ஆத்திகன் vs நாத்திகன்

இளமையில் எனது தந்தையும் நாத்திகர்தான். ஆதலால் நானும் நாத்திகன்தான். ஆனால் இப்பொழுது நான் யார் என்று உறுதியாகச் சொல்ல வேண்டுமென்றால் முழுவதையும் ஒருமுறை படித்துவிட்டு நீங்களே முடிவு பன்னுங்கள்.
குரங்கிலிருந்து வந்த மனித இனத்தின் பரிணாமம் சுமார் ஒரு மில்லியன் வருடங்களுக்கு மேலானது. குரங்கிலிருந்து தான் மனிதன் வந்தான் என்பதற்கு நிறையவே ஆதாரங்கள் உள்ளது அதில் சந்தேகம் வேண்டாம்.
தனி மனிதனது பரினாமம் அல்லது வளர்ச்சி என்பது அவனது அதிக பட்ச ஆயுள்காலாமாகிய 100 வருடங்களுக் குட்பட்டது. இதில் கடந்த காலங்களில் பெரிதும் மாற்றமில்லை. மனிதனது ஆயுளை இன்றைய காலத்திற்கு தகுந்தவாறு பல பருவங்களாக பிரிக்கலாம்.
குழந்தைப் பருவம்................................0 ---1வருடம்
(அறியாப் பருவம்)மழலைப்பருவம்.................1----5வருடம்
(நாத்திகப் பருவம்)பள்ளிப்பருவம்..................5---20 வருடம்
(சமூகப்பருவம்)வாலிபப்பருவம்............... 20---40 வருடம்
(ஆத்திகப்பருவம்)வயோதிகப்பருவம்...............40---60 வருடம்
முதுகிழப் பருவம்................................60---100 வருடம்
பருவங்களை ஆராய்ந்து பார்க்கும் போது மாற்றங்கள் என்பது தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் நிகழ்ந்து கொண்டிருப்பது நன்கு தெரியும். ஆகவே அறிவும், உடலியல் மாற்றமும் அந்தந்த பருவத்திற் கேற்றவாறு பரிணமிப்பதைத்தான் சரியான வளர்ச்சி என்கிறோம். ஆனால் மனதில் ஏற்படும் மாற்றங்களால் பருவ மாற்றங்களில் சில வித்தியாசம் ஏற்படுவது உண்டு.
மேலே குறிபிட்டுள்ள பருவங்களில் பள்ளிப்பருவத்தை நாத்திகப் பருவம் என்று கூறுவதில் தவறு ஏதும் இல்லை எனச் சொல்லலாம்.
இந்தப் பருவத்தில் தான் மனிதன் கேட்கத் தெரிந்த, கேட்ககூடாத கேள்வி எல்லாம் கேட்டு பெற்றோரையும், மற்றவரையும் சிலசமயங்களில் இக்கட்டான சூழ்நிலைகளில் கூட நிறுத்துவர். அந்த கேள்விகளில் சில கீழ்கண்டவாறு இருக்கலாம்.

நான் எங்கிருந்து வந்தேன்? ஏன் பிறந்தேன்? எப்படி பிறந்தேன்? அப்பா என்றால் யார் ? அம்மா என்றால் யார்?
கடவுள் யார்? எங்கிருக்கிறார்? ஏன் கும்பிடவேண்டும்?கடவுளைக்காட்டுங்கள்
செத்துப் போறது என்றால் என்ன? செத்து எங்கே போகிறார்கள்?
அப்பா நீ எப்ப செத்துப் போவாய்?
சிலர் வசதியாக, சிலர் ஆரோக்கியமாக, சிலர் ஊனமாக, சிலர் பிச்சைக்காரராக ஏன் இருக்கிறார்கள்?
பாவம் என்றால் என்ன?புண்ணியம் என்றால் என்ன? கடவுள் இருக்கிறாரா? எங்கு இருக்கிறார்?
இந்த மாதிரி வரையறுக்க முடியாத புதுமைகள், சமயத்தில் கோமாளித்தனம், நிறைந்த கேள்விகளாக இருக்கும்.

அவற்றில் மேற்கூறியவைகள் தான் கேட்கப் படுகின்ற கேள்விகளில் முக்கியமானவை ஆகிவிடுகின்றன. இந்தப் பருவத்தில் கேட்கப்பட்ட கேள்விகள் எல்லாவற்றிற்கும் சரியான பதில் கிடைக்கிறதா என்பது வேறு விஷயம். ஏனென்றால் சிலருக்கு முதுகிழப் பருவத்தில் கூட பதில் கிடைக்கவில்லை. இப் பருவத்தை கடந்த முதியோர்கள் எல்லோரும் இப்பொழுதும் கூட ஒருவர்க்கொருவர் முரண்பாடான பதிலையே தான் கூறுகிறார்கள். சிறந்த கல்விமான்கள், அறிவியலார்கள் கூட இந்தக் கேள்விகளுக்கான பதிலில் வேறுபாடு கொள்வார்கள்.

நாத்திகர்கள் பெரிதும் நம்பும் பௌதிகவியலார்களும் அறுதியிட்டு கூறுவதில்லை. ஏன் அவர்கள் நம்பும் பௌதிகமும் சில விஷயங்களில் முட்டுச் சந்தில் நின்றுகொண்டு இன்னும் தெளிவான பதிலைக் கூற முடியாமல் முழி பிதுங்கி நிற்கிறது.

கேள்விக்கான பதில்கள் அவரவர் மனநிலைக்கு ஏற்றவாறு ஆராயப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படுகிறது. தேடலும் விரிவாகிறது. பதில்கள் சில சமயங்களில் புதுப்பிக்கப் படுகிறது. பெரும்பாலோருக்கு கல்வி மற்றும் அனுபவத்தின் மூலம் பதில்கள் கிடைக்கிறது. சோதனை செய்து ஏற்றுக் கொள்ளப்பட்ட பிறரது அனுபவங்களாகிய கல்வியும் இங்கு கைகொடுப்பதற்கு பதில் மேலும் குழப்புகிறது.. அது மட்டுமில்லாமல் இது ஒரு என்றும் தீர்க்கப் படமுடியாத பிரச்னையாக பல்லாயிரம் வருடங்களாக இருக்கிறது.

கல்வியறிவில்லா பாமரர்களிடையேயும், அறிவியல் வித்தகர்களிடையேயும் ஆத்திகம், நாத்திகம் பேசும் இருபாலரும் உண்டு. ஆகவே நாத்திகம் பேசுபவர்கள் மட்டும் பகுத்தறிவு வாதி எனச் சொல்வதும் நகைப்புக்கு இடமானது. இதிலிருந்து ஒருவிஷயம் தெளிவாகிறது இன்னும் முடிவுக்கு வராத, வரமுடியாத விஷயம் இது என்று.

சராசரி மனிதன், வாலிபப் பருவம் அதாவது சமூகப் பருவமெட்டும் போது அதாவது பெரும்பாலும் வாழ்க்கையை தொடங்கும் போது கேள்வி கேட்பதை நிறுத்திக்கொள்கிறான். கிடைத்த அனுபவங்களை கொண்டு வாழ்ந்து பார்க்கத் தொடங்குகிறான். பதில் கிடைக்காத கேள்விகள் ஒதுக்கி வைக்கப்படுகிறது.

