”சந்துருவின் பால் விதி”


உயிரும் உயிரின் பிரிவும் (பாகம் 17) அல்லது
”சந்துருவின் பால் விதி” (Chandru's rule of Gender determination)

இதில் ஒரு அமைப்பு என்பதை ,குடும்பமாகவோ, குழுவாகவோ, நகரமாகவோ, நாடாகவோ கருதிக் கொள்ளலாம். இதில் எல்லாவற்றிலும் அக்கறையோடு, ஈடுபாட்டோடு, அறிவோடு பங்கேற்பவன், மேற்க்கூறிய வரிசைப் படி முதலிடம் கொடுத்து தனக்கு பிறக்கப் போகும் குழந்தையின் பாலினத்தை சரியாகத் தீர்மானிக்கிறான்.

நான் சொல்லும் கூற்றின் உண்மையை, உங்களைச் சுற்றியுள்ள சூழ்நிலையில் பரிசோதித்துப் பாருங்கள் உண்மை விளங்கும்.

ஆண்மைக்கு அடையாளமான சீருடை அணிந்த காவலர்கள், ராணுவவீரர்கள், முறுக்கு மீசைக் காரர்கள், திருமணத்திற்கு முன்பே பிரபலமானவர்கள், தலைவர்கள் ஆகியோருக்கு முதலில் பிறக்கும் குழந்தை பெண் குழந்தைதான்.

பிரபலங்களின் குடும்பத்தை ஆராயும் போதும் இதனுடைய நம்பகத் தன்மையை அறிந்து கொள்ளலாம். காதல் இளவரசன் கமல்ஹாசனுக்கு இரண்டும் பெண்தான்,காதல் மன்னனுக்கும் அதே, சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு இரண்டும் பெண்தான்,


நேருவுக்கு ஒன்றாக இருந்தாலும் பெண்ணாகிவிட்டது., இந்திராகாந்திக்கு இரண்டும் ஆண் தான் (இப்பொழுது புரிந்திருக்குமே) அஜீத்துக்கு பெண்தான்,
விஜய்க்கு ஆண்தான்,காரணம் நீங்க்ளே சொல்லுங்கள். நடிகர் திலகம் சிவாஜிக்கும் அதே!.

உதாரணமாக ஒரு புதிதாக திருமணமான தம்பதியரில் மணமகன் ஆண்மையில் குறைவு அல்லது ஊனமாகவோ ,அவலட்சணமாகவோ இருந்து, மணப்பெண் அழகாக, திறமையாக அமைந்து விட்டால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் அத்தனையும் ஆண் தான் என உறுதியாகக் கூறலாம். அல்லது முதலில் பிறக்கும் ஐந்து குழந்தைகள் ஆண் தான். இது ஒரு உதாரணம்தான் இதில் பலவகையான வாய்ப்புக்களை யோசித்துக் கொள்ளூங்கள். இதில் எண்ணிக்கை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.

மாறாக ஆண் தைரியமாக, கம்பீரமாக, அழகாக, சிவப்பாக, முறுக்கு மீசையுடன், ஏதோ ஒருவகையில் தலைமைப் பதவியில் இருந்து, பெண் சுமாராக இருந்தால் அனைத்தும் பெண் குழந்தைதான்.

பெண்மை என்றால் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்று மாறுபட்ட (Negative Qualities) தன்மைகளை வைத்து சமப் (Nullify) படுத்துவதில்லை. ஆண்மையின் வலிமையை பெண்மையின் வலிமையால் சமப் படுத்துவதுதான் சமநிலை. பெண்களுக்கு, ஆண்கள் பார்த்து கொடுக்கும் அந்த 33% தான். ஆனால், இது குடும்பத்தில் அவர்களாகவே எடுத்துக் கொள்ளும் 50% உரிமையாகிவிட்டது. சில உதாரணங்களைத் தருகிறேன் மற்றவற்றை நீங்களே கணித்துக் கொள்ளலாம். அணத்துமே குழந்தை பெறுவதற்கு முன்பு உள்ள சூழ்நிலையை வைத்து கணிக்கப் பட வேண்டும்.

