சமஸ்கிருதம்   எப்படி உருவானது? பாகம்-3

உலகில் ஆதிகாலத்திலயே சங்கம் வைத்து மொழி வளர்த்தவன் தமிழன் ஒருவனே. சங்கம் வைத்து அப்பம், பணியாரம் தின்று விட்டு செல்லவில்லை. உண்மையான பொறி பறக்கும் சூடான வாத, விவாதங்களுடன் தங்கள் புதுமையான படைப்புகளை அரங்கேற்றினார்கள். தமிழுக்கு இலக்கணம் சொன்ன தொல்காப்பியரே தனது நூலையே முதற்சங்கத்தில் அரங்கேற்றும் முன் அரங்கோட்டத்தாசன், மற்றும் பானம்பரனார் முன்னிலையில் படாதபாடு பட்டுவிட்டார்.

உண்மையான  புலவர்களைத் தவிர  வேறு யாரும் உட்கார முடியாத தேவலோக சிற்பி மயன் தயாரித்தளித்த சங்கப் பலகையும் தரக் கட்டுப் பாட்டில் அடங்கும். இங்கே அரங்கேற்றுதல் என்பது கடுமையான தர மதிப்பீட்டிற்கு பின்தான் நிகழ்ந்துள்ளது என்பது தெரிகிறது.தருமி போல் யாரும் எழுதிக் கொடுத்ததை கொண்டு வந்தால் மானங்கெட்டு மரியாதை இழந்து விடுவார்கள். திறமை இல்லாதவர்கள் எளிதில் பேரோ புகழோ பெறமுடியாது என்பது  உள்ளங்கை நெல்லிக்கனி. புலவர்களின் படைப்புகள் சங்கத்தில் எவ்வாறு பாதுகாக்கப்பட்டது என்பது மர்மமாக இருக்கிறது. ஒருவேளை ஓலைச் சுவடிகளாகவோ, வாய்ப் பாட்டாகவோ சங்கத்தில் உள்ளவர்களால் பாதுகாக்கப் பட்டிருக்க வேண்டும். அல்லது ஏதோ ஒரு வழிமுறை பின்பற்றப் பட்டிருக்க வேண்டும்.

தமிழ்மக்களுக்கு இயற்கை அவ்வப்பொழுது ஒரு பெரும் சவாலாகவே இருந்துள்ளது.  கடற்கோள், சுனாமி, பூகம்பம் ஆகியவற்றால் தமிழினத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை வரலாறும், தமிழ் நூற்களும் தெரிவிக்கின்றது. பெரும் நிலப்பரப்புகள் கடலுக்கடியில் மறைந்தன. ஆனாலும் தமிழன் சளைக்காது மூன்று நிலப்பரப்பில் இடம் மாறி நிலைகொண்டாலும் , மக்கள் அழிந்தாலும் சங்கம் வைத்து மொழி ஆராய்ச்சியை விடாது செய்தான். ஃபீனீக்ஸ் பறவை போல் தமிழன் முற்றிலும் அழிந்து  புதிதாக மூன்று முறை உயிர்த்தெழந்த வரலாறு உள்ளது.மூன்று சங்கங்களே அதற்கு சான்று.

தமிழனது தமிழ்ச் சங்கத்தில் என்ன நடக்கிறது என்ற ஆர்வம் உலகெங்கும் இல்லை என்றாலும் இந்தியா முழுமைக்கும் இருந்திருக்கும். அதனால்தான் சங்கம் வைத்து பாதுகாப்பதை ஒரு தலையாய கடமையாகக் கொண்டான். அவ்வாறு போற்றிப் பாதுகாக்கப் பட்ட சங்கத்தில் இயற்றப் பட்ட நூற்களுக்கு இயற்கை பேரழிவிலிருந்து பாதுகாப்பு அழிப்பதற்கான ஏற்பாடுதான் சமஸ்கிருதம். இலக்கியங்களை பாடலாக மக்கள் மனதில் ஏற்றிவிட்டால் அழிவில்லை என்ற கருத்தில் தோன்றியதுதான் சமஸ்கிருதம்.