சோம்பேறிகளுக்கு கேள்விகள் இருக்கும் பதில் கிடைக்காது பதிலில் ஆர்வமும் இருக்காது.. முட்டாள்களுக்கு கேள்விகளே இருக்காது , பதிலைப் பற்றிய அக்கறையும் இருக்காது. ஆனால் முட்டாள்களும், சோம்பேறிகளும் பருவம் மாறினாலும் கேள்விகளை ஒதுக்கி வைக்காமல் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருப்பார்கள் . ஆனால் புத்திசாலியோ பதில் கிடைக்காத கேள்விகளை ஒதுக்கி வைத்து மனதுக்குள் ஆராய்வார்கள், சரியான பதில் கிடைக்கும் வரை அமைதி காப்பார்கள்.

ஒரு ஐந்து வயதுச் சிறுவன் தன் தந்தையைப் பார்த்து அப்பா நீ எப்பொழுது சாவாய்? என்றுகேட்டால் தந்தை சிரித்துக் கொண்டே பதில் கூறலாம். இதே கேள்வியை பருவம் மாறிகேட்டால் விபரீதமாய் போய்விடும்.

இருபத்திஐந்து வயதில் ஒருவன் தன் தந்தையைப் பார்த்து இக்கேள்வியை கேட்டால் தந்தை சிரித்துக் கொண்டே பதில் கூறமுடியாது, சிந்தித்துத் தான் பதில் சோல்லவேண்டும்.
இந்த வயதில் இரண்டு விதமான பேர்தான் இக்கேள்வியைக் கேட்கமுடியும்.

1)மூளை வளர்ச்சியற்ற உடம்பால் வளர்ந்த இருபத்திஐந்து வயது இளைஞன் கேட்கலாம். தந்தை விதியை நொந்துகொண்டு சிரித்துக் கொள்ளலாம் அல்லது அழுது கொள்ளலாம்.

2)தந்தையின் உடமைகளையும் சொத்துக்களையும் முழுவதுமாக தானே அனுபவிக்க துடிக்கும் கொடூர எண்ணம் கொண்ட மகன் கேட்கலாம். இப்பொழுது தந்தை தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒன்று உயிரை விடவேண்டும் அல்லது சொத்துக்களையும் உடமைகளையும் துறக்க வேண்டும்.

கேள்வி ஒன்றுதான். ஆனால் கேட்கப்படும் பருவம் மாறும் போது அர்த்தம் மாறி விபரீதமாகி விடுகிறது.

நாற்பது வயதுக்கு மேல் பகுத்தறிவுவாதி என்று சொல்லிக் கொண்டு தீவிர நாத்திகம் பேசுபவர்களைக் கண்டால் எனக்கு ஏனோ மூளை வளர்ச்சியற்ற இந்த மாதிரி இளைஞன் தான் நினைவுக்கு வருகிறான் .

அது போன்று நாத்திகப் பருவத்தில் (பள்ளிப்பருவம்) நாத்திகம் பேசவில்லை என்றாலும் ஒருவனது மூளையைப் பற்றிய சந்தேகம் வரத்தான் செய்யும். நாத்திகம் என்பது மனித வாழ்க்கையில் ஆனோ,பெண்னோ இருவருக்கும் ஒரு பருவம்தான். ஒவ்வொரு மனிதனுக்கும் அந்தப்பருவம் கண்டிப்பாக வரவேண்டும். அந்தப் பருவத்தை கடந்து வந்தால் தான் மனிதன். ஆனால் அங்கேயே நின்றுவிட்டால் மூளை வளர்ச்சியற்றவன் தான். முறையாகப் பருவங்களை கடந்தால் தான் மனிதன். ஒரே எட்டில் 2,3 பருவங்களைத் தாண்டினாலும் பிஞ்சிலே பழுத்த கதையாகி விடும்.

குழந்தைகள் மழலை பேசினால் ரசிக்கலாம் ரசிக்கவேண்டும். ஏனென்றால் மழலை கேளாதவருக்குத் தான் யாழோ குழலோ இனிதாக இருக்கும் என்று வள்ளுவர் சொல்லியுள்ளார். ஆனால் வளர்ந்த மனிதன் மழலை பேசினால் அவனுக்கு உளறுவாயன் அல்லது ஊமையன் என்றுதான் பெயர்.

யார் நாத்திகன்?

கடவுளை நம்பாமல் கோவிலைப் பூட்டி வைப்பவன்.
கடவுளை நம்பாமல் மருத்துவமனைக்கு செல்பவர்கள்
கடவுளை நம்பாமல் சோதிடம் பார்ப்பவர்கள்
கடவுளை நம்பாமல் மூன்று வேளையும் சாப்பிடுபவர்கள்.
கடவுளை நம்பாமல் கடினமாக உழைப்பவர்கள்

இப்படி ஆராய்ந்தால் உலகத்தில் எல்லோருமே நாத்திகர்கள்தான், கடவுள் நம்பிக்கை யற்றவர்கள் தான். அல்லது கடவுளை வேறு மாதிரி நினைக்கத் தொடங்கி விட்டனர் அல்லது கடவுளைப் பற்றி தெளிவடைந்துள்ளனர். இவர்கள் எல்லோருக்கும் தெரியும், கும்பிட்டவுடன் கடவுள் நேரில் வந்து பதில் சொல்லமாட்டார் என்று, ஏனென்றால் எந்த பக்தரும் நான் கடவுளை நேரில் வரவழைக்கிறேன் என்று இது வரை சவால் விட்டதில்லை. கடவுளைப் பற்றிய வரையறையும் (definitions) ஒவ்வொரு நாளும் மாறிக் கொண்டே இருக்கிறது.

இராமகிருஷ்ண பரமஹம்சர் விவேகானந்தருக்கு கடவுளை காட்டுகிறேன் என்றார், விவேகானந்தரும் பார்த்தார் அல்லது உணர்ந்து கொண்டேன் என்று சொன்னார் .இங்கு கடவுள் என்பது தனிநபர் மனநிலை சம்பந்தப்பட்டதாகி விடுகிறது. சராசரி மனிதன் தன் அன்றாட காரியங்கள் எதற்கும் கடவுளை நம்புவதில்லை என்பது கண்கூடு. ஆகவே அவனும் நாத்திகன் தான்.

இதற்குத்தான் சொல்வார்கள் ” மசூதிக்குள் செல்லும் முன் ஒட்டகத்தை கட்டி வைத்துவிட்டு செல்” என்றும் ”கோவிலுக்கு செல்லுமுன் செருப்பை பத்திரப் படுத்து” என்றும். ஆகவே உலகத்தில் நூற்றுக்கு நூறு சதவீத மக்கள் நாத்திகர்கள் தான். ஆனால் இந்த உளுத்துப்போன நாத்திக வாதத்தால் கால விரயமும், சமூக ஒழுக்கக் கேடும் தான் மிச்சம் என்பது இந்த சமூகத்திற்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது. இதை அறியாமல் சிலர் நாத்திகத்தை இவர்கள் தான் (Reinventing the wheel) சக்கரத்தை புதிதாக கண்டுபிடித்த அறிவாளிகள் போல் மேடையில் பேசும் போதும், எழுதும் போதும் சிரிப்புத் தான் வருகிறது.

