சமஸ்கிருதம் எப்படி உருவானது?
எனது முந்தைய பதிவுகளான தமிழ் இந்து சமஸ்கிருதம் மற்றும் சமஸ்கிருதம் எனும் பாஷை எப்படி உருவானது?என்னும் பதிவுகளை படித்துவிட்டு தொடர்ந்தால் தொடர்ச்சி கிடைக்கும் சில சந்தேகங்கள் வராது.எல்லா மொழிகளுக்கும் அடிப்படை தமிழும் சமஸ்கிருதமும் என்ற அடிப்படை கொண்டு படித்தால் புரியும். சமஸ்கிருதத்தில் ஐரோப்பிய வாடை இல்லை ஆனால் ஐரோப்பிய மொழிகளில் சமஸ்கிருத வாடை இருக்கும்.
மறை மொழி எவ்வாறு பல இடங்களில் பயன் படுத்தப் படுகிறது எனப் பார்த்தோம். கல்வி இலக்கியம் என்று வரும் பொழுதும் மறை மொழி தேவைப் படுகிறது. உதாரணமாக சாமுத்ரிகா லட்சனம், காம சூத்திரம், பெண்வசியம், மனோவியல், வைத்தியம், ராஜதந்திரம், ஜோதிடம், பில்லி சூனியம், மாந்திரீகம் என்பது தமிழில் ஏராளமாக உள்ளது. அவற்றை எல்லாம் ரகசியமாக தங்களுக்கான வட்டத்துக்குள் வைத்துக் கொண்டனர். மந்திரமோ தந்திரமோ எல்லாவற்றையும் வெளிப்படையாக எல்லோரும் அறியும்படி எழுதி வைக்க முடியாது. மேலும் இயற்றிய இலக்கியப் படைப்புகள் எல்லைதாண்டி செல்ல வேண்டும் என்பதோடு கடற்கோள்,மற்றும் இயற்கை பேரழிவுகளிலிருந்து தான் மட்டும் தப்பி பிழைத்தால் போதாது தனது இல்க்கியங்களும் காக்கப் படவேண்டும்.என்பதில் தமிழன் உறுதியாக இருந்தான்
இந்த இக்கட்டான நிலையில் ரகசிய மொழியின் அவசியம் தேவைப் படுகிறது. பாட்டின் அழியாத்தன்மைக்கு ஏற்பட்டதுதான் யாப்பிலக்கணம் பாட்டுக்கே ஒரு சிக்கலான யாப்பிலக்கணம் கண்டு அறிந்த தமிழன் கண்டிப்பாக எல்லைதாண்டி பன்மொழியாளருக்கு பயன்படும் விதமாகவும் பத்திரப் படுத்தவும் ஒரு ஏற்பாடு செய்யாமலிருப்பானா?. அதற்காக உருவானதுதான் சமஸ்கிருதம். சமஸ்கிருதம் என்றாலே "சமைக்கப் பட்டது" என்று பொருளுண்டு. தமிழ் மொழியில் இருந்து சமைக்கப்பட்ட மொழிதான் சமஸ்கிருதம்.
ஒரு பொருள் குறித்த பல சொற்களும், பலபொருள் குறிக்கும் ஒற்றைச் சொற்களும் தமிழில் ஏராளம் .சொல்லப் போகும் விஷயத்தைக் கேட்டு மயக்கம் போட்டு விடாதீர்கள். உதாரணத்திற்கு தமிழில் யானையை பற்றி குறிக்க சுமாராக நூற்றிஎழுபது (170) சொற்கள் உள்ளது. அவற்றில் சாம்பிளுக்கு சில. 1யானை, 2. வேழம், 3. களிறு, 4. பிளிறு, 5. கலபம், 6. மாதங்கம், 7. கைமா, 8.உம்பல் 9. வாரணம், 10. அஞ்சனாவதி, 11. அத்தி, 12. அத்தினி, 13. அரசுவா, 14. அல்லியன், 15. அனுபமை, 16. ஆம்பல், 17. ஆனை, 18. இபம், 19. இரதி, 20. குஞ்சரம் / இராசகுஞ்சரம், 21. இருள், 22. தும்பு, 23. வல் விலங்கு, 24.கரி, 25.அஞ்சனம். உங்களுக்கு சந்தேகம் என்றால் கீழ்க்கண்ட தளத்தில்
http://dsal.uchicago.edu/dictionaries/kadirvelu/
அல்லது
http://dsal.uchicago.edu/dictionaries/tamil-lex/ இதில் 'யானை' என்று கொடுத்துப் பாருங்கள்.