1) பொதுவாக காதலித்து, நன்பர்களால் (தோழிகளால் அல்ல) திருமணம் செய்து வைக்கப்படும் தம்பதியருக்கு முதல் குழந்தை பெண்தான்.

2) குடும்பத்தில் கல்யாணமான புதிதில் இருந்து தனது தம்பிமார்களை கூடவே வைத்திருப்பவனுக்கு அதிர்ஷ்டம்தான், பிறப்பது எல்லாமே பெண் பிள்ளைகள்தான். இந்த இடத்தில் எண்ணிக்கைக்கும், ஆண்மைக்கும் முக்கியத்துவம் (Double impact) தரப்படுகிறது. ஏனென்றால் ”தம்பியுடையான் படைக்கு அஞ்சான்”, அப்புறம் எப்படி மனைவிக்கு பயப்படுவான். ஆனால் மனைவியின் தம்பிகள் என்றால் கூட்டிக் கழித்துதான் சொல்லமுடியும் ஏனென்றால் இது எண்ணிக்கையை கூட்டினாலும் கணவனின் வலிமையை குறைக்கும் விஷயம்.

3) கணவன் சரியான சிடுமூஞ்சி என்று அவனைக் கண்டு பயப்படும் பெண்மணிக்கு அனைத்துமே பெண் குழந்தைகள்தான்

4) மனைவியைக் கண்டு ஏதோ ஒரு வகையில் பயப்படும் கோழைக்கு அத்தனையும் ஆண் பிள்ளைகள்தான்.

5) மனைவியை விட மிகவும் மிடுக்கான கணவனுக்கு பிறப்பதும் பெண் பிள்ளைதான்.

இங்கு குடும்பத்தில் ஆண்மை,பெண்மையை தீர்மானிக்கும் காரணிகளை அவற்றின் முக்கியத்துவம் கருதி வரிசையாக அமைத்துள்ளேன்.

1 குடும்பத்தில் ஆண், பெண் எண்ணிக்கை
2. பாலியல் ஈடுபாடு அல்லது அதில் திறன்
3. தைரியம்,
4. அழகு
5. செல்வம்,
6. ஆளுமை,
7. பாரம்பரியம்
8., வீரம்,
9., கோபம்,
10. புகழ்,
11. நடை,உடை,பாவனை,
12. அறிவு,

பிறக்கப் போகும் குழந்தை ஆணா பெண்ணா என்பதை தீர்மானிக்க ஒரு தம்பதியர் இருவரும் கரு உற்பத்தியாகும் முன்னரே என்னுடைய சில கேள்விகளுக்கு உண்மையாக பதில் கூறினால் எளிதாக கண்டுபிடித்து விடலாம்.

இதை அறியாமல் மனிதன் பிறக்கப் போகும் குழந்தையின் பாலினத்தை தீர்மானிக்க எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்ற வகையில் காரணம் தெரியாமல் போராடுகிறான் செலவழிக்கிறான். இதற்கான காரணம் தெரியாமல் மருந்துகளின் விற்பனை கோடிக் கணக்கில் நடை பெறுகிறது. ஜோதிடர்கள் பரிகாரங்களில் வாழ்கிறார்கள். இண்டர்நெட்டில் கோடிக் கணக்கில் பணம் புரள்கிறது. பெண்கள் துன்புறத்தப் படுகிறார்கள். ஆண்கள் அற்பமாக சந்தோஷமடைகிறார்கள்.

மேலும் இதில் தப்பான கருதுகோளில் சில ஆண்கள் பெருமிதம் வேறு கொள்கிறார்கள். ”ஆம்பளை சிங்கம் நான், எனக்கு ஒரு சிங்கக் குட்டிதான் (அதாவது ஆண் பிள்ளை) பிறக்கும்” என்று சந்துருவின் பாலின் விதி அறியாமல் வீரம் பேசுவார்கள்.

