- "natural, artless, normal, ordinary". சமஸ்கிருத பேரறிஞர் ஹெச். ஹெச்.இங்கல்ஸ், "சமஸ்கிருதம் ஒரு உருவாக்கப்பட்ட, செயற்கையான மொழிதான்" என்று ஆதாரத்தோடு நிரூபிக்கிறார்.
The eminent sanskritist, Daniel H.H. Ingalls describes some peculiar characteristics of the Sanskrit language. He refers to the enormous vocabulary of Sanskrit, and also of the presence of a larger choice of synonyms in Sanskrit than any other language he knew of.Ingalls  argues  that Sanskrit is not a natural language, but an 'artificial' language. By 'artificial', he explains he means it was learned after some other Indian language had been learned by simple conditioning. Ingalls writes: 'Every Indian, one may suppose, grew up learning in a natural way the language of his mother and his playmates.


 http://en.wikipedia.org/wiki/Sanskrit

The oldest dated Tamil inscription written in the Tamil-Brahmi script has been found in Palani in Southern India, scientifically dated to 540 BCE - the oldest known Brahmi inscriptions on the Indian sub-continent.[29] More than 55% of the epigraphical inscriptions (about 55,000) found by the Archaeological Survey of India are in the Tamil language.[30] Tamil language inscriptions written c. 1st century BC and 2nd century AD have been discovered in Egypt, Sri Lanka and Thailand.[31] The two earliest manuscripts from India,[32][33] to be acknowledged and registered by UNESCO Memory of the World register in 1997 and 2005 were in Tamil.[34] Tamil is used as a sacred language of Ayyavazhi and in Tamil Hindu traditions of Shaivism and Vaishnavism. According to a 2001 survey, there were 1,863 newspapers published in Tamil, of which 353 were dailies.

http://en.wikipedia.org/wiki/Tamil_languageஇராமாயணத்தில் அனுமன் சீதையிடம், தான் ராவணனின் மாயை அல்ல உண்மையான ராமனின் தூதுவன் தான் என்பதை வழக்கமான, சீதைக்கும் அனுமனுக்கும் தெரிந்த தேவ பாஷையில் பேசாமல், மனித பாஷையில் அதாவது தமிழில் பேசி உணர வைத்ததாக வால்மீகி கூறுகிறார். ஒரு வேளை ராவணன் சீதையிடம் தமிழில் பேசமாட்டானோ?. ஆகவே தேவபாஷை என்பது முக்கியமானவர்கள் கற்றுத்தேற வேண்டிய மொழி என்பதும் மக்கள் 
வழக்கில் இருந்த மொழி தமிழ் என்பதும் தெரிகிறது.

http://thamizhan-thiravidana.blogspot.in/2011/09/69.html.

அறிவு ஜீவிகள் எல்லோருக்கும் ஒரு கட்டத்தில் ரகசிய மொழியின் அவசியம் ஏற்பட்டு விடுகிறது. அது சமூக நன்மைக்காகவும் இருக்கலாம், சுயலாபத்திற்காகவும் இருக்கலாம். இன்றும் கூட நண்பர்களுக்குள் நான்கு பேர் கூடி விட்டால் அதில் இரண்டு பேர் கோஷ்டி சேர்ந்து கொண்டு ரகசியமாகப் பேசி மற்ற இருவரை  குழப்புவார்கள் அல்லது கலாய்ப்பார்கள். புரியாதவர்கள் மொக்கையாய், முட்டாளாய் உணருவார்கள்.  அதுமட்டுமில்லாமல் பெரியவர்கள் கூடி சில விஷயங்களில் முடிவெடுக்கும் போது சிறுவர்கள் மற்றும் தகுதி இல்லாதவர்களின் தலையீடு இல்லாமல் இருக்கவும் ரகசிய பாஷை தேவைப் படுகிறது.