மனிதர்களின் சிறு வயதில் நேர்மையை விதைத்து, அதன் மூலம் ஒழுக்கத்தை வளர்ப்பதற்கும், கேளிக்கை, திருவிழாக்களுக்கும் தான் இன்றைய மனிதன் கடவுளை பயன் படுத்துகிறார்கள் என்ற உன்மை புரியாமல் இவர்கள் ரொம்ப சீரியஸா பேசுவதைப் பார்க்கும் போது இவர்களின் பேதைமை புரியும். உலகத்திலே இதற்கு ஒரு கட்சி வைத்திருப்பவன் தமிழனைத் தவிர வேறு யாரும் இருக்க மாட்டான். இந்துமத நாத்திக வாதிகள் என்ற போர்வையில் பிறமதத்தவர், இந்துமதத்தை ஒழிக்க நாத்திகவாதிகள் என்று சொல்லிக் கொள்கிறார்கள் அல்லது நாத்திகம் பேசுபவர்களை ஆதரிக்கிறார்கள்.

நாத்திகர்களின் சதவீதம் சுதந்திர மக்களாட்சித் தத்துவத்தில் என்றுமே 5 சதவீதத்திற்கு மேல் செல்வதற்கு வழியும் வாய்ப்பும் இல்லை. அதிலும் அந்த ஐந்து சதவீதத்தில் 90 சதவீதம் 15 லிருந்து 20 வயதுடை யோரின் ஆர்வக் கோளாறும் அறிவுப் பசியும்தான் காரணம். அதனால் தான் மதவாத அடிப்படை அரசுகள் எளிதாக நாத்திகத்தை ஒழித்துக் கட்டி விடுகிறார்கள். இதனால்தான் இந்தப் பகுத்தறிவு வாதிகள் அரசியலுக்கு வர முடியவில்லை. ஆனாலும் தமிழ்நாட்டில் வந்ததற்கு காரணம் அண்ணாவின் ”ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்ற பசப்பு வார்த்தையும் அதற்கு எம்.ஜிஆர் கொடுத்த திரையுலக அழுத்தமுமே காரணம் ஆகும். இஸ்லாமிய நாடுகளில் நாத்திகம் பேசமுடியாது, கிடையாது.ஏனென்றால் அங்கு அது தேசத் துரோகம்

எனக்குத் தெரிந்தவர்களில் தீவிர நாத்திகர்கள் உட்பட 99 சதவீதத்தினர் அதாவது பகுத்தறிவு வாதிகள் கூட ஒரு காலகட்டத்தில் நாத்திக வாதத்தை நழுவ விட்டு சமூகச் சடங்குகளுக்குள் தங்களை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள். சமூகப் பொறுப்புள்ளவர்கள் யாரும் நாத்திகர்களாக இருக்கமாட்டார்கள். அப்படியே இருந்தாலும் ஆத்திக வழியில் சென்று தங்களது பங்கை செவ்வனே செய்கிறார்கள்.

வயதான காலத்திலும் தீவிரமாக நாத்திகம் பேசுபவர்களை கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தலாம்.

1) பிழைப்புக்கும் புகழுக்கும் அது வழியாக இருக்கவேண்டும்.

2)வாழ்க்கையின் முழு விஸ்தீரனங்களையும் சந்திக்காதவராகவும் இன்ப துன்பங்களை முழுமையாக அனுபவிக்காதவராக இருக்க வேண்டும். வாழ்வியலின் நுனிப்புல் மேய்ந்தவராகத்தான் இருக்கமுடியும்

3) சமூக அக்கறையில்லாத அரை வேக்காட்டுத்தனமான அறிவுடையவர்களாக இருக்கவேண்டும்.

4) மூளை வளர்ச்சியற்றவர்களாக இருக்க வேண்டும்.

ஆத்திகம் பேசுபவர்களையும் வகைப்படுத்த முடியாது ஏனெனில் இவர்களில் 90% பேரின் வாழ்க்கை முறையாகி சமூக ஏற்புடையதாகி விட்டது ஆத்திகம் தான்

மனிதனை விலங்கிலிருந்து வேறு படுத்துவது கடவுளைப்பற்றிய கேள்வியும் அறிவும் தான். ஏனென்றால் விலங்குகள் அனைத்தும் நாத்திகவாதிகள்தான். மனிதன் கடவுளை படைத்தாக கூறுகிறவர்கள் அறிவிலிகள். கடவுளைப் படைக்கவில்லை, மாறாக அறிந்து கொண்டான் அல்லது அவனைப் பற்றிய சந்தேகம் கொண்டான், அதனால் தான் மனிதன் ஆனான்.

” முன்னர் நமதிச்சையில் பிறந்தோமில்லை
முதல் இடை கடை நம் வசத்திலில்லை.”

என்ற பாரதியின் கூற்றுக்கிணங்க வாழ்க்கை என்பது நமது கையில் இல்லை என்பது கண்கூடு
நீங்கள் ஏற்கனவே உங்களது திட்டப்படி இங்கு வந்து பிறக்கவில்லை. உங்களை நீங்கள் அறிந்து கொள்ளவே மிகக் குறைந்த பட்சமாக இருபது வருடங்கள் தேவைப்படும். எதற்கு வந்தோம், ஏன் வந்தோம்,எங்கு செல்வோம் எனத் தெரியாத நிலையில் பாதி வாழ்க்கையை கழித்துவிட்டு மீதி வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது தெரியாமலும் எங்கு சொல்வோம்? எப்பொழுது செல்வோம்? எப்படி செல்வோம்? என்று அறியாத நிலையில் எல்லாம் அறிந்தவர் போல் எது வேண்டுமானாலும் பேசுவது அறியாமையின் உச்ச நிலை அல்லவா?

ஆறுகோடி தமிழர்களும் ஒன்று சேர்ந்து ஈழத்தமிழர் பிரச்னைக்கு ஒப்பாரிதான் வைக்க முடிந்தது. நம்மால் ஏதும் செய்யமுடியவில்லை என்கிற போது வருகிற கண்மூடித்தனமான ஆத்திரத்திற்கு யார் பொறுப்பு? நீங்களா? நானா? அதற்குப் பெயரோ அல்லது காரணமோ கூட கடவுளாக இருக்கலாம்.

கணிதவியலில் தீர்வு காணப் பயன்படுவது X ஆகும். ஆனால் X க்கும் கணிதத்திற்கும் சம்பந்தமில்லை ஆனால் தீர்வைத் தருவது X. எப்படி என்று பார்ப்போம். கணக்கில் ஆர்வம் உள்ளவர்கள் தொடர்ந்து படியுங்கள். ஆர்வம் இல்லாதவர்களும் படியுங்கள் எளிய முறைக் கணிதம் தான்.