ஒரு குடும்பத்தில் ஆண்மை, பெண்மை இவற்றின் சமநிலையை நிலை நிறுத்தும் வகையில்தான் அடுத்து பிறக்கப் போகும் குழந்தையின் பாலினம் தீர்மானிக்கப் படுகிறது என்பதுதான் ”சந்துருவின் பால் விதி”. Chandru's rule of gender determination..)
இதன் கிளைத் தேற்றங்கள் பலவாறாக உள்ளது அவற்றில் ஒன்றுதான்

பெண் பிள்ளைகள் பெற்றவன் தான் உண்மையிலே ஆண்மை மிக்கவன்.
இது போல் கிளைத் தேற்றங்கள் நிறையச் சொல்லலாம்.

ஆகவே ஒரு பெண் பிள்ளையைப் பெற்று வளர்த்து உங்களை ஒரு ஆண்மகன் என நிரூபித்துக் கொள்ளுங்கள்.

சூழ்நிலையில் ஏற்படும் மாற்றங்களை கவனித்து தொடர்ந்து உயிர் வாழ்வதற்கு ஏற்றவாறு தேவைப்படும் மாற்றங்கள், ஜீனில் பதியப்படுகிறது என்பதுதான் பரிணாமத்தின் விளக்கம்.

உதாரணமாக அடுத்த தலைமுறையிலிருந்து ஆண்கள்தான் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதை இந்த தலைமுறையினர் தீர்மானிக்க முடியாது. ஆனால் தேவைபடும் பொழுது பல தலைமுறை இடைவெளியில் மாற்றிக்கொள்ள முடியும். ஆண்களே கோபப்படாதீர்கள், இந்த மாற்றம் நீங்களும் மனது வைத்தால் தான் நடக்கும். அல்லது பெண்கள் தற்பொழுதுள்ள நிலைமையை தீவிரமாக எதிர்த்தால் மாற்று வழி பிறக்கும்.

ஆண்களே இன்னும் உங்களுக்கு சாதகமான விஷயம் ஒன்றும் உள்ளது. நான் தனிப்பட்ட விதத்தில் சேகரித்த தகவல் இது தான். பெரும்பாலான பெண்கள் அடுத்த பிறவி என்று ஒன்று இருந்தால் அதிலும் பெண்ணாகத் தான் பிறக்க ஆசைப் படுகிறார்கள். அதிலும் என் மனைவிக்கோ நான்தான் கணவனாக வேண்டுமாம். (இன்றைய நிலவரப்படி. இந்த டீல் எனக்கும் பிடிச்சிருக்கு)

ஆண்களின் கர்ப்பம் மூலம் தான் இனிமேல் மனித இனம் பூமியில் நிலைத்திருக்க முடியும் என்ற அழுத்தமான தேவையும், ஆழ்மண உணர்வோடு இருபாலரும் குறைந்தபட்சம் 5000 தலைமுறை வாழ்ந்தால், சூழ்நிலையும் அந்தமாதிரி அமைந்து விட்டால் ஆண்களுக்கு கர்ப்பம் அல்லது மாற்று வழி உறுதிதான்.

இது ஒவ்வொரு தலைமுறையும் சம்பந்தபட்ட விஷயம். தகவலின் முக்கியத்துவம், தன்மை ஆகியவை குறையாமல் அடுத்த தலைமுறைக்கு மரபணு மூலம் எடுத்து செல்லும் விதத்திலும், சூழ்நிலைக்கு தகுந்தவாறும் தான் மாற்றம் அமையும். ஏனென்றால் ஒவ்வொரு தலைமுறையிலும், 1) மரபணுவில் தகவலும், 2) செய்யப்பட்ட மாற்றமும், 3) தகவல் குறித்து செய்யப்பட வேண்டிய மாற்றமும் மிகமிகச் சிறிய அளவில் தான் பதியப்பட்டு, மேம்படுத்தப் படுகிறது. சூழ்நிலையில் அக்கறை மற்றும் தேவைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தலைமுறைக்குத்தான் மாற்றத்திற்கான அதிக பங்களிப்பு இருக்கிறது.

இவை அனைத்திற்கும் காரணமான எலக்ட்ரானின் எட்டை எட்டிவிட்டால் கிட்டிடும் சமநிலை நோக்கிய பயணத்தின் இடையே வேதியலில் சமநிலை (Equalibrium in chemical Equations) இயற்பியலில் சமநிலை (Rest state) நீரோட்டத்தின் சமநிலைக்கான ஆறுகளின் ஓட்டம், குடும்பத்தில் ஆண்,பெண் சமநிலை, Gender Equality in a system of Family), என்று எங்கும் சமநிலையை விரும்பும் எலக்ட்ரான்கள் அத்தனைக்கும் என்றுதான் முக்தி கிட்டுமோ?.