மகாபாரதத்தில் ஒரு கட்டத்தில், அரக்குமாளிகையின்  நோக்கத்தை புரிந்து கொண்ட பீஷ்மர், பாண்டவர்களை காப்பாற்றுவதற்காக விதுரனிடம் அத்தகவலை சொல்லி, தருமனிடம் போய் சொல்லச் சொல்கிறார். விதுரனும் தருமனிடம் வந்து  தனிமையில் சொல்ல நினைக்கும் போது சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. அப்பொழுது அவர்கள் இருவர் மட்டும் அறிந்த ரகசிய பாஷையில் தகவலைச் சொல்வதாக கேள்விப் பட்டிருக்கிறேன்.  ரகசிய மொழியின்  அவசியம் ஏழாயிரம் வருடங்களுக்கு முன்பே தேவைப் பட்டிருக்கிறது.

இப்பொழுதும் தமிழ் நாட்டில் ஐம்பது வயதிற்கு மேற்ப் பட்டவர்களுக்கு "கதகமிகழ்" பாஷை கண்டிப்பாக தெரிந்திருக்கும். ஆனால் இந்தமாதிரி பாஷைகளுக்கு எழுத்துருவம் தேவையில்லை என்பதுதான் முக்கியமான ஒற்றுமை. இவ்வளவு ஏன்? எங்கள் வீட்டில் கூட ஒரு ரகசிய பாஷை உள்ளது. எங்கள் குடும்பத்தினர் மட்டும் பேசிக் கொள்வோம். எனது மகளும் மகனும் பேசினால் சமயத்தில் எங்களுக்கே புரியாது. (டிகோடிங் லேட்டாகும்)நானும் எனது நண்பனும் (வனராஜ்)  அப்பொழுதான் "ஹாம்" லைசென்ஸ் (1972)வாங்கியிருந்தோம். ஏற்கனவே ஹாம்களுக்கென்று சில குறியீடுகள் இருக்கும். அதனால் அதை ஒட்டி ஒரு பாஷையை உருவாக்கிக் கொண்டோம். நானும் நண்பனும் (சந்தேகமில்லாமல் அறிவு ஜீவிகள்தான்) அக்காலத்தில் அதாவது எழுபதுகளில், எங்களிருவருக்கான  பாஷையில் பெண்களைப் பற்றிய கமெண்ட்களை மிக சகஜமாக பஸ்ஸின் நெருக்கத்தில் கூட அவர்கள் அறியாதவாறு பேசிக் கொள்வோம்.    அதில் சில முக்கியமான வார்த்தைகளைக் கூறுகிறேன் பின் பற்ற முடிகிறதா என்று பாருங்கள். டிஎக்ஸ், ஒய்யெல், பிஎஸ், கேங்க், புஷ்புல், பைடேங்க், ஆரெஸ்டி புரிகிறதா?. இன்னும் ஒரு படி மேலே போய் ஒரு எழுத்துருவையும் உருவாக்கி கடிதமெல்லாம் எழுதிக் கொண்டோம். அது பழைய கதை. தற்கால சினிமாவிலும் அந்த நுட்பம் பயன்படுத்தப் பட்டிருப்பதை காணலாம்.  ஃப்ரெண்ட்ஸ் படத்தில் விஜய் "ழ்மித ஷைபா" பேசுவார். "ல்தகா யய்செ  யாசைஆ  குக்ருஇ" என்பார்.