இதைவிடவா ஒரு மொழிக்கு பரிபூர்ண நிலை வேண்டும். இவ்வாறு ஒரு மொழி பரிபூர்ண நிலையை எட்டி விட்டால், அதன் அடுத்த நிலை தோன்றும் அதனால்தான் மிதமிஞ்சிய தமிழாக, தமிழின் ரகசிய மொழியாக சமஸ்கிருதம் உருவாக்கப் பட்டிருக்க வேண்டும். இதைத்தான் வள்ளுவர் நிறைமொழி மாந்தரின் பெருமையாக கூறுகிறார் ஆங்கிலத்தில் இது போன்ற பரிபூர்ண நிலைதான் வார்த்தைச் சுருக்கம். உதாரணம் DVD, RAM, TV, VCR, CEO, MD, MLA, MP . இது போல் ஏராளமாக கூறலாம்.
வெளிநாட்டினர் மின்காந்த அலைபரப்பிகள் (Transmitters) கண்டுபிடித்த ஆரம்ப காலத்தில் பேச்சை ஒலிபரப்பும் தொழில்நுட்பம் அறியப் படாத காலத்தில், அப்பொழுது உள்ள வசதிக்கு தகுந்தவாறு செய்திகளை அனுப்ப "மோர்ஸ் கோட்" உருவானது. இது மற்ற மொழிகளை போல் பல எழுத்துக்கள் கொண்டதல்ல, குறில், நெடில் என்ற இரண்டே இரண்டு விதமான ஒலிக் குறியீடுகள் மட்டும் கொண்டு உருவாக்கப் பட்ட ஒரு மொழிதான். இது கேட்பதற்கான ஒரு மொழி. இது போல் ஒன்றை ஆதிவாசிகளும் உபயோகித்து செய்தியை பரிமாறிக் கொண்டனர்.
இப்பொழுதும் தந்தி அனுப்புவதற்கு மோர்ஸ் கோட் தான் பயன்படுகிறது. மேலும் கண்ணிழந்தவர்களுக்கான பிரெய்லியும் அதே போன்ற வித்தியாசமான எழுத்துரு மட்டும் கொண்ட, பெரும்பாலும் படிப்பதற்கு மட்டுமான மொழியாகும். அது போல் எழுதுவதற்கும் படிப்பதற்குமான ஷார்ட் ஹேண்ட் எனச் சொல்லப்படும் குறுக்கெழுத்தும் ஒரு விதமான மறைமொழிதான். செவிட்டூமையர்களுக்கான சைகை மொழியில் எழுத்தும், பேச்சும் கிடையாது. அமெரிக்காவில் ஒரு கிராமத்தில் 60 சதவீத மக்கள் செவிடராக மாறியதால் அங்கு சைகை மொழியே பிரதானமாகி விட்டது ஒருகாலத்தில்.
http://en.wikipedia.org/wiki/Martha's_Vineyard_Sign_Language
சமஸ்கிருதம் உருவாக்கப் பட்ட காலத்தில் கேட்பதற்கும் பாடுவதற்கும் மட்டுமான மொழியாகத்தான் இருந்திருக்கிறது. வெகுகாலமாக அதற்கு எழுத்துரு கிடையாது, ஆகவே படிப்பதற்கும் எழுதுவதற்கும், பேசுவதற்கும் பயன்படாமல் இருந்தது. ஆனால் தற்காலத்தில் தனித்தியங்க முற்பட்டதால், தேவை கருதி வடமொழியின் எழுத்துக்களை பயன் படுத்திக் கொள்கிறது.