டிஸ்கி
1) இந்தக் கட்டுரை யாரையும் புண்படுத்தினால் அதற்கு அறிவியல்(உண்மை)தான் காரணமாக இருக்கமுடியும்.
2) ”சந்துருவின் பால்விதி” பற்றி,
ஆனாலும் தற்பெருமையில் இது கொஞ்சம் டூமச் என்று பொறாமையுடன் படிப்பவர்களுக்கு அதற்கான விளக்கத்தைச் சொல்லிவிடுகிறேன். வலைத்தளத்தில் தேடிப் பார்த்த வகையில் இந்தக் கருத்தை முதன் முதலாக நான்தான்!!!! சொல்வதால் என்னுடைய கருத்தைப் பற்றி யாரிடமாவது விவாதிக்கும் போது, விலாவாரியாக விவரித்து சொல்வதை விட ”சந்துருவின் பால்விதி” என்று சுருக்கமாக சொல்லிவிடலாம் அல்லவா?. அதற்காகத்தான் ஒரு பெயர்.
இன்னும் உங்களுக்கு சமாதானம் ஆகவில்லையா? பாஸ், விடுங்க அப்படியாவது, மாஞ்சு மாஞ்சு எழுதினதுக்கு பலனாக நம்ம பேர் விளங்கட்டுமே!.

3) இதனால் தம்பிகள் வீட்டை விட்டு விரட்டப் பட்டால் அவர்களுக்கு எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அதற்கும் அறிவியல்தான் காரணம்.

4) ஆண் பிள்ளைதான் பெற்றுக் கொள்வேன் என்று, தம்பிகளை விரட்டி விட்டு மச்சினிகளை வைத்துக் கொள்ளாதீர்கள் பிரச்னையாகிவிடும். அதற்கு பதிலாக உங்கள் பாட்டிமார்களை வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.

5) மேலே நான் குறிப்பிட்டுள்ள சில தளங்களுக்கு சென்று, படித்து விட்டு வாந்தி எடுத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.

6) இந்த தகவல்களால் ஆண் பிள்ளைகள் மட்டும் வைத்திருப்பவர்கள், தங்களுக்கு ஒரு வேளை ஆண்மைக் குறைவு என்று நம்பி விட வேண்டாம். நான் குறிப்பிட்டுள்ள 12 விஷயங்களில் ஏதாவது ஒன்றாக இருக்கலாம்.

7) இக் கருத்துக்களை கடந்த 30 வருடங்களாக சொல்வதற்கு ஏற்ற ஒரு இடம் தேடிக் கொண்டிருதேன். ஏனென்றால்
கல்லாதான் ஒட்பம் கழிய நன்றாயினும்
கொள்ளார் அறிவுடையார்.
என்று வள்ளுவன் சொன்னதால், சொல்வதற்கு தகுந்த இடம் தேட வேண்டியதாயிற்று. ஏனென்றால் இங்கு நான் சொல்லிய கழிய நன்றாகிய ஒட்பத்தை, சொல்லி முடித்த பின்புதான் மறுக்க முடியும். கூகுளின் பிளாக் தந்த வசதியினால் எனது கருத்துகளை என்னுடைய வாசகர்களாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்ள முடிந்ததால் கூகுளுக்கும், உங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

8)ஒரே ஒரு வருத்தம் அதைச் சொல்லியே ஆக வேண்டும். படிக்கும் நூறு பேரில் ஒரே ஒருவர்தான் பாராட்டோ கருத்தோ சொல்கிறார்கள்.
9) இக்கருத்தை எடுத்தாளுபவர்கள் எனது பெயரையோ எனது வலைப்பூத்தளத்தின் முகவரியையோ குறிப்பிட வேண்டுகிறேன்.
இன்னும் ஒரு முக்கியமான விஷயம் உள்ளது. தொடரும்………………..முந்தைய பதிவு


மேலும் படிக்க...!
top