தமிழன் அக்காலத்தில் விக்கிபீடியாவிற்கு இணையான பொதுத்தளம் ஒன்றை கண்டுபிடித்திருக்க வேண்டும். தமிழனுடைய சங்கத்தமிழ் நூல்களும். மற்ற மொழியினரும் இயற்றும் நூல்களையும் பொதுவாக ஏற்றி வைக்கும் ஒரு தளம்(சமஸ்கிருதம்) ஒன்றை தமிழன் கண்டறிந்து இருக்க வேண்டும். அது இந்தியா முழுமைக்கும் பரவியிருக்க வேண்டும். அதன் பின்னர் அந்த தளத்திற்கு ஏதோ ஒரு விதத்தில் ஊறு ஏற்பட்டிருக்க வேண்டும், அல்லது அதன் பின் தமிழன் கடற்கோளால் அழிந்து, தான் இயற்றிய தளம் பற்றிய தகவல் ஏதுமின்றி புதிய இடத்தில், மிஞ்சிய தமிழர்கள் நிலை கொண்டிருக்க வேண்டும்.

பொதுத்தளத்திற்கான ஏற்பாடு பற்றிய தகவல் அடுத்ததலைமுறைக்கு கொண்டு செல்லப்படாமல் முற்றிலுமான தகவல் தொடர்பு அழிந்திருக்கலாம். இந்த இடத்தில், தமிழனிடம் உள்ள மர்ம நூல் ஒன்றைப் பற்றி கூறுவது சாலச் சிறந்தாகும். அப்படி ஒரு நூல் தமிழனிடம் இருந்தது என்பதற்கான சான்று தமிழனை விட வட இந்தியர்களிடம் அதிகம் காணப்படுகிறது.அதன் பெருமை பற்றி பலகதைகளும் உள்ளன.ஆனால் ஒரு கால கட்டத்தில்  அந்தணர்கள் அழிக்க முற்பட்ட  அந்நூலைப் பற்றி உலக மொழி ஆராய்ச்சியாளர்கள் வியந்து கொண்டிருக்கின்றனர். அந்தணர்கள் ஏன் அதை அழிக்க முற்பட வேண்டும். தமிழ் நாட்டில் மட்டுமில்லாது வட இந்தியாவிலும் அந்த நூலை அழிக்க ஒரு பெரிய போராட்டம் நடந்ததாக வரலாறு உள்ளது.

அதில் கூறியுள்ள கலைகள் மற்றும் இயல்களின் வகைகள் எண்ணிலடங்காது. அவைகளின் பட்டியல் விக்கிபீடியாவை மிஞ்சும் வகையில் ஆச்சரியத்தை வரவழைக்கும். கிட்டத்தட்ட அந்நூல் முழுவதுமே அப்படி ஒரு பட்டியலாகவே தெரிகிறது. அந்நூல் பெரும்பாலான தமிழர்களுக்கு தெரியாது. தமிழர்கள் அது பற்றி அறிவார்களா என்பதே சந்தேகமாக இருக்கிறது. எல்லாவற்றையும் பற்றிய குறிப்புகள் அதில் அடங்கி இருந்தாலும், அது எதைப் பற்றியது என்று உறுதியாக இது வரையிலும் யாருக்கும் தெரியாது. பாடப் புத்தகங்களில் அது பற்றிய குறிப்புகள் கிடையாது. அந்நூலைப் பற்றிய குறிப்புகள் இதிகாசங்களில் கூட உள்ளதால் அது மிகவும் பழமையான நூல் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. வடமொழி நூல்களிலும் அந்நூல் பற்றிய குறிப்புகள் காணப் படுகிறது. தமிழனைத் தவிர மற்றெல்லோரும் அறிந்திருக்கின்றனர் அது என்ன நூல்? யோசித்து வையுங்கள், அந்நூலைப் பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்

தொடரும்........................

2 comments:

guna said...

intersting

Anonymous said...

Waiting...

Juergen

top