இன்றளவும் மறை மொழிகளின் தேவை எல்லா இடங்களிலும் இருந்து கொன்டே இருக்கிறது. கணினியுடன் நாம் தகவல் பரிமாறிக் கொள்கிறோம். அதற்கு அடிப்படையாக நாம் கணினியுடன் உரையாட ஒரு மொழி அல்ல, பலமொழிகளைப் பயன்படுத்துகிறோம்.
கணினியுடன் தகவல் பரிமாறிக் கொள்ளும் பொழுது என்ன நடக்கிறது. நமக்குத் தெரிந்த மொழி ஆங்கிலமோ தமிழோ எந்த மொழியானாலும் நாம் அந்த மொழியில் கீ போர்ட் உடன் தகவல் பரிமாறிக் கொள்கிறோம். கீபோர்ட், விண்டோஸ்7 உடன் (Operating System) ஓஎஸ் கட்டளைகளால் உறவாடுகிறது. விண்டோஸ்7 "அசெம்பிளி லாங்க்வேஜ்"(Assembly Language ) ஐ பயன்படுத்தி பயாஸ் (BIOS)உடன் உறவாடுகிறது. பயாஸோ, மைக்ரோ புராஸசருடன் தொடர்பு கொள்ள "மெஷின் கோட்" (Machine Code) ஐ பயன்படுத்துகிறது.
இந்த "மெஷின் கோட்" என்பது இண்டெல் ப்ராஸசரை பொறுத்தவரை இரண்டே இரண்டு எழுத்துக்களும்(0,1), இருநூற்றி ஐம்பத்திஆறு(256) வார்த்தை(கட்டளை)களும் கொண்ட ஒரு மொழிதான். இன்றளவில் கணினி மூலம் அதிசயங்களை நிகழ்த்தி உலகையே ஆட்டிப் படைத்து கொண்டிருக்கும் மொழி அதுதான்.
அசெம்பிளி லாங்க்வேஜ் உடன் உறவாட பலவிதமான மொழிகள் உள்ளன. அவற்றில் சில பேசிக், கோபால், ஃபோர்ட்ரான், சி, ஜாவா, ஆரக்கிள், பிஹச்பி, ஆன்றாய்ட் போன்று பல மொழிகள் உள்ளன. புதிய மொழியின் தேவை எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கிறது இது போன்ற மொழிகளின் அட்டவணை மிகப் பெரியதாகி விட்டது. தெரிந்தே ஆக வேண்டுமென்றால் கீழே கிளிக் செய்யவும்.
http://en.wikipedia.org/wiki/List_of_programming_languages_by_type#Machine_languages.
உலகின் எந்த மொழியிலும் இல்லாத யாப்பிலக்கணமே தமிழின் முறையான பரினாம வளர்ச்சியின் உச்சத்தை பறைசாற்றும். ஏனெனில் யாரும் நினைத்துக் கூட பார்க்கமுடியாத, கற்பனைக்கும் எட்டாத யாப்பிலக்கணத்தை படைத்தது மட்டுமில்லாமல் அதில் படித்துத் தேர்ந்து "த"கரத்தில் பாடவா?, "க"கரத்தில் பாடவா ? "கை" போட்டு பாடவா? "பூ " போட்டு பாடவா?, சிலேடையில் பாடவா? அறம் பாடி அழிக்கவா? கலம்பகம் பாடி காலத்திற்கும் அழியாத கல்(சொல்)லறை கட்டவா? இசைப்பாட்டு பாடுகிறாயா அல்லது காதை இழக்கிறாயா?, என்று மொழி மீது கொண்ட நம்பிக்கையில் உயிரையும் கூட பணயம் வைத்து "நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே" என்று சவால் விட்டவன் அல்லவா?.