மூன்று பேர் சேர்ந்து மீன் பிடிக்கிறார்கள். இரவு நேரமாகி விட்டதால் ஒரு மடத்தில் களைப்பில் பிடித்த மீன்களை வைத்து விட்டு சற்று கண்ணயர்ந்தனர்.சற்று நேரத்தில் ஒருவன் எழுந்தான் இருட்டில் இருந்த மீன்களை நேர்மையாக மூன்றாகப் பிரித்தான் ஒருமீன் மிச்சமானது அதை தூக்கி எறிந்து விட்டு தனக்கு சேரவேண்டிய ஒரு பங்கை எடுத்துக் கொண்டுஅவர்கள் தூக்கத்தை கலைக்க வேண்டாம் என்று எண்ணி சென்று விட்டான். அடுத்து எழுந்தவனும் முன்னவனைப் போல் இருந்த மீன்களை நேர்மையாக மூன்றாகப் பிரித்து மிச்சமான ஒரு மீனை தூக்கி எறிந்து விட்டு தனது பங்கை எடுத்துக் கொண்டுஅவர்கள் தூக்கத்தை கலைக்க வேண்டாம் என்று எண்ணி சென்றுவிட்டான் . அதை போன்று மூன்றாமவனும் இருந்த மீன்களை நேர்மையாக மூன்றாகப் பிரித்து மிச்சமான ஒரு மீனை தூக்கி எறிந்து விட்டு தனது பங்கை எடுத்து கொண்டுஅவர்கள் தூக்கத்தை கலைக்க வேண்டாம் என்று எண்ணி சென்றுவிட்டான்.

மொத்தத்தில் அவர்கள் மூவரும் பிடித்த மீன்கள் எவ்வளவு? அதை ஒரு எளிய முறையில் கணக்கிடுவோம்

மூவரும் பிடித்த மொத்த மீன்கள் = X எனக் கொள்வோம்.

அதில் ஒரு மீனைதூக்கி எறிகிறார் = X-1

முதலாமவருக்கு கிடைத்தது, அதில் மூன்றில் ஒரு பங்கு = (X-1)/3

முதலாமவர் விட்டுச் சென்றது தனது பங்கைப் போல் 2 மடங்கு =2*(X-1)/3 = (2X-2)/3

இரண்டாமவர் அதில் ஒரு மீனைதூக்கி எறிகிறார் ={(2X-2)/3}-1 = (2X-5)/3

இரண்டாமவருக்கு கிடைத்தது, அதில் மூன்றில் ஒரு பங்கு = {(2X-5)/3}/3= (2X-5)/9

இரண்டாமவர் விட்டுச் சென்றது தனது பங்கைப் போல் 2 மடங்கு= 2{(2x-5)/9}= (4X-10)/9

மூன்றமவர் அதில் ஒரு மீனைதூக்கி எறிகிறார் = {(4X-10)/9}-1 = (4X-19)/9

மூன்றமவருக்கு கிடைத்தது, அதில் மூன்றில் ஒரு பங்கு (Y)= {(4X-19)/9}/3 = (4X-19)/27


மூன்றாமவருக்கு கிடைத்ததை "Y " எனக் கொண்டால் ஒரு சமன் பாடு கிடைக்கும்
அதாவது Y =(4X-19)/27
அதை இவ்வாறும் எழுதலாம். 4X = 19 +27Y அல்லது X= (19+27Y)/4

இங்கு இந்தச் சமன்பாட்டை பார்க்கும் போது இரண்டுவிஷயங்கள் தெரியவருகிறது,Y என்பது ஒற்றைப்படை எண் என்பதும்,(ஏனெனில் அதை 27 ஆல் பெருக்கி அதனுடன் 19ஐ கூட்டினால் அது 4ஆல் வகுபடத்தக்க இரட்டை படை எண்ணாக இருக்க வேண்டும் என்பதால்) .எண் வரிசையில் சிறிய ஒற்றைப் படை எண் ஆன 1 பிரதியிட்டால் இங்கு செல்லாது ஏனென்றால் 4 ஆல் வகுபடாது. ஆனால் அந்த வரிசையின் அடுத்த எண் 3 ஐப் பிரதியிட்டால் சரியாகிவிட்டது கணக்கின் விடை வந்து விட்டது.

முதலாமவர் எடுத்துச் சென்றது 8
இரண்டாமவர் எடுத்துச்சென்றது 5
மூன்றமவர் எடுத்துச்சென்றது 3
மூன்று பேரும் தூக்கி எறிந்தது 3
மிச்சம் உள்ளது 6
மூவரும் பிடித்த மொத்த மீன்கள் 25

சரி இப்பொழுது அடுத்த ஒற்றைப்படை எண்ணான 5 ஐ பிரதியிட்டால் என்ன? 4ஆல் வகுபடவில்லை அதற்கு அடுத்த ஒற்றைப்படை எண்ணான 7 ஐ பிரதியிட்டால் என்ன? ஆஹா! இன்னொரு விடை கிடைத்துள்ளது, 52. சரி இப்படி எத்தனை விடைகள் வரும். 3,7,11,15,...................என நான்கின் வித்தியாசத்தில் வரும் வரிசை எண்கள் அணைத்தும் விடையைக் கொடுக்கும். அதற்கும் ஒரு சமன்பாடு உருவாக்கலாம்.
Y = (3+a4) என்ற சமன் பாட்டில் a க்கு பதிலாக 1,2,3,4,5,6. ........... ............ என வரிசையாக எத்தனை எண்களை பிரதியிட்டாலும் Y க்கான மதிப்பு கிடைக்கும். இந்த மதிப்பை X= (19+27Y)/4 இதில் பிரதியிட்டால் X இன் மதிப்பாக கணக்கிலடங்கா விடைகள் வரும்!!.

இங்கு குறிப்பிட்டது போல் X இன் அனுமானத்தின் கற்பனையால் எண்ணிலடங்கா விடைகள் கிடைக்கிறது. உங்களது கற்பனையிலோ அல்லது பேப்பரிலோ இந்த X இன் அனுமானம் இல்லாவிடில் ஒரு விடைக்கே உங்களது தாவு தீர்ந்துவிடும். கணிதம் வெறுத்துவிடும். உங்களைச் சுற்றி புதிர்கள் தொக்கி நிற்கும்.
ஆகவே உங்களது தீர்வுகளுக்கு கடவுளைப் பயன் படுத்துங்கள். ஆத்திகம் மனதிற்குள் நம்பிக்கையை விதைத்து வாழ்க்கையை மகிழ்ச்சிக்குள்ளாக்குகிறது. அதிகபட்ச நேர்மையாளர்களுக்கு வழி வகுக்கிறது. நாத்திகம் மனதிற்குள் விரக்தியை உருவாக்கி வாழ்க்கையை சீரழிக்கக்கூடியது. அதிகபட்ச மனிதர்களை நேர்மை யற்றவனாக்குகிறது.
பேச வேண்டிய வயதில் நாத்திகம் பேசுங்கள். பருவம் மாறி பேசாதீர்கள் பைத்தியம் என்பார்கள். உங்கள் நாத்திகவாதத்தை இருபத்திஐந்து வயதிற்குள் மூட்டை கட்டி விடுங்கள்.ஏனென்றால் அதற்கு மேலும் பேசினால் ஒரு விஷயத்திற்கு தீர்வு கண்டு பிடிக்க முடியாத முட்டாள் எனக் கருதப் படுவீர்கள்.

நாத்திகம் என்பது A.K 47 போன்றது.ஆத்திகம் கைத்தடி போன்றது.
A.K 47 சீருடை அணிந்தவரிடம் (ராணுவத்தினரிடம்) இருக்கும் வரை மற்றவர்களுக்குப் பாதுகாப்பு. தீவிரவாதிகளிடம் (வயிறு வளர்க்கும் கூட்டத்திடம்)சிக்கினால் நாட்டுக்கும் தனிமனிதனுக்கும் ஆபத்து. A.K 47 வைத்துக் கொண்டால் தூக்கம் வராது ஏனென்றால் அசந்தால் நமக்கே எமனாகி விடும். வயதும், தோட்டாக்களும் இருக்கும் வரைதான் அது பயன் படும். வயதான காலத்தில் ஊன்றி நடக்க கூட பயன்படாது. ஆகவே தனி மனிதனுக்கு தேவையில்லாத ஒன்று. A.K 47 வைத்துக் கொள்வது சமூக விரோதச் செயல்,சமூக விரோதியாய் அடையாளம் கொள்ளப் படாதீர்கள்.