நண்பர்கள் குழுமியிருக்கும் போது ஒரு நண்பர் இன்னொருவருக்கு திடீரென்று "குட்மானிங்" சொல்வார்கள் அதற்கு அர்த்தம் "ஜிப்பை மூடுடா இடியட் " என்று அர்த்தம். இது போன்ற சில ரகசிய குறியீடுகள் ஒவ்வொரு நட்பு வட்டத்திலும் இருக்கும். மாட்டுச்சந்தையில் மாட்டு வியாபாரிகள் மாட்டின் விலையை தங்கள் விரல்களால் பேசிக் கொள்வார்கள். இதனால் விற்பவனுக்கும் வாங்குபவனுக்கும் நஷ்டத்தை ஏற்படுத்தும்  "விலை வைக்கும் " போக்கு தவிர்க்கப் படுகிறது. வியாபாரிகளும் ஒரு வித குறியீடுகளை தங்களது வியாபாரத்தில் பின் பற்றுகின்றனர். ஒரு பொருளின் அசல்விலையை குறியீடுகளால் குறித்திருப்பார்கள். வாடிக்கையாளரைப் பொறுத்து குறியீட்டைப் பார்த்து  லாபத்தை வைத்துக் கொள்வார்கள். இப்பொழுதெல்லாம் நிலையான லாபம் போதும் என்பதால் பார்கோட், மற்றும் க்யூ கோட்  போன்ற மெஷின்கள் மட்டும் பேசிக் கொள்ளும் மொழி முறைகளும் கையாளப் படுகின்றது.

ஆக அறிவாளிகளுக்கு, நடைமுறையில் உள்ள ஒரு மொழி தவிர்த்து தன்னைப் போன்றவர்கள் வட்டத்தில் மற்றவர்களுக்கு புரியாமல் புதிராகப் பேசி மகிழ, சன்டையிட, ரகசியங்களை பரிமாறிக் கொள்ள, தொழிலை பாதுகாக்க ஒரு மொழி மிகமிக அவசியமாகத் தேவைப் படுகிறது. தமிழ்ப் புலவர்கள் சாமானியனுக்கு புரியாமல் தங்களுக்குள் அடிக்கடி பாடியே சன்டையிட்டுக் கொண்டவர்கள் அல்லவா?  இன்றும் தமிழில் உள்ள பாடலுக்கு  பொருளுரை இல்லாமல் அர்த்தம் கொள்வது இயலாத காரியமாகத்தானே இருக்கிறது. 
8 comments:

மின் வாசகம் said...

தமிழர்களால் உருவாக்கப்பட்ட மறைமொழி தான் சமஸ்கிருதம் என்றே வைத்துக் கொள்வோமே. அப்படி இருக்க ஏன் சமஸ்கிருதத்தை ஐரோப்பிய மொழிகளின் அடிப்படையில் உருவாக்கினார்கள். திராவிட மொழியின் அடிப்படையிலே உருவாக்கி இருக்கலாமே.

இது ஒன்றே தங்கள் பதிவின் அடிநாதத்தை அசைத்துவிடும் வினா? சமஸ்கிருதம் செயற்கையான மொழி என்பதில் ஐயமில்லை, ஆனால் அதை உருவாக்கியது திராவிடர்கள் கிடையாது. ஐரானியர்களோ, ஆரியர்களோ தான். அதனால் தான் அதன் இலக்கண விதிகள், வேர்ச்சொல்கள், பேச்சு, உச்சரிப்பு, ஒலிகள் அனைத்தும் இதர ஆரிய மொழிகளை ஒத்திருக்கின்றது.

Chandru said...

மாநகரன் அவர்களுக்கு,
முதலில் ஆரியன் என்றொரு இனம் சரித்திரத்தில் கிடையாது.எனது முந்தைய இந்து தமிழ் சமஸ்கிருதம் பதிவை தெளிவாகப் படித்து விட்டு இதைப் படித்தால் புரியும். இன்னும் ஆரிய சித்தாந்தத்தை மனதில் வைத்துக் கொண்டு பார்த்தால் காட்சி பிழைக்கு பலியாக வேண்டியதிருக்கும் எனது பதிவின் அடிநாதமே ஆரிய் திராவிடக் கூற்றின் புரட்டை அகற்றுவதுதான்.தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் இருந்து தோன்றிய ஐரோப்பிய மொழிகளுக்கு இலக்கணவிதிகள், உச்சரிப்பு வேர்ச்சொல்கள் ஒலிகள்,பேச்சு ஆகியவை இருப்பது ஆச்சிரியமில்லை.

Anonymous said...