http://chandroosblog.blogspot.in/2010/04/blog-post.html
வரலாற்றின் "காட்சிப்பிழை" மயக்கத்தில் சமஸ்கிருத மொழியிலிருந்து தமிழ் தோன்றியது என்று சொல்பவர்களிடம், எந்தக் காலத்தில் சமஸ்கிருதம் தோன்றியது, எங்கே வாழ்ந்த மக்கள் அதைப் பேசினார்கள் என்பதற்கெல்லாம் சான்றுகள் இருக்காது. இருந்தால் அதைக் கொடுக்கட்டும். ஒரு மொழி என்பது ஒரு குறிப்பிட்ட மக்கள் பேசுகிற, எழுதுகிற மொழியாக இருக்க வேண்டும். அதில் தொடர்ந்து இலக்கியங்கள் படைக்கப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும். அப்படியொரு மொழியாக சமஸ்கிருதம் ஒருபோதும் இருந்திருக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால் கி.பி. 150 க்குப் பிறகுதான் சமஸ்கிருதக் கல்வெட்டுகளே கிடைக்கின்றன. அசோகரின் கல்வெட்டுகள்கூட சமஸ்கிருதத்தில் இல்லை. சமஸ்கிருதத்தில் அரசாங்கத்தில் சில செய்திகளை மக்களுக்கும் பகைவர்களுக்கும் தெரியாமல் எழுதி வைப்பார்கள். இப்படி சமஸ்கிருதத்தை உருவாக்கி அதை ஒரு மொழியாகச் செம்மைப் படுத்தித் தந்தவர்களும் தமிழர்கள்தான். "வேதத்தை தொகுத்து எழுதியவர் வியாசர்' என்கிறார்கள். வியாசர் என்பதே தமிழ்ச் சொல்தான். ஆக, சமஸ்கிருதம் என்பது தமிழ் மூலத்திலிருந்து பிறந்த மொழி என்பதில் எந்த ஐயமும் இல்லை.''
ரிக்வேதத்தை எடுத்துக் கொண்டால், அதில் சாதி வேறுபாடுகளைப் பற்றியோ, கடவுளர்களாக இன்று பிரபலம் அடைந்திருக்கிற சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகள் பற்றியோ எதுவும் சொல்லப்படவில்லை. ரிக் வேதத்தில் வாயு, சோமன், அக்னி, வருணன் என்று சொல்லப்படுகிற கடவுளர்கள் அத்தனை பேருமே தமிழ் மூலத்தில்தான் இருக்கிறார்கள். மேலும் வேதங்கள் ஒருவரால் எழுதப்பட்டதல்ல; பதினைந்துக்கும் குறையாதவர்களால் எழுதப் பட்டிருக்கின்றன. இந்தப் பெயர்களை ஆராய்ந்தால், "கணியன்' "கனாதன்', "பரத்துவாசன்' என்று பன்னிரண்டு தமிழ்ப் பெயர்கள். இப்படித் தமிழின் தொன்மையைப் பற்றி நிறுவிக் கொண்டே போகலாம்.
ஒரு புதிய மொழியை உருவாக்க அதிக அறிவோ, காலமோ தேவையில்லை. இருக்கும் மொழிக்கு ஒரு அல்காரிதம் தயார் செய்து என்கிரிப்ட் மற்றும் டிகிரிப்ட் செய்ய தனித்தனியாகவோ அல்லது ஒன்றாகவோ ஒரு கோடிங் தயார் செய்தால் போதும் ஒரு புதிய மொழி, பழைய மொழியின் அத்தனை வார்த்தைகளுடனும், சிறப்புத் தன்மைகளுடனும் ஒரு நொடியில் உருவாக்கிவிடலாம். புதிய எழுத்துருவை உருவாக்குவதுதான் சிரமம். அது போன்று உருவாக்கப் பட்டதுதான் எழுத்துரு இல்லாத சமஸ்கிருதம்.