கடவுள் பற்றிய என்னுடைய வரையறை (Definition) ”அவர் வரையறைக்கு உட்படாதவர்”.

31 comments:

வடுவூர் குமார் said...

அருமையான‌ ப‌திவு.அழ‌கான‌ அல‌ச‌ல்.
க‌ண‌க்கு வ‌ரும் போது ப‌ல‌ர் வேக‌மாக‌ ஸ்குரோல் ப‌ண்ண‌க்கூடும். :-)

நிகழ்காலத்தில்... said...

”அது வரையறைக்கு உட்படாதது”.

வாழ்த்துகள் நண்பரே

Unknown said...

பிரச்சனைகள், அபாயங்கள் வரும்போது எதிர்பாரா உதவி செய்பவர் யார் தெரியுமா?.....அவர் தான்... அவரே தான்..

Thamizhan said...

கடவுளின் ஆரம்பம்= பயம்,ஆசை,மூளைச் சலவை,மூட நம்பிக்கை,சிந்திக்க அஞ்சுவது,பெரியோர் சொன்னது.

நாத்திகம்= அறிவு,சிந்தனை,தெளிவு,அறிவியல் வளர்ச்சி,மனிதனுக்கு வேண்டிய வாழ்க்கை வசதிகள்,கண்டு பிடிப்புக்கள்,தன்னம்பிக்கை,தன் முயற்சி, சாதனைகள்.
மனித நேயம்.

நிலா, சந்திரனாகக் கடவுளாக இருந்தவரை வெறும் வழி பாடுதான்.
மனிதன் காலெடுத்துவைக்க முயன்றதுதான் இன்றைய இதய மருத்துவ முன்னேற்றத்தின் அடிக்கல்.(மானிட்டரிங்).

நாத்திகத்தால் பணம் சம்பாதிப்பவர்கள் குறைவு.சொந்த் வாழ்க்கையில் இழப்பும்,அவமான்முந்தான் பெரும்பாலும்.
ஆத்திகரில் பலர் பகல் கொள்ளையர்,வியாபாரம் செய்து ஏமாற்றி வாழ்பவர்கள் !!

rooto said...

மிககேவலமான புரிந்துணர்வு உங்களுக்கு!!! ஆஸ்தீகர்களே மாபெரும் கள்ளர்கள்! நாஸ்தீகர்கள் தங்களை பெரும்பாலும் சமூகத்திற்காகவும், சமூகதேவைகளுக்காகவும் அர்ப்பணித்தவர்கள்!!! தவிர ஆஸ்தீகர்கள் என்பவர்கள் அறியாமைஉடையவர்கள், கடவுள் என்ற இல்லாத ஒன்றுக்காக தேவையற்ற போராட்டங்கள், ஜாதிகள், கோவில்,பள்ளிவாசல்,தேவாலயம்,விகாரை போன்றவற்றை கட்டி பணம்வசூலிப்பதும், ஆதாயம் தேடுவதும், மூடநம்பிக்கைகளை வளர்ப்பதுமே ஆகும்!! கடவுள் என நீங்கள் சொல்வது உங்களை நீங்கள் ஏமற்றுவது! இக்கட்டுரை மற்றவர்களையும் ஏமாற்றுவது!!

கணிதத்தை வைத்து தீர்வு எடுத்ததுவரை சரி அதை மேற்படி ஆஸ்தீக , நாஸ்தீகத்துடன் முட்டாள்தனமாக முடிச்சுபோட்டுள்ளீர்கள். இதேகணித விளக்கம் கடவுள்முன்னும் போட்டு பாருங்கள், ஒருதீர்வைத்தாண்டி பல வரும்!! அது அனைத்தும் கடவுள் என்ற இல்லாத ஒன்றை எப்போதும்/ஒருமுறையேனும் விடையாகதராது.

Arun said...

மிக அருமையான பதிவு. கருத்துக்கள் அனைத்தும் ஆனி அட்டித்தது போல் இருந்தது.

@ Thamizhan - நீங்கள் பதிவை சரியாக படிக்காமல், மீண்டும் நாத்திக விதண்டா வாதத்தை முன்வைக்கிறீர்கள்.

@rooto - உங்களால் ஒரு பின்னூட்டதை கூட மறியாதையுடன் பதிய முடியவில்லையே, இதை விட கேவலமான புரிந்துணர்வு யாருக்கும் இருக்காது. உம்முடைய நாத்திக தீவிரவாதத்தனம் இதிலிருந்து வெட்ட வெளிச்சமாகிறது. கையால் ஆகாதவன் தான் எடுத்த எடுப்பில் மரியாதை குறைவாக பேசுவான். எடுப்பாக இல்லாமல், ஒரு துடுப்பாகவாவது வாழ்க்கையை வாழ கற்றுகொள்ளுங்கள். முதலில் மரியாதையை கற்றுக்கொள்ளுங்கள். மூளையை முழுமையாக வளர்ச்சியடைய என்ன வழி என்று பாருங்கள். பிறகு நாத்திகம் பேசலாம், வலைப்பூ படிக்கலாம்.

http://rkguru.blogspot.com/ said...

அருமையான பதிவு...

உங்களுக்கு ஓட்டு போட்டாச்சு..
தமிளிஷில் என் பதிவும் வந்திருக்கிறது அதற்கும் ஒரு ஓட்டு போடுங்கள்....
http://rkguru.blogspot.com/2010/06/blog-post_20.html

தமிழ் மீரான் said...

அறிவியல் வளர்ச்சியடைந்த இக்காலத்தில் மட்டுமின்றி ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே நாத்திகர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதற்கு நிறைய ஆதாரங்கள் உண்டு. கடவுள் மறுப்புக் கொள்கை பகுத்தறிவுக்கு ஏற்புடையதல்ல என்பதாலேயே காலங்காலமாக மக்களால் புறக்கணிக்கப் பட்டுள்ளது. உண்மையான பகுத்தறிவு நமக்கெல்லாம் அப்பாற்பட்ட சக்தியாகிய கடவுளை நம்புவதில்தான் உள்ளது. மற்றபடி கடவுள் பெயரால் நடக்கும் மூடத்தனங்கள் களையப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

நாட்டாமை said...

ஆத்திகம், நாத்திகம், சமூகம் பற்றிய ஒரு முழுமையான பார்வையுடன் கூடிய அலசல். வரிகள் ஒவ்வொன்றும் நெத்தியடி. நாத்திகன் யாரும் பதிலோ கேள்வியோ கேட்க முடியாத அந்த கடைசி வரி.

கோவி.கண்ணன் said...