அய்யா பழனி சித்த வைத்தியரே,
அறிவியல் விஞ்சாணியே!

சமஸ்கிருத மொழியானது, அரபி, எபிரேயம், ஈரானியம் போன்ற பல மொழிகளையும் கலந்து உருவாக்கப்பட்ட செயற்கை மொழி.

இந்த செயற்கை மொழியை தேவபாஷை - என உங்களைப் போன்றவர்கள் உளறித் திரிவதுதான் சிரிப்பாக இருக்கிறது.

வாலிபள் said...

மொழிகளில் எந்த மொழிக்கும் உயர்வு தாழ்வு இல்லை.

தமிழின் தொன்மையை கட்டுரை ஆசிரியர் தெளிவாக விளக்கியுள்ளார்.

இதுபோன்ற கட்டுரைகளை அவர் அதிகளவில் வெளியிட வேண்டும்.

அனாமி ஒருவர் சொன்னது போல, சமக்கிருதம் கலப்பு மொழியாக இருக்கலாம். அதற்காக, சமக்கிருதத்தில் சிறப்பு இல்லை என சொல்ல முடியுமா?

இந்தியாவில் தமிழுக்கு அடுத்து சிறப்புமிக்க மொழி சமக்கிருதமே.

இதனை எந்த தமிழனும் மறுக்க முடியாது.

வாலிபள் said...

சமக்கிருதத்தில் எழுதப்பட்ட மகாபாரதத்தைப் படித்துப் பாருங்கள். உலகிலுள்ள எல்லா தத்துவ ஞானங்களுக்கும் அதில் பதில் கிடைக்கும்.

வால்மீகி எழுதிய இந்த வால்மீகி ராமாயணத்தை, நம்ம தமிழர் ஒருவர் - கம்பர்னு நான் சொல்லாமலே தெரியும் - கம்பராமாயணம்னு, படு கேவலமா தழுவி எழுதியிருப்பார்.

கம்பராமாயணத்தைப் படித்தால், அறிவு மழுங்கும். வால்மீகி இராமாயணத்தைப் படித்தால், வாழ்வில் தெளிவு கிடைக்கும்.

மின் வாசகம் said...

ஐயா சந்திர சேகர ராஜரே, ஆரியன் என்ற் இனம் குறித்து நான் எங்கும் கூறவில்லையே. தாங்கள் தான் இனவாத கருத்தாக்கத்தால் பாதிக்கப்பட்டு உள்ளீர்கள். ஆரியன் என்று சொல்வது INDO -ARYAN LANGUAGE GROUPS என்ற மொழித் தொகுதியினால் தான். திராவிடம் எனச் சொல்வது திராவிட மொழித் தொகுதியைக் குறிக்கத் தான்.

இந்தோ - ஆரியன் மொழியானது ஆங்கிலம் தொடங்கி ரசியன் வரையிலும் நோர்விஜியன் தொடங்கி சிங்களம் வரையில் அடங்கிய மிகப் பெரிய மொழிக் குழுவாகும். அதன் இலக்கண விதிகள், வேர்ச்சொற்கள், ஒலியமைப்புக்கள் என்பவை எல்லாம் வேறு மொழிக் குடும்பத்தோடு பெருந்தாதவை.

திராவிட மொழிகளுக்கு என்று தனித்துவமான ஒலியமைப்புக்கள், சொற்கள், விதிகள் எல்லாம் உள்ளன. இது திராவிட மொழி என்றில்லை ஆஸ்திரோ ஆசிய மொழிகள், சீன - திபெத்தோ மொழிகள், அல்டாய்க் மொழிகள் என ஒவ்வொன்றும் ஒருவிதமான வளர்ச்சி கண்டவை.

சம்ஸ்கிருதம் உயர்வான மொழி இல்லை என்றோ அதை படிக்கக் கூடாது என்றோ நான் கூற மாட்டேன். ஆனால் தங்களைப் போன்றவர்களது அரைவேற்காட்டுத் தனமான தாந்தோன்றி ஆய்வில் உள்ள குறைபாடுகளை எல்லாம் ஏற்றுக் கொள்ள இயலாது.

