கறுப்புத்தான் எனக்குப் பிடிச்ச கலர்

எனக்கு ஒருவர் கேள்வி எழுப்பினார். உங்கள் வலைப் பதிவுகள் ஏன் கறுப்புக்கலரில் இருக்கிறது. கறுப்புதான் உங்களுக்கு பிடித்த கலரா? என்று. கறுப்பை ஒரு கலர் என்றே கருதமாட்டேன் ஆனாலும் ஒரு காரணமாகத்தான் வைத்துள்ளேன்.
உங்களது மானிட்டரில் முழுத்திரையும் வெண்மையாக இருந்தால் மானிட்டர் அதன் 100% மின் சக்தி செலவில் வேலை செய்யும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். திரையில் முழுவதும் கறுப்பு வண்ணம் இருந்தால் 30% மின்சாரம்தான் செலவாகும். உங்கள் திரையில் வெண்மை வந்தால் உங்கள் பைசா அதிகமாகச் செலவாகும் என்பதை மறந்து விடாதீர்கள்.

இந்த எளிய முறையை பின் பற்றி ஆப்ரேட்டிங் சிஸ்டம், மற்றும் மென்பொருள் தயாரிப்பாளர்கள் அதிலும் குறிப்பாக மைக்ரோசஃப்ட், தங்களது தயாரிப்பு பயன் படுத்தப் படும் பொழுது உதாரணமாக MS Office,MS Word,எக்ஸ்புளோரர், பிரவுசர், கூகுள் சர்ச்,ஒர்குட், ஃப்பேஸ்புக், டிவிட்டர்,G-mail,hotmail,Yahoo, மற்றும் பிரபல் வெப்சைட்டுகளின் ஹோம்பேஜ், ஸ்டாண்ட் பை மோட் ஆகியவற்றிற்கு அதிகமாக கறுப்புத்திரை அமையுமாறு பார்த்துக் கொண்டால் ஒரு நாளைக்கு கோடிக்கணக்கான வாட்ஸ் மின்சாரம் மிச்சமாகும்.மேலும் மானிட்டரின் ஆயுளும் கூடும். கண்களுக்கும் பாதுகாப்பாக இருக்கும்.

நீங்கள் என்னுடைய வலைப்பதிவை படித்துக் கொண்டிருக்கிறீர்கள், அப்பொழுது மின் தடை ஏற்படுகிறது. இப்பொழுது உங்கள் கணினி, யுபிஎஸ்சில் உள்ள மின்சாரத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறது. யு பி எஸ் புதிதாக இருந்தால் 15 நிமிடமும், பழசாகி விட்டால் 5 நிமிடமும் வேலை செய்யும். என்னுடைய வலைப்பதிவை படித்துக் கொண்டிருக்கும் போது உங்களுக்கு 30% மினசாரம் மிச்சப் படுகிறது. 15 நிமிடம் வேலை செய்யும் யுபிஎஸ் என்னுடைய பதிவை படிக்கும் போது கூடுதலாக 5 நிமிடங்கள் படிக்கும் வரை வேலை செய்யும்.

என்னுடைய வலைப்பதிவிற்கு நீங்கள் வருவதால் உங்களுக்கு என்னால் ஆன சிறு உதவி, எப்பொழுதும் உங்களது மின் செலவில் 30% மிச்சம் ஆகும். ஆகவே தவறாது அடிக்கடி வாருங்கள்

5 comments:

வடுவூர் குமார் said...

ஓ! இது தான் கார‌ண‌மா? நான் கூட‌ வேறு ஏதோ என்று நினைத்தேன்!!
ந‌ல்ல‌ த‌க‌வ‌ல்.இப்போதே ஸ்கிரீனை மாற்றிவிடுகிறேன்.

நாட்டாமை said...

பதிவுக்கு நன்றி. ஆனாலும் கூகுள் இது பற்றி யோசித்து தனது சர்ச் என்ஜின் ஒன்றை கறுப்புக் கலரில் வெளியிட்டு உள்ளது.

http://www.blackle.com/

இதைப் பயன் படுத்துங்கள் மின்சாரம் மிச்சமாகும்

Ramesh said...

மேலும் ஓர் த‌க‌வ‌ல்! கறுப்புத் திரையாக இருப்பதால் அதிக நேரம் பார்த்தாலும் கண்கள் சோர்வடைவதில்லி!

ஜோதிஜி said...

சிரித்து விட்டேன்.

Chandru said...

ஜோதிஜி
வருகைக்கும் பதிவிற்கும் நன்றி. நாட்டாமை குறிப்பிட்டுள்ள கறுப்புக் கூகுளிலால் 01-11-11 தேதி வரை 2,770,245.488 Watt hours மிச்சமாம்.

top