நாற்பது வயதில் நாத்திகனுக்கு ஹார்ட் அட்டாக் வந்தால் ஆத்திகன் ஆகிடுவான். இதுல ஒண்ணும் கம்ப சூத்திரம் எதுவும் இல்லை. மரண பயம் வேறு வித நம்பிக்கைகள் தொடர்ந்து வாழவைக்காதா என்கிற ஏக்கம் தான். மற்றபடி ஆத்திகம் நாத்திகம் இரண்டையும் விடாபிடியாக தொங்குபவர்கள், இதில் ஒன்று தான் உயர்ந்த கொள்கை மற்றும் அக்மார்க் தத்துவம் என்போர் அனைவரும் மடையர்களே.

Arun said...

ஏக வசனத்தில் எல்லோரையும் முட்டாள் என்று சொல்வதால் தன்னை மட்டுமே அறிவாளியாக காட்டிகொள்வதாக எடுத்துக்கொள்ளலாமா. வாழ்கையின் ஆதாரமே நம்பிக்கை தான், அடுத்த விநாடி வாழ்வோம் என்பதுதான் இத்தனை அறிவியல் மற்றும் அனைத்து முன்னேற்றத்திற்கும் காரணி. கடவுள் என்பது நம்பிக்கை, அது போல் அறிவியல் என்பதும் ஒரு நம்பிக்கையே. அதிகபட்ச அறிவியல் கண்டுபிடிபாளர்கள், அவர்கள் கண்டுபிடிப்பிற்கு காரணமாக கடவுளை தான் குறிப்பிட்டுள்ளார்கள். நாத்திகம் என்பது தான் நம்பிக்கையில்லா வாழ்க்கை. நாத்திகம் பேசும் அனைவரும் சொல்வது அறிவியல் தான் இவை அனைத்திற்கும் காரணம் கடவுள் என்று ஒன்று இல்லை. கண்டுபிடித்தவர்களே கடவுளை ஒப்புக்கொள்ளும் போது வெட்டி வாய் மட்டுமே பேசும், இதுவரை எந்த அறிவியல் கண்டுபிடிப்பிலும் பங்களிப்பில்லாத இந்த சமூகத்தினரை யார் நம்புவார்கள். நம்பிக்கை உள்ள ஒருவருக்கு தான் எதையும் கண்டுபிடிக்கும் ஆற்றல் இருக்கும். நம்பிக்கை அற்றவர்களால் விதண்டாவாதம் மட்டுமே பேசி வாழ்க்கையை ஓட்ட முடியும்.

Arun said...

இந்த URL-யை பாருங்கள், இதுவே ஆதாரம்

http://www.godandscience.org/apologetics/sciencefaith.html

ஐன்ஸ்டீன்னை விட ராமசாமி போன்ற நாத்திகம் மட்டுமே பிழைப்பாக கொண்டவர்கள் எந்தவகையில் உயர்ந்தவர்கள் என்று எமக்கு தெரியவில்லை.

Chandru said...

கோவி கண்ணனுக்கு

”நாற்பது வயதில் நாத்திகனுக்கு ஹார்ட் அட்டாக் வந்தால் ஆத்திகன் ஆகிடுவான். இதுல ஒண்ணும் கம்ப சூத்திரம் எதுவும் இல்லை. மரண பயம் வேறு வித நம்பிக்கைகள் தொடர்ந்து வாழவைக்காதா என்கிற ஏக்கம் தான்”


இதைத்தான் ,இந்த கம்பசூத்திரத்தைத் தான்
”2)வாழ்க்கையின் முழு விஸ்தீரனங்களையும் சந்திக்காதவராகவும் இன்ப துன்பங்களை முழுமையாக அனுபவிக்காதவராக இருக்க வேண்டும். வாழ்வியலின் நுனிப்புல் மேய்ந்தவராகத்தான் இருக்கமுடியும்”
என்று குறிப்பிட்டுள்ளேன்

Chandru said...

rooto வுக்கு
ஒருமுறைக்கு இருமுறை படித்து விட்டு பதியுங்கள். உங்களது புரிந்துணர்வுதான் கேவலமானது.உங்களுக்கு புள்ளியலும் கணிதமும் புரியவில்லை.
திருக்குறளை சொல்லி பணம் பறிக்கிறான்,
தங்கத்தை சொல்லி பணம் பறிக்கிறான்
இடத்தை காட்டி பணம் பறிக்கிறான். திட்டங்களை சொல்லி பணம் பறிக்கிறான்
இவனெல்லாம் மனிதன் தான்.
ஆகவே பணம் எப்பொழுதும் பறிக்கப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது.

அறிவியல் என்ன சொல்கிறது என்று படியுங்கள். கடவுள் நம்பிக்கை மனவழுத்தைக் குறைத்து ஆயுளை நீட்டிக்கிறதாம்.

தொடர்ந்து வருகை தாருங்கள் உங்களை விபூதி தட்டுடன் நிப்பாட்டுவதற்கு உத்தரவாதம் அளிக்கிறேன்

அரசு said...

சிலருடய மூடநம்பிக்கையை நாத்தீக வாதிகள் மூலதனமாக்கிக்கொள்கிறார்கள்.
மற்றபடி நாத்தீகம் ஒரு மூளைச்சலவைதான், சுயமாக சிந்திக்கும் போது அந்த வட்டத்திலிருந்து வெளியேறிவிடுகிறான், சிந்திக்கமறுப்பவன் வட்டத்துக்குள்ளேயே நின்றுவிடுகிறான்!

Unknown said...

அருமயான கருத்துக்கள்!
இருந்தபோதிலும் நான் எனது 35 வருட காலங்களில் கடவுளைக்கானேன்.இந்த பூமியிலே வாழ்ந்துகொண்டிருக்கும் அல்லது இதுவரைகாலமும் வாழ்ந்த மானிடப்பிறப்புக்களிலே என் அறிவுக்கு எட்டியபடி 75% மக்கள் கடவுள் நம்பிக்கை உடையவர்கள் என்பதில் சந்தேகமில்லை.அனால் இவர்கள் கடவுளுக்கு பயந்து பயபக்தியுடன் வாழ்ந்தார்களா என்பது சந்தேகமே.காரணம் நாங்கள் கும்பிடும் எல்லாமதச்சாமிகளும்(மதங்கள்)சொல்லும் நல்லநல்ல விடயங்களை நாங்கள் சரியாக பின்பற்றுவதில்லை.தனக்கேற்றால்போல் கொலை,கொள்ளை,பொய் போன்ற எல்லாவிதபாவங்களையும் செய்துகொண்டிருக்கிறான்.கேட்டால் தன் வசதிக்கேற்றால்போல் பதில் சொல்லுறான்.
என்னுடைய கேள்வி என்னவென்றால்,இப்படி பாவங்களைச்செய்யும் மனிதன் ஏன் கடவுளை நம்பவேண்டும்,இதனால் அவனுக்கு என்ன நன்மை இருக்கிற்து?

Unknown said...

கடவுளின் எதிரி!

Nilavan said...

கடவுள்னு ஒருத்தர் இருக்கிறாரா இல்லையா ?! இருக்கிறார்னா அவரை நம்பலாமா ? நம்பக்கூடாதா ?! அப்படின்னு கேள்வி கேட்டுட்டு இருக்கிறதுக்குப் பதிலாக உங்களோட இந்தப் பதி(ல்)வு தெளிவாக கடவுள் (a) ஆத்திகம் என்ற ஊர் இழுக்கும் தேரில் நீங்களும் எப்படி வாழ்க்கையை வாழ வேண்டும் எனத் தெளிவாக கூறி இருக்குறீர்கள்.