உதாரணமாக "கதகமிகழ்" பாஷைக்கு தமிழ்மொழியின் ஒவ்வொரு எழுத்துக்கும் முன் 'க' வை சேர்ப்பதும் அழிப்பதும்தான் கோடிங். எடுத்துக் காட்டாக "கோடிங்" என்பதை "ககோகடிகங்" என்று எழுதுவதாகும். ககரத்திற்கு பதிலாக உயிர்மெயெழுத்துக்களில் ஒவ்வொரு எழுத்தையும் பயன்படுத்தினால் வெவ்வேறு புதிய மொழியை உருவாக்கலாம். உதாரணத்திற்கு அதே "கோடிங்" என்பதை "சகோசடிசங்" "பகோபடிபங்" என எழுதி இரு மொழிகள் உருவாக்கலாம். "ழ்மித" பாஷைக்கு வார்த்தையில் உள்ள எழுத்துக்களை திருப்பி போடுவதுதான் கோடிங்
இதெல்லாம் எளிய சிறுபிள்ளைகளின் விளையாட்டு. இது ஒரு சாம்பிளுக்குத்தான் சொல்கிறேன் இதையே சங்கம் வைத்து யோசித்தால் ஆயிரம் வழிகள் கிடைக்கும். இரண்டாம் உலக யுத்தத்தின் போது ஜெர்மானியர்கள் வயர்லெஸில் அனுப்பும் ஒவ்வொரு கட்டளைக்கும் ஒரு புதிய மொழியை உருவாக்கி அனுப்பினார்கள். ஏனெனில் அது இடைமறிக்கப் பட்டால் அதிலுள்ள செய்தி அம்பலமாகிவிடும். அதை டிகோட் செய்வதற்கே இங்கிலாந்து காரர்களுக்கு தாவு தீர்ந்து விட்டது.
அது போல் தமிழன் உருவாக்கிய மொழிதான் சமஸ்கிருதம். அதன் கோடிங் முறை பற்றி இது வரை யாரும் யோசிக்காததால் அதன் ரகசியம் அம்பலம் ஆகவில்லை போலும். காலங்கள் கழியும் போது கோடிங் மறந்து விட்டிருக்கலாம் அல்லது மறைக்கப் பட்டிருக்கலாம்.. காலத்தின் போக்கில் அதுவரை என்கிரிப்ட் செய்யப் பட்ட வார்த்தைகளுடன் மட்டும் சுத்தமாக இருந்தது. பின்னர் என்கிரிப்ட் செய்யப்படாத (தமிழ்) வார்த்தைகளும் கலந்து விட்டது. ஆனால் தமிழன் உருவாக்கிய சமஸ்கிருதத்திற்கு அந்த கோடிங் நிச்சயமாக இவ்வளவு சுலபமாக இருக்காது.
தமிழன் இயற்றிய யாப்பிலக்கணத்தையே கம்ப்யூட்டருக்கு போதித்து இது நாள்வரை ஒரு கவிதை எழுத வைக்க முடிய வில்லை. ஏனெனில் கணினிக்கு சொற்குற்றம், பொருட்குற்றம் தெரியாது. புரிய வைக்க முடியுமா என்பது ஆர்டிபிசியல் இண்டெலிஜென்ஸ்க்கு பெரும் சவாலாக உள்ள விஷயம். தமிழிலும், கம்ப்யூட்டரிலும் வித்தகரான சுஜாதாவே தன் வாழ்நாளில் மிகவும் கஷ்டப் பட்டு ஒரே ஒரு (வெண்பா)கவிதை எழுதியதாக கூறியுள்ளார். கவிதை எழுதத் தேவையான தேமாங்காய், புளிமாங்காய், கூவிளங்காய், கருவிளங்காய் என்ற வாய்ப்பாட்டை நினைத்தால் எவ்வளவு பெரிய அறிவு ஜீவிக்கும் வெண்பா கனவில் வந்து கூட பயமுறுத்தும். அப்படி இருக்கும் போது ஒரு ரகசிய பாஷைக்கு தயாரிக்கப் பட்ட கோடிங் எப்படி இருக்கும் என்று யோசியுங்கள். யாப்பிலக்கணம் ஒரு ஆய்வு கீழே கிளிக் செய்யவும்.
http://chandroosblog.blogspot.in/2010/04/tcp-ip.htm
தொடர கீழே கிளிக் செய்யவும்.
தொடரும்..........................
2 comments:
நல்ல பதிவு. சமக்கிருதம் தமிழிலிருந்து சமைக்கப்பட்ட கிருதம் என்பதை நீங்களும் உறுதிப்படுத்துகிறீர்கள். அதைக் காட்டும் எடுத்துக்காட்டுகளை அதாவது இன்று சமக்கிருதச் சொல்லாகக் கருதப்படும் சொற்களின் தமிழ் வேர்ச்சொற்களையும் இணைத்தீர்களானால், உங்களின் கருத்துக்கு மேலும் வலுச் சேர்க்கும். நன்றி.
Arumayaana thagaval.
Post a Comment