சமஸ்கிருதமானது இரானி மொழிகளில் இருந்து செப்பனிடப்பட்டு செவ்வியல் தன்மையோடு உருவாக்கப்பட்ட செயற்கை மொழி. அது தமிழில் இருந்து உருவானது என்று கூறுவதே முட்டாள் தனமானது. எவ்வாறு சிலர் சமஸ்கிருதத்தில் இருந்து தமிழ் வந்தது எனக் கூறுகின்றார்களோ, அதே போல அறிவுக் கெட்டதனமாக தமிழில் இருந்து சமஸ்கிருதம் வந்தது எனக் கூறுவதும்.

தாங்கள் எந்தளவு சமஸ்கிருத மொழியைக் கற்றுள்ளீர்கள் என்பதை நானறியேன். ஆனால் நான் கற்றளவில் சமஸ்கிருத மொழியைக் கற்றறிந்த வல்லுநர்களோடு உரையாடின அளவில் சமஸ்கிருத மொழியானது தமிழை விடவும் லத்தீன், கிரேக்கம் போன்ற செவ்வியல் மொழிகளோடு மிகவும் நெருங்கியது ஆகும்.

இதை உலக மொழி வல்லுநர்கள் அனைவரும் ஏற்றுள்ளனர். தாங்கள் தான் புதிதாக ஒரு Hypothesis உருவாக்குகின்றீர்கள். ஒரு வேளை தங்களால் இந்த HYpothesis -யை நிருப்பிக்க முடியுமானால் இதனைத் தொகுத்து பலக்லைக் கழகம் ஒன்றில் ஆய்வுக் கட்டுரையாக சமர்பித்து வெற்றிக் காணுங்கள் வாழ்த்துக்கள்.

அவ்வாறு நிகழும் பட்சத்தில் தங்களால் தமிழில் இருந்து தான் சமஸ்கிருதம் உருவாக்கப்பட்டது என நிரூபித்தால் நான் எழுதுவதையே நிறுத்திவிடுகின்றேனே.

மற்றபடி தங்களின் ஊகத்தில் உள்ள குறைபாடுகளை எடுத்துக் கூறும் என்னை திராவிட அறிவிலிகள் என்ற அரசியல் களத்துள் புகுத்தினால் நட்டம் தமக்கே. மொழி ஆய்வில் அரசியல் தேவையற்றது, பயனற்றதும் கூட.

மொழியாய்வில் பயன்படுத்தப்படும் ஆரிய திராவிட என்ற சொற்கள் மொழிக்குடும்பத்தைக் குறிப்பனவே அல்லாது அது இனத்தைக் குறிப்பதும் அல்ல.

நன்றிகள்.

Unknown said...

சமஷ்கிருதம் அல்ல சமர்-கிருதம். சமர் என்றால் செப்பனிடப்பட்ட, கிருதம் என்றால் மொழி என்று பொருள். மனிதன் பேசும் மொழி தான் சமர்கிருதம். . அதுவும் பிச்சை எடுப்பவன் பேசும் மொழி தான் சமர்கிருதம். நோகமால் நோன்பி கும்மிடுபவன் பேசும் மொழி சமர்கிருதம். சுவாஆஆஆஹாஆ ஆஅ என்று சொல்லியே பணத்தை பிடுங்கி கோண்டு போஹும் பிச்சைக்காரன். பிச்சைகாரன் பேசும் மொழிக்கு பெயர் தேவ பாஷயா

SEKAR70 said...

மனிதனை தவிற எல்லா உயிரினத்திற்கும் தன் தன் இனத்தோடு தொடர்பு கொள்வதற்கு ஒரு இயல்பு மொழி இருக்கத்தான் செய்கின்றது அதே போல் இறை பாஷை ஏன் சமஸ்கிருதமாக இருக்க கூடாது நன்றி

top