வால்பையன் said...

//கடவுளை நம்பாமல் சோதிடம் பார்ப்பவர்கள்//


யார் நாத்திகன் என்ற கோட்டாவில் இது இருக்கு!
நான் முரண்படுகிறேன்!

வால்பையன் said...

//நாத்திக தீவிரவாதத்தனம்//


சாதி, மதம், கடவுளால் பிரிந்து கிடக்காதீர்கள், மனிதமே பிரதானம், அதை காப்போம் என்பது தான் நாத்திக தீவிரவாதமா!?

என்ன கொடும சார் இது!

வால்பையன் said...

//வாழ்க்கையின் முழு விஸ்தீரனங்களையும் சந்திக்காதவராகவும் இன்ப துன்பங்களை முழுமையாக அனுபவிக்காதவராக இருக்க வேண்டும். வாழ்வியலின் நுனிப்புல் மேய்ந்தவராகத்தான் இருக்கமுடியும்”//


இவர்கள் தான் 40 வயதில் ஆத்திகர்கள் ஆவார்களா?

நான் கடந்த வந்த பாதை தெரியுமா!?
நான் ஏன் ஆத்திகனாகவில்லை!

Chandru said...

வால் பையனுக்கு.....
மீண்டும் ஒரு முறை முழுவதும் படித்துவிட்டு பின்னூட்டம் இடுங்கள்.

கோயிலைப் பூட்டும் பூசாரியும் நாத்திகன் லிஸ்ட்தான்.

உலகம் மிகவும் பெரியது.பாதைகளும் பலவிதம். நமக்கும் கீழே உள்ளவர் கோடி. பாதைகளில் பயணம் செய்தால் மட்டும் போதாது பாடம் படிக்க வேண்டும்.

Balan said...

நாத்திகன் என்று பேசுபவர் அதிகம் ஆனால் அவரே பின்னர் அதிகம் ஆத்திகம் பேசுவார்.
சந்திரனை அறிவாளி ஆராச்சி செய்ய பார்ப்பான், அதையே நாயும் பார்க்கும் ஆனால் குரைக்கும். இதுக்கு ஒன்னும் பண்ண தேவை இல்லை எல்லாம் வளராத மூளை , வளர கொஞ்சம் தாமதமாகும் .... ஆனால் வளர்ந்துவிடும்

Chandru said...

கடவுளை நம்பாதவனுக்கு வெட்டி நம்பிக்கை எண்ணிலடங்காதது. இவ்வுலகில் உள்ள எல்லாப் பொருட்களும் தானாகத் தோன்றியது

கடவுளை நம்புவனுக்கு ஒரே ஒரு நம்பிக்கைதான் கடவுள் மட்டும்தான் தானக தோன்றினார்

நறுமனம் - அன்பன் said...

@ சந்திரா:

கடவுள் பற்றிய என்னுடைய வரையறை (Definition) ”அவர் வரையறைக்கு உட்படாதவர்”.

நன்றாக எழுதியுள்ளீர், அலசல் என்றும் சொல்லாம் ஆயினும் தங்களின் முடிவு / பதிவின் நோக்கம் நிதர்சனம் போல் பிம்பத்தை தான் உருவாக்குகின்றது.

தங்களின் பதிவை ஒரு முறைக்கு இருமுறை படித்தபின்பே இங்கு எனது பதிவை வைக்கின்றேன்.

தாங்கள் பதிவின் இறுதியில் வரையறுத்த தங்களின் நம்பிக்கையில் முரண்படுகின்றீர்,

கடவுள் பற்றிய என்னுடைய வரையறை (Definition) ”அவர் வரையறைக்கு உட்படாதவர்”.

ஆனால் தங்கள் பதிவிலே வரையறுத்து விட்டீர்

கடவுளை நம்பாமல் கோவிலைப் பூட்டி வைப்பவன்.

கோவிலில் சிலையாக இருப்பவன் என்று வரையறுக்கிறீர்.

கதவை பூட்டும் பூசாரி என்று சொல்லாமல் கோவிலை புட்டும் பூசாரி என்று சொல்லும் போதே, தெளிவாக கடவுளை வரையறுக்கிறீர்.

“for what shall i wield a dagger, o lord?
what can i pluck it out of or plunge it into
when you are all the world?”


— 10th century Indian poet and saint, Devara Dasimayya

நறுமனம் - அன்பன் said...

குரங்கிலிருந்து வந்த மனித இனத்தின் பரிணாமம் சுமார் ஒரு மில்லியன் வருடங்களுக்கு மேலானது. குரங்கிலிருந்து தான் மனிதன் வந்தான் என்பதற்கு நிறையவே ஆதாரங்கள் உள்ளது அதில் சந்தேகம் வேண்டாம்.

நிறைய ஆதரங்கள் உள்ளது சந்தேகம் வேண்டாம் என்கிறீர், இளமை பருவத்தை கடந்த பின் மனிதனை கடவுள் படைத்தான் என்று ஒருவன் நம்புதல் வேண்டும் அல்லவா ?

ஒருவன்

கடவுள் இருக்கு என்பதற்கு ஆதாரத்தை காட்டு

கடவுள் இல்லை என்பதற்க்கு ஆதாரத்தை காட்டு

மற்றொருவன் மனிதன் குரங்கிலிருந்து வந்தான் என்பதற்கு ஆதரத்தை காட்டு

இங்கு ஆதாரம் எனத் தாங்கள் முன்வைப்பது யாது ?

இதனை ஒரு முறக்கு இருமுறை படித்து நான் கூற விழைவதை புரிந்து விளக்கம் அளிக்கவும்.

நறுமனம் - அன்பன் said...

இவ்வுலகில் உள்ள எல்லாப் பொருட்களும் தானாகத் தோன்றியது

கடவுளை நம்புவனுக்கு ஒரே ஒரு நம்பிக்கைதான் கடவுள் மட்டும்தான் தானக தோன்றினார்


பதிவின் முடிவில் தாங்கள் ஆத்திகன் என்று எடுத்துக் கொள்ளலாம் என்று நினைக்கின்றேன். கடவுள் மட்டும் தானாக தோன்றினார், மற்றவைகள் தானக தோன்றாமல் பிறரால் தோற்றுவிக்கபட்டது, தோற்றுவித்தவர் கடவுள், அவ்வாறு தானே ! குரங்கை கடவுள் தோற்றுவித்து மனிதனை மட்டும் பரிணாமவியல் என்ற நிகழ்வில் விட்டுவிட்டார் கடவுள் !

Chandru said...

நறுமனம்-அன்பன் அவர்களுக்கு, வருகைக்கும் பதிவுக்கும் நன்றி.

உங்கள் பெயர் ரகுநாத் என்பதோ. எனக்கு ஒரு நன்பர் உள்ளார் அவரும் இது போன்றே கேள்விகள் கேட்பார்.
நான்கடைசியில் எழுதியதை முன்னால் சொல்கிறீர்கள். முன்னுக்குப்பின் முரணாகக் கேள்விகள் கேட்கிறீர்கள். ”பூசாரியாய் இருப்பவனும் கடவுளை நம்புவதில்லை ”என்பதில் என்ன வரையறைக் குழப்பம்?

//நிறைய ஆதரங்கள் உள்ளது சந்தேகம் வேண்டாம் என்கிறீர், இளமை பருவத்தை கடந்த பின் மனிதனை கடவுள் படைத்தான் என்று ஒருவன் நம்புதல் வேண்டும் அல்லவா //

இளமைப் பருவத்தை அடைந்தபின் பரிணாமத்தை நம்பக்கூடாது என்று சொல்லவில்லையே?

இங்கு ஆதாரம் எனத் தாங்கள் முன்வைப்பது யாது ?

ஆதாரம் என முன்வைப்பது அறிவினால் ஏற்ப்பட்ட தெளிவைத்தான்.

//குரங்கை கடவுள் தோற்றுவித்து மனிதனை மட்டும் பரிணாமவியல் என்ற நிகழ்வில் விட்டுவிட்டார் கடவுள் !//

இதற்குப் பதில் http://chandroosblog.blogspot.com/2010/09/1.html இந்தப் பதிவில் உள்ளது.

நறுமனம் - அன்பன் said...

//உங்கள் பெயர் ரகுநாத் என்பதோ. எனக்கு ஒரு நன்பர் உள்ளார் அவரும் இது போன்றே கேள்விகள் கேட்பார்.//

ஆம், நறுமனம் என் தந்தை எனக்கு சூட்ட நினைத்த பெயர்... அதைச் சார்ந்தது இந்த தளம், அது நிற்க.

//நான்கடைசியில் எழுதியதை முன்னால் சொல்கிறீர்கள்.//

தங்களின் பதிவின் "முடிவு" அது தானே, வரையறைக்கு உட்படாதவரை தாங்கள் கடவுள், கடவுள் இவ்வாறு என பல இடங்களில் வரையறுகீற்கள்

அதைச் சார்ந்த தங்களின் ஒரு பின்னுட்டம்
Quote:
//தொடர்ந்து வருகை தாருங்கள் உங்களை விபூதி தட்டுடன் நிப்பாட்டுவதற்கு உத்தரவாதம் அளிக்கிறேன்//

”பூசாரியாய் இருப்பவனும் கடவுளை நம்புவதில்லை” என்பதில் என்ன வரையறைக் குழப்பம்?

கோயிலை பூட்டுவதால் அவர் நாத்திகராவார், ஏன் ? கடவுளை நம்பாமல் கோயிலை பூட்டுகிறார்... கடவுள் என்பதை தங்களால் விளக்க முடியவில்லை explain / define, ஏனெனில் அது நாளுக்கு நாள் மாறிக் கொண்டிருக்கிறது, தனி மனிதனின் மனநிலைக்கு ஏற்ப, அவ்வாறு தானே.

நான் ஒன்றை பதிவிட்டேன், அதை மீண்டும் பதிவிடுகின்றேன்... தாங்கள் அதில் என்ன புரிந்துக் கொண்டீர் என்பதனை தெளிவாக்கவும்

“for what shall i wield a dagger, o lord?
what can i pluck it out of or plunge it into
when you are all the world?”

— 10th century Indian poet and saint, Devara Dasimayya


இதை விட்டுவிட வேண்டாம், மறவாமல் இது பற்றிய தங்களின் கருத்தை தெரிவிக்கவும்.

//இளமைப் பருவத்தை அடைந்தபின் பரிணாமத்தை நம்பக்கூடாது என்று சொல்லவில்லையே?//

நியாயமான கருத்து, கீழ் வருவனவற்றை பார்ப்போம்

//நாற்பது வயதுக்கு மேல் பகுத்தறிவுவாதி என்று சொல்லிக் கொண்டு தீவிர நாத்திகம் பேசுபவர்களைக் கண்டால் எனக்கு ஏனோ மூளை வளர்ச்சியற்ற இந்த மாதிரி இளைஞன் தான் நினைவுக்கு வருகிறான்.//

இந்த பகுத்தறிவை விட்டுவிடுவோம், அது அரசியல் சார்ந்த பகுத்தறிவு, இயல்பாக அறிவை எடுத்துக் கொள்வோம், 40 வயதுக் மேல் நாத்திகம் பேசினால் அது எவ்வகையில் மூளை குன்றிய நிலை, ஏனெனில் தாங்கள் நாத்திகனாக இருந்து ஆத்திகனாக அந்த நிலையில் தெளிவை உணர்ந்திருக்கிறீகள் என்பது தங்களின் பார்வை, அதனால் தானோ தொடர்ந்து வருகை தாருங்கள் உங்களை விபூதி தட்டுடன் நிப்பாட்டுவதற்கு உத்தரவாதம் அளிக்கிறேன் என்று கூறியுள்ளீர்கள். இங்குள்ள சமூக மன நிலையை மனதில் வைத்துக் கொண்டு மக்கள் அனுகினால் அவ்வாறு தான் தெரியும்... இதைச் சார்ந்து

//சராசரி மனிதன், வாலிபப் பருவம் அதாவது சமூகப் பருவமெட்டும் போது அதாவது பெரும்பாலும் வாழ்க்கையை தொடங்கும் போது கேள்வி கேட்பதை நிறுத்திக்கொள்கிறான். கிடைத்த அனுபவங்களை கொண்டு வாழ்ந்து பார்க்கத் தொடங்குகிறான். பதில் கிடைக்காத கேள்விகள் ஒதுக்கி வைக்கப்படுகிறது.

சோம்பேறிகளுக்கு கேள்விகள் இருக்கும் பதில் கிடைக்காது பதிலில் ஆர்வமும் இருக்காது.. முட்டாள்களுக்கு கேள்விகளே இருக்காது , பதிலைப் பற்றிய அக்கறையும் இருக்காது. ஆனால் முட்டாள்களும், சோம்பேறிகளும் பருவம் மாறினாலும் கேள்விகளை ஒதுக்கி வைக்காமல் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருப்பார்கள் . ஆனால் புத்திசாலியோ பதில் கிடைக்காத கேள்விகளை ஒதுக்கி வைத்து மனதுக்குள் ஆராய்வார்கள், சரியான பதில் கிடைக்கும் வரை அமைதி காப்பார்கள்.//

தங்களுக்கு பதில் கிடைக்காத கேள்விகள் எவை அதாவது நாத்திகனா இருந்தபோது, தற்போது தெளிவான பதில் கிடைத்து ஆத்திகனாக உள்ளீர்கள், கேள்விகள், பதில்கள் இரண்டையும் பகிர்ந்துக் கொள்ளவும்.

//ஆதாரம் என முன்வைப்பது அறிவினால் ஏற்ப்பட்ட தெளிவைத்தான்.//

நன்று, ஆதாரம் என்பது என்ன, அதன் அவசியம் பற்றிய தங்களது கருத்து ?

//இதற்குப் பதில் http://chandroosblog.blogspot.com/2010/09/1.html இந்தப் பதிவில் உள்ளது.//

அதிலிருந்து

//ஆண்டவன் ஆற்றலையும் சில விசைகளையும்,சில விதிகளையும் ஒரு புள்ளியில் இருந்து வெடிக்கச் செய்து எந்தக் கட்டத்திலும் தலையிடாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறான்.//

இது முன்முடிவு... a premise.

KP's takes said...
This comment has been removed by the author.
KP's takes said...

Á¢¸ Á¢¸ «¡¢Â ¸ÕòÐ츨Çò ±Ç¢Â ¦Á¡Æ¢Â¢ø ¾óÐûÇ£÷¸û. Á¢ì¸ ¿ýÈ